கதை 14. தொலைக்க விரும்பாத அன்பு...
சூரியவெளிச்சம் பட்டு கண் கூசியது பிரபாவுக்கு....
ஸ்ஸ்ஸ் ஆஹ் என்று தலையை பிடித்தபடி எழுந்து உட்கார்ந்தான்...
இன்று டான்ஸ் க்ளாஸுக்கு வரும் வந்தனாவை பார்க்கணுமே என்ற பரபரப்பு உடம்பில் சட்டென தொற்றிக்கொண்டு வேகமாக எழுந்து கிளம்பி தயாரானான்....
பிரபாவை பற்றி ஒரு சின்ன அறிமுகம் கதை தொடர நமக்கும் வசதியா இருக்கும்ல?
பிரபா யாரையும் சட்டென ஈர்த்துவிடும் ஒரு வசீகரத்தன்மை..... ஹூஹூம் கிடையாது....
அழகு?? துளியும் இல்லை....
சரி நிறம்??? சொல்லமுடியாது வேணும்னா காக்கை சிறகினிலே நந்தலாலா நிந்தன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா அப்டின்னு பாடிக்கலாம்...
ஆனா ஆள் நல்ல உயரம் கனகச்சிதமான யோகா உடற்பயிற்சி இதெல்லாம் அவனை கட்டுக்கோப்பாக வைத்திருந்தது....
சரி சரி பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேக்குது வாங்க என்ன செய்றார்னு பார்ப்போம் நம்ம ஹீரோ... என்ன இவர் தான் ஹீரொவான்னு பாக்குறீங்களா?? யெஸ் இவரே தான் நம்ம கதையின் நாயகன்... வேற வழி இல்லை...
குளித்துவிட்டு வேகமாக வந்து பாபா உதியை நெற்றியில் இட்டுக்கொண்டு வேகமாக பாபாவின் ஸ்லோகம் சொல்லிக்கொண்டே ஒரு கிளாஸ் பாலை சூடு செய்து கல்கண்டு போட்டு நைவேத்தியமாக படைத்துவிட்டு அரக்க பரக்க குடித்துவிட்டு பைக் சாவி எடுத்துக்கொண்டு வீட்டை பூட்டிக்கொண்டு வண்டியை கிளப்பினான்... மனம் முழுக்க வந்தனா வந்தனா என்று அரற்றிக்கொண்டே இருந்தது.... வந்திருப்பாளா வந்திருப்பாளா??
நளினி பெயருக்கேற்றார் போல் நளினம் இல்லை உடலிலும் உள்ளத்திலும்... ஆனால் கொள்ளை அழகு... ஆண் தனமான ஒரு தலை சிலுப்பல்.... உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அழகு துளிர்த்தது..... தன்னடக்கம் என்ற பெயரை கேட்டாலே என்னமோ அசூயைப்போல் பார்ப்பது நளினியின் பழக்கம்.....
இன்னுமா வண்டி ரெடியாகலை என்று கோபத்துடன் கூலிங் கிளாஸ் கழட்டிவிட்டு கேரேஜ் பையனை கத்திக்கொண்டு இருந்தாள்..
இதோ இன்னும் ஒரு அரைமணிம்மா...
எனக்கு லேட் ஆகுது மீட்டிங்குக்கு... என்று உறுமினாள்...
பையன் ஒரு மாதிரியாக பார்த்தான்...
ஏம்மா இந்த பொட்டக்காட்டுல வண்டி நின்னு போனதுக்கு நான் என்னம்மா செய்யமுடியும்? அதான் பார்த்துட்டு இருக்கேன்ல என்று முணுமுணுத்தான்...
இவனிடம் பேசி பயனில்லை என்றபடி ஒரு மரத்தின் நிழலில் ஒதுங்க நினைக்கலாம் என்றால் எங்கும் வெயில் சுட்டெரித்தது... மரத்தை வெட்டாதீர்கள்... மழை வர மரக்கன்றுகள் நடுங்கள்னு அலங்காரத்துக்காக அரசியல்வாதிகள் நடச்சொன்னபடி நட்டிருந்தால் கூட அங்கே இங்கேன்னு மரம் இருந்திருக்கும் நிழலும் கிடைச்சிருக்கும்...
ஹூம் என்றபடி வண்டியில் இருந்த பாட்டில் எடுத்து நீர் குடித்தாள்.....
நளினியைப்பற்றியும் கொஞ்சம் தெரிஞ்சுக்குவோமே...
அட இவங்க நம்ம கதையின் ஹீரோயின்பா...
அட அதுக்குள்ள பைக் சத்தம் கேக்குதே... சரி அப்புறம் பாத்துக்கலாம் விடுங்க... இப்ப இங்க என்ன நடக்குதுன்னு பார்ப்போம்...
நளினி வேகமாக லிப்ட் கேட்கவேண்டி கைவிரலை உயர்த்தி காட்டினாள்... மீட்டிங் எப்படியாவது போய்விடவேண்டும் என்ற பரபரப்பு வியர்வையின் ஊடே வழிந்தது....
