"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Sunday, August 28, 2011

இறைவா எங்கள் கண்முன் நீ வரவேண்டும்....

இறைவா எங்கள் கண்முன் நீ வரவேண்டும்

கல்வி கற்க ஆசிரியர் துணை வேண்டும்
நல்லொழுக்கம் பேண பெற்றோர் உடன் வேண்டும்
எல்லாம் பகிர்ந்துக்கொள்ள‌ நல்லதொரு நட்பு வேண்டும்
மனதிலுள்ள மென்மையை உணரவைக்க அழகான காதல் வேண்டும்
பொறுப்பை உணர அவசியம் திருமணம் வேண்டும்
நம்மை நாமே காண மழலை செல்வம் வேண்டும்
இத்தனையும் கேட்க இறைவா நீ எங்கள் கண்முன் வரவேண்டும்...

40 comments:

 1. வேண்டிய வரங்கள் யாவும் உன்னதமானவை சகோதரி.
  கிடைத்திடவும்
  கிடைத்ததை பேணிடவும் இறைவன் அருளட்டும்.

  ReplyDelete
 2. இறைவனிடம் கேட்க அருமையான வரங்கள். இவையாவும் கிடைத்திட வாழ்த்துக்கள்,மஞ்சு.

  ReplyDelete
 3. நான் இவையெல்லாம் கேட்காமலே என்னிடம் வந்துவிட்டனவே சகோதரி... அப்போ நான் இறைவனை தொந்தரவு செய்யத்தேவையில்லைன்னு நினைக்கிறேன்.. ஹி ஹி ஹி

  காட்டான் குழ போட்டான்..

  ReplyDelete
 4. உன்னதமான வரம் இறைவனை நோக்கி கேட்ட கவிதை அழகு ... அழகான கவிதை அமைந்தது போலவும்...அழகான வரம் அமையட்டும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. நம்மை நாமே காண மழலை செல்வம் வேண்டும்/

  அழகான வரம் அமையட்டும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. அன்பு வரவேற்புகள் மகேந்திரன்...

  அன்பு நன்றிகள் கருத்து பதிந்தமைக்கு....

  ReplyDelete
 7. அன்பு நன்றிகள் ராம்வி கருத்து பதிந்தமைக்கு...

  ReplyDelete
 8. அன்பு நன்றிகள் காட்டான் சகோதரர்...

  உண்மையே நானும் உங்களைப்போல தான்... வேண்டமலேயே அத்தனை வரங்களும் இறைவன் கருணையால் எனக்கு கிடைத்துவிட்டதுப்பா...

  ReplyDelete
 9. அன்பு நன்றிகள் ராஜேஸ் கருத்து பதிந்தமைக்கு...

  ReplyDelete
 10. அன்பு நன்றிகள் இராஜராஜேஸ்வரி கருத்து பதிந்தமைக்கு...

  இறைவன் அருளால் இரண்டு பெரிய செல்வங்கள் - (மழலைகள் வளர்ந்துவிட்டனரே :)) உள்ளனர்பா.. நீங்க சொனது உண்மையே. இனி பேரச்செல்வங்கள்தான் வேணும் :)

  ReplyDelete
 11. இறைவனிடம் கேட்க அருமையான வரங்கள். இவையாவும் கிடைத்திட வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. நம்மை நாமே காண மழலை செல்வம்..
  ஆஹா.. அருமையான பார்வை..
  இதில் சொல்லாமல் சொல்லியிருக்கும் அர்த்தங்கள் அநேகம்.

