"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Sunday, August 11, 2013

கணிணியும் நானும்....

அன்பு சகோதரர் செய்தாலி http://nizammudeen-abdulkader.blogspot.com/ கணிணி தொடர் பகிர்வுக்கு என்னை அழைத்ததற்கு அன்பு நன்றிகள்… அதே சமயத்தில் அதிக காலதாமதம் செய்ததற்கு மன்னிப்பு வேண்டிக்கொள்கிறேன்… நாலு நாள் லீவுப்பா ரமதானுக்கு. அதான் வெளியே சுற்றக்கிளம்பிவிட்டதாலும் வீட்டுக்கு விருந்தினர்கள் வந்ததாலும் என்னால் உடனடியாக பதிவிடமுடியவில்லை…


போதும்மா… இந்த புராணம்… கணிணி முதன்முதல் எப்ப பாத்தீங்க, தொட்டீங்க.. பயிற்சி ஆரம்பிச்சீங்கன்னு சொல்லுங்கன்னு நீங்க எல்லோரும் கத்தறது எனக்கு காதில் கேட்கிறதுப்பா…


நான் மூன்றாம் வருடம் டிப்ளமா எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் எஞ்சினியரிங் படிச்சிட்டு இருந்தப்ப தான் முதல் வருடம் கம்ப்யூட்டர் வந்தது எங்களுக்கு பயிற்சியாக…


டிவி பெட்டி மாதிரி வெள்ளைக்கலர்ல… உள்ள ஸ்க்ரீன் கறுப்புக்கலர்ல… எழுத்துகள் எல்லாம் பச்சை கலர்லன்னு முதன் முதல் எல்லோரும் கம்ப்யூட்டரை ஜூவில் சென்று புலியை பார்ப்பது போல் அதிசயமாக பார்த்தோம்…


ஒரு கமாண்ட் அடிக்க முழ நீளத்துக்கு ப்ரோக்ராம் எழுதும் அவஸ்தை எனக்கு பிடிக்காமல் போனது…. ஒருவழியா அந்த வருடம் முடிந்ததுமே கல்யாணம் ஆகிவிட்டதால் திரும்ப கணிணிப்பற்றிய எந்த பேச்சும் எழவில்லை… எதிர்லயும் மனதிலேயும்..
கல்யாணம் ஆகி அடுத்த வருட கல்யாண நாள் வருமுன் கையில் குழந்தை.. குழந்தைப்பேறுக்காக அம்மாவீட்டில் இருந்தபோது.. அம்மாவின் பணி கம்ப்யூட்டர் செக்‌ஷனுக்கு சூப்பர்வைசராக ப்ரமோஷன் கிடைக்கவே…


நைட் எல்லாம் அஞ்சான் அழுகையை சமாளிக்க மடியில் போட்டுக்கொண்டு நான் பாடிக்கொண்டிருக்க… எங்க அம்மா ப்ரோக்ராம் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள் ராத்திரிமுழுக்க.. புதிய விஷயம் எதுவென்றாலும் அதில் ஆர்வமும் ஈடுபாடும் அம்மாவுக்கு அதிகம்… கம்ப்யூட்டரில் அம்மா முத்துக்குளிக்க.. நான் சராசரி வாழ்க்கையில் மூழ்க.. அப்படியாக கணிணி இரண்டாம் முறையாக கண்முன் வந்து கண்ணாமூச்சி ஆடிவிட்டு போனது…

அஞ்சான் ஒன்னரை வயதாகும்போது என்னவர் குவைத்தில் வேலைக்கிடைத்து எங்களுக்கு டாட்டா காண்பித்துவிட்டு விதேசம் செல்ல… அஞ்சானும் நானுமாக நாட்கள் நகர ஆரம்பித்தது… வாரத்திற்கு ஒரு முறை என்னவரிடம் இருந்து கடிதமும், வாரத்திற்கு மூன்று முறை தொலைபேசியில் குரலும்.. யாராவது வந்தால் அவர்களிடம் இவர் ஆடியோ கேசட்டில் பேசியும் பாடியும் அனுப்ப வாழ்க்கை ஒருவிதமாக சென்றது ரம்மியமாக இல்லையென்றாலும் ஏதோ ஒருவிதமாக….


