அன்புக்காதல்...
இதயம் மறுக்கும் காதல்
உயிர் கூட்டைவிட்டு
பிரியும்போதும்
இணைய சாத்தியமில்லை
இதயம் மறந்த காதல்
காதல் என்றே
கணக்கில்
கொள்ளப்படுவதில்லை
இதயம் இணைத்த காதலோ
இணைந்த நொடிமுதல்
இறுதிமூச்சுவரை
இற்றுப்போகாதிருக்கும்
அன்புக்காதல்...
இதயம் மறுக்கும் காதல்
உயிர் கூட்டைவிட்டு
பிரியும்போதும்
இணைய சாத்தியமில்லை
இதயம் மறந்த காதல்
காதல் என்றே
கணக்கில்
கொள்ளப்படுவதில்லை
இதயம் இணைத்த காதலோ
இணைந்த நொடிமுதல்
இறுதிமூச்சுவரை
இற்றுப்போகாதிருக்கும்
அன்புக்காதல்...
Tweet |
அன்பில் தோய்ந்த காதல் இறுதி வரை இணைப்பில்தான் இருக்கும்..
ReplyDeleteஅட ரிஷபன்....
ReplyDeleteஅன்பு நன்றிகள்பா முதலில் வந்து கருத்து பதிந்தமைக்கு....
//இணைந்த நொடிமுதல்
ReplyDeleteஇறுதிமூச்சுவரை
இற்றுப்போகாதிருக்கும்
அன்புக்காதல்...//
உண்மையான காதல் இறுதிவரை தொடரும்.
அருமையாக இருக்கு மஞ்சு..
அன்புக் காதலுக்கான விளக்கமாக
ReplyDeleteஅமைந்த பாடலும் அதற்கான படமும்
மிக மிக அருமை
சுருக்கமாக இருந்தாலும் சூப்பர்
தொடர வாழ்த்துக்கள்
இதயம் இணைத்த காதலோ
ReplyDeleteஇணைந்த நொடிமுதல்
இறுதிமூச்சுவரை
இற்றுப்போகாதிருக்கும்
அன்புக்காதல்...
எதுகாதல் என அறியார்
ஏதோஒர் உணர்வில்
இதுகாதல் எனமயங்கி
இறுதியிலே தயங்கி
புதுகாதல் தேடுயின்றே
போவதுவும் ஒன்றே
அதுகாதல் அல்லவென
அறிவித்தீர் இங்கே
புலவர் சா இராமாநுசம்
மணிகாட்டும் முள்ளை
ReplyDeleteமணித்துளி காட்டும் முள்
விரட்டி தொடர்வதுபோல்
காதலின் உன்னதம்
என்றும் அன்பின்
இணைப்பின் அழகில்
என அருமையாக
உரைத்திருக்கிறீர்கள் சகோதரி.
கவிதை நன்று.
This comment has been removed by the author.
ReplyDeleteகாதல்...
ReplyDeleteகவிதையில் அமிழ்ந்து
படத்தில் வெளிவருகிறது...
படமும் கவிதையும் ரொம்ப அருமை.
வாழ்த்துக்கள்.
படமும் கவிதையும் நன்று
ReplyDeleteஇதயம் தொட்ட அன்பு கலந்த உண்மை கடலுக்கு அழிவில்லை
காதலில் மூன்று வகையாக பிரித்து ..இப்ப எந்த வகையில் நீ இருக்கிறாய் பார்த்துக்கோ என்ற மறைமுக அறிவுரையும்.... இணைந்த காதலே இறுதி மூச்சு வரை உள்ள அன்பு காதல் என்று சொல்லியிருக்கிறீர்கள்...ஆனால் அதற்கு கொடுத்துவைத்திருக்கவேண்டும்.... அழகாக வகைகளை சொல்லி அசத்தியுள்ளீர்கள்...முதன் முறையாக காதலில் இப்படி ஒரு விளக்கம் கேள்விபடுகிறேன்.... வாழ்த்துக்கள்
ReplyDeleteபிரிந்தாலும் மறந்தாலும் காதல் இல்லை, இணைந்தால் தான் காதல் என்பதை அருமையாக பதிவு செஞ்சுருக்கீங்க சகோ. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்பு நன்றிகள் ராம்வி கருத்து பதிந்தமைக்கு...
