தீதும் நன்றும் பிறர் தர வாரா ரமணி சார் (http://yaathoramani.blogspot.com/) அவர்களின் அன்பு அழைப்பிற்கிணங்க முத்தான மூன்று முடிச்சு பதிவுத் தொடரினை இங்கே உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்.
பிடித்த உறவுகள்
1.அம்மாவில் ஆரம்பித்து நட்புவரை இணைந்திருக்கும் எல்லா நல்ல உள்ளங்களும்...
2. இதே தான்...
3. இதே தாம்பா...
பிடித்த உணர்வுகள்.
1.அன்பில் தொடங்கி அன்பில் தொடர்ந்து அன்பிலேயே அன்பிலேயே கரையும்
2.இதே தான்...
3.இதே தாம்பா...
பிடிக்காத உணர்வுகள்.
1.பிறரின் விஷயத்தில் மூக்கை நுழைக்கும் அதிகபிரசங்கித்தனம்
2.இதே தான்...
3.இதே தாம்பா....
முணுமுணுக்கும் பாடல்கள்
1.குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா...
2.பஜன் பாடல்கள்
3.பாரதியார் பாடல்கள்
பிடித்த திரைப்படங்கள்
1.ரேவதி நடித்த அத்தனை படங்களும்
2.இதே தான்...
3.இதே தாம்பா...
அன்புத் தேவைகள்
1.என்னவர்
2.என்னவரே தான்
3.என்னவரே தான்
வலிமையை அழிப்பவை
1.மனச்சோர்வு
2.இதே தான்
3.இதே தாம்பா
குட்டித் தத்துவம்
1.முகத்துக்கு முன்னும் முதுகுக்கு பின்னும் நல்லவற்றையே பேசு
2.அன்பை பகிரும்போது ஆத்மார்த்தமாய் பகிர்
3.வேண்டாத வார்த்தைகளை காதில் கேட்டாலும் அது மனம் வரை சென்று தாக்காமல் பார்த்துக்கொள்
பயமுறுத்தும் பயங்கள்
1.கூட இருந்தே குழி பறிப்பது
2.எதிரில் சிரித்து புறம் பேசுவது
3.நம்பிக்கை துரோகம்
அடைய விரும்பும் நிலையான விருப்பங்கள்
1.முக்தி
2.முக்தி
3.முக்தி
கற்க விரும்புவது
1.ஹிந்துஸ்தானி இசை
2.கண்டெம்ப்ரரி நடனம்
3.வெண்பா
வெற்றி பெற வேண்டியவை
1.இடைவிடா முயற்சி
2.வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை
3.இறையின் அருள்
சோர்வு நீக்க தேவையானவை
1.இசை
2.நடனம்
3.குழந்தையின் சிரிப்பு
எப்போதும் தயாராக இருக்க வேண்டியது
1.உதவும் மனப்பான்மை
2.இதே தான்...
3.இதே தாம்பா...
முன்னேற்றத்திற்கு தேவை
1.முயற்சி
2.தோல்வியிலும் துவளாது எழும் தன்மை
3.வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை
எப்போதும் அவசியமானது
1.தன்னிடம் இருப்பதில் ஏழைகளுக்கு தந்து உதவும் மனப்பான்மை
2.இதே தான்
3.இதே தாம்பா
பிடித்த தத்துவம்
1.இதுவும் கடந்து போகும்
2.பணத்தை சேமிக்காதீங்க நல்லதை செய்து புண்ணியத்தை சேமிங்க
3.நமக்கு துன்பம் செய்தவருக்கும் நல்லதையே நினைங்க
தெரிந்து தெரியாது குழப்புவது
1.இதுவரை பார்க்காத கோவில்கள் கனவில் வருவது
2.அந்த கோவில்கள் பற்றிய விவரங்கள் அறிந்து போகும் வரை விடாது கனவாய் வருவது
3.கண்டுபிடித்து போனால் கனவில் வந்த ஸ்வாமியே அங்கு கர்ப்பகிரஹத்தில் இருப்பது
எரிச்சல் படுத்துபவர்கள்
1.ஸ்வாமி கும்பிடும்போது இடையில் போன் அடிப்பது
2.தூக்கத்தில் இருக்கும்போது போன் வருவது
3.உறக்கம் கலையும் முன்னரே விடிந்துவிடுவது
மனங்கவர்ந்த பாடகர்கள்
1.எம் எஸ் சுப்புலட்சுமி அம்மா
2.வாணி ஜெயராம்
3.சின்னக்குயில் சித்ரா
இனிமையானவை
1.பாகவதம் படிப்பது
2.பாடுவது
3.படம் வரைவது
சாதித்தவர்களின் பிரச்சனைகள்
1.வெற்றியை தக்கவைத்துக்கொள்ள போராடி முடியாதபோது சோர்ந்து போவது
2.இதே தான்..