  ReplyDelete
 13. வேண்டும் வேண்டுதல்கள் அனைத்தும் நியாயமானதே
  கொடுப்பதில் இறைவனுக்கு ஏதும் மறுப்பிருக்காது
  அதிலும் தங்களைப்போல் நல்லுள்ளம் கொண்டோரைத்தான்
  கொடுப்பதற்காக அவன் தேடிக்கொண்டிருக்கிறான்
  ஆயினும் "என் "என்பதுமட்டும்" எங்கள் என இருக்குமாயின்
  கவிதை இன்னும் சிறப்பாக இருக்கும் என் நினைக்கிறேன்
  (என்னை நானே காண என இல்லாமல்
  நம்மை நாமே காண என வந்திருப்பதைப்போல)
  மனம் கவர்ந்த பதிவு தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. ''..இத்தனையும் கேட்க இறைவா நீ என் கண்முன் வரவேண்டும்...''
  இறைவன் வர, அழகான வரம் அமையட்டும் வாழ்த்துக்கள்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 15. வரங்களும்,அதை கேட்ட விதமும் அழகோ அழகு.தொடருங்கள்!

  ReplyDelete
 16. அருமையான வேண்டுதல்க் கவிதை வரிகள் .அவ்வாறே தங்கள் கருத்துமழை என் தளத்தில் பொழிய வேண்டுகின்றே சகோதரி ........மிக்க
  நன்றி சகோ பகிர்வுக்கு ....

  ReplyDelete
 17. நாமே காண மழலை செல்வம்

  மிக அழகாச் சொல்லியிருக்கீங்க.

  ReplyDelete
 18. உண்மையில் இறைவனைக் கண்முன் பார்க்கும்போது எதுவும் கேட்கத் தோன்றாது திகைப்பில் நின்று விடுவோம். எனவே முன்னாலேயே இப்படி வரங்களை மனனம் செய்து வைத்துக் கொள்வது நல்லதுதான்!

  ReplyDelete
 19. பேரச்செல்வங்கள் தவழட்டும்!

  ReplyDelete
 20. வலை வந்து கருத்துரை வழங்
  கினிர் நன்றி
  கடுமையான முதுகுவலி
  காரணமாக அமர்ந்து கருத்துரை
  வழங்க இயலவில்லை மன்னிக்க!

  பின்னர் எழுதுகிறேன்
  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 21. அன்பு நன்றிகள் சமுத்திரா கருத்து பதிந்தமைக்கு....

  ReplyDelete
 22. அன்பு நன்றிகள் ரிஷபன் கருத்து பதிந்தமைக்கு...

  அட கண்டுபிடிச்சிட்டீங்களா... அதே தான்.... :)

  ReplyDelete
 23. அன்பு நன்றிகள் ரமணி சார் கருத்து பதிந்தமைக்கு....

  உங்களைப்போன்றோரின் ஆசிகளே எங்களுக்கு வரங்கள் சார்.....

  திருத்தி விட்டேனே :)

  ReplyDelete
 24. அன்பின் வேதாம்மா அன்பு நன்றிகள் கருத்து பதிந்தமைக்கு....

  ReplyDelete
 25. அன்பு நன்றிகள் ஸ்ரீதர் கருத்து பதிந்தமைக்கு.....

  ஆமாம் தானே?

  ReplyDelete
 26. அன்பு நன்றிகள் அம்பாளடியாள் கருத்து பதிந்தமைக்கு....

  கண்டிப்பாகப்பா அருமையான கவிதை வரிகளும் நகைச்சுவையும் நல்லவையும் நான் படிக்கும்போதெல்லாம் கருத்து இட தவறுவதே இல்லைப்பா...

  5 நாட்கள் லீவ் விட்டதால் வீட்டில் கொஞ்சம் பிசி.... அதனால் தான் வலைத்தளங்களுக்கு வர முடியலை... வந்து படித்தால் கருத்து எழுதாமலிருப்பதில்லைப்பா....

  ReplyDelete
 27. அன்பு நன்றிகள் குணசீலன் கருத்து பதிந்தமைக்கு....

  ReplyDelete
 28. அன்பு வரவேற்புகள் ஸ்ரீராம்....

  அன்பு நன்றிகள் கருத்து பதிந்தமைக்கு....

  உண்மையேப்பா.. இறைவன் கண் முன் வருவதே பெரிய விஷயமாச்சே.... அப்படியே வந்துட்டால் உன் பதம் சரணம் அடைவதே எனக்கு வேண்டும் என்று மட்டுமே கேட்க தோணும்....