ReplyDeleteஅன்பு நன்றிகள் ரமணி சார் கருத்து பதிந்தமைக்கு...
ReplyDeleteஅழகிய கவிதையாக்கி பின்னூட்டமிட்டமைக்கு அன்பு நன்றிகள் இராமானுசம் ஐயா...
ReplyDeleteஅழகிய உவமையுடன் இட்ட கருத்துக்கு அன்பு நன்றிகள் மகேந்திரன்...
ReplyDeleteஅன்பு நன்றிகள் சே.குமார் கருத்து பதிந்தமைக்கு...
ReplyDeleteஅன்பு நன்றிகள் சரவணன் கருத்து பதிந்தமைக்கு...
ReplyDeleteகரெக்டா சொல்லிட்டீங்க ராஜேஸ்....
ReplyDeleteஅன்பு நன்றிகள்பா கருத்து பதிந்தமைக்கு...
அன்பு நன்றிகள் காந்தி கருத்து பதிந்தமைக்கு...
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரி அருமையான விளகத்துடன் கூடிய உங்கள் பகிர்விற்கு..
ReplyDeleteரொம்ப நல்லாருக்கு
ReplyDeleteஅன்பு நன்றிகள் காட்டான் சகோதரரே கருத்து பதிந்தமைக்கு....
ReplyDeleteஅன்பு நன்றிகள் சதீஷ்குமார் கருத்து பதிந்தமைக்கு...
ReplyDeleteஇதயம் இணைந்த காதல் மட்டும்தான் காதல். மற்றதெல்லாம் காதலிலேயே சேர்த்தியில்லை. கண்களில் தொடங்கி இதயத்தில் நிலைபெறும் காதல்.
ReplyDeleteஇறுதிமூச்சுவரை
ReplyDeleteஇற்றுப்போகாதிருக்கும்
அன்புக்காதல்.../
அருமையாய் உரைத்த
அழகு வரிகளுக்குப் பாராட்டுக்கள்.
நல்லா இருக்கு அக்கா...
ReplyDeleteஇறுதி மூச்சு இருக்கும் வரை அன்பு இருக்கும்...
அன்பு இருக்கும் வரை காதல் இருக்கும்...
காதல் இருக்கும் வரை என்னுயிர் இருக்கும்...
என்னுயிர் இருக்கும் வரை உன்நினைவுகள் இருக்கும்...
முதல்தடவை முத்தமிடுகின்றேன் தங்கள் பதிவை, இது அன்னைமுத்தம் போல் என்றும் மாறாமலிருக்கும் அன்பிலும் குறையாமலிருக்கும், அன்புகலந்த காதல் என்றும் அழியாமலிருக்கும், அருமையான கவிதை, வாழ்த்துக்கள் அக்கா..!
ReplyDeleteஅன்பு நன்றிகள் ஸ்ரீராம் கருத்து பதிந்தமைக்கு....
ReplyDeleteதாங்கள் சொன்னது உண்மையே...
பொய்யுரைக்காத கண்களில் தொடங்கி இதயத்தில் நிலைத்துவிடும்.....
அன்பு நன்றிகள் ராஜேஸ்வரி கருத்து பதிந்தமைக்கு....
ReplyDeleteஅட வாசா கருத்தே கவிதையாய் வரைந்துவிட்டாய்.. அசத்தலாக இருக்கிறதுப்பா...
ReplyDeleteஅன்பு நன்றிகள் வாசா கவிதையுடன் கருத்து பதிந்தமைக்கு...
அன்பு வரவேற்புகள் நிரோஷ்....
ReplyDeleteஉங்க வலைத்தளம் வந்து பார்த்தேன். மிக அருமையாக இருக்கிறது...
அன்பு நன்றிகள் கருத்து பதிந்தமைக்கு நிரோஷ்...
இதயம் மறந்த காதல்
ReplyDeleteகாதல் என்றே
கணக்கில்
கொள்ளப்படுவதில்லை//
கலக்கலான , ரசனையுள்ள வரிகள்..
வாழ்த்துக்கள்..