அப்ப அம்மாவும் என் பெரியம்மா மகனும் ஒரு முடிவெடுத்தனர்.. மஞ்சு இப்படி வீட்டில் கிடந்து தனியா அல்லல்படுவதை விட ஒரு கம்ப்யூட்டர் கோர்ஸுக்கு அனுப்பினா தான் என்ன?? இப்படி அவர்கள் முடிவெடுத்து என்னை கம்ப்யூட்டர் க்ளாசுக்கு அனுப்பிய வருடம் 1993.


ஸ்ரீ வென்ஸ் இன்ஸ்ட்யூட்ல காலை டைப்பிங்கும் மாலை கம்ப்யூட்டர் க்ளாசுமாக செல்ல ஆரம்பித்தேன்.. கம்ப்யூட்டரில் என்ன படிப்பது?? ஞானப்பழமாச்சே நான் தான்.. ஒன்றும் தெரியாம திருதிருன்னு முழிக்க.. அங்கும் அம்மா வந்து இப்ப பிரபல்யமாக இருக்கும் விண்டோஸ் லோட்டஸ் ஒன் டூ த்ரீ இது ரெண்டும் எடுத்து படிக்கச்சொன்னாங்க…



வாழ்க்கையில் மீண்டும் கம்ப்யூட்டர் முன்னாடி… என்ன வாழ்க்கைடா இது.. நொந்துக்கொண்டே மீண்டும் கம்ப்யூட்டர்ல புதியக்கோணத்தில்… ஆனால் சுவாரஸ்யமாக இருந்தது.. எல்லாவற்றுக்கும் ஷார்ட் கட் கீஸ்…  எனக்கும் இஷ்டமானது….எக்சாமுக்கு சரியாக இவரும் லீவுக்கு இந்தியா வர.. ரொம்ப சந்தோஷம் என்னவருக்கும்.. ஆனால் ஸ்ட்ரிக்டாக வேலைக்கு அனுப்பமாட்டேன்னு சொல்லிட்டார்…
எக்சாம் முடிந்து சர்டிபிகேட் வாங்கினப்ப எதையோ சாதித்த ஒரு சந்தோஷம்… 1995 ல நானும் அஞ்சானும் குவைத் பயணமானோம்… இங்கு குவைத் வந்தப்பின்னர் எனக்கும் போரடிக்கவே வேலைக்கு போகிறேனே என்றேன்.. ஹுஹும் என்று சொல்லிவிட்டார்.. திரும்ப கணிணிப்பற்றிய பேச்சு மூச்சு நின்றுவிட்டது….



திரும்ப 1997 ல என் ஆசைக்காக எம் ஏ சோஷியாலஜி படிக்க ஆசைப்பட்டு இந்தியா வந்தேன்… ஹுஹும் வந்தோம் நானும் அஞ்சானும்… மீண்டும் அம்மா என்னை கம்ப்யூட்டர் கோர்ஸில் சேரச்சொல்லவே திரும்பவும்….கம்ப்யூட்டர் க்ளாசுக்கு போன இடத்தில் உஷா மேடம் என் நெருங்கிய தோழியாக ஆகிவிட்டார்.. பின்னர் அம்மாவிடம் பரிச்சயம் செய்து வைத்தப்பின் அம்மாவுக்கு க்ளோசாகிவிட்டார்..



1999 ல மீண்டும் குவைத் பயணம்… நான் வேலைக்கு போகட்டுமா என்று கேட்க இவரும் சரி என்று சொல்லவே.. குவைத் வரும்போது உனக்கு ஒரு சர்ப்ரைஸ் என்றார்… ம்ம் என்னவா இருக்கும்…. யோசிச்சு ஒன்னும் தோணாம வீட்டுக்கு வந்தாச்சு.. என் கண்ணை மூடிக்கொண்டு போய் நிறுத்திய இடம் எங்க ரூம்ல அழகா கணிணி, ஸ்கேனர், ப்ரிண்டர்… எனக்காக என்னவர் கொடுத்த பரிசு..கணிணியும் நானும்…. மெயில் அனுப்பத்தொடங்கி..கம்ப்யூட்டரில் தான் என் வேலை முழுக்க…வேலைக்கும் முயற்சித்து வேலை கிடைத்ததுமே.. சந்தோஷமாய்… வேலை முழுக்க முழுக்க கணிணில தான்… அப்ப ஆரம்பிச்சது….



