"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Friday, September 2, 2011

ஒரே ஒரு முறை.....

ஒரே ஒருமுறை....

உயிர்பிழைக்க மட்டுமேனும்
என்னை நீ காதலிப்பதாய்
பொய்சொல்லிவிடு ஒரே ஒருமுறை

உன்புன்னகையால் என்னை உயிர்ப்பிக்க
காட்டிவிடு உன் அன்புமுகத்தை
என்னெதிரே ஒரே ஒருமுறை...

உறக்கத்திலாவது உன்னைத்தழுவ
கனவாய் என் கண்ணில்
மலர்ந்துவிடு ஒரே ஒருமுறை

சோகங்களை உன்னுடன் பகிர்ந்துவிட
உயிர்த்தோழியாய் என்னுடன்
பழகிவிடு ஒரே ஒருமுறை

இரக்கமற்ற உலகில் அனாதையாய்
வாழவிரும்பாத என்னுடன் இணைந்துவிடு
என்னவளாய் ஒரே ஒருமுறை

உன்மடி என்னை தாங்கிவிட
உரிமையாய் தலை சாய்க்கவிடு
உன்னவனாய் ஒரேஒருமுறை...

42 comments:

 1. ஒரேயொருமுறை வரும்
  காதலின் உணர்வுகளை
  அருமையாகச் சொல்லிய
  உணர்ச்சிக் கவிதை

  நல்லா இருக்கு சகோதரி.

  ReplyDelete
 2. சோகங்களை உன்னுடன் பகிர்ந்துவிட
  உயிர்த்தோழியாய் என்னுடன்
  பழகிவிடு ஒரே ஒருமுறை//

  ஆஹா எவ்வளவு ஆறுதலான இதமான வரிகள்...இறைவன் மனம் வைத்து கொடுத்துவைத்தவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்

  ReplyDelete
 3. நல்ல கவிதை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. இரக்கமற்ற உலகில் அனாதையாய்
  வாழவிரும்பாத என்னுடன் இணைந்துவிடு
  என்னவளாய் ஒரே ஒருமுறை//

  என்னவளை இறைவனாய் நினைந்து நேசிப்பில் தவமிருந்து அன்பை ஒன்றே வரமாய் கேட்கும் வரிகள்.... ஆஹா அசத்தல்

  ReplyDelete
 5. ஒருவனின் உண்மையான காதல் ஏக்கத்தால் வரும் எண்ணங்களை கவிதையாய் தொகுத்த உங்களை பாராட்டிக்கொண்டே இருக்கலாம்... தொடர்ந்து அசத்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. ஒரே ஒரு முறை படித்து நிறுத்த முடியவில்லை
  மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் வரிகள்
  வசன கவிதை ஆயினும் கூட அடி நாதமாய் ஓடும்
  சந்த அமைப்பு அற்புதம்
  தரமான பதிவு தொடர வாழ்த்துக்கள்
  (உரிமையாய் தலை சாய்க்கவிடு என
  இருந்தால் இன்னும் சரியாக இருக்குமோ)

  ReplyDelete
 7. ஒரேயொரு முறை படித்திட
  ஒவ்வொரு முறையும் படித்திட
  ஒரேயொரு முறை கருத்திட
  ஒவ்வொரு வரியும் படித்திட

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 8. அருமையான கவிதை.ஒரு முறை மட்டுமில்லாம பல முறை படிக்கத்தூண்டியது.

  ReplyDelete
 9. //இரக்கமற்ற உலகில் அனாதையாய்
  வாழவிரும்பாத என்னுடன் இணைந்துவிடு
  என்னவளாய் ஒரே ஒருமுறை//

  கவிதை அருமை சகோதரி...

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் சகோதரி கவிதை அருமை...நாங்களும் உயிர் வாழ்வதற்கு பொய் சொன்னோம் அப்போது கவிதையில் வருபவரைப்போல அல்ல.. ஹி ஹி காதலில் ஓர் உணர்வு உங்கள் கவிதைகள்..

