"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Friday, September 30, 2011

கதை 16. கலைக்கண்...










” கமலம் கமலம் “ என்று குரல் கொடுத்தபடி புஷ்பா அந்த குடிசை 
வீட்டினுள் நுழைந்தாள்...
 ” குழந்தை அழும் சத்தம் வெளியே வரை கேட்கிறதே கமலம் 
எங்கடி போனே “ என்று அழும் குழந்தையை தூக்கி வைத்து 
அணைக்கும்போது 
பாலுக்கு குழந்தை தேடுவதை உணர்ந்தாள்....

அடடா பசிக்கு அழுகிறதே குழந்தை “ எனும்போது 
கமலம் அசதியான முகத்துடன் கையில் பால் டின்னோடு உள்ளே நுழைந்தாள்..

என்னடி இது குழந்தையை இப்படி விட்டுட்டு போயிருக்கியே வீட்டை 

திறந்து போட்டு” 
என்று கடிந்துக்கொண்டாள் புஷ்பா..

அட நீங்க வேறக்கா இந்த வீட்டில் அப்டி என்ன சொத்தா கொட்டி கிடக்குது...

 பசிக்கு குழந்தைக்கு கொடுக்க பால்பவுடர் தீந்துடுச்சுக்கா”... 

இந்த மனுஷனை பத்தி தான் தெரியுமே உனக்கு செண்ட்ரிங் போட 

ஆள் தேடிட்டு இருக்கும்போது இந்தாள் குடிச்சிட்டு மல்லாக்க கிடந்தது...

ஹூம் நான் போய் ரத்தம் கொடுத்துட்டு கிடைச்ச காசுல பால்டின்
 வாங்கியாந்தேன்கா” என்று அசதியுடன் சிதிலமடைந்த சுவற்றோடு சாய்ந்து 
உட்கார்ந்தாள் கமலம்.
புஷ்பா ஆறுதலாக கமலம் தோளைத்தொட்டாள்....
கமலம் தட்டி விட்டாள் ”வேணாம்கா எனக்கு தெரியும் 
நீ என்ன சொல்ல வரேன்னு”...

எனக்கு இஷ்டமில்லக்கா மானத்தை வித்து என் பிள்ளைய 
வளர்க்கவேண்டிய அவசியமில்ல..... முடிஞ்சா கிட்னிய கூட விப்பேன்”..

அதுக்கப்புறம் என்னடி செய்வே? ”

ரத்தம் இருக்கு வித்தே
கிட்னியையும் வித்துட்டு அதுக்கப்புறம் என்னடி செய்வே?”

பொட்டப்புள்ளைய பெத்து வெச்சிக்கிட்டு நீ இப்படி வீம்பா இருப்பது சரியில்ல 
நான் சொல்றதை கேளு ஒரே ஒரு நாள் தானே கைல சுளையா
 5000 ரூபாய் தருவாங்க....நீ தான் வேணும்னு கேக்கிறாங்கடி சொன்னா கேளு”...

கண்ணீர் கண்களுடன் கையெடுத்து கும்பிட்டாள் ”அக்கா நீ முதல்ல 
இங்கருந்து கிளம்பு அந்தாள் வர நேரமாச்சு... குடிச்சிட்டு வந்தால் அந்தாளுக்கு 
எதிர்ல நீ இருப்பதை பார்த்தால் என்னை கொலையே பண்ணிருவான் 
நீ கெளம்பு வெரசா” என்று விரட்டினாள்....

குழந்தைக்கு பால் கலந்து கொடுத்துக்கொண்டிருந்த புஷ்பா , 
“ இப்ப இல்ல என்னிக்காவது கண்டிப்பா நீ யோசிப்பே அக்கா நமக்கு 
நல்ல வழி தான் காமிச்சான்னு புரிஞ்சுப்பே 
அதுவரை நான் உன்னை விடமாட்டேன் “ கண்ணீரை துடைத்துக்கொண்டு 
புஷ்பா கிளம்பினாள்...