3.இதே தாம்பா...
பிடித்த பழமொழிகள்
1.தாயிற் சிறந்த கோவிலும் இல்லை...என்னவர் சொல் மிக்க மந்திரமில்லை...என்ன மாத்திட்டேனா?? :)
2.நேரம் பொன் போன்றது (ஆமாம் டிவி பார்த்து டைம் வேஸ்ட் பண்ணிராதீங்கப்பா...
3.உழைப்பே உயர்வு தரும்.... இல்லையா பின்ன?
பதிவிட அழைக்கும் அன்பு உள்ளங்கள்
1.புலவர் சா இராமானுசம்(http://pulavarkural.blogspot.com/)
2.சிவகுமாரன்(http://sivakumarankavithaikal.blogspot.com/)
அருமையான இந்த வாய்ப்பை நல்கிய ரமணி சாருக்கு என் அன்பு நன்றிகள்...
Tweet |
அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ரத்தினவேலு ஐயா வாங்க.... அன்பு நன்றிகள் ஐயா....
ReplyDeleteஅருமையாக பதில் கொடுத்துள்ளீர்கள்
ReplyDeleteஎன்னுடைய பதிலில் கூட சில
முரண்பாடுகள் இருப்பது போல்படும்
உங்கள் பதிலில் எந்தக் குழப்பமும் இல்லை
இப்படித்தான் இருக்கும் என எதிர்பார்த்தேன்
அப்படியே இருந்ததில் கூடுதல் மகிழ்ச்சி
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
அன்பு நன்றிகள் ரமணி சார்...
ReplyDeleteஉங்கள் பதில்கள் மிக தெளிவாகவே இருந்தது முரண்பாடு கண்டிப்பாக இல்லை... நான் படிக்கும்போதே தெரிந்துக்கொண்டேன். படிக்கும்போது ஆழ்ந்து உணர்ந்தால் அறிய முடியும் அதில் முரண்பாடுக்கான விஷயம் இல்லையென்று.... நுணுக்கமாக நோக்கினால் வித்தியாசங்கள் கண்டிப்பாக அறியமுடியும்... அறியவும் முடிந்தது... தெளிவாகவும் இருந்தது தங்கள் பதில்கள்.... மீண்டும் அன்பு நன்றிகள் ரமணி சார்...
எளிமை.இதேதான்.இதேதாம்மா?
ReplyDeleteதெரிந்து தெரியாது குழப்புவது... கொஞ்சம் சில்லிட்டுப் போகுதே?
அருமையான பதில்கள் வாழ்த்துக்கள் சகோதரி.....
ReplyDeleteகாட்டான் குழ போட்டான்..!!
அன்பு நன்றிகள் அப்பாதுரை ஐயா இங்கு வருகை தந்தமைக்கும் கருத்து பதிந்தமைக்கும்...
ReplyDeleteஉண்மையே ஐயா....
பள்ளியில் படிக்கும் போது கனவில் வயதானவர் திரும்ப திரும்ப கனவில் வந்துக்கொண்டே இருந்தார்... 1994 ல ஷீர்டி போனபோது அந்த மண்ணும் இடிந்த கோவிலும் பாபாவும் அப்படியே கனவினில் வந்த வயதானவரே தான்...
