"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Sunday, September 18, 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்??


வார்த்தைகளும் வலி தருவது கண்டேன்

மனம் சுருங்கி தடுமாற நின்றேன்
வற்றாது அன்பை பொழிந்திட எண்ணி
போனது எல்லாம் மறக்க வேண்டினேன்

நட்புகள் எங்கும் மலர்வதும் சாத்தியம்
அன்புடன் என்றும் வளர்வதும் சத்தியம்
அன்பினை முதலாய் இட்டால் தான்
அன்பினை பெறமுடியும் என்றறிந்தேனே

பழையது நினைவுகள் நல்லவையாகட்டும்
செய்த தவறுகள் எல்லாம் மன்னித்து ஏற்கட்டும்
அறியாது நான் வருத்தி இருந்தாலும்
அன்பாய் பொறுத்து கொஞ்சம் காக்கட்டும்

கண்ணீர் பிரிவை சொல்லிச் சென்றது
உண்மை அன்போ சொல்லாமல் தவித்தது
இனியும் புரிதலின்மை இருவருக்குள் இல்லாது
அன்பே பிரதானம் என்றே கைக்கோர்த்தது

அன்பு பரிமாற்றம் ஓர் உறவு வளர்ந்தது
உறவு கொண்டு தன்னை நேசம் என்றது
உள்ளத்துள் வைத்து நிலையாய் பூஜித்தது
இது தான் நேசமென்று பறைசாற்றியது....

61 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. அன்பைப் போலவே உங்கள் கவிதையும்... என்றும் அடைக்கும் தாழ் இதரனியில் இல்லை... என்றும் எழுதிட.. எழுதி ஜெயித்திட வாழ்த்துக்கள்...!
  கவி அருமை...!

  ReplyDelete
 3. பழையது நினைவுகள் நல்லவையாகட்டும்
  செய்த தவறுகள் எல்லாம் மன்னித்து ஏற்கட்டும்
  அறியாது நான் வருத்தி இருந்தாலும்
  அன்பாய் பொறுத்து கொஞ்சம் காக்கட்டும்//

  உண்மை தான் மேடம்... அன்பிற்கு இல்லை... எல்லை. கவிதையில் ஒரு சுக வலி இருக்கிறது... அருமை மனம் கனிந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. அன்பிற்கும் உண்டோ
  அடைக்கும் தாழ் என
  கேட்ட வள்ளுவனே
  அதை அன்புடையார் மாட்டு
  வெளிப்படும் கண்ணீரே
  காட்டு மென்றார் இங்கே
  உங்க கவிதை காட்டுது
  சகோதரி
  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 5. கவிதை அன்பை அன்பாய் சொல்கிறது...

  ReplyDelete
 6. //கண்ணீர் பிரிவை சொல்லிச் சென்றது
  உண்மை அன்போ சொல்லாமல் தவித்தது
  இனியும் புரிதலின்மை இருவருக்குள் இல்லாது
  அன்பே பிரதானம் என்றே கைக்கோர்த்தது//

  எனக்குப் பிடித்த வரிகள் இவை
  பிரிவினால் வரும் கண்ணீருக்கு கொஞ்சம் உவர்ப்பு அதிகம் தான் சகோதரி. அங்கே அன்பின் சாயல் கொஞ்சம் நிலைகுழைந்து சற்று தடுமாறித்தான் நிற்கும்.
  சொல்ல வார்த்தையின்றி, பெருங்கடலில் பெருங்காயத்தை
  கரைத்ததுபோல ....
  அதைத்தான் கவியரசர் .. பிரிந்தவர் மீண்டும் கூடிவிட்டால் அங்கே பெண்மையின் நிலை என்ன என்று அழகுக் கேள்வி எழுப்பினார்..
  அங்கே நிலைக்கும் மௌனத்திற்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு..

  பிரிவின் பின் வரும் சேர்க்கையினால் இனியேதும் பிரிவில்லை என்று
  பறைசாற்றி அங்கே அன்பு ஒன்றே பிரதானமாய் மணிக்கொடி அசைத்து நின்றதாம்..
  அழகுக் கவிதை சகோதரி...
  படித்தபின்னர் அன்பினால்; தாழிடப்பட்டேன்.....

  ReplyDelete
 7. வணக்கம் சகோதரி.. அன்பை பற்றி அருமையாய் எழுதியிருக்கிறீர்கள்..