கிளம்பும்போதே தள்ளாடியபடி ஒரு உருவம் ”அடியேய் எனக்கு சுள்ளுனு 
கருவாடு போட்டு கொழம்பு வெச்சு சாதம் வடிடி இதோ கொஞ்சம் படுக்கிறேன்” 
என்றபடி அப்படியே வாசற்படியிலேயே உருண்டு விழுந்தான்...

தடுக்க போன புஷ்பாவை கையமர்த்திவிட்டு கமலம் அவனை 
தன் எலும்பு கைகளால் எழுப்ப சிரமப்பட்டு முடியாமல் பரிதாபமாய் 
புஷ்பாவை பார்க்க புஷ்பாவும் கமலமும் 
குப்புசாமியை இழுத்துக்கொண்டு வந்து வீட்டுக்குள் படுக்கவைத்துவிட்டு புஷ்பா 
கமலத்தை ஏறிட்டு பார்த்தாள்... 

நான் சொன்னதை யோசனை செய் கமலம்... 
நாளை நான் வரும்போது உன் முடிவு நல்லமுடிவா இருக்கனும்”....

மறுநாள்....

புஷ்பா மெல்ல அந்த சாக்கடை ஓடும் நீரின் ஓரமாக நடந்து கமலத்தின் வீட்டை 
அடையுமுன் ஐயோ ஐயோ என்று தலையில் அடித்துக்கொண்டு அழும் சத்தம் 
கேட்டு பதறி ஓடினாள்....

அங்கே ரத்தவாந்தி எடுத்தபடி குப்புசாமி விழி விறைக்க செத்துக்கிடந்தான்... 
உரிமையாய் ஒரு  போய் அவன் திறந்த கண்களில் உட்கார்ந்திருந்தது....

என்ன செய்வேன் இனி நான் இந்த பச்சப்புள்ளைய வெச்சுக்கிட்டு ஐயோ 
யக்கா என்னக்கா செய்வேன் ” என்று அழுதாள்.....

புஷ்பா ஆதரமாய் அணைத்துக்கொண்டாள்...

தன் புடவை முந்தியில் சுருட்டி வைத்திருந்த காசெடுத்து சாவு காரியங்களை 
செய்ய உதவினாள்....

வீட்டுக்காரம்மாவிடம் பாக்கி வைத்திர்ந்த காசை கொடுத்துட்டு கமலத்தை 
அவள் குழந்தையை கூட்டிக்கொண்டு தன் சேரிக்கு சென்றாள் புஷ்பா...

இரவில் குழந்தை அழுதுக்கொண்டே இருக்கவே கமலம் என்னென்னவோ 
செய்து பார்த்தாள்... குழந்தை அழுவதை நிறுத்தவே இல்லை...

புஷ்பா எழுந்து ”என்னடி குழந்தை ஏன் அழுது பால் கொடுக்கலையா?” என்றாள் 
கண்ணை கசக்கியபடி...

பால் தீர்ந்துட்டுதுக்கா” என்றாள்....

நாளையாவது வரியா நான் சொன்ன இடத்துக்கு உனக்கு ஒரு 
குறையும் இல்லாம நான் பார்த்துக்கிறேன்” என்று புஷ்பா
 மெல்ல பேசினாள்...
வரட்டுச்சிரிப்பு கமலம் முகத்தில்...

புருஷன் செத்து முழுசா ஒரு வாரம் கூட ஆகலையேக்கா 

அதுக்குள் எப்படிக்கா இப்படி என்னை நீ” என்று அழுதாள்.....

ஒரே ஒரு நாள் தானே நீ தான் வேணும்னு அவங்க பிடிவாதமா கேட்பதால் 

தான் உன்னை கேட்கிறேன்.. நான் வரேன்னா இல்ல வேண்டாம் 
நீ தான் வேணும்னு கேக்கிராங்க”..

குழந்தைக்காக பார்த்து முடிவெடு என்றபடி படுத்துக்கொண்டாள் புஷ்பா...
இரவு முழுதும் தூங்காது விழித்தபடி கண்ணீருடன் உட்கார்ந்திருந்து காலை 
விடிந்ததும் குளித்துவிட்டு புஷ்பாவை எழுப்பினாள்..