கிட்டே பைக் வர வர பைக்கை ஓட்டியவனின் முகம் பார்த்து ச்சே என்றபடி முகத்தை திருப்பிக்கொண்டாள்...
பைக் நின்றது...
மேடம் டூ யூ வாண்ட் லிப்ட்?
நோ தாங்க்ஸ் என்றபடி திரும்பிக்கொண்டாள்....
தோளைக்குலுக்கிக்கொண்டு அவன் பைக்கை உதைத்தான்....பைக் சீறி பாய்ந்தது... சில நொடிகளில் பைக் போன சுவடே தெரியாமல் பொட்டல்காடானது...
அம்மா வண்டி ரெடியாயிருச்சுங்கம்மா....
சரி சரி இந்தா பணம் என்றபடி அவனிடம் பணத்தை கொடுத்துவிட்டு காரை ஸ்டார்ட் செய்தாள் நளினி....
ஏசி போட்டுக்கிட்டே பாட்டுக்கேட்டுக்கிட்டே நாமும் நளினி பத்தி ஒரு சின்ன அறிமுகம் தரலாமே....
நளினி அழகு பெட்டகம் ஆனா மனசுல தான் ஒரு பெரிய கிளியோபாட்ரான்னு நினைப்பு தலையை குனிந்து பார்ப்பதை வெறுப்பதால் எப்பவும் தலையில் க்ரீடம் வைத்துக்கொண்டு நடப்பதை போல தான் நடப்பாங்க இந்தம்மா....
நளினி டிவோர்ஸி.....
அப்டின்னா எக்ஸ் ஹஸ்பெண்ட் யாருன்னு குழப்பிக்கிற முன்னாடி நானே சொல்லிடரேன்... பைக்ல லிப்ட் கேட்டு வேணாம்னு தலைய சிலுப்பிக்கிட்டாங்களே.. சாக்ஷாத் அந்த பைக்கில் வந்த ஆள்..... அதாம்பா நம்ம நாயகன் பிரபா....
எப்படி அமாவாசையும் பௌர்ணமியும் அப்டின்னு நீங்க யோசிக்கிறது புரியுது....
அதுக்குள்ள வண்டி கரெக்டா நளினியின் ஆபிசுல வந்து நின்றுச்சு... சரி நளினி மீட்டிங்குக்கு போகட்டும்....
அங்க பிரபா வந்தனா வந்தனான்னு அனத்திக்கிட்டே போனது என்னாச்சுன்னு தெரியலையே போய் பார்ப்போமா?
டான்ஸ் க்ளாஸ் நெருங்கும்போதே உள்ளிருந்து வந்த மெல்லிய இசை அவன் மனதை நிதானத்துக்கு கொண்டு வந்தது....
உள்ளே நுழைந்தபோது மார்னிங் மாஸ்டர் என்று சொன்னபடி குட்டி குட்டி பூக்களாக குழந்தைகள் ஓடி வந்தன...
பிரபாவின் கண்கள் வேகமாக பிள்ளைகளை அணைத்துக்கொண்டே வந்தனாவை தேடியது....
12 வருட காதல் வாழ்க்கையை பட்டுப்போயிவிட்டது என்று எண்ணிய நேரத்தில் ஒரு தேவதையாக வந்தனா வந்தது அவனுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது....
எப்படி உருகி உருகி காதலித்தோம் இருவரும்.... பணம் மதம் அழகு எதுவுமே குறுக்கிடலையே எங்கள் காதலில்..... எத்தனை சௌந்தர்யம் இத்தனைப்பெரிய அழகி என்னை நேசித்தது எனக்கு பெரிய அதிர்ச்சி தான்... பணமும் இல்லை பெரிதாக சொத்தும் இல்லை... ஆனால் எதைக்கண்டு காதலித்தாய்ன்னு கேட்கும்போதெல்லாம் அவள் தலைமுடியை பின்னுக்கு தள்ளி அவன் நெற்றியில் முட்டி முத்தமிட்டு சொன்னது நினைவுக்கு வந்து அவன் கண்ணில் நீர் துளிர்த்தது....
படவா நீ அழகில்லைன்னு ஏண்டா சொல்றே? நீ அழகு தான்.... புதியபாதை பார்த்திபன் மாதிரி கறுப்பா அழகா இருக்கே உனக்கென்ன குறைவு? இதுக்கே அலட்டிக்கிறியே உன்னைப்போலவே பெத்துக்கப்போறேன் பிள்ளைய அப்ப என்ன சொல்லுவே என்று அன்பிலேயும் காதலிலேயும் கட்டிப்போட்டிருந்தாள்.....
ஹூம் அது ஒரு காலம்....
எந்த சுனாமி வந்து எங்கள் காதலையே புரட்டிப்போட்டது வேதனையுடன் நினைத்துப்பார்த்தான் அந்த நாட்களை.....