  ReplyDelete
 29. அன்பு நன்றிகள் இராஜராஜேஸ்வரி இறைக்கு சமமான உங்கள் ஆசிக்கும் வாழ்த்துக்கும்....

  ReplyDelete
 30. அன்பு நன்றிகள் ராமானுசம் ஐயா..

  அடடா உடல்நலம் முதலில் பார்த்துக்கொள்ளுங்கள் ஐயா....

  உடல்நலம் தான் முக்கியம்.....

  நிதானமாக படிக்கலாம்.....


  முதலில் உடல்நலம் ஆரோக்கியம் பார்த்துக்கொள்ளுங்கள் ஐயா....

  உடல் ஆரோக்கியத்திற்காக நான் இறையிடம் பிரார்த்திக்கிறேன் ஐயா...

  ReplyDelete
 31. இனிய சதுர்த்தி தின நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 32. கண்முன் வந்தால் அவன் இறைவன் அல்லாது போவான்...

  கண்ணுக்கு தெரியாதவன் இறைவன்... ஆனாலும் வேண்டும் வரம் யாவும் தருபவன் அவன்...

  இனிய வினாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்...

  அக்கா நீங்கள் வணங்கும் உங்கள் வினாயகர் உங்களுக்கு நீங்கள் வேண்டுவதையெல்லாம் வாரி வழங்க வேண்டுகிறேன்..

  ReplyDelete
 33. கேட்டது அனைத்தும்
  கிடைக்க வாழ்துக்கள்
  சா இராமாநுசம்

  ReplyDelete
 34. உங்களுக்கும் அன்பு வினாயகர் சதுர்த்தி தின நல்வாழ்த்துகள் ரமணி சார்....

  ReplyDelete
 35. அருமையான வாசகங்கள் வாசா..

  உண்மையே....

  அன்பு நன்றிகள் கருத்து பதிந்தமைக்கு.

  உனக்கும் அம்மாவுக்கும் அன்பு வாழ்த்துகள் வினாயகர் சதுர்த்திக்கு...

  ReplyDelete
 36. அன்பு நன்றிகள் இராமானுசம் ஐயா. உங்களுக்கும் வினாயகர் தின நல்வாழ்த்துகள் ஐயா...

  உடல்நலம் எப்படி இருக்கிறது ஐயா?

  ReplyDelete
 37. தங்கள் பின்னூட்டத்த்ற்கு ஒரு
  பின்னூட்டமிட்டுள்ளேன்
  நேரமிருப்பின் பார்வையிடவும்

  ReplyDelete
 38. பார்த்துட்டேனே ரமணி சார்......

  அன்பு நன்றிகள் ரமணி சார் இங்கு வந்து எனக்கு சொன்னீங்க.... ஆனா நான் அதுக்கு முன்னாடியே பார்த்துட்டேனே :)

  ReplyDelete
 39. எவ்வளவு நாட்கள் ஆகி விட்டன சகோதரி. காற்றும் கடலும் வானும நிலமும் இந்த வையகமும் உள்ளவரை உங்களின் இந்த இலக்கிய தாகம் ஓயாது..அதன் வழி உங்களை சந்தித்ததில் மகிழ்கிறேன்...அதே பக்தியில் தோய்ந்த கனத்துப் போன கண்முடி தியானிக்கும் வார்த்தைகள்...கிடைத்திடும் உங்களுக்கு வேண்டி நிற்பவை அனைத்தும் உங்களின் நல்ல மனசுக்கு...
  அன்பு சகோதரன் அப்துல்லாஹ்.

  ReplyDelete
 40. அன்பு வரவேற்புகள் அப்துல்லாஹ் சார்..

  எப்படி இருக்கீங்க?

  உங்க தளம் வந்து பார்த்தேன் அருமையாக இருக்கிறதுப்பா...

  எனக்கும் சந்தோஷமே உங்களை இங்கு கண்டது....

  அன்பு நன்றிகள்பா கருத்து பதிந்தமைக்கு...

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...