அக்கா வா போலாம் நீ சொன்ன இடத்துக்கு”... 
குழந்தைய பத்திரமா பார்த்துக்க என்றபடி...
புஷ்பா சந்தோஷத்துடன் குழந்தையையும் தூக்கிக்கொண்டு 
கமலத்தையும் அழைத்துக்கொண்டு ஓடினாள்.....
அங்கே குறைந்தது இருபது பேர் உட்கார்ந்திருந்தனர்......
கூனிக்குறுகி கமலம் சேலைத்தலைப்பை போர்த்திக்கொண்டு நின்றாள்....
இந்தாங்கம்மா நீங்க சொன்னபடி என் தங்கச்சிய கூட்டிட்டு வந்துட்டேன்....

இதப்பாரும்மா இது ஒன்னும் தப்பான தொழில்னு நினைக்காதே”.....

இங்க இருக்கிறவங்க எல்லாரும் உன் உடம்பை 
காமக்கண்ணுடன் பார்க்க மாட்டாங்க”.....

அவர்களுக்கு தேவை உன் உடம்பு மட்டுமே......
சேலையை கழட்டிரும்மா....
உடம்பில் ஒட்டுத்துணியும் இருக்கக் கூடாது சரியா?”
அழுகையுடன் உடைகளை கழற்றினாள்....
வற்றிய உடம்பில் அங்கங்கே தீக்காயங்களுடன் சோகம்
 நிறைந்த கண்களுடன் வறுமைத்தின்ற அவள் உடலை 
ஒரே நேரத்தில் அத்தனைப்பேரின் கண்களும் 
வேகமாய் கண்டு வரைய ஆரம்பித்தது....
கண்ணீருடன் உடலை மறைக்கப்போன 
கைகளை வெறுமனே விட்டு நின்றாள் கமலம்...
அங்கே குழந்தை இவளை 
இந்த கோலத்தில் பார்த்து புன்னகைத்தது.....











77 comments:

  1. படித்ததும் என் கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது மேடம். பாவம் இந்தப் புருஷன் சரியில்லாத படிப்பறிவும் இல்லாத சேரிப் பெண்கள் பாடு. குழந்தைக்குப் பால் வாங்கக்கூட முடியாத நிலைமை மிகவும் கொடுமை.

    vgk

    ReplyDelete
  2. முதலில் வந்து கதை படித்து பின்னூட்டமிட்டதற்கு அன்பு நன்றிகள் சார்...

    உண்மையே ஏழ்மை சிலசமயம் வேறு வழி இல்லாது இப்படி செய்யவைத்துவிடுகிறது....

    ReplyDelete
  3. கதையை படித்தேன்.... வறுமை என்பது கொடியது... க்ளைமாக்ஸ் எதிர்பார்க்க வில்லை.. திடிரென கதையில் சின்ன மாற்றத்தை கொடுத்த உங்கள் திறமையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை... அருமை பாராட்டுக்கள்

    ReplyDelete
  4. புஷ்பா போன்றவர்கள் இந்த சமூகத்தில் நல்லது பண்ணுவது போல் இருந்தாலும் தவறான பாதைக்கு வழிகாட்டுதலாக அமைந்து விடுகின்றனர்.. நான் கூட மிகவும் பயந்துவிட்டேன்.. க்ளைமாக்ஸ் படித்தவுடன்... ஓவியம் வரைவதற்கா என்று ஆசுவாசபடுத்தினாலும் அத்தனை ஆடவர் முன்னால் தன் வறுமையினால் கூனிக்குறுகி நின்ற கமலம் கண்கலங்க வைக்கிறாள்... பொறுப்பற்ற குடிகாரன் கணவன் அமைந்த எத்தனையோ பெண்களின் நிலமை இப்படி கேள்வி குறியாக போவது மனதில் வலியை தரக்கூடியது.... கதையில் யோசிக்க முடியாத முடிவை... மனதில் வலியுடன் முடித்த உங்கள் திறமை இங்கே கண்டிப்பாக சுட்டிக்காட்ட வேண்டும்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. தீ எத்தனை உறுதியான இரும்பையும் உருக்கி விடும்
    வறுமை கூட அப்படித்தான
    எத்தகைய உறுதியான மனதையும் அசைத்துவிடும்
    அதுதான் வறுமை குறித்து சொல்லத் துவங்குகிற
    ஔவை கூட முதலில் கொடிது கொடிது வறுமை கொடிது
    எனத்தான் அந்தப்பாடலைத் துவங்குவார்
    கதைக் களம் துவ்ங்கிய இடம் கொண்டு செல்லும் விதம்
    முடிவு , முடிவில் உள்ள திருப்பம் அனைத்தும் இந்தப் படைப்பில்
    சிறப்பாக அமைந்துள்ளது சிறப்பான படைப்பு
    தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. கதையை படித்தேன்.
    மனசை உருக்குகிறது.