அதே போல் கொரநாட்டு கருப்பூர் பெட்டிக்காளியம்மன் கோவிலில் பார்த்த அம்மனும் என் கனவில் வந்தது தான்....
ஸ்ரீசைலமும் அப்படியே ஐயா....
அன்பு நன்றிகள் ஐயா மீண்டும் ஒரு முறை...
முத்தான மூன்றை பற்றிய பதிவில் உங்கள் பதில்கள் நன்று வாழ்த்துக்கள்
ReplyDeleteஎன்னை கூட தொடர் பதிவு எழுத சொல்லியிருக்கிறார் நண்பர் எழுத வேண்டும்
அப்பாதுரை ஐயா உங்க தளம் வந்து பார்த்தேன்.. பொக்கிஷம் சேர்த்து வைத்திருக்கிறீர்கள் ஐயா...
ReplyDeleteஅன்பு நன்றிகள் சகோதரரே இங்கு வருகை தந்தமைக்கும் கருத்து பதிந்தமைக்கும், உங்க தளம் வந்து பார்த்தேன்.. நிதானமாக வந்து படிப்பேன் சகோதரரே....
ReplyDeleteஅன்பு நன்றிகள் சரவணன்...
ReplyDeleteபதிவிடுங்கள் வந்து பார்க்கிறேன் உங்கள் தளத்தை....
மஞ்சுபாசிணியின் சிறப்புகள்
ReplyDelete1. எளிமை
2 . அதே தான்
3 . அதே தாம்பா.
இப்படி மாட்டி விட்டிடீங்களே.
ReplyDeleteஎனக்கு கவிதையை தவிர வேறொன்னும் தெரியாதே.
முத்தான மூன்று முடிச்சு அனைத்தும் பொன்மொழிகள் போல் அழகாக வடிவமைத்து பதிவாக வெளியிட்டமைக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteசுவாரஸ்யமான பதில்கள் தந்திருக்கின்றீர்கள். பல இடங்களில் திரும்பவும் வாசிக்கவும் சிந்திக்கவும் செய்திருக்கின்றீர்கள். பணத்தைச் சேமிக்காதீங்க புண்ணியத்தைச் சேமியுங்க. இதுதாங்க இடிக்குது. யதார்த்தமாத் தெரியல்லையே. இந்தியாவிற்குப் பொருந்துமோ என்னவோ. ஐரோப்பாவிற்கு பொருந்தவே பொருந்தாது. அடுத்த பாகவதம் பாடுவீர்களா? சிறப்புத்தான். அத்தனை பதில்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteமூன்று பாராட்டுக்கள்
ReplyDelete1. அருமை அசத்தல் அற்புதம்
2. இதே தான்
3. இதே தாம்பா
அன்பின் இனிய சாகோதரி!
ReplyDeleteதங்கள் கருத்துரைக் கண்டு
இரட்டை மகிழ்ச்சி கொண்டேன்
ஒன்று, என்னைத் தொடர்
எழுதப் பணித்தது
மற்றொன்று நான் தங்கள்
வலைகண்டு, படித்து சில
கருத்துரை வழங்கி நாளாகியும்
என் வலை வாரா கருத்துரை தரா
நிலை கண்டு வருந்திய நிலையை
நீக்கியதும், ஆகும்
எப்படியோ,
பருத்தி புடவையாய் காய்த்தது
என்பதுபோல நான் பெறுமகிழ்ச்சி
அடைந்தேன் நன்றி
புலவர் சா இராமாநுசம்
மூன்று முடிச்சில் உங்கள் உணர்வு மற்றும் எண்ணங்களின் உருவம்
ReplyDeleteமிகவும் அருமை தோழி
//சோர்வு நீக்க தேவையானவை
ReplyDelete3.குழந்தையின் சிரிப்பு//
முதல் பரிசுக்குரிய பதில்!