பூஜை அறையில் பாபாவின் அஷ்டோத்ரம் படித்துக்கொண்டிருந்த நளினி சட்டென தலைச்சுற்றலும் மயக்கமுமாக இருக்க எழுந்து ஓடினாள் பாத்ரூமுக்கு... எடுத்து வைத்த அடியில் தட்டாமாலை சுற்றவே சரிந்து விழப்போனவளை பிரபா ஆதரவாய் தாங்கிக்கொண்டான்...
என்னாச்சுடா பரிவுடன் கேட்டு சோஃபாவில் படுக்க வைத்தான்...
இந்த மிஸ்டருக்கு ஒரு மாஸ்டர் போட்டியா வரப்போறான் என்று அவன் மூக்கை கிள்ளினாள்....
ஹே எனக்கு குட்டி தேவதை தான் வேணும்.... என்றபடி ஆசையாக வயிற்றை தடவிக்கொடுத்தான்....
எல்லாம் சரியாகத்தானே போனது?
மசக்கையும் வாந்தியும் எத்தனை தான் படுத்தினாலும் அம்மா வீட்டுக்கு போகணும்னு கண்ணைக் கசக்கினதில்லை என்றும்...
நார்மல் டெலிவரியில் குட்டி ரோஜாப்பூ பட்டு விரல்களுடன் குட்டி தேவதையாக ஹரிணி பிறந்தபோது பிரபா உலகமே மறந்தான்.....
டான்ஸ் க்ளாஸ் போவதை டைம் மாற்றிவைத்துக்கொண்டு குழந்தையே உலகமாய் சுற்றிக்கொண்டிருந்தான்....
ஹே படவா ஹரிணி வந்தப்பின் என்னை மறந்தாச்சா என்று காதுமடலை கடித்தாள்....
உன்னை மறப்பதா... நீ என் உயிர்டா..
அப்ப ஹரிணி?
ஹரிணி என்னை புதுப்பித்த உலகை அழகென்று உணர்த்திய குட்டி தேவதை தெரியுமா??
ஐந்து வயது ஹரிணிக்கு கைக்கால்கள் அழகாய் பூவாய் விரித்து ஆடிய டான்ஸ் இருவரின் மனமும் மகிழ்வித்தது....
அம்மா அம்மா இன்னிக்கு ஸ்டேஜ்ல நான் ஆடப்போறேன் என்று மழலை விலகாது சொன்ன குட்டி தேவதை ஹரிணியின் கண்கள் பட்டாம்பூச்சியாய் விரிந்தன....
அப்படியா என் செல்லத்தோட டான்ஸ் பார்க்க ஓடி வருவோம்ல நானும் அப்பாவும் என்று அணைத்துக்கொண்டாள்....
ஸ்கூலே ஒரே பிரகாசமாய் ஜெகஜ்ஜோதியாய் மின்னியது....
பிள்ளைகள் எல்லோரும் குட்டி குட்டி பூக்களாய் கண்ணை மறைக்கும் மேக்கப்புடன் அங்கும் இங்கும் ஓடியது...
பிரபாவின் கார் மெல்ல பார்க்கிங்கில் நின்றதும்....
இறங்கி இருவரும் போய் இருக்கையில் அமர்ந்தனர்....
ப்ரோக்ராம் தொடங்கியது...
அழகிய குரலில் குழந்தைகள் கடவுள் வாழ்த்தை பாடி முடித்ததும்....
முதல் ப்ரோக்ராம் நடனம் தொடங்கியது....
என்னடா நம்ம ஹரிணி எப்ப ஆடுவா....பிரபாவின் கண்கள் அங்கும் இங்கும் அலைந்தன....
இருங்க ஏன் டென்ஷனாகுறீங்க?
நம்மை போல தானே எல்லா பேரண்ட்ஸும் காத்திருக்காங்க....
ஓகே என்று இருவரும் ரசிக்க ஆரம்பித்து பிள்ளைகளின் மழலை பாட்டுகளிலும் ஆடலிலும் மனம் லயித்து ஒன்றினர்..
ஒரு குட்டி தேவதையாக ஹரிணி ஸ்டேஜில் தோன்றியதுமே பிரகாசமாக தெரிந்தது...
குழந்தையின் நடனம் கண்டு பெற்றோர் இருவருமே மனம் பூரித்து கைத்தட்டினர்... ஆடியன்ஸ் எல்லோருமே ரசித்து கைத்தட்டி ஊக்குவித்தனர்...
அப்போது சடாரென அங்கே எரிந்துக்கொண்டிருந்த லைட் வெடிக்கவே ஸ்டேஜ் சுற்றி நெருப்பு பரவியது....ஐயோ ஐயோ என்ற கூக்குரல்கள் எங்கும்....
அதிர்ச்சியில் சிலையாகி பின் சுதாரித்துக்கொண்ட எல்லோரும் தன் குழந்தைகளை பாதுகாக்க முயன்று தத்தளித்து ஓடினர்..