  நட்புகள் எங்கும் மலர்வதும் சாத்தியம்
  அன்புடன் என்றும் வளர்வதும் சத்தியம்
  அன்பினை முதலாய் இட்டால் தான்
  அன்பினை பெறமுடியும் என்றறிந்தேனே

  ஆமா அன்பினை கொடுத்துதான் பெறமுடியும்.. அன்பால் கட்டிப்போடும் உங்கள் கவிதையைபோல் உங்களை இயற்கை உங்களை ஆசீர்வதிக்கட்டும்...

  ReplyDelete
 8. மிகவும் அருமையான கவிதை. உங்கள் எழுத்துமட்டுமல்லாமல் உங்களது எண்ணங்களும் அருமை.. அருமையான பதிவுகளை எழுதி நெஞ்சங்களை கொள்ளை கொள்ளும் உங்கள் எழுத்தை கண்டு பொறாமை கொள்கிறேன். வாழ்த்துகள்

  ReplyDelete
 9. This comment has been removed by the author.

  ReplyDelete
 10. //அன்பினை முதலாய் இட்டால் தான்
  அன்பினை பெறமுடியும் என்றறிந்தேனே//

  உண்மையான வரிகள்.அழகான கவிதை.வாழ்த்துகள்.

  ReplyDelete
 11. "வாசல் கதவுகள் மூடுவதில்லை
  தேவன் அரசாங்கம் "என்பார் கண்ணதாசன்
  அன்பும் கதவுகள் அற்ற இன்பக் கோட்டையே
  என்வே அடைக்கும் தாழ் கூட தேவையே இல்லை
  சிந்திக்கச் செய்து போகும் அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்
  (உடல் நலத்திற்கு முதல் இடம் தரவும்)

  ReplyDelete
 12. பகிரப்பகிர பெருகுவது அன்பு ஒன்றே.

  கவிதாயினி மஞ்சுபாஷிணி,

  அருமையாய் அன்பை கவிதையில் வார்த்திருக்கிறார்.

  ReplyDelete
 13. எதிர்பார்ப்பில்லாத, உண்மையான அன்பு உயர்ந்தது என்பதை அழகாகச் சொல்லியுள்ளீர்கள். அன்பு பேதம் பார்க்காது. குறைகளுடன் ஏற்றுக் கொள்ளும்.

  ReplyDelete
 14. //அன்பினை முதலாய் இட்டால் தான்
  அன்பினை பெறமுடியும் என்றறிந்தேனே//
  ஆம் மஞ்சு நாம் எதை கொடுக்கிறோமோ அதைத்தான் திரும்பப்பெறுகிறோம்.

  அழகான வரிகள்,அருமையான கவிதை, வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. தலைப்பும், கவிதையும் எக்ஸலேன்ட்...!!!

  ReplyDelete
 16. அன்பைப்பற்றிய அருமைக்கவி!
  பாராட்டுக்கள்!

  ReplyDelete
 17. "அன்பினை முதலாய் இட்டால் தான்
  அன்பினை பெறமுடியும் என்றறிந்தேனே"//

  அழ‌கான‌, ச‌த்திய‌மான வ‌ரிக‌ள்!
  எதை விதைக்கிறோமோ, அதுவே கிடைக்கும்!

  ReplyDelete
 18. //"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்??"//

  இல்லவே இல்லைங்க. அருமையான கவிதை. வாழ்த்துக்கள் அக்கா.

  ReplyDelete
 19. அன்பு பரிமாற்றம் ஓர் உறவு வளர்ந்தது
  உறவு கொண்டு தன்னை நேசம் என்றது
  உள்ளத்துள் வைத்து நிலையாய் பூஜித்தது
  இது தான் நேசமென்று பறைசாற்றியது..../

  /"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்??"//

  எனப் பறைசாற்றிய கவிதைக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. பொறாமை நெஞ்சில் இல்லாது போனால், அன்பு என்றும் நிலைத்திருக்கும். தவறுகளை உண்மை அன்பு ஏற்பதில்லை. தகுதியான வார்த்தைகளால் தட்டிக்கேட்டுத் தொடர்ந்திடும். புரிதலின்மை இல்லாத அன்பு புஸ்வானம் போல் மறைந்து போகும். அன்பின் மகத்துவம் அற்புதமாயத் தந்திருக்கின்றீர்கள். வாழ்த்துகள்

  ReplyDelete
 21. அன்பு பரிமாற்றம் ஓர் உறவு வளர்ந்தது
  உறவு கொண்டு தன்னை நேசம் என்றது
  உள்ளத்துள் வைத்து நிலையாய் பூஜித்தது
  இது தான் நேசமென்று பறைசாற்றியது....