2007 ல ராஜா ஐயா மூலம் முத்தமிழ்மன்றம் பிரவேசம்.. அங்கே எல்லாம் தமிழ்ல தான் பதிவுகள்… எனக்கோ தமிழ் டைப்பிங் தெரியாது… அவ்ளோ தான் விட்டாச்சு.. மீண்டும் ஆகஸ்ட் 15 நைட் தமிழ்ல டைப்பிங் www.higopi.com  ல போய் தமிழ்ல அடிச்சு காப்பி பேஸ்ட் பண்ண ஆரம்பிச்சு தொடங்கிய பயணம் இதோ இன்று கணிணி பகிர்வு வரை தொடர்கிறது….


இடையே எனக்கு எலும்பு தேய்மானம் காரணமாக இனிமே கணிணி முன்னாடி மட்டுமல்ல கணிணி பக்கமே திரும்பக்கூடாதுன்னு டாக்டர் சொல்ல… நானும் சமர்த்தா கேட்பது போல கேட்டுட்டு அப்புறம் அதை காத்துல பறக்கவிட்டுட்டு இதோ இங்கே….


இருக்கும்வரை தொடரும் இந்தப்பயணம்….


இந்த தொடர் பகிர்வில்…. நான் ரமணி சார் அவர்களையும் ரிஷபன் சார் அவர்களையும் வை.கோ அண்ணா அவர்களையும் தொடரும்படி வேண்டுகிறேன்…





வாய்ப்புக்கொடுத்த செய்தாலிக்கு மீண்டும் ஒரு முறை அன்பு நன்றிகள்…


46 comments:

  1. மஞ்சூஊஊஊஊ

    மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. அன்பு நன்றிகள் அண்ணா... நிஜமாவா சொல்றீங்க? :) சும்மா தானே?

      Delete
  2. இன்று அம்மா அப்பாக்களே குழந்தைகளிடம் கணினி பற்றி கற்றுக்கொள்ளும் போது, நீங்க குழந்தை அஞ்சானைக் கொஞ்சிக்கொண்டிருக்க, உங்க அம்மா கணினியில் ப்ரோக்ராம்கள் போட்டுக்கொண்டிருக்க, கேட்கவே வேடிக்கையாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. புத்திசாலி அம்மாவுக்கு பிறந்த தத்தி மஞ்சு :)

      Delete
    2. ஹப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாதுரை... எப்டிப்பா இப்டி? :)

      Delete


  3. ஒவ்வொருவரின் அனுபவமும் ஒவ்வொருவிதமாக ஆனால் படிக்க சுவையாகத்தான் இருக்கிறது. நீங்கள் வலைப்பக்கத்தில் இருந்து ஒதுங்கி இருந்ததால் உங்களை அழைக்கவில்லை இலலியெனில் அழைத்து இருப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் முழுமையாக வலைப்பூவுக்குள் வரவில்லை சகோ... வரணும்னு வேண்டிட்டு இருக்கேன் ஸ்வாமிக்கிட்ட... முழுமையா வர ஆரம்பித்தால்... எல்லாருடைய வலைப்பூவுக்கு சென்று கருத்திட வேண்டும்.... அதுவே என் விருப்பம்பா... ஹேப்பா.. :) நீங்க மட்டுமில்லை எல்லோருமே என்னை அழைத்திருப்பீர்கள்பா.. நான் வலைப்பூவை விட்டு ஒதுங்கி இருந்தாலும் எல்லோரும் அன்புடன் என்னை நலன் விசாரித்துக்கொண்டே தான் இருக்கிறீங்கப்பா... அன்பு நன்றிகள் சகோ...

      Delete
  4. எங்கள் [ஸாரி, நம்] ஊராம் திருச்சியில் தானே டிப்ளோமா படித்து, கணினியை முதன் முதலாகக் கண்ணால் பார்த்தீர்கள், மஞ்சு.

    நம் ஊரைப்பற்றி ஒண்ணுமே எழுதாமல் விட்டுட்டீங்களே. ;(

    பொறந்தாம் [பிறந்த அகம்] போன்ற, அதுவும் உங்க அண்ணன் கோபு வாழும் திருச்சியைப்பற்றி எழுதாமல் விட்டது, தப்பு இல்லையா, மஞ்சூஊஊஊ.

    தலையில் லேஸா வலிக்காம, ஒரு சின்ன குட்டு போட்டுக்கோங்கோ.

    >>>>>>

    ReplyDelete
    Replies
    1. அண்ணா,

      மஞ்சு ஹாஸ்டல்ல இருந்தப்ப நீங்க ஒரு முறை கூட என்னை வந்து பார்க்கல தானே.. அதான் :) அதுமட்டுமில்ல அண்ணா.. எனக்கு திருச்சியைப்பற்றி ஹுஹும் எதுவும் தெரியாது... அம்மா மாதத்திற்கு ஒரு முறை உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு கூட்டிட்டு போயிட்டு ஹாஸ்டல்ல விட்டுட்டு சென்னை போய்ருவாங்க... தலைல குட்டு தானே போட்டுன்னுட்டேன் :) சும்மா சும்மா..