அங்கே அரைமணியில் எல்லாம் முடிந்து நிறைய குழந்தைகள் உள்ளிருந்து வெளிவரமுடியாது கருகி கைக்கோர்த்தபடி இறந்து கிடந்தனர்...
பிரபா தன்னால் இயன்றவரை நிறைய குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியில் தன் குழந்தையை மறந்துவிட்டான்....
ஹரிணியும் பரிதாபமாக உடலும் உடையும் கருகிக்கிடந்தது அந்த குட்டி தேவதை....
ஐயோ என் குழந்தை................. அலறல் ஆஸ்பத்திரியில் ஒலிக்க பிரபா ஓடி வந்து அணைக்க முயன்றபோது வெறி வந்தது போல அவனை தள்ளிவிட்டாள்...
” பாவி பாவி நம் குழந்தையை காப்பாற்ற ஓடாம மத்தவங்க குழந்தையை காப்பாத்த ஓடினியே.... நம்ம குழந்தை நினைப்பாவது வந்திச்சா உனக்கு” என்று அவன் நெஞ்சில் அடித்தாள்.
கண்ணில் நீர் வழிய பதில் சொல்லத்தெரியாமல் நின்றான் சிலையாக....
எல்லா குழந்தைகளுமே ஹரிணி போல காட்சி அளித்தது பிழையா :(
ஹரிணியாக நினைத்து தானே காப்பாற்றினேன் இறைவா என் பிள்ளையை எங்களிடமிருந்து பிரித்துவிட்டாயே என்று கதறினான் பிரபா..
வெடுக்கென்று தலை நிமிர்ந்து அவனை உற்று நோக்கினாள்....
எப்ப நீ நம்ம குழந்தையை ஒரு பொருட்டா நினைக்காம காப்பாத்தாம விட்டிட்டியோ இனி எனக்கும் உன்னிடம் பாதுகாப்பு இல்லைன்னு தெரிஞ்சுகிட்டேன்....
இனி உன்னோடு சேர்ந்து வாழமாட்டேன் என்று குரூரமாக சொல்லிவிட்டு அழுகையுடன் மயக்கத்திற்கு போனாள்....
எல்லாம் அஸ்தமித்தது அப்போது தான் பிரபாவுக்கு....
உள்ளம் மரத்து உடல் செத்து உலகமே வெறுமையாகி போய்விட்டது பிரபாவுக்கு.. குழந்தையை இழந்த துக்கம் ஆறுமுன் தன்னை நேசித்த உயிரும் தன்னை விட்டு பிரிந்து போனதே என்ற வெறுமையில் பிரபா தன் முழு கவனத்தை டான்ஸ் க்ளாஸில் செலுத்தினான்...
1 வருடம் கழித்து.....
” போ செல்லம் சொல்றேன்ல உள்ளப்போ மாஸ்டர் கிட்ட அழகா சொல்லு உனக்கு டான்ஸ் பிடிக்கும் தானே? வீட்ல ஒரே கத்தி ரகளை பண்னிட்டு இங்க வெட்கப்பட்டா எப்படி?? ” ராதை தன் குழந்தையை பிரபாவின் முன் கொண்டு வர மிகவும் பிரயத்தனப்பட்டாள்...
” குழந்தையை கட்டாயப்படுத்தாதீங்க... அவர்கள் போக்கில் விடுங்க “ என்றான் பிரபா...
“ வீட்டில் ஒரே ரகளை உங்க படம் போஸ்டர் பார்த்துட்டு இவரிடம் தான் டான்ஸ் கத்துப்பேன்னு இப்ப என்னடான்னா.... நெளியிறா “ என்றாள் ராதை.
“ நான் ஒன்னும் வெட்கப்படலை.. அம்மா சும்மாவே இப்படி தான் மாஸ்டர் சொல்வாங்க... உங்களுக்கு ரோஸ் பிடிக்கும்னு என் ஃப்ரெண்ட் சொன்னா... அதான் கொண்டு வரலையேன்னு என்று முடிப்பதற்குள்
அதிர்ச்சியில் குழந்தையின் முகத்தை பார்த்துவிட்டு அசையாமல் நின்றான் பிரபா...
இது இது.....
பிரபாவிற்கு அந்த டான்ஸ் ரூமே சுற்றுவது போலிருந்தது....
இது இது....
மயக்கம் வருவது போல் இருக்கவே சுவற்றை பிடித்து சுதாரித்து உட்கார முயன்று தோற்று கீழே விழுந்து ஆழ்ந்த மயக்கத்திற்கு போனான் பிரபா....
ஐயோ இதென்ன வம்பா போச்சு மாஸ்டருக்கு என்னாச்சு..
குழந்தைகளும் ராதையும் பயந்து நீர் கொண்டு வந்து தெளிக்க மெல்ல கண்ணைத்திறக்கும்போது அவன் பார்வையில் முதலில் ராதையின் குழந்தை தான் பட்டாள்...
மாஸ்டர் இந்தாங்க தண்ணி குடிங்க ராதை நீட்டினாள்...
மெல்ல எழுந்து உட்கார்ந்தான் பிரபா...