//இறுதிமூச்சுவரை
ReplyDeleteஇற்றுப்போகாதிருக்கும்
அன்புக்காதல்...//
அழகிய வரிகள்...!
இதயம் காதலைப் பார்க்கும் மூன்று கண்ணோட்டங்கள் இங்கே சகோதரியால் கருத்திடப்பட்டுள்ளன.
ReplyDeleteகாதல பற்றிய தெளிவான புரிதல்...
மனித உணர்வுகளுடனான ரசாயன மாற்றம் துண்டப் படுவதன் விளைவாக தலைவன் தலைவி இடையிலான உறவுப் பூ பூப்பதும் காதலாய் கனிவதும்...
அது அவ்விருவரிடத்தில் காணப்படும் புற மற்றும் அக அழகு மிதான ஈர்ப்பு காரணமாக நிகழலாம்...
புற அழகால் ஈர்க்கப் பட்டு இணையும் இதயங்கள் பின்னர் மணமான பின்பு புரிந்துணர்ந்து அக அழகிலும் உயர்ந்து பொருந்தி சிறக்கின்றன்ர்...
ஆழமான ஒரு சிந்தனையை தூண்டிய இந்தப் பதிவு காதலின் புதிய வரையறை ...
வண்ணம் குறையாத வானவில்..
சகோதரி...நன்றி உங்களுக்கு... வாசம் செய்யவும் வாசிக்கத் தந்தமைக்கும்.
சகோதரன்அப்துல்லாஹ்
http://abdullasir.blogspot.com/
அன்பு வரவேற்புகள் வேடந்தாங்கல் கருன்..
ReplyDeleteஅன்பு நன்றிகள் கருத்து பதிந்தமைக்கு...
உங்கள் தளம் வந்து பார்த்தேன்பா..அருமையாக இருக்கிறது...
ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்பா...
அழகான ரசனையுடன் அருமையான காதல் வரிகள்...
ReplyDeleteபடமும் சூப்பர்...
அழகியலான கவிதைக்கு வாழ்த்துக்கள் மேம்!
அன்பின் வழியது உயர்நிலை. அன்பே சிவம் என்றார் திருமூலர். அன்பு என்பது காதல்தான். எளிய சொற்கள். வெளிப்படுத்திய விதமும் எளிமை. உலகின் உயர்ந்தவை யாவும் எளிமையாகவே இருக்கின்றன. அதை எப்போதும் உணர்த்தவேண்டும் இந்த மாறுபட்ட உலகிற்கு என்ற உணர்வையே உங்கள் கவிதையிடமிருந்து நான் பெற்றுக்கொள்கிறேன். அருமை.
ReplyDeleteஅட சத்ரியன் வலைச்சரத்துல நீங்க பண்ணிட்டு இருக்கும் அதரகளம் பார்த்துக்கிட்டே வருகிறேன் தினமும்...
ReplyDeleteஅசத்துறீங்கப்பா...
அன்பு நன்றிகள் சத்ரியன் கருத்து பதிந்தமைக்கு....
உண்மையே அப்துல்லாஹ் சார்....
ReplyDeleteவிரிவான கருத்து படைத்தமைக்கு அன்பு நன்றிகள் அப்துல்லாஹ் சார்...
அன்பு நன்றிகள் மாணவன் கருத்து பதிந்தமைக்கு...
ReplyDeleteஅன்பு நன்றிகள் ஹரணி சார் கருத்து பதிந்தமைக்கு...
ReplyDeleteரொம்ப அருமையா சொல்லி இருக்கீங்கப்பா...
பெண் வைரமுத்துவுக்கு என் வாழ்த்துக்கள்.உங்கள் கவிதைகளை விமர்சிக்க எனக்கு வார்த்தைகள் வரவில்லை!அருமை!அருமை!அமர்க்களம்!