  சிறப்பான உணர்வுகளை பதிவு செய்து வழங்கி இருக்கிறீர்கள்
  உளம் நிறைந்த பாராட்டுகள் . மிகசிறந்த ஆக்கம் உலகில் அன்பு
  மிகை ஆகிறபோது குற்றங்கள் குறையும் அன்பு வெள்ளம் எங்கும் பரவட்டும் தொடர்க....

  ReplyDelete
 22. //நட்புகள் எங்கும் மலர்வதும் சாத்தியம்
  அன்புடன் என்றும் வளர்வதும் சத்தியம்
  அன்பினை முதலாய் இட்டால் தான்
  அன்பினை பெறமுடியும் என்றறிந்தேனே//

  வைர வரிகளுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 23. //அன்பினை முதலாய் இட்டால் தான்
  அன்பினை பெறமுடியும் என்றறிந்தேனே
  //

  அழகாக சொல்லி இருக்கீங்க மஞ்சுபாஷினி.அன்பைப்போன்றே கவிதையிலும் மென்மை தெரிக்க்கின்றது.வாழ்த்துக்கள் சகோதரி.

  ReplyDelete
 24. கண்ணீர் பிரிவைச் சொல்லிச் சென்றது . உண்மை அன்போ சொல்லாமல் சென்றது. அருமையான வரிகள்.அழுத்தமான எண்ணங்கள்.கதையிலும், கவிதையிலும் முன்னேற்றப்பாதையில் செல்லும் தங்களை வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 25. அன்பு நன்றிகள் நிரோஷ் கருத்து பதிந்தமைக்கு....

  ReplyDelete
 26. அன்பு நன்றிகள் ஈசானந்தன் வருகை தந்தமைக்கும் கருத்து பதிந்தமைக்கும்...

  கண்டிப்பாக உங்கள் தளம் வந்து பார்க்கிறேன்.

  ReplyDelete
 27. அன்பு நன்றிகள் ராஜேஷ்.. கருத்து பதிந்தமைக்கு....

  ReplyDelete
 28. அன்பு நன்றிகள் ஐயா கருத்து பதிந்தமைக்கு தங்கள் உடல்நலம் கூட பொருட்படுத்தாமல் வந்து இங்கே கருத்து பதிந்திருக்கிறீர்கள்... உண்மையில் பாக்கியசாலி நான்.. உங்களின் ஆசிப்பெற...

  ReplyDelete
 29. அன்பு நன்றிகள் ஜனா வருகை தந்தமைக்கும் கருத்து பதிந்தமைக்கும், உங்கள் தளம் வந்து பார்க்கிறேன்...

  ReplyDelete
 30. அன்பு நன்றிகள் மகேந்திரன், ஏனோ உங்க வரிகளை படிக்கும்போது கண்கள் நிறைகிறது.. அப்படியே அன்பு நிலைத்துவிட இறைவன் அருள் செய்துவிடமாட்டாரா என்று மனம் கேட்கிறது..... ததாஸ்து நீங்கள் சொன்னது போலவே ஆகட்டும்... அன்பை தவிர வேறொன்றும் மனிதனை மனதை முழுமைப்படுத்துவதில்லை...

  அன்பு நன்றிகள் மகேந்திரம் மனம் நெகிழவைத்த வரிகள் கருத்தாய் தந்தமைக்கு....

  ReplyDelete
 31. அன்பு நன்றிகள் காட்டான் சகோதரரே கருத்து பதிந்தமைக்கு...

  ReplyDelete
 32. பொறாமை கொள்ளும்படி எழுத்துகள் அமைந்தது என்று கருத்து தந்தமைக்கு என் அன்பு நன்றிகள் சகோதரரே...உண்மை அன்பிற்கு என்றும் விலையே இல்லை....

  ReplyDelete
 33. அன்பு நன்றிகள் திருமதி ஸ்ரீதர் வருகை தந்தமைக்கும் கருத்து பதிந்தமைக்கும்...