தன் செயலுக்கு வெட்கப்பட்டான்....
சாரி வெயில் அதான் கொஞ்சம் என்றபடி எழுந்து தன்னை சரி செய்துக்கொண்டான்.
ராதையின் குழந்தையைப்பார்த்து வாஞ்சையுடன் சிரித்தான்...
பெயர் என்ன?
வந்தனா - கண்ணை அழகாய் பட்டாம்பூச்சியைப்போல் சிமிட்டி சொன்னாள்...
அழகுப்பெயர்....
அதன்பின் வந்தனா தான் அவன் உலகம் என்றாகிவிட்டது....
வந்தனா தன் வீட்டில் இருப்பதை விட அதிக நேரம் மாஸ்டருடனே இருந்து நடனமும் கற்று பெரிய மனுஷிப்போல மாஸ்டருக்கு வீட்டில் உதவியும் செய்வாள்....
பிரபாவின் உலகம் சட்டென அழகானதை உணர்ந்தான்....
நளினியிடம் இந்த விஷயம் சொல்லத்துடித்தான்....
இவன் நளினிக்கு போன் செய்து ஹலோ என்றபோது கட்டானது....
அதன்பின் ஒரு மாதமாக பிரபாவின் சொற்களில் 99 சதவீதம் வந்தனாமயம் தான்....
அன்று டான்ஸ் கிளாஸ் போகும் அவசரத்தில் வழியில் நின்று லிப்ட் கேட்டப்பெண்ணை பார்த்தபோது ஆச்சர்யமாகி வண்டியை நிறுத்தினான்...
ஆனால் தலையை சிலுப்பிக்கொண்டு உதவி வேண்டாம் என்று மறுத்தது சாக்ஷாத் நளினியே தான்....
குழந்தையின் மறைவுக்குப்பின்னர் தன்னை முழுமையாக பிசினஸில் ஈடுபடுத்திக்கொண்டு விட்டாள்...
அவள் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக பிரபாவின் நினைவுகள் மங்கிய நேரத்தில் தான் பிரபாவை மறுபடி சந்தித்தது.....
பிரபா ஒரு மாதம் முன்பு தனக்கு போன் செய்ததை கோபமாக கட் செய்ததை நினைத்துப்பார்த்தாள்...
மறுபடி உறவைத்தொடர தான் போனோ என்று அலட்சியமாக முகத்தை சுளித்தாள்....
தன் ஆபிசில் தன்னைப்பற்றி எல்லோரும் ஒரு மாதிரி பேசுவதை அறிவாள் நளினி....
திமிரும் அகம்பாவமும் நான் எனக்கிட்டுக்கொண்ட கவசம்... எவனும் என்னை நெருங்கமுடியாதபடி நான் எனக்குப்போட்டுக்கொண்ட வேலி என்று நினைத்துக்கொண்டாள்...
அதனால் யார் பேச்சையும் சட்டை செய்வதில்லை... ஆனால் வேலையில் ரொம்ப கறாராக இருப்பாள்...
அன்று காலை ஆபிசுக்குள் நுழைந்தபோது ரிஷப்ஷனிஷ்ட் மெல்லிய குரலில் பிரபா வந்தனா என்று சொன்னது காதில் கேட்டும் கேட்காதது போல் போனாள்....ஆனால் மனதில் குடைய ஆரம்பித்தது....
பிரபாவுக்கு போன் செய்து கேட்டுவிட துடித்தாள்....
” ஆம்பிளை தானே ஒருத்தி போனதும் இன்னொருத்தி மேலே மோகம் வந்திடுச்சு போல “ நகத்தை கடித்து துப்பினாள் ஆக்ரோஷமாக...
” கேட்டுடலாமா “ போன் எடுத்து டயல் செய்தாள்.
எதிர்ப்புறம் ஹலோ என்றதும் போனை வைத்துவிட்டாள்...
” யார் எப்படி போனால் எனக்கென்ன எப்ப எனக்கும் பிரபாவுக்கும் ஒன்றுமில்லைன்னு ஆயிட்டுதோ இனி அவர் முகத்திலே விழிக்கக்கூடாதுன்னு நினைச்சேன் ச்சே இப்படி ஒரு அசிங்கம் செய்ய எப்படி முடிகிறது இந்த மனிதனால்.. உருகி உருகி என்னை காதலித்து கல்யாணமும் செய்துவிட்டு ” ....
யோசிக்கமுடியாமல் தலை விண்விண் என்று வலிக்கவே
பொறுக்கமுடியாது இனி என்ற ரீதியில் போன் செய்தாள் மறுபடி பிரபாவுக்கு...
” ஹலோ”....
” நான் தான்” ....
”தெரியும் சொல்லு”.....
” யாரது வந்தனா.... இப்ப அவ கூட சுத்திக்கிட்டு இருக்கீங்களா?” கடூரமாக கேட்டாள்.
”ஆமாம்” அமைதியாக சொன்னான் பிரபா...