    ReplyDelete
  7. இந்த கதையைப் படித்ததும் சோமாலிய பஞ்சம் ஞாபகத்துக்கு வருது. கதையின் ஒவ்வொரு வரிகளும் மனதை இறுக்கமாக்குகிறது. காசுக்காக மானத்தை விற்க மாட்டேன் என்று சொன்னவள் கடைசியாக வேறு வழியே இல்லாமல் ஒப்புக்கொண்டு விட்டாள்.

    என் கவிதையினைப் படித்துவிட்டு பணம் இல்லைனா பெண்களின் நிலை இதுதானா என்று கேட்டிருந்தீர்கள். அப்படி போக வேண்டாமென எண்ணுபவர்களின் நிலையை உங்கள் முடிவு காட்டுது அக்கா.

    கணவன் சரியாக இருந்தால் இந்த நிலமை ஏற்படாது என்பதற்கு உங்கள் கதை ஒரு உதாரணம். நீங்கள் கதையை கொண்டுச்செல்லும் விதம் அருமை அக்கா. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. நீங்கள் கதையை கொண்டுச்சென்ற விதம் மிக அருமை. யாரும் எதிர்பார்க்காத க்ளைமாக்ஸ் வாவ்.....

    ReplyDelete
  9. கதை மனதை பிசைந்து விட்டது.ஏழ்மை எவ்வளவு கொடுமை.கமலத்தின் முடிவு மிகவும் கொடுமையே.மஞ்சுபாஷினி,கதையை அழகான முரையில் நகர்த்தி சென்று படிப்பவர்கள் மனதினை ”ப்பச்சக்” என்று ஒட்டிக்கொள்ள வைத்து விட்டீர்களப்பா!

    ReplyDelete
  10. அருமையான கதை. இந்தப்பெண்ணால் வேர என்னதான் செய்யமுடியும். ஏழ்மை எவ்வளவு கொடுமை. முடிவு மனதைதொட்டது.

    ReplyDelete
  11. ஏ யப்பா, கிளைமாக்ஸ் இப்பிடித்தான் இருக்கும்னு நான் நினச்சதில் சம்மட்டி அடி....மனதுக்கு வலி தந்த கதை...!!!!

    ReplyDelete
  12. மனதைத் தொட்ட கதை.

    ReplyDelete
  13. அருமையான கருத்து பகிர்வுக்கு அன்பு நன்றிகள் ராஜேஷ்....

    ReplyDelete
  14. அன்பு நன்றிகள் ரமணி சார்.. அருமையா சொல்லி இருக்கீங்க தீ எப்படிப்பட்ட இரும்பையும் உருக்கிவிடும் என்பதை இந்த கதைக்கு சொல்லி இன்னும் வலு சேர்த்திருக்கீங்க ரமணி சார்....

    ReplyDelete
  15. அன்பு நன்றிகள் ரத்னவேல் ஐயா. இது கண்டிப்பாக கற்பனை கதையே ஐயா...