      Delete
    2. //Manjubashini Sampathkumar August 11, 2013 at 3:21 PM
      அண்ணா, மஞ்சு ஹாஸ்டல்ல இருந்தப்ப நீங்க ஒரு முறை கூட என்னை வந்து பார்க்கல தானே.. அதான் :) //

      தன் அப்பா அம்மாவின் கல்யாண போட்டோ ஆல்பத்தைப் பார்த்துக்கொண்டிருந்த அவர்களின் குழந்தை கேட்டதாம் “நான் ஏன் அம்மா இந்த ஆல்பத்தில் ஒரு இடத்துலுமே இல்லை?” என்று.

      அந்தக்குழந்தை கேட்டது போலவே உள்ளது மஞ்சு, உங்களின் இந்தக்கேள்வியும்.

      மஞ்சு ஹாஸ்டல்ல இருந்த்ப்ப நான் ஒரு முறை கூட மஞ்சுவை வந்து பார்க்கலை என்பது என் தப்பு தான். தெரிந்திருந்தால் ஹாஸ்டெலெல்லாம் எதற்கு என்று என் வீட்டோடு தானே என் தங்கச்சியைத் தங்க வைத்துக்கொண்டிருப்பேன். என்னவோ அதற்கெல்லாம் பிராப்தம் இல்லாமல் போச்சு, மஞ்சு ;(

      Delete
  5. //ஞானப்பழமாச்சே நான் தான்.. ஒன்றும் தெரியாம திருதிருன்னு முழிக்க.. அங்கும் அம்மா வந்து இப்ப பிரபல்யமாக இருக்கும் விண்டோஸ் லோட்டஸ் ஒன் டூ த்ரீ இது ரெண்டும் எடுத்து படிக்கச்சொன்னாங்க…//

    இப்போது மஞ்சு ஒரு ஞானப்பழமே தான். ஒன்று என்ன? ஓராயிரம் ஞானப்பழங்களைச் சேர்த்துப்பிழிந்த ஞானப்பழ ஜூஸ்ஸாக்கும் எங்க மஞ்சு. ;)))))

    >>>>>>

    ReplyDelete
    Replies
    1. இல்லன்னா இல்லவே இல்லை :) இப்பவும் சேம் அதே ஓல்ட் மஞ்சு ஞானப்பழமே தான்.. தத்தியே தான்.. மக்கு மஞ்சுவே தான் :)

      Delete
    2. //Manjubashini Sampathkumar August 11, 2013 at 3:22 PM
      இல்லன்னா இல்லவே இல்லை :) இப்பவும் சேம் அதே ஓல்ட் மஞ்சு ஞானப்பழமே தான்.. தத்தியே தான்.. மக்கு மஞ்சுவே தான் :)//

      இதைப்படித்ததும் எனக்கு அழுகை அழுகையா வருகிறது மஞ்சு. அப்படியெல்லாம் சொல்லாதீங்கோ ம்ஞ்சு.

      ஆமென் போட ஒருத்தரை சம்பளம் கொடுத்து நியமிச்சு வெச்சுருக்கீங்க. போங்கோ மஞ்சு.

      மஞ்சு ஞானப்பழம், தத்தி, மக்கு என்றால் ம்ஞ்சுவின் அண்ணா எவ்வளவு பெரிய ஒரு ஞானப்பழமாகவும் [ஞான சூன்யமாகவும்] தத்தியாகவும் [தத்தித்தத்தி தயிருஞ்சாதம் சாப்பிடத்தான் லாயக்கு என்றும்], மக்கு ஆகவும் [மாங்கா மடையனாகவும்] இருக்கணும்.

      அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக ! ;)

      மஞ்சுவின் அண்ணா கோபு.


      Delete
    3. அண்ணா நான் உண்மைய தானே சொன்னேன்??