”எவ்ளோ திமிர் உங்களுக்கு.. நான் ஒருத்தி இருக்கும்போது வெட்கமா இல்லை உங்களுக்கு?”
” என்ன சொன்னே கம் அகெயின்.... நீ என்னுடன் இருந்தால் நான் ஏன் வந்தனாவை தேடப்போகிறேன்?”
” வீண் பேச்சு வேண்டாம்.... உங்க புத்தி தெரிஞ்சு தான் விலகினேன்” ஆங்காரமாக கத்தினாள் நளினி...
“ சரி இப்ப உனக்கு வந்தனா யாருன்னு தெரியனும் அவ்ளோ தானே? “
“ அவசியமில்லை எவளையும் பார்க்கவேண்டிய அவசியம் எனக்கில்லை கழுதை கெட்டா குட்டிச்சுவர்....”
“ அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்டி விடாதே நளினி.... மாலை 6 மணிக்கு ஸ்பென்ஸர் ப்ளாசா கிட்ட வா... நீயே தெரிஞ்சுப்பே “
கோபத்துடன் சட்டென இணைப்பை துண்டித்தாள் நளினி.
மனதில் ஒரு துளி நம்பிக்கை இருப்பதால் தான் இன்னமும் நளினிக்காக காத்திருந்தான் பிரபா... காத்திருந்தது வீண் போகவில்லை... கண்டிப்பாக வருவாள் மாலை... சந்தோஷ சீழ்க்கையுடன் தலையை கலைத்துப்பார்த்தான்...நளினிக்கு அடிக்கடி இவன் தலையை கலைத்துவிடுவது மிகவும் பிடிக்கும்....அப்படி ஒரு சந்தோஷக்காலம் மீண்டும் மலருமா ஏங்கினான் பிரபா...
பாபாவை மனதில் தியானித்தான்...
“ மாலை எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து உனக்கு நன்றி சொல்ல வருவேன் நான் “ நம்பிக்கையுடன் பாபாவைக்கும்பிட்டான்...
பாபா அமைதியுடன் புன்னகைத்தார்...
மாலை ஸ்பென்ஸர் ப்ளாசாவில் வந்து காரை பார்க் செய்தாள் நளினி....
மெல்ல தேடினாள் பிரபாவை....
ஆனால் பிரபாவை காணவில்லை....
1 மணி நேரம் ஆனது..... இன்னமும் காத்திருக்க முடியாது என்ற கோபத்தில் காலை உதைத்துக்கொண்டு நகரும் வேளையில்......
எதிரில் எதிரில்.....
யாரது....
கண்ணை கசக்கிக்கொண்டு பார்த்தாள்...
ஹையோ என் ஹரிணி என் ஹரிணி கையை விரித்துக்கொண்டு ஓடினாள் பிடிக்க....
சட்டென திரும்பி பார்த்து சிரித்து ஹலோ ஆண்ட்டி.... என்றது குழந்தை வந்தனா....
அப்படியே தலைச்சுற்றி மயக்கத்தில் விழப்போனபோது தன் வலிமையான தோள்களில் சட்டென அணைத்துக்கொண்டான்...
பிரபா பிரபா ஹரிணி ஹரிணி ஒன்னும் பேச இயலாது அழத்தொடங்கினாள் நளினி....
வந்தனா ஓடி வந்து கட்டிப்பிடித்துக்கொண்டு நளினியின் கையை பிடித்துக்கொண்டு...
ஆண்ட்டி என் பெயர் ஹரிணி இல்லை... வந்தனா என்று அழகாய் உச்சரித்தாள்.
”பின்னாடி இத்தனை நேரமும் நீ அறியாமல் மறைந்து இருந்து உன்னைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தேன் நளினி. நீ எழுந்த வேகத்தில் எங்கே கிளம்பிடுவியோன்னு தான் வந்தனாவை உன் முன் நடந்து வரச்சொல்லி அனுப்பினேன்.. ”
“ ஏன் இப்படி காக்க வைத்தேன்னு பாக்குறியா என் கண்ணாட்டி? “ ஒரு நம்பிக்கை துளி என் மனதில் இருந்ததுடா... எப்படியும் நீயும் நானும் சேர்ந்துடுவோம்னு....”
” ஹரிணி காரணமா நீ என்னை விட்டு பிரிந்து நான் ரொம்ப தனியாகி போனேண்டா... “
” இப்ப நீயே வந்து என்னை சேர பாபா நடத்தின அற்புதமா நினைக்கிறேன்... இப்பவும் உன் மனதில் நான் இருக்கிறேனா என்று அறியத்தான் இப்படி காக்கவைத்தேன்.. மன்னிச்சிருடா என் தங்கம் “ என்றான்...
“ இல்ல பிரபா நீ தான் என்னை மன்னிக்கனும்... இருவருமே ஒரே விதமா இழந்தோம்... ஆனால் இழப்பு எனக்கு மட்டும் தான் என்பது போல உன்னை நிர்கதியா தவிக்க விட்டுட்டேன் மன்னிச்சிரு பிரபா” என்று அழுதாள்....