    ReplyDelete
  16. சின்னப்பிள்ளையா இருந்தாலும் எத்தனை அறிவா சொல்லி இருக்கீங்க காந்தி உண்மையேப்பா... உங்கள் கவிதையை மனம் வலிக்க படித்தேன். படித்து முடித்தப்பின்னும் யோசித்துக்கொண்டே இருந்தேன். பெண்களுக்கு வேறு வழி இல்லையா? கல்யாண பிராப்தி கிடையாதா பணம் இல்லைன்னா பெண் முதிர்கன்னியாக தான் கழியனுமா என்று... தாக்கமுள்ள கவிதைப்பா நீங்க படைத்தது....

    அன்பு நன்றிகள் காந்தி....

    ReplyDelete
  17. அன்பு நன்றிகள் ராஜப்பாட்டை ராஜா கருத்து பதிந்தமைக்கு..

    ReplyDelete
  18. ஆமாம் தானே அவர்கள் உண்மைகள் அட பேர சொல்லுங்கப்பா உங்க பேரை சொல்லி ஒரு நன்றி சொல்வேனுல்ல அவர்கள் உண்மைகள்?

    ReplyDelete
  19. என் கதை உங்க மனதில் நிலைக்கும்படி செய்தது என்று சொன்னதற்கு அன்பு நன்றிகள் ஸாதிகா....

    ReplyDelete
  20. அன்பு நன்றிகள் லக்‌ஷ்மி அம்மா கருத்து பதிந்தமைக்கு...

    ReplyDelete
  21. அட வாங்க மனோ... நான் நினைச்சேன் அதிகமா பல்பு வாங்குவதே அதனால் தான் நீங்க :) நீங்க நினைச்சமாதிரி இருந்திச்சா க்ளைமேக்ஸ்??

    அன்பு நன்றிகள்பா கருத்து பதிந்தமைக்கு....

    ReplyDelete
  22. அன்பு நன்றிகள் ஸ்ரீராம் கருத்து பதிந்தமைக்கு

    ReplyDelete
  23. கதையின் முடிவை ஆரம்பத்திலேயே தெரிந்துகொண்டேன்.அதுதான் நீங்களே கூறிவிட்டீர்களே."கலைக்கண்"

    ReplyDelete
  24. கதை நல்லாயிருக்குங்க..

    ReplyDelete
  25. கதை ஆரம்பிக்கும் போதே கனத்துடன் ஆரம்பிக்கிறது.

    இன்னும் எத்தனையோ குடும்பங்கள் குடியால் அழிந்து கொண்டுதான் இருக்கின்றன.

    பால் வாங்கக்கூட கஷ்டப்படும் இது போன்ற பெண்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்...

    கதையின் முடிவு கண்களை கலங்கச் செய்கிறது.

    ReplyDelete
  26. வறுமை என்பது மிகக்கொடிடியது என்பதை தெரிந்துகொண்டேன்

    ReplyDelete
  27. அன்புச் சகோதரி!
    அங்கே அவர்கள் வரைந்தது
    ஓவியம்
    இங்கே நீங்கள் பனைந்தது
    காவியம்
    வாழ்க வளமுடன்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  28. அன்பு சகோதரி,
    கதையை படித்ததும் சற்று நேரம் மௌனமாக இருந்தேன். மனதை ஏதோ செய்து கொண்டிருந்தது.
    கொடிது கொடிது வறுமை கொடிது.
    வறுமையின் சாபத்தில் விளையும் கொடுமைகள் அனுபவிக்க கூடாத ஒன்று.
    உங்கள் கதையின் நாயகி, அப்படி ஒரு வறுமையை அனுபவித்திருக்கிறார்.

    மனம் கனத்தாலும் நிறைவு கொடுத்த பதிவு.

    ReplyDelete
  29. இரண்டு பூக்களின்(புஷ்பா,கமலம்)வாசமும் வேறுவிதமாய் நுகரப்பட்டுள்ளது.....

    ReplyDelete
  30. மனதில் கலக்கத்தை ஏற்படுத்திவிட்டது அருமையா எழுதியிருக்கீங்க அக்கா பாராட்டுக்கள்

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  31. This comment has been removed by the author.