இதுவரை பார்க்காத கோவில்கள் கனவில் வருவது
ReplyDelete2.அந்த கோவில்கள் பற்றிய விவரங்கள் அறிந்து போகும் வரை விடாது கனவாய் வருவது
3.கண்டுபிடித்து போனால் கனவில் வந்த ஸ்வாமியே அங்கு கர்ப்பகிரஹத்தில் இருப்பது
பாக்கியசாலிதான் நீங்கள்.
அன்பு நன்றிகள் சிவகுமாரன் கருத்து பதிந்தமைக்கு...
ReplyDeleteஅடடா சிவகுமாரன் உங்களுக்காவது கவிதையாவது எழுத வருகிறதே.. எனக்கு ஒன்றுமே தெரியாதே.. இதை ஒரு முயற்சியா எடுத்துக்கிட்டு பதிவிட முயற்சி செய்யுங்க சிவகுமாரன். முடியாதது என்று ஒன்றுமே இல்லை தானேப்பா. முயற்சி செய்து எழுதிருங்க சிவகுமாரன்....
ReplyDeleteஅன்பு நன்றிகள் (மாய உலகம்) ராஜேஸ்.... வந்து இங்கே கருத்து பதிந்தமைக்கு....
ReplyDeleteஅன்பின் சந்திரகௌரி, அன்பு வரவேற்புகள் வாங்கப்பா....
ReplyDeleteஅன்பு நன்றிகள் சந்திரகௌரி வருகை தந்தமைக்கும் கருத்து பதிந்தமைக்கும்....
நான் எப்படி இருக்கிறேன் என்பதை தான்பா நான் எழுதியது.... என் தாய் வளர்த்த மூன்று பிள்ளைகள் அப்படி தாம்பா இருக்கோம்...
உதவி செய்ய நாம் தயாராக இருந்தாலும் உதவியை பெற யாராவது வந்தால் தானே நமக்கு உதவும் வாய்ப்பு இறைவன் தரமுடியும்?
நான் வேலை செய்யும் இடத்தில் ஏழைகளும் ஊருக்கு பணம் அனுப்ப வருவாங்கப்பா....
எனக்குன்னு வீட்டில் தரும் பணத்தை செலவு செய்யாமல் வைத்திருப்பேன்...
வருவோர் அனுப்பும் பணத்தில் குறையும்போது என்னிடத்தில் இருக்கும் பணத்தை போட்டு அனுப்பி விடுவேன்...இது ரொம்ப ரொம்ப சின்ன உதவியே... ஆனால் உதவி செய்ய கிடைத்த வாய்ப்பை நான் பயன்படுத்திக்கொண்டேன் அவ்வளவேப்பா... எத்தனையோ பேருக்கு தெரியாது அவர்கள் அனுப்பும் பணத்துடன் நான் அனுப்புவதும் சேர்ந்து போகிறது என்று.. அணிலைப்போல் சின்ன உதவி இது... ஆனால் இதில் ஒரு ஆத்ம திருப்தி... அதே போல் எப்ப என்ன உதவி கேட்டாலும் என்னால் முடியுமா என்று யோசிக்காமல் சட்டுனு உதவிட என்ன செய்யனும் என்று தான் யோசிப்பேன். இது தான் என் அம்மா எங்களுக்கு கற்று தந்தது....
இறைவன் அருளால் எங்கிருந்தாலும் என்னால் முடிந்த நல்லவைகளை உதவிகளை கண்டிப்பாக செய்துக்கொண்டே இருக்கவே இறைவன் அருள் புரிந்திடவே வேண்டுவேன்பா....
நீங்களும் நினைத்தால் கண்டிப்பாக முடியும் சந்திரகௌரி....
பணம் என்று இல்லைப்பா எந்த உதவி என்றாலும் சட்டென உதவிட யோசிக்க நினைத்தாலே போதும்பால். நம்மால் உதவ முடியுமா என்று யோசிக்காமல் எப்படி நம்மால் உதவிட முடியும் என்றே நினைத்தால் போதும்பா...உங்களாலும் முடியும் கண்டிப்பா....