  ReplyDelete
 34. அன்பு நன்றிகள் ரமணி சார், கருத்து பதிந்தமைக்கும் என் உடல்நலன் குறித்த விசாரிப்புக்கும்... இன்னும் உடல்நலம் தேறவில்லை. ஆனால் கை சும்மா இருப்பதில்லை. மனதில் தோன்றியவை எப்படியாவது தந்துவிடவேண்டும் என்று என் எண்ணம் பரபரப்பது போல உடல் ஒத்துழைப்பதில்லை. இது எனக்கு வேதனையாக இருக்கிறது :( இறைவன் எனக்கு சக்தி தரட்டும்....

  ReplyDelete
 35. அன்பு நன்றிகள் சத்ரியன் கருத்து பதிந்தமைக்கு...

  ReplyDelete
 36. சத்திய வார்த்தையை அனாயசமா சொல்லிட்டீங்க ஸ்ரீராம்... நாமெல்லாம் என்ன தெய்வமா சாதாரண மனுஷா தானே? குறைகள் எப்படி பிறரிடம் இருக்கோ அதே போல் நம்மிடமும் இருக்கச்செய்யும் தானே? அப்ப குறைகளோடு ஏற்பதில் என்ன பிரச்சனை? உண்மை அன்புக்கு மட்டுமே அந்த பெருந்தன்மை இருக்கும் குறைகளோடு ஏற்கும் திண்ணம் இருக்கும் என்று மிக அருமையாக கேட்கவைத்திருக்கீங்க.

  அன்பு நன்றிகள் ஸ்ரீராம் கருத்து பதிந்தமைக்கு.

  ReplyDelete
 37. அன்பு நன்றிகள் ராம்வி கருத்து பதிந்தமைக்கு.

  ReplyDelete
 38. அன்பு நன்றிகள் நாஞ்சில் மனோ கருத்து பதிந்தமைக்கு சீக்கிரம் உங்க தளத்தில் வந்து கருத்து பதிப்பேன்பா...

  ReplyDelete
 39. அன்பு நன்றிகள் கோகுல் வருகை தந்தமைக்கும் கருத்து பதிந்தமைக்கும்....

  உங்கள் தளம் வந்து பார்க்கிறேன்பா..

  ReplyDelete
 40. மனோ அம்மா உங்களை நான் இங்கு என் படைப்பிற்கு கருத்திட பெற்றமைக்கு என்ன பாக்கியம் செய்தேனோ? நீங்க வந்து என் படைப்பை படிப்பீர்களா என்று காத்திருந்தேன் அம்மா. உங்க கைவலி உங்க உடல்நலம் எல்லாவற்றையும் பொருட்படுத்தாது இனிமையா சிரிச்சுகிட்டே கருத்து பதித்தமைக்கு என் அன்பு நன்றிகள் அம்மா....

  உங்கள் உடல்நலம் சீக்கிரம் குணமாக இறைவனிடம் என் அன்பு பிரார்த்தனைகள்...

  ReplyDelete
 41. அன்பு நன்றிகள் காந்தி தம்பி கருத்து பதிந்தைமைக்கு....

  ReplyDelete
 42. அன்பு நன்றிகள் ராஜேஸ்வரி கருத்து பதிந்தமைக்கு...

  ReplyDelete
 43. ததாஸ்து ததாஸ்து ததாஸ்து சந்திரகௌரி....

  நீங்கள் கருத்தாய் இட்ட வார்த்தைகள் எல்லாம் சத்திய வாக்குகள்... நன்றே நடந்திட அன்பும் தொடர்ந்திட கருத்து பதிந்தமைக்கு என் அன்பு நன்றிகள்பா...

  ReplyDelete
 44. அன்பினால் என் உள்ளம் புகுந்த மாலதிக்கு என் அன்பு நன்றிகள் கருத்து பதிந்தமைக்கு.

  ReplyDelete
 45. அன்பு நன்றிகள் ஸாதிகா கருத்து பதிந்தமைக்கு..ரொம்ப நாட்கள் கழித்து உங்களை பார்க்கிறேன் சௌக்கியமாப்பா?

  ReplyDelete
 46. அன்பு நன்றிகள் எழிலன் ஐயா கருத்து பதிந்தமைக்கு... உங்க தீர்க்கமான சிந்தனை கண்டு வியக்கிறேன்.