    ReplyDelete
  32. This comment has been removed by the author.

    ReplyDelete
  33. I could not accept this story,people know prostitution is bad thing.let us go to the lady(Kamalam), if she is really hard worker she would not come to the job since it is easy money she is in the field.

    Now a days women came into this prostItution not only for hungry

    As a story good concept:)

    ReplyDelete
  34. கதையை படித்து மூட் அவுட் ஆகிட்டுது :-( .
    இந்த வகையில் நீங்கள் பாஸ் ஆகிட்டீங்க :-)

    ReplyDelete
  35. கதையின் நாயகி கமலம் வறுமையின் காரணமாக வழி மாறிப் போகின்றாள். ஆனால், இங்கு பலர் சட்டரீதியாக பணத்தைக் குறிக்கோளாக்கி மானத்தை அடகுவைக்கின்றார்கள். வறுமையின் கொடுமை மனிதனை எவ்வாறு மாற்றிவிடுகின்றது என்பதற்குச் சரியான எடுத்துக்காட்டு இக்கதை. நல்ல கதை படிக்க வேண்டும் போல் இருந்தால், நமது மஞ்சுபாஷினியின் பக்கம் போக வேண்டும் என்ற எண்ணப் போக்கை என்றுமே நீங்கள் மாற்றியதில்லை மஞ்சுபாஷினி

    ReplyDelete
  36. கதை மிக அருமையாக உள்ளது.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  37. வறுமை கொடுமையிலும் கொடுமை .நெஞ்சை நெகிழவைத்த
    பகிர்வு .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .....................

    ReplyDelete
  38. கண்ணீரை வரவழைத்து விட்டது!கொடிது கொடிது!

    ReplyDelete
  39. கலைக்கண்...மனதைக்கனக் வைத்து கண்களை நிறைக்க வைத்தது.

    ReplyDelete
  40. அன்பு நன்றிகள் எழிலன் ஐயா.. உங்க தளம் வந்து பார்த்தேன் அருமை அருமை.. என்னை இணைத்தும் கொண்டேன், இனி உங்கள் படைப்புகளை வந்து படித்து கருத்தும் இடுவேன் ஐயா...

    அன்பு நன்றிகள் மீண்டும் ஒரு முறை எழிலன் ஐயா...

    ReplyDelete
  41. கதைக்களம்வறுமையை மையம் கொண்டு நகருகிறது கொடிது கொடிது வறுமை கொடிது என்பாள் தமிழ் பாட்டி உள்ளத்தயுறுக் வைத்து விட்டது பாராட்டுகள்

    ReplyDelete
  42. உங்கள் ரசனை மிளிரும் பின்னூட்டங்களை மூன்றாம் சுழியில் படித்து'யார் இது?'என்று ஆச்சரியத்தோடு பார்க்க வந்தேன். உங்கள் கதை எளிமையாக, உயிரோட்டத்துடன் சொல்லப் பட்டிருக்கிறது. ஏழ்மையின் அவலம் மனதை நெகிழச் செய்து விட்டது. நிறைய எழுதுங்கள் மஞ்சு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  43. அன்புச் சகோதரி தங்கள் வரவைக் காண நான் காத்திருக்கின்றேன் புதிய பாடல் வரிகளுடன் ....

    ReplyDelete
  44. கதையின் போக்கை யூகிக்க முடிந்தாலும், நடை தொடர்ந்து படி என்றது. (அந்தக் காலத்தில் கோவில் சிற்பங்களுக்கும் மாடல்களாக ஆண்களும் பெண்களும் இருந்தார்களாம்)

    ReplyDelete
  45. என்ன அக்கா இப்படி அழ வைத்துவிட்டீர்கள், உணர்ச்சிபொங்கும் செய்திக்கதை வாழ்த்துக்கள் அக்கா...!

    ReplyDelete
  46. மஞ்சுக்கா எப்படியிருக்கீங்க நலமா?..

    அக்கா கதை மிக வும் அருமைக்கா. மனதை கனக்கவைத்து கண்களை கலங்கவைத்தது. கொடிது கொடிது வறுமை கொடிது..