  ReplyDelete
 11. வலைச்சரத்தில் ‘ சிறுகதை முத்துக்கள்’ என்ற பிரிவில் உங்களை இன்று அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

  http://blogintamil.blogspot.com/

  ReplyDelete
 12. ஒரு பொய்யாவது சொல் கண்ணே...உன் காதல் நான்தான் என்று..என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. அந்தப் பாடலைக் கேட்கும்போது பொய் சொல்லு ஆறுதல் அடைகிறேன் என்று சொல்ல முடியுமா..பொய் என்று தெரிந்து கோபமும் ஆத்திரமும் வராதா...காதலின் விதியே பொஸஸிவ்நெஸ்தானே... என்று தோன்றும்! காதல் வந்தால் கவிதை வந்து விடும். கவிதை வந்தால் காதல்தான் வந்திருக்கிறது என்று சொல்ல முடியுமா...பெரும்பாலும் கவிதைகள் சோகம்தான் சொல்கின்றன! உங்கள் கவிதை என்னுள் கிளப்பிய எண்ணங்களை சொல்லி விட்டேன்!!

  ReplyDelete
 13. ஒரு காதலனின் ஏக்கத்தை அருமையாக ப்திவு செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. நல்லா இருக்கு அக்கா.... உயிர்த்தோழன் ஒருவரின் மன ஏக்கங்கள்...

  எனக்கு இறப்பு ஒன்று நிகழும் முன் தோழி உந்தன் பார்வை பிறப்பொன்று வேண்டும் என்று வேண்டும் ஒருவரின் உணர்வுகள் அருமை...

  ReplyDelete
 15. வலைச்சரத்தில் அறிமுகத்திற்கு
  வாழ்த்துக்கள்.அப்படியே உங்கள் பதிவை தமிழ்மணத்திலும்இணைத்துக்
  கொண்டீர்கள் ஆயின் அதிகம் பேர் தங்கள் படைப்பைப் படிக்க ஏதுவாகும்

  ReplyDelete
 16. அன்பு நன்றிகள் மகேந்திரன் கருத்து பதிந்தமைக்கு.....

  ReplyDelete
 17. உண்மையே ராஜேஸ்....

  கொடுத்து வைத்த பாக்கியவான்களுக்கே இப்படி அமைவது....

  அன்பு நன்றிகள் ராஜேஸ் கருத்து பதிந்தமைக்கு....

  ReplyDelete
 18. அன்பு நன்றிகள் ரத்னவேலு ஐயா கருத்து பதிந்தமைக்கு...

  ReplyDelete
 19. அன்பு நன்றிகள் ரமணி சார்...

  மனதில் தோன்றியதை அப்படியே எழுதிவிட்டேன் ரமணி சார்....

  மாத்திட்டேனே :)

  அன்பு நன்றிகள் ரமணி சார் கருத்து பதிந்தமைக்கு....

  ReplyDelete
 20. கவிதையாய் கருத்து பதிந்தமைக்கு அன்பு நன்றிகள் இராமானுசம் ஐயா....

  ReplyDelete
 21. அன்பு நன்றிகள் ராம்வி கருத்து பதிந்தமைக்கு....

  ReplyDelete
 22. அன்பு நன்றிகள் சே.குமார் கருத்து பதிந்தமைக்கு....

  ReplyDelete
 23. அன்பு நன்றிகள் காட்டான் சகோதரரே கருத்து பதிந்தமைக்கு....

  ReplyDelete
 24. அன்பு வரவேற்புகள் மனோ அம்மா...

  நானும் உங்கள் அழகிய ஓவியத்தையும் அழகாக ஒவ்வொரு நாளும் முத்துக்களாக கோர்க்கும் நல்ல விஷயங்களையும் படித்துக்கொண்டே வருகிறேன்...

  அன்பு நன்றிகள் அம்மா வலைச்சரத்தில் என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு....

  ReplyDelete
 25. உண்மையே ஸ்ரீராம்....

  கவிதைக்கு மட்டுமே பொய்யழகு காதலுக்கும் நட்புக்கும் கண்டிப்பாக அல்ல.....

  மனங்களை வேதனைப்படுத்தி இடைவெளி ஏற்படுத்திவிடும் ஒரு சின்னப்பொய்......

  அருமையாக சொல்லி இருக்கீங்க....

  அன்பு நன்றிகள் ஸ்ரீராம் கருத்து பதிந்தமைக்கு.....

  ReplyDelete
 26. அன்பு வரவேற்புகள் காந்தி பனங்கூர்...

  உங்கள் வலைத்தளம் வந்து பார்த்தேன்.. அருமையாக இருக்கு...

  அன்பு நன்றிகள் கருத்து பதிந்தமைக்கு....

  ReplyDelete
 27. அன்பு நன்றிகள் வாசா கருத்து பதிந்தமைக்கு....

  அருமையான வாசகம்....

  ReplyDelete
 28. அன்பு நன்றிகள் ரமணி சார்....

