"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Wednesday, March 26, 2014

சோயா பனீர் ட்ரை மஞ்சுரியன்சோயா பனீர் ட்ரை மஞ்சுரியன்

தேவையான பொருட்கள்

சோயா
பனீர் துண்டுகள்
கறிவேப்பிலை
பச்சை மிளகாய்
மிளகாய் தூள்
ஆரஞ்ச் கலர்
உப்பு
தயிர்
இஞ்சி
பூண்டு
மசாலா பௌடர்
எலுமிச்சம்பழம்
சோள மாவு
மைதாமாவு
அரிசிமாவு
ஸ்ப்ரிங் ஆனியன்
பொரிக்க எண்ணை

செய்முறை

சோயா மீல் மேக்கரை சுடுநீரில் போட்டு பத்து நிமிடங்கள் ஊறவைத்து அதன்பின்னர் குளிர்ந்த நீரில் 4 அல்லது 5 முறை கழுவிப்பிழிந்து ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு வைக்கவும். பனீர் துண்டுகள் அதில் போட்டுக்கொள்ளவும். அதில் இஞ்சிப்பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மசாலாப்பௌடர் ( பட்டை கிராம்பு ஏலக்கா சோம்பு அன்னாசி மொக்கு பொடித்தது) பச்சை மிளகாய் நீளமாய் நறுக்கி அதில் போட்டுக்கொள்ளவும். கறிவேப்பிலை கழுவி அதையும் அப்படியே அதில் போட்டுக்கொள்ளவும். தயிர் ஊற்றிக்கொள்ளவும் உப்பு எலுமிச்சம்பழ ரசம் எல்லாம் போட்டு மைதா மாவு கொஞ்சம், அரிசிமாவு கொஞ்சம், சோளமாவு கொஞ்சம் எல்லாமும் போட்டு பிசிறி 2 மணி நேரம் ஊறவைத்து எண்ணை கடாயில் ஊற்றி ஸ்டவ் சிம்மில் வைத்து கொஞ்சம் கொஞ்சமக பொரித்து எடுத்து வைக்கவும்... ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணை ஊற்றி பச்சைமிளகாய் பொடியாய் நறுக்கினது ஸ்ப்ரிங் ஆனியன் பொடியாய் நறுக்கினது போட்டு உப்பு போட்டு வதக்கி பொரித்ததை போட்டு ஒரு புரட்டு புரட்டி இறக்கி சாப்பிடவும் சூடா.. செம்ம டேஸ்ட் தெரியுமாப்பா?

25 comments:

 1. அடடா...! தட்டிலே இருக்கிறத அப்படியே சாப்பிடலாம் போலிருக்கே... ஹிஹி...

  உங்களின் செய்முறைப்படி செய்து பார்க்கிறோம்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. அப்படியே சாப்பிட்டாலும் நல்லா இருக்கும்பா.. :)

   Delete
 2. "மஞ்சு" ரியன் என்பதால் பிரியமாக வெளியிட்டு விட்டீர்களோ மஞ்சு? :))

  ReplyDelete
  Replies
  1. ஹை என் பேர்ல இருப்பதால் தான் :) வெளியிட்டேன்பா.....

   Delete
 3. அக்கா அருமையாக இருக்கிறதே செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. செய்து சாப்டுட்டு சொல்லு சசி :)

   Delete
 4. வித்தியாசமான இதுவரை அறியாத ரெசிபி
  பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் இதைப்பற்றி ஒரு ஐடியாவும் இல்லை ரமணி சார். திடிர்னு ஒரு நாள் மாலை இப்படி செய்தா என்னன்னு செய்து பார்த்தேன். செம்ம ருசி...

   Delete
 5. Replies
  1. அன்பு நன்றிகள் ரமணி சார்.

   Delete
 6. நாளை மாலை இதுதான் ஸ்நாக் !
  பார்க்கவே ஜோரா இருக்கு!!

  ReplyDelete
 7. மஞ்சு செஞ்ச மஞ்சுரியன் = அருமை..!

  ReplyDelete
 8. அருமையான ரெசிபியா இருக்கும் போல தெரிகிறது. செய்து பார்த்துடலாம்.

  ReplyDelete
 9. செய்முறையைப் பார்க்கும் போதே புரிந்துகொண்டேன் அக்கா
  நிட்சயம் சுவையும் அதிகமாகத்தான் இருக்க வேண்டும் என்று .
  மிக்க நன்றி அக்கா பகிர்வுக்கு.த .ம.5

  ReplyDelete
 10. சரிசரி... சசி செஞ்சு சாப்ட்டுட்டு நல்லா இருக்குன்னு சொன்ன அவுங்க வீட்டுக்கே போய் சாப்ட்டுப் பாத்துற வேண்டியதுதான்...! படத்தப் பாத்தாலே சாப்பிடற ஆசை வரத்தான் செய்யுது.

  ReplyDelete
 11. வரும்போது எனக்குக் கொண்டுவா மகளே!

  ReplyDelete
  Replies
  1. செஞ்சே தரேன் அப்பா உங்களுக்கு இல்லாததா....

   Delete
 12. சுவையும் சத்துமான ஒரு ரெசிபி மேடம். இதோடு காளானும் கூட சேர்க்கலாம்... இன்னும் புரதம் நிரம்பிய ஒன்றாக மாறும்.

  ReplyDelete
  Replies
  1. காளான் வாங்கி வைத்திருக்கிறேன் தீபப்ரியா :) முதலில் காளான்ல தான் சாப்பிட்டோம். அதில் இருந்து உருவானது தான் சோயா ;)

   Delete
 13. ஆஹா...படத்தை பார்த்ததுமே பசி எடுக்க ஆரம்பிச்சிடுச்சே !

  ReplyDelete
  Replies
  1. நாங்க மதிய லஞ்சுக்கு உங்க ஹோட்டலுக்கு வரலாம்னு பார்த்தா என்னப்பா இப்படி சொல்லிட்டீங்க? :)

   Delete
 14. படத்தைப் பார்த்தாலே சாப்பிடனும்னு தோணுதே...

  ReplyDelete
  Replies
  1. அப்டியே சாப்பிடுங்கப்பா சரவணா :)

   Delete
 15. அருமையான மஞ்சுரியன் மஞ்சு.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...