    ReplyDelete
  47. அன்பு நன்றிகள் ஆசியா ஒமர் கருத்து பகிர்ந்தமைக்கு...

    ReplyDelete
  48. அன்பு நன்றிகள் சே குமார் கருத்து பகிர்ந்தமைக்கு....

    ReplyDelete
  49. அன்பு வரவேற்புகள் வைரை சதீஷ்....

    உங்கள் தளம் வந்து பார்க்கிறேன்பா....

    அன்பு நன்றிகள் கருத்து பகிர்ந்தமைக்கு....

    ReplyDelete
  50. அன்பு நன்றிகள் இராமானுசம் ஐயா கருத்து பகிர்ந்தமைக்கு.

    ReplyDelete
  51. அன்பு நன்றிகள் மகேந்திரன் கருத்து பகிர்ந்தமைக்கு...

    ReplyDelete
  52. அன்பு வரவேற்புகள் சுரேஷ்....

    உங்கள் தளம் வந்து பார்க்கிறேன்பா...

    அன்பு நன்றிகள் சுரேஷ் கருத்து பகிர்ந்தமைக்கு.

    ReplyDelete
  53. அன்பு நன்றிகள் யூஜின் கருத்து பகிர்ந்தமைக்கு.

    ReplyDelete
  54. அன்பு வரவேற்புகள் மழை....

    உங்கள் தளம் வந்து பார்த்தேன்....

    அன்பு நன்றிகள் கருத்து பகிர்ந்தமைக்கு....

    ReplyDelete
  55. அன்பு வரவேற்புகள் ஜெய்லானி....

    அடடா நீங்கள் என் தளம் வந்து படித்த முதல் பகிர்வே உங்கள் மூடை அவுட் செய்துவிட்டதா? அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்பா.... என்ன செய்வது நிறைய சோகக்கதைகள் இருக்கின்றனவே....

    அன்பு நன்றிகள்பா கருத்து பகிர்ந்தமைக்கு.

    ReplyDelete
  56. அன்பின் சந்திரகௌரி.....

    நம்பிக்கையுடன் என் வலைப்பூ வந்து நீங்கள் படிக்க நல்ல கதை கிடைத்தது என்று சொன்னமைக்கும் கருத்து பகிர்ந்தமைக்கும் அன்பு நன்றிகள்பா....

    உங்கள் நம்பிக்கையை என்றும் காப்பாற்றுவேன் என்ற உறுதியுடன்....

    ReplyDelete
  57. அன்பு வரவேற்புகள் ரியாஸ்....

    உங்கள் தளம் வந்து பார்க்கிறேன்பா....

    அன்பு நன்றிகள் கருத்து பகிர்ந்தமைக்கு...

    ReplyDelete
  58. அன்பு நன்றிகள் அம்பாளடியாள் கருத்து பகிர்ந்தமைக்கு.

    ReplyDelete
  59. அன்பு வரவேற்புகள் தென்றல் சரவணன்...

    உங்கள் தளம் வந்து பார்க்கிறேன்பா...

    அன்பு நன்றிகள் கருத்து பகிர்ந்தமைக்கு.

    ReplyDelete
  60. அன்பு நன்றிகள் இராஜராஜேஸ்வரி கருத்து பகிர்ந்தமைக்கு.....

    ReplyDelete
  61. அன்பு நன்றிகள் மாலதி கருத்து பகிர்ந்தமைக்கு....

    ReplyDelete
  62. அன்பு வரவேற்புகள் மோகன் ஜீ...

    உங்கள் தளம் வந்து பார்க்கிறேன்பா....

    அன்பு நன்றிகள் கருத்து பகிர்ந்தமைக்கு....

    ReplyDelete
  63. கண்டிப்பாக வந்து பார்க்கிறேன் அம்பாளடியாள்....

    கழுத்தை நெறிக்கும் அளவு பணி....