  நான் முயன்றுக்கொண்டு இருக்கிறேன் தமிழ் மணத்தில் இணைக்க...

  கலை தான் சொல்லித்தரணும் எனக்கு....

  சொல்லிக்கொடுத்ததும் இணைப்பேன் ரமணி சார்...

  ReplyDelete
 29. இரக்கமற்ற உலகில் அனாதையாய்
  வாழவிரும்பாத என்னுடன் இணைந்துவிடு
  என்னவளாய் ஒரே ஒருமுறை

  உன்மடி என்னை தாங்கிவிட
  உரிமையாய் தலை சாய்க்கவிடு
  உன்னவனாய் ஒரேஒருமுறை...//
  காதலில் இப்படியும் நிகழுவதுண்டு அதுதான் காதல் .வள்ளுவம் கூட காதலை அழகாக பதுவு செய்கிறது .காதலில் சோகமும் சுகமும் இணைந்தே வருகிறது மாற்றம்தான் மாறமல் தொடர்கிறது.

  ReplyDelete
 30. உறக்கத்திலாவது உன்னைத்தழுவ
  கனவாய் என் கண்ணில்
  மலர்ந்துவிடு ஒரே ஒருமுறை


  ...very nice.

  (Following your blog)

  ReplyDelete
 31. ஒரே ஒருமுறைசோகங்களை உன்னுடன் பகிர்ந்துவிடஉயிர்த்தோழியாய் என்னுடன்பழகிவிடு

  சந்தோஷத்தை முகம் தெரியாதவருடன் கூட சொல்லி விடலாம். சோகம் சொல்ல உயிர்த்தோழனாய்/தோழியாய் அமைவது அவசியம்.

  ஒரே ஒரு முறை படிக்க, அதன் அர்த்தம் பல முறை யோசிக்க!

  ReplyDelete
 32. //சோகங்களை உன்னுடன் பகிர்ந்துவிட
  உயிர்த்தோழியாய் என்னுடன்
  பழகிவிடு ஒரே ஒருமுறை//

  அருமையான வரிகள்

  ReplyDelete
 33. ''....உறக்கத்திலாவது உன்னைத்தழுவ
  கனவாய் என் கண்ணில்
  மலர்ந்துவிடு ஒரே ஒருமுறை...''
  என்ன ஏக்கம்....ம்....ம்........சகோதரி.....
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 34. உண்மையே மாலதி....

  மாற்றம் மட்டுமே மாறாமல் தொடர்வது...

  அன்பு நன்றிகள்பா கருத்து பதிந்தமைக்கு..

  ReplyDelete
 35. அன்பு வரவேற்புகள் சித்ரா....

  ஆஹா கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க.. நானும் உங்க தளத்தை வந்து பார்த்தேன். மிக மிக அருமை.. பிடித்துவிட்டது....

  அன்பு நன்றிகள்பா கருத்து பதிந்தமைக்கு..

  ReplyDelete
 36. உண்மையே ரிஷபன்.. சந்தோஷம் யாருடனும் பகிரலாம்.. ஆனால் சோகத்தை நம்மை நேசிப்போரிடமே பகிரும்போது தான் மனம் நிறைந்த ஆறுதலும் கிடைப்பது...

  அன்பு நன்றிகள்பா கருத்து பதிந்தமைக்கு..

  ReplyDelete
 37. அன்பு வரவேற்புகள் ராக்கெட் ராஜா...

  உங்கள் தளம் வந்து பார்த்தேன். மிக அருமையாக இருக்கிறதுப்பா..

  அன்பு நன்றிகள் கருத்து பதிந்தமைக்கு..

  ReplyDelete
 38. அன்பு நன்றிகள் வேதாம்மா கருத்து பதிந்தமைக்கு..

  ReplyDelete
 39. அருமையாக எழுதறீங்க.முதல் முறையாக உங்க வலைப்பூ வருகிறேன்,பின் தொடர்கிறேன்.

  ReplyDelete
 40. அன்பு வரவேற்புகள் ஆசியா உமர்....

  உங்க தளமும் வந்து பார்த்தேன்பா....

  சமையலில் அசத்துறீங்க....

  உங்கக்கிட்ட இருந்து கண்டிப்பா நான் கத்துக்கிட்டு வீட்ல செய்வேன்பா..

  அன்பு நன்றிகள் ஆசியா கருத்து பதிந்தமைக்கு...

  ReplyDelete
 41. அன்பு நன்றிகள் அப்பாதுரை கருத்து பதிந்தமைக்கு...

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...