      உங்களை எத்தனைப்பேர் சிலாகித்து சொல்றாங்க... நீங்க இப்படி இங்க தத்துபித்துன்னு எழுதி இருக்கீங்களே... தயிர் சாதம் எவ்ளோ அற்புதமான உணவு.... மாங்கா மடையனா யாரு அது அப்டி சொல்றது? சரி சரி அண்ணா அழாதீங்க.. எப்பவும் நேர்மையா உண்மைய சொல்றது நல்லது தானே? அதான் சொன்னேன் அண்ணா... அண்ணா புத்திசாலியா இருந்து தங்கை மக்கா இருப்பதில்லையா என்ன? :)

      Delete
  6. //இடையே எனக்கு எலும்பு தேய்மானம் காரணமாக இனிமே கணிணி முன்னாடி மட்டுமல்ல கணிணி பக்கமே திரும்பக்கூடாதுன்னு டாக்டர் சொல்ல… நானும் சமர்த்தா கேட்பது போல கேட்டுட்டு அப்புறம் அதை காத்துல பறக்கவிட்டுட்டு இதோ இங்கே….//

    வேண்டாம் மஞ்சு. உடம்பைப்பார்த்துக்கோங்கோ, ம்ஞ்சு. ப்ளீஸ் மஞ்சு.

    >>>>>>

    ReplyDelete
    Replies
    1. ஒரு நாளைக்கு ஐந்து பதிவுகள் படித்து கருத்திட ஆசை.. ஆனால் ஒரு பதிவுக்கு கருத்திட்டாலே அன்றைய நாள் முடிந்துவிடுகிறது அண்ணா.. பரவாயில்லைன்னு தைரியமாக கால் எடுத்து மீண்டும் வலைப்பூவுக்குள் வந்துவிட்டேன்.. எல்லோரும் மன்னிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்...

      Delete
    2. //Manjubashini Sampathkumar August 11, 2013 at 3:24 PM
      ஒரு நாளைக்கு ஐந்து பதிவுகள் படித்து கருத்திட ஆசை.. ஆனால் ஒரு பதிவுக்கு கருத்திட்டாலே அன்றைய நாள் முடிந்துவிடுகிறது அண்ணா..//

      ஒரு பதிவுக்கு கருத்திட்டாலே சுமார் ஒரு கிலோமீட்டர் நீளத்துக்கு அல்லவா எழுதுவீங்க. பிறகு அந்த நாள் முடிந்துவிடாமல் என்ன செய்யும்? ;)))))

      என்னவோம்மா, என் பதிவுகளுக்கு, எனக்குக் கருத்து ஏதும் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. மஞ்சுவின் பிஞ்சு விரல்கள் வலிக்காமல் [என்னால் நோகாமல்] இருந்தால் சரிதான். அதுவே எனக்கு மகிழ்ச்சி, மஞ்சு.

      Delete
  7. //இந்த தொடர் பகிர்வில்…. நான் ரமணி சார் அவர்களையும் ரிஷபன் சார் அவர்களையும் வை.கோ அண்ணா அவர்களையும் தொடரும்படி வேண்டுகிறேன்…//

    ஆஹா, எனக்கே எனக்கா ?

    மஞ்சுவின் ஜூஸா ;)))))

    முயற்சிக்கிறேன்ன்பா !

    நன்றிப்பா !!

    நல்லா சூப்பரா எழுதிருக்கீங்கப்பா .... பாராட்டுக்கள்ப்பா !

    வாழ்த்துக்கள்ப்பா.

    அன்புடன்
    கோபு

    ReplyDelete
    Replies
    1. நோ கிண்டலு

      ஒன்லி சுண்டலூஊஊஊ

      சுடச்சுட தேங்காய் மாங்கா பட்டாணி சுண்டலூஊஊஊ

      Delete
  8. கணினியோட இத்தனை வருட பழக்கமா! எதிர்ப்பார்க்கவில்லை.
    அஞ்சான் - எத்தனை அருமையான பெயர்!

    ReplyDelete
    Replies
    1. ம்க்கும் நீங்க தான் மெச்சிக்கணும்.... எல்லாம் பயமுறுத்தும் பூச்சாண்டி தான் எனக்கு :)

      அஞ்சான் அம்மா செல்லமாக என் மூத்த மகனை அழைப்பது... ஆஞ்சநேய பக்தை... என் தங்கைப்பெண்ணையும் இப்டி தான் கூப்பிடுவாங்க... ப்ரதிங்கராஞ்சனா.. ஆஞ்சனா வந்திருச்சாப்பா? :)

      Delete
  9. கணினியுடனான உங்கள் அனுபவம் படித்தேன்......

    ரசித்தேன்.