சாரிப்பா ரொம்ப எழுதிட்டேன்னு நினைக்கிறேன், உங்கள் மனம் வருத்தம் அடையும்படி என் வார்த்தைகள் அமைந்திருந்தால் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்பா....
அன்பின் சந்திரகௌரி,
ReplyDeleteபாகவதம் படிப்பேன், பாடத்தெரியாது கற்கவில்லைப்பா... ஆனால் சங்கீதம் தெரியும்பா....பாடுவேன்...
அன்பு நன்றிகள் சந்திரகௌரி...
உங்கள் தளத்தை வந்து பார்த்தேன்... எல்லோரும் பயனுற அருமையான விஷயங்களை மிக அழகாய் தொகுத்து இருக்கீங்க... கண்டிப்பாக படித்து கருத்து இடுவேன்பா...
மீண்டும் ஒரு முறை அன்பு நன்றிகள் (மாய உலகம்) ராஜேஸ்...
ReplyDeleteவாங்க புலவர் சா ராமானுசம் ஐயா.... அன்பு வரவேற்புகள்....
ReplyDeleteஅன்பு நன்றிகள் கருத்து பதிந்தமைக்கு....
ஐயா தவறு என்னுடையதே... எனக்கு எல்லா படைப்புகளின் கமெண்டுகள் எங்கே எப்படி எடுத்து பார்க்கவேண்டும் என்று தெரியாததால் தாங்கள் எழுதியது என் கண்ணில் பட தாமதம் ஆனது...
இனி கண்டிப்பாக தங்கள் தளத்தில் என்னுடைய கருத்தும் இருக்கும் ஐயா...
மீண்டும் அன்பு நன்றிகள் ஐயா முத்தான மூன்று முடிச்சு பதிவுத்தொடர் எழுத சம்மதித்ததற்கு....
அன்பு நன்றிகள் செய்தாலி வருகை தந்தமைக்கும் கருத்து பதிந்தமைக்கும்...
ReplyDeleteஅன்பு வரவேற்புகள் சத்ரியன்....
ReplyDeleteஉண்மையே.... மனம் சோர்வடையும்போது மழலையின் சிரிப்பும் பேச்சும் மனதை எத்தனை ஆறுதல்படுத்துகிறது என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாத விஷயம்....
அன்பு நன்றிகள் சத்ரியன் வருகை தந்தமைக்கும் கருத்து பதிந்தமைக்கும்...
உண்மையே ரிஷபன்...
ReplyDeleteஇறுதியாக வந்த கோவில் ஸ்ரீசைலம்... போகவேண்டும் இறை தரிசனம் நம் விருப்பம் போல் கிடைப்பதில்லையே...
இறுதி காலத்திலும் இறைவன் சன்னதியில் இறைவனை பார்த்தபடியே உயிர் பிரியவேண்டும்.... அந்த பாக்கியம் இறைவன் அருள வேண்டும்...
அன்பு நன்றிகள் ரிஷபன் கருத்து பதிந்தமைக்கு....
தங்களைத் தொடர்ந்து சந்திர கௌரி அவர்களும்
ReplyDeleteதொடர் பதிவை வெளியிட்டுள்ளார்
நான் தங்கள் பின்னூட்டத்தை ஆவலுடன் எதிர்பார்த்து.
இருக்கிறேன்.
கண்டிப்பாக படித்து கருத்து இடுவேன் ரமணி சார்....
ReplyDeleteஎனக்கு இங்க தெரியப்படுத்தியமைக்கு அன்பு நன்றிகள் ரமணி சார்...
உண்மையான உள்ளத்தின் வெளிப்பாடு .
ReplyDeleteஅருமையான எண்ணங்கள்
பகிர்வுக்கு நன்றி சகோதரி
அன்பு நன்றிகள் எம் ஆர்..
ReplyDeleteபேச்சு பாஷையில் இயல்பாக இருக்கிறது உங்கள் பதிவு. ஆனாலும் இதேதாம்பான்னு ரொம்ப சமாளிச்சிட்டீங்களோ...!
