ஒட்டிய வயிறோடு
எலும்பு கூடு தோற்றத்தில்
பெரியவர் ஐயா பசி
என்றபோது யோசித்தேன்
அன்னதானம் சிறந்ததோ
தானம் தந்த கண்கள்
ஒளிப்பெற்று உலகம் கண்டு
பூரித்தப்போது யோசித்தேன்
கண் தானம் சிறந்ததோ
தந்த ரத்தத்தில் உயிர்த்த
குழந்தை தத்தி தவழ்ந்து
அருகில் வந்து
கன்னத்தில் முத்தமிட்டப்போது
யோசித்தேன்
ரத்த தானம் சிறந்ததோ
கண்மங்கி உடல் உழைத்து
வறுமையில் உழன்று
படித்து சாதிக்க துடிக்கும் இளங்குருத்துகளுக்கு
கல்விக்கண் திறக்க அவசியமென்பதால்
யோசித்தேன்
கல்விதானம் தான் சிறந்தததோ
நிதானம் தவறி பலமுறை
கோபத்தில் அடித்தப்போதும்
கண்ணீரோடு எதிர்த்து பேசாத
என் அன்பு மனைவி
என் கடும்சொல் பொறுக்காது
எரிந்த அவள் உடல் சாம்பலாகி
எனக்கு உணர்த்தியது
தானத்தில் சிறந்தது நிதானம் என்று...
எலும்பு கூடு தோற்றத்தில்
பெரியவர் ஐயா பசி
என்றபோது யோசித்தேன்
அன்னதானம் சிறந்ததோ
தானம் தந்த கண்கள்
ஒளிப்பெற்று உலகம் கண்டு
பூரித்தப்போது யோசித்தேன்
கண் தானம் சிறந்ததோ
தந்த ரத்தத்தில் உயிர்த்த
குழந்தை தத்தி தவழ்ந்து
அருகில் வந்து
கன்னத்தில் முத்தமிட்டப்போது
யோசித்தேன்
ரத்த தானம் சிறந்ததோ
கண்மங்கி உடல் உழைத்து
வறுமையில் உழன்று
படித்து சாதிக்க துடிக்கும் இளங்குருத்துகளுக்கு
கல்விக்கண் திறக்க அவசியமென்பதால்
யோசித்தேன்
கல்விதானம் தான் சிறந்தததோ
நிதானம் தவறி பலமுறை
கோபத்தில் அடித்தப்போதும்
கண்ணீரோடு எதிர்த்து பேசாத
என் அன்பு மனைவி
என் கடும்சொல் பொறுக்காது
எரிந்த அவள் உடல் சாம்பலாகி
எனக்கு உணர்த்தியது
தானத்தில் சிறந்தது நிதானம் என்று...
Tweet |
அருமை அருமை
ReplyDeleteதானத்தில் சிறந்தது நிதானமே
அதைச் சொல்லிச் செல்லும் விதம் மிக மிக அருமை
கவிதை என்பதே கொஞ்சம் மிகைப் படுத்திச் சொல்வதுதான்
எனவே இருமுறை என்பதை பலமுறை எனச் சொன்னால்
கவிதைக்குஇன்னும் அதிக அழுத்தம் கிடைக்கவே செய்ய்யும்
சூப்பர் படைப்பு தொடர வாழ்த்துக்கள்
தானத்தில் சிறந்தது நிதானம்-நீர்
ReplyDeleteதந்தீர் அதற்கு பிரதானம்
வானமாய் விரிந்தது நிதானம்-வள
வாழ்வுக்கு அதுவே பிரதானம்
வந்தே கவிதை நீர் வடித்ததும்
அருமை
இந்த புலவனின் குரல்
உங்கள் செவிகளில் விழவில்லை
போலும். நன்றி
புலவர் சா இராமாநுசம்
Nice
ReplyDeleteஅன்பு நன்றிகள் ரமணி சார் கருத்து பதிவுக்கு....
ReplyDeleteபுலவர் ஐயாவுக்கு என் அன்பு நன்றிகள் இங்கு வந்தமைக்கும் கருத்து பதிந்தமைக்கும்.....உங்கள் தளம் வந்து பார்க்கிறேன் ஐயா...
ReplyDeleteஅன்பு நன்றிகள் திரு கோபி ராமமூர்த்தி அவர்களே...
ReplyDelete