  ReplyDelete
 47. அன்பு நன்றிகள் சே குமார் கருத்து பதிந்தமைக்கு.

  ReplyDelete
 48. இன்று 24.09.2011 வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளீர்கள். அதற்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள். அன்புடன் vgk

  ReplyDelete
 49. //கண்ணீர் பிரிவை சொல்லிச் சென்றது
  உண்மை அன்போ சொல்லாமல் தவித்தது
  இனியும் புரிதலின்மை இருவருக்குள் இல்லாது
  அன்பே பிரதானம் என்றே கைக்கோர்த்தது//

  அன்பான அழகான வரிகள். மகிழ்ச்சி,

  ReplyDelete
 50. வலைச்சரத்தில் இருந்த பூக்களில் ஒன்றாய் உங்கள் வலைப்பூவினையும் பார்த்து வந்தேன். அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்ற தலைப்பில் ஒரு அருமையான கருத்துடைய கவிதைப் படிக்கும் பயன் அடைந்தேன். நல்ல கவிதை. அன்பிற்கு ஏது அடைக்கும் தாழ்.... நல்ல கவிதை. தொடர்கிறேன் சகோ....

  ReplyDelete
 51. அன்பு வரவேற்புகள் கோபாலக்ருஷ்ணன் சார்....

  உங்கள் இந்த பதிவு பார்த்ததுமே நான் அங்கே போய் மகியை வாழ்த்திவிட்டு வந்தேன். அன்பு நன்றிகள் சார் அன்புடன் எனக்கு இங்கே பகிர்ந்தமைக்கு.....

  ReplyDelete
 52. அன்பு நன்றிகள் வை கோபாலக்ருஷ்ணன் சார் கருத்து பதிந்தமைக்கு...

  ReplyDelete
 53. அன்பு வரவேற்புகள் வெங்கட் நாகராஜ் அவர்களே...

  உங்கள் தளம் நான் வந்து பார்க்கிறேன்பா....

  அன்பு நன்றிகள் கருத்து பதிந்தமைக்கு...

  ReplyDelete
 54. அறியாது நான் வருத்தி இருந்தாலும்
  அன்பாய் பொறுத்து கொஞ்சம் காக்கட்டும்

  ReplyDelete
 55. அறியாது நான் வருத்தி இருந்தாலும்
  அன்பாய் பொறுத்து கொஞ்சம் காக்கட்டும்

  இதைத்தான் மனசுக்குள் எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பேன்.. நம்மை அறியாமல் கூட பிறரை சங்கடப்படுத்தி விடக் கூடாது.. அன்பு மட்டும் வாய்த்து விட்டால் குறைகள் பின்னுக்கு தள்ளப்பட்டு பிரியம் மட்டுமே மனசுக்குள் பூவாய் மலரும் எப்போதும்.

  ReplyDelete
 56. '''...அன்பினை முதலாய் இட்டால் தான்
  அன்பினை பெறமுடியும் என்றறிந்தேனே...''
  ஆணித்தரமான உண்மை. இதை அறிந்தால் ஏது தொல்லை! மிக நல்ல புரிதல் பற்றிய கவிதை வாழ்த்துகள் மஞ்சும்மா!
  வேதா.இலங்காதிலகம்.
  http://www.kovaikkvi.wordpress.com

  ReplyDelete
 57. வார்த்தைகளும் வலி தருவது கண்டேன்
  மனம் சுருங்கி தடுமாற நின்றேன்
  வற்றாது அன்பை பொழிந்திட எண்ணி
  போனது எல்லாம் மறக்க வேண்டினேன்  எவ்வள்வு ரசனையான வரிகள்.

  ReplyDelete
 58. அன்பு ஒரு விசித்திரக் கணிதம்.

  ReplyDelete
 59. பழையது நினைவுகள் நல்லவையாகட்டும்
  செய்த தவறுகள் எல்லாம் மன்னித்து ஏற்கட்டும்
  அறியாது நான் வருத்தி இருந்தாலும்
  அன்பாய் பொறுத்து கொஞ்சம் காக்கட்டும்

  ஒவ்வொன்றும் அருமையான வரிகள் .
  வாழ்த்துக்கள் சகோதரி .நன்றி பகிர்வுக்கு ....

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...