“ ஐயே இன்னும் அழுதுக்கிட்டே இருந்தா எங்க வீட்ல என்னை எப்ப கொண்டு விடப்போறீங்க” இடுப்பில் கையை வைத்துக்கொண்டு முறைத்தாள் இந்த குட்டி தேவதை.
சிரித்துக்கொண்டே இருவரும் ஹரிணியை இல்ல இல்ல வந்தனாவை வீட்டில் விட்டுவிட்டு தன் வீட்டை நோக்கி வண்டியை வேகமாக திருப்பினான் பிரபா...
இனி அடுத்த புது வரவாய் உறவாய் ஹரிணி பிறந்து மீண்டும் இருவர் வாழ்விலும் வசந்ததை கொண்டு வரப்போறாள்னு சொல்லனுமா என்ன???
Tweet |
இத்தனைப்பெரிய அழகி என்னை நேசித்தது எனக்கு பெரிய அதிர்ச்சி தான்... பணமும் இல்லை பெரிதாக சொத்தும் இல்லை... ஆனால் எதைக்கண்டு காதலித்தாய்ன்னு கேட்கும்போதெல்லாம் அவள் தலைமுடியை பின்னுக்கு தள்ளி அவன் நெற்றியில் முட்டி முத்தமிட்டு சொன்னது நினைவுக்கு வந்து அவன் கண்ணில் நீர் துளிர்த்தது....
ReplyDeleteஎன் கண்களிலும் தான்,அருமையான எதார்தமான கதை.வாழ்த்துக்கள்.
அன்பு நன்றிகள் ஸ்ரீதர் கருத்து பதிந்தமைக்கு.....
ReplyDeleteஇனி அடுத்த புது வரவாய் உறவாய் ஹரிணி பிறந்து மீண்டும் இருவர் வாழ்விலும் வசந்ததை கொண்டு வரப்போறாள்னு சொல்லனுமா என்ன???
ReplyDeleteவசந்த வரவுக்கு வாழ்த்துக்கள்.
மிக அழ்காக ரம்யமாக மனம் கவரும் வண்ணம் சுபமுடிவாக கதை அமைத்தவிதம் ரசிக்கவைத்தது. பாராட்டுக்கள்.
ReplyDelete>>நளினி பெயருக்கேற்றார் போல் நளினம் இல்லை உடலிலும் உள்ளத்திலும்... ஆனால் கொள்ளை அழகு... ஆண் தனமான ஒரு தலை சிலுப்பல்.... உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அழகு துளிர்த்தது..... தன்னடக்கம் என்ற பெயரை கேட்டாலே என்னமோ அசூயைப்போல் பார்ப்பது நளினியின் பழக்கம்.....
ReplyDeletehaa haa ஹா ஹா என்ன ஒரு வர்ணனை!!!
அருமையாகக் கதை சொல்லிப்போகிறீர்கள்
ReplyDeleteஇருளிருந்து வெளிச்சத்திற்கு மெல்ல மெல்ல
கதையை நகர்த்திச் செல்லும் விதம் அழகு
இவர்கள் பிரிவதற்கு காரணமாக இருக்கிற
அந்த ஆண்டுவிழாவின் விபத்தை
ஒரு செய்திப்போல் இல்லாமல் இன்னும்
கொஞ்சம் அழுத்தமாக நிகழ்ச்சிபோல்
சொல்லி இருந்தால் இன்னும் சிறப்பாக
இருந்திருக்குமோ எனத் தோன்றியது
மனம் கவர்ந்த படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
யார் தான் அன்பைத் தொலைக்க விரும்புவார்கள்..
ReplyDeleteநன்றாகவுள்ளது கதை.
அன்பு மட்டும் வாய்த்து விட்டால் அற்பமான மனத்தாங்கல்கள் தொலைந்து அற்புதமான வாழ்வு கிட்டிவிடும்.
ReplyDeleteசம்பவக் கோர்வைகள் அப்படியே உணர்வு பூர்வமாய் சித்தரித்ததில் வாசிக்கும்போது மனசு படபடக்கிறது நம்மை அறியாமலேயே.
வெரி நைஸ்
கதைக்கான கரு மாறுபட்டு சிறப்பான அமைத்ததுடன் மிளிர்கிறது உள பூர்வமான பாராட்டுகள் நன்றி .
ReplyDeleteஅன்பு நன்றிகள் இராஜராஜேஸ்வரி கருத்து பதிந்தமைக்கு...
ReplyDeleteஎப்போதும் சோக முடிவாகவே கதை முடிக்கிறேன் என்ற வருத்தம் எல்லோருக்குமே இருப்பதால் ஒரு சின்ன மாறுபட்ட முயற்சி...
அன்பு வரவேற்புகள் செந்தில்குமார்....
ReplyDeleteபெண்மை இல்லாத பெண் என்பதை தான் அப்படி எழுதினேன் கொஞ்சம் வித்தியாசமாக....