    ReplyDelete
  64. இந்த நிரோஷ் பிள்ளை அதிகமா சிரிக்கவெச்சுட்டுது ஒரு கதை சொல்லி... அதனால தான் :)

    சும்மா சொன்னேன் நிரோஷ்...

    அன்பு நன்றிகள்பா கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  65. ஆஆஆஆஆஆஅஹ் அப்பாதுரை நீங்களா?

    வரவேண்டும் வரவேண்டும்....

    அன்பு வரவேற்புகள்.....

    கருத்து பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள்பா...

    ReplyDelete
  66. அட மலிக்கா வாப்பா.. சௌக்கியமா?

    என்னாச்சு அப்புறம் காணலையே உங்களை?

    உங்க தொலைபேசி எண் என் மெயிலுக்கு அனுப்புங்க. கண்டிப்பா உங்களுக்கு கால் செய்து பேசுறேன்பா....

    அன்பு நன்றிகள் மலிக்கா கருத்து பதிந்தமைக்கு.

    ReplyDelete
  67. கதை ரொம்ப நல்லாருக்குங்க..

    ReplyDelete
  68. ஒட்டு மொத்த உலகின் ஒரே கடவுள் பணம்.

    (என நினைத்து உலகமே துரத்துகிறது. உண்மையில், அருகிருப்பவனிடம் புன்னகைக்க கூட விடாமல் நம்மை துரத்தும் அது சாத்தான்)

    வறுமையின் வலியில் மனது கனக்கிறது.

    ReplyDelete
  69. என்ன சொல்வது என்று தெரியவில்லை. மனதை கனக்க வைத்து விட்டீர்கள் சகோதரி.

    ReplyDelete
  70. படித்தவுடன் மிகவும் வேதனைப்பட்டேன் அக்கா... இந்த நிலைமை எந்த தாய்க்கும் வரகூட்டாது.

    ஆனால் கதையை நீங்கள் கொண்டு போன விதம் அருமை அக்கா... நான் எங்கே தவறான பாதைக்குத்தான் போகப்போகிறாளோ என நினைத்தேன் ஆனால் இந்த ஒரு முடிவும் வேதனைக்குறியதே. கலையுணர்வுடன் காண உலகில் எவ்வளவோ இருக்கும்போழுது ஏன் பெண்களை இவ்வாறு பார்த்து கலை கண்ணோடு காணவேண்டும் என்கின்றனர். மிருகங்களா உணர்வற்று கிடக்க.

    நீங்கள் அருமையாக முடிந்திருந்தீர்கள்

    //ஒரே நேரத்தில் அத்தனைப்பேரின் கண்களும்
    வேகமாய் கண்டு வரைய ஆரம்பித்தது....
    கண்ணீருடன் உடலை மறைக்கப்போன
    கைகளை வெறுமனே விட்டு நின்றாள் கமலம்...
    அங்கே குழந்தை இவளை
    இந்த கோலத்தில் பார்த்து புன்னகைத்தது.....//

    மனது வேதனை அடைந்தாலும் நல்ல கதைநடையுடய கதையை படிக்க தந்தமைக்கு நன்றி...!

    ReplyDelete
  71. நல்லதொரு கதை..நானும் வேறு கோணத்தில் கதை நகரும் என எதிர்பார்க்கவில்லை.முடிவு அருமை.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  72. கதை ஆரம்பத்தில் நானும் வேறு கோணத்தில் யோசித்தேன் முடிவு மனதிற்கு கடுகளவு இதமளித்தாலும் வறுமைக்கு முன் வேறு வழி ?
    வலைச்சரத்தில் தங்கள் அறிமுகம் கண்டு வந்தேன் .

    ReplyDelete
  73. அன்பின் மஞ்சு - அருமையான கதை இயல்பான நடை - கருத்து அருமை -இறுதியில் முடிவு திடீர் திருப்பம் கதையின் உச்ச கட்டம். சிந்தனை அருமை.

    // இந்த கோலத்தில் பார்த்து புன்னகைத்தது.....// - முத்தாய்ப்பான வரி.

    நல்வாழ்த்துகள் மஞ்சு
    நட்புடன் சீனா

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...