ReplyDeleteகண்டுபிடித்து போனால் கனவில் வந்த ஸ்வாமியே அங்கு கர்ப்பகிரஹத்தில் இருப்பது
ReplyDeletei like this ரெம்ப பக்தி தெரிகிறது. அவனன்றி அணுவும் அசையாது.
Vetha. elangathialakam
http://www.kovaikkavi.wordpress.com
அன்பு நன்றிகள் ஸ்ரீராம் வருகை தந்தமைக்கும் கருத்து பதிந்தமைக்கும்..
ReplyDeleteஎனக்கு அவ்ளோ தானேப்பா தெரியும்... நிறைய தெரியாதே.. அதை தான் பகிர்ந்தேன்...
அன்பு நன்றிகள் (கவிதை) நண்பரே வருகை தந்தமைக்கும் கருத்து பதிந்தமைக்கும்...
ReplyDeleteவணக்கம் மேம்,
ReplyDeleteமுத்தான பதிவில் மூன்று பதில்கள் அருமை... நல்லா எழுதியிருக்கீங்க மேம்.. வாழ்த்துக்கள்!!
பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிங்க.
அக்கா!!அற்புதமான முடிச்சுக்களை அவிழ்த்திவிட்டிருக்கிறீங்கள்.
ReplyDeleteஅருமையான முடிச்சுகளை அழகாய் சொன்னீங்க....
எல்லாமே ஈடேற வாழ்த்துகின்றேன்
உன்னளவுக்கு என்னால் விளக்கமாக எழுதத்தெரியவில்லை என்றாலும் நான் அறிந்த அனைத்து விவரங்களுமே இங்கே தொகுக்கப்பட்டு இருப்பதைக்கண்டு பாராட்டி மகிழ்கிறேன்..!வாழ்த்துகள் மஞ்சு..!
ReplyDeleteஅன்பு நன்றிகள் மாணவன் உங்கள் வருகைக்கும் கருத்து பதிந்தமைக்கும்..
ReplyDeleteஉங்கள் தளமும் வந்து பார்த்தேன். மிக அருமையாக உள்ளது....
அன்பு நன்றிகள் விடிவெள்ளி கருத்து பதிந்தமைக்கு.
ReplyDeleteகலை உன் உடல்நலம் இப்ப சரியில்லை அதனால் நீ ஒன்றும் முடியாமல் நான் சொன்னேன் என்பதற்காக சிறப்பாக நீ எழுதி பதிவிட்டதை நான் அறிவேன்...
ReplyDeleteஒரு வழியாய் நானும் பதிவிட்டு விட்டேன்.
ReplyDeleteபோற்றுதலும் தூற்றுதலும் போகட்டும் மஞ்சுவுக்கே.
அடடே எழுதிட்டீங்களா சிவகுமாரன்.... இதோ இப்பவே பார்க்கிறேன்.. அதென்னப்பா அப்படி சொல்றீங்க.. தூற்றமாட்டேன் போற்றுவது மட்டுமே எப்போதும்...
ReplyDeleteஅப்படி இல்லைங்க. பதிவைப் படித்து யார் போற்றினாலும் தூற்றினாலும் அதன் பலன் உங்களுக்கே என்று சொன்னேன்.
ReplyDeleteஅன்பின் மஞ்சுபாஷினி
ReplyDeleteஅருமையான் பதில்கள் - மனப்பூர்வமாக - சுய பரிசோதனை செய்து எழுதப் பட்ட பதிவு. அததனை பதில்களுமே அருமை - இனிமையானவையில் உள்ள பாடுவது பிடிக்கும் என்ற பதில் நன்று - எனக்குத் தெரியுமே ...... நல்வாழ்த்துகள் மஞ்சுபாஷினி - நட்புடன் சீனா
அன்புள்ள மஞ்சுபாஷிணி,
ReplyDeleteமுத்தான மூன்றுகள் எல்லாமே ஒன்றை ஒன்று மிஞ்சும் வகையில் இருக்கின்றன.
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்!