அன்பு நன்றிகள் செந்தில்குமார் கருத்து பதிந்தமைக்கு...
அன்பு நன்றிகள் ரமணி சார் கருத்து பதிந்தமைக்கு...
ReplyDeleteநானும் அப்படி தான் விஸ்தாரமாக கொடுக்க நினைத்தேன் ரமணி சார்... ஆனால் மறுபடி சோகத்தை தூக்கலா தெளிக்கிற மாதிரி ஆகிடுமோன்னு பயந்து அப்படி சொல்லிட்டேன் ரமணி சார்...
இனி அடுத்த கதை எழுதும்போது கவனமாக எழுதுகிறேன் ரமணி சார்....
அன்பு வரவேற்புகள் குணசீலன்....
ReplyDeleteஉண்மையே இந்த கலியுகத்தில் ஒரு அன்பு உள்ளம் உயிராய் நேசித்து பிரிந்துவிட்டால் அதை தொலைக்க விரும்பாது இறைவன் அருளால் சேர்ந்துவிட நினைக்கும் மனம்....
அன்பு நன்றிகள் குணசீலன் கருத்து பதிந்தமைக்கு...
அன்பு நன்றிகள் கருத்து பதிந்தமைக்கு ரிஷபன்...
ReplyDeleteஉண்மை அன்பு சத்தியத்தைப்போன்றது... விட்டு போனாலும் அல்லது போக நினைத்தாலும் விடாது தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள போராடும் தன்மைக்கொண்டது....
அன்பு நன்றிகள் மாலதி கருத்து பதிந்தமைக்கு....
ReplyDeleteஎத்தனையோ இக்கட்டில் நீங்க வந்து எனக்கு பின்னூட்டமிடுவது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது....
தங்கள் படிப்பும் உடல்நலமும் எப்படி இருக்கிறதுபா?
//எல்லா குழந்தைகளுமே ஹரிணி போல காட்சி அளித்தது பிழையா :(
ReplyDeleteஹரிணியாக நினைத்து தானே காப்பாற்றினேன் இறைவா என் பிள்ளையை எங்களிடமிருந்து பிரித்துவிட்டாயே என்று கதறினான் பிரபா..//
//இருவருமே ஒரே விதமா இழந்தோம்... ஆனால் இழப்பு எனக்கு மட்டும் தான் என்பது போல உன்னை நிர்கதியா தவிக்க விட்டுட்டேன்//
அருமையான வரிகள்.
அழகான கதை .
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஅன்பு நன்றிகள் ராம்வி கருத்து பதிந்தமைக்கு....
ReplyDeleteஅன்பு நன்றிகள் ராம்வி கருத்து பதிந்தமைக்கு....
ReplyDeleteஅன்பு நன்றிகள் கலை கருத்து பதிந்தமைக்கு...
ReplyDeleteகதை பிடிக்காத, அதனால் படிக்காத
ReplyDeleteஎன்னைக் கதை படிக்கவும்
பிடிக்கவும் செய்தது தாங்கள்
எழுதும் கதைகள் என்று
சொன்னால் அது மிகையல்ல
புலவர் சா இராமாநுசம்
நல்ல விறுவிறுப்பான கதை. வாழ்த்துக்கள். இன்றுதான் மூன்றாம் சுழி வலைப்பூ மூலம் உங்கள் வலைப் பக்கம் வந்தேன். குவைத்தில் இருக்கிறீர்கள் என்று தெரிந்து மகிழ்ச்சி. நானும் குவைத்தில் வாழும் பதிவர். நேரம் கிடியக்கும்போது என் வலைப் பக்கம் வந்து பாருங்கள்.
ReplyDeleteஆஹா இராமானுசம் ஐயா உங்களை கதை படிக்கவைத்துவிட்டேனா...
ReplyDeleteஅன்பு நன்றிகள் ஐயா கருத்து பதிந்தமைக்கு.
அன்பு வரவேற்புகள் கீதா...
ReplyDeleteநீங்க குவைத்ல எங்க இருக்கீங்கப்பா?
முடிந்தால் என்னை மெயிலில் தொடர்பு கொள்ளுங்கப்பா...
உங்க வலைப்பக்கம் வந்தேன். அசத்தலான ஹவ் ஆர் யூ? கதையும் படித்தேன் :)
அன்பு நன்றிகள் கீதா கருத்து பதிந்தமைக்கு...
மஞ்சுபாஷிணி மேடம், உங்கள் இமெயில் முகவரியைத் திறக்க முடியவில்லை.
ReplyDeleteஅடடா கீதா உங்களுக்கு என் மெயில் ஐடி வரலையா?
ReplyDeletemanjusamdheeraj@gmail.com
ஒரு பிள்ளை பிரித்தால் இன்னொன்று சேர்க்குமா? சுவாரசியமான கற்பனை.
ReplyDeleteமகவிழப்பின் சோகத்தை நன்றாகவே எழுத்தில் வடித்திருக்கிறீர்கள்.