ReplyDeleteBeautiful lines
ReplyDeleteவரிகள் குறைவானாலும் வார்த்தைகளில் உயிர்ப்பிருக்கின்றது. காதல் ....... இவ்வுணர்வு ஏற்படாத உயிர்களே இல்லை. சிலருக்குத் தொட்டு மறையும். சிலரே வெற்றியடைகின்றனர். அன்புக்காதல் தந்த கவிதையானது மஞ்சுபாஷினியின் அன்புள்ளத்திற்கு எடுத்துக்காட்டு. அன்புக்காதல் போல் உறவுகளும் தொடர்ந்திருக்க வாழ்த்தும் இவள் உங்கள் அன்புத் தோழி
ReplyDeleteஅருமையான கவிதை
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநான்தான் உங்க கோல்டன் ஜூப்ளி follower என்பதில் பெருமை படுகிறேன்மா
ReplyDeleteஇதயம் இணைத்த காதலோ
ReplyDeleteஇணைந்த நொடிமுதல்
இறுதிமூச்சுவரை
இற்றுப்போகாதிருக்கும்
அன்புக்காதல்.
அருமையான வரிகள்
அன்பு நன்றிகள் ஸ்ரீதர் கருத்து பதிந்தமைக்கு...
ReplyDeleteஐயோ அடிக்க போறாங்க ஸ்ரீதர்.... :)
அன்பு வரவேற்புகள் ராஜப்பாட்டை ராஜா..
ReplyDeleteஉங்கள் தளம் வந்து பார்த்தேன்.. சுவாரஸ்யமாக இருக்கிறதுப்பா...
அன்பு நன்றிகள்பா கருத்து பதிந்தமைக்கு.
என் அன்பு நெருங்கியத்தோழி அன்பின் சந்திரகௌரி உங்க கருத்து அத்தனையும் உண்மையேப்பா...
ReplyDeleteஇவ்வுணர்வு ஏற்படாத உயிர்களே இல்லை.. ஆனால் வெற்றி பெறுவது ஒரு சிலர் மாத்திரமே..
அன்பு நன்றிகள்பா சந்திரகௌரி கருத்து பதிந்தமைக்கு..
அன்பு நன்றிகள் ராக்கெட் ராஜா கருத்து பதிந்தமைக்கும் 75 ஆவது பின் தொடர்வதற்கும்பா...
ReplyDeleteகாதல் பற்றி கலக்கலான கவிதை வரிகள்.அருமை.நம்ம பக்கமும் வந்து பாருங்கள்.
ReplyDeleteஅருமையான காதல்க் கவிதை சகோ .வாழ்த்துக்கள் உங்கள் ஒரு கேள்விக்கு என் தளத்தில் பதில் காத்திருக்கு .
ReplyDeleteஅந்தக் குட்டிச் சாத்தானைப் பார்த்துப் பயந்துவிடாதீர்கள் ....
நன்றி பகிர்வுக்கு .....
சுருக்கமாகவும் சுவையாகவும் எழுதியிருக்கிறீர்கள். காதல் கவிதைகள் என்றைக்குமே படிக்க சுகமானவை.
ReplyDeleteஅன்பு வரவேற்புகள் ஸாதிகா....
ReplyDeleteஉங்கள் தளம் வந்து பார்த்தேன்பா... அருமையாக இருக்கிறது...
அன்பு நன்றிகள்பா கருத்து பதிந்தமைக்கு...
அன்பு நன்றிகள் அம்பாளடியாள் கருத்து பதிந்தமைக்கு....
ReplyDeleteஅட இதோ வந்து பார்க்கிறேன்பா....
எனக்கு இருட்டு தான் ரொம்ப பயம் :)
அன்பு வரவேற்புகள் அப்பாதுரை....
ReplyDeleteஅன்பு நன்றிகள்பா கருத்து பதிந்தமைக்கு...
அன்புத் தோழிக்கு
ReplyDeleteமுதல் வருகை..
வந்து இணைந்ததில் பெருமை !
கவிதை வரிகள் அனைத்தும் அருமை !
நட்புடன்
சம்பத்குமார்
www.tamilparents.com
உயிரும் மெய்யும் சேர்ந்தால் தான்
ReplyDeleteஉயிர் மெய் தோன்றும் ...
மெய்யாகவே கூறுகிறேன்
என் உயிர் நீதான் .....
பல வருடங்களுக்கு முன் என் நண்பன் எழுதியது.. காதல் கவிதையை படித்தவுடன் இது நினைவுக்கு வந்தது. நன்றி