    ReplyDelete
  10. ஏற்கெனவே இருவர் அழைத்து
    சுவாரஸ்யமாக சொல்வதற்கு ஏதும் இல்லையாதலால்
    காலம் கடத்திக் கொண்டிருக்கிறேன்
    எப்படியும் இந்த வாரம் பதிவு செய்ய முயல்கிறேன்
    அழைப்புக்கு மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. சுவாரஸ்யம் நீங்க சொல்வதிலேயே இருக்கு ரமணி சார்... காலம் கடத்தினாலும் பரவாயில்லை.. கண்டிப்பா எழுதுங்களேன் ப்ளீஸ்.... அன்பு நன்றிகள் ரமணி சார்... த.ம க்கு கூட...

      Delete
  11. Replies
    1. அன்பு நன்றிகள் ரமணி சார்....

      Delete
  12. உங்கள் கம்ப்யூட்டர் அனுபவம் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. உங்கள் பதிவுகள் என்றாலே, உங்களுக்கும் திரு VGK அவர்களுக்கும் இடையில் நடக்கும் நகைச்சுவையான கருத்துரைகளை ரசித்துப் படிப்பேன். “ அஞ்சான் “ (செல்லப்பெயர் என்று நினைக்கிறேன்.) பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... ஆமாம் இளங்கோ சார். வை.கோ அண்ணா எப்போதும் இப்படித்தான்.. :) அஞ்சான் செல்லப்பெயர் தான்.. அம்மா ஆஞ்சநேய பக்தை என்பதால் அஞ்சான் அப்டின்னு பேர் வைத்து கூப்பிட எல்லோரும் அப்படியே கூப்பிடுகிறோம் சார்...

      Delete

  13. //ஞானப்பழமாச்சே நான் தான்.. ஒன்றும் தெரியாம திருதிருன்னு முழிக்க.. //

    ஞானப்பழமா நீங்கள் ?
    அடடா !!
    தெரியாம போச்சே !!

    இதோ பிடிங்க ..பழத்தை ...

    https://www.youtube.com/watch?v=ltJKmR0K53w

    சுப்பு தாத்தா
    www.subbuthatha72.blogspot.com
    back to chennai.

    ReplyDelete
  14. ஞானப்பழமாச்சே நான் தான்..

    அருமையான இனிய கனியாய் மலரும் நினைவுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் இராஜிம்மா.

      Delete
  15. ஒவ்வொருவருடைய கணினி அனுபவமும் வித்தியாசமாய்த்தான் இருக்கிறது...இனி தொடர்ந்து எழுத உங்களால் முடியும் ... அதற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாகப்பா... முடியும் என்று ஊக்கப்படுத்திய உங்களுக்கு மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா..

      Delete
  16. சுவராஸ்யமாய் எழுதியிருக்கிறீர்கள்... அருமை...

    ReplyDelete
  17. அருமையான பதிவு.
    கடந்த கால நினைவுகள் என்றுமே சுகமானவைதான்.
    கணினி தேவைதான்,ஆனால் அதைவிட உடல் நலம் முக்கியம் அவசியம்
    கவனித்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  18. எந்தவிதமான ஒளிவுமறைவில்லாமல் அருமையாக சொன்னீர்கள்.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  19. கணினி அனுபவம் அருமை.
    உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள்.
    முடிந்த போது பதிவு எழுதுங்கள்.

    ReplyDelete
  20. ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்துக்கூறி
    சிறப்பித்ததற்கு மனம் நிறைந்த
    இனிய அன்பு நன்றிகள்..

    ReplyDelete
  21. உடம்பை கவனிச்சுக்கோங்க மஞ்சு. இங்க வந்தாலே நோயெல்லாம் பறந்து போய்டுங்குறது வேற விசயம்.

    ReplyDelete
  22. எந்தப் பகிர்வையும் படிச்சு கமெண்ட் போட உடல் நிலை இடம் கொடுக்காட்டாடி விட்ருங்க. முதல்ல உங்க ஹெல்த்தான் எங்களுக்கு முக்கியம். அப்பப்ப இது மாதிரி பகிர்வுகள் மூலமா எங்களோட தொடர்புல இருந்தாலே மகிழ்‌ச்சி!

    ReplyDelete

  23. அனுபவம் ரசித்தேன்
    உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள் சகோ

    ReplyDelete
  24. Nice அக்கா ! "அஞ்சான் " வித்யாசமான பெயர் அருமையான செலக்சன்

    //இருக்கும்வரை தொடரும் இந்தப்பயணம்….//

    வாழ்த்துக்கள் !

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...