"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, December 22, 2007

மனதை விஸ்தாரமாக்கி....

பார்க்கும் கணங்கள் சில
காணாத கணங்கள் பல
பார்க்கும் அந்த சில
கணங்களிலும்
சண்டை சச்சரவு ஏன்
மனஸ்தாபம் கொள்வதும்
நேரத்தை விரயமாக்குவதும்
நம் மனதை துன்புறுத்தி கொள்வதும்
தனிமையில் வாடி வதங்குவதும்
கழிவிரக்கம் கொள்வதும்
மனதிலுள்ள வெறுப்பையும்
தன் மேல் கொண்ட கழிவிரக்கத்தையும்
எல்லாம் தெளிந்த மனதோடு
நன்றாக துடைத்துவிடுங்களேன்
இயல்பாய் இருந்துவிடுங்களேன்
மனதில் அன்பை மலர செய்து
குற்றங்களை மன்னித்து
தவறுகளை பொறுத்து
அணைத்து செல்லுங்களேன்
நண்பர்களே புரிதல் கொள்ளுங்கள்
சமாதானம் கொள்ளுங்கள்
புன்னகைத்து விடுங்கள்
கைகளை பிணைத்து கொள்ளுங்கள்
வழியை நோக்குங்கள்
விஸ்தாரம் மனதிலும் வழியிலும்.....

1 comment:

  1. உன்னுடைய எல்லா
    அம்சங்களையும்போல‌
    இந்தப் பாராமுகமும்
    எனக்குப் பிடிக்கிறது.
    விருப்போ, வெறுப்போ
    எதையும் 100 சதவிகிதம்
    வெளிப்படுத்துவதில்
    முழுமையானவள் நீ.

    எனக்கு மறுதலிக்கப்பட்ட‌
    உன் நட்பை யாசித்து
    நான் இங்கு வரவில்லை.
    உன் கவிதையை ருசிக்க‌
    எனக்கிருக்கும் உரிமையை
    நீ தவிர்க்க இயலாதுதானே?
    தூரத்திலிருந்து ரசிப்பதுகூட‌
    ஒருவகை சுகமே.

    இப்பின்னூட்டம் ஒருவேளை
    அழிக்கப்படலாம்.. என் பற்றிய‌
    நினைவுகளைப் போலவே..
    பரவாயில்லை..
    என் மனதில் இன்னும் இருக்கும்
    "காட்சிகளை" தகர்க்கும்
    தொழில்நுட்பம் ஏதுமில்லை.அவை
    என்றுமிருக்கும் என்னுடன்..!




    .

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...