கதை 9.இத்தனை பசி உனக்கு ஏன்?
ஹப்பா மூச்சு முட்டறதே.... முனகலோடு திரும்ப முயன்றேன்...
முடியாது துவண்டு ஹீனமான மூச்சுவிட்டேன்...
வெளியே என்னைக்காண ஒரு கூட்டமே சந்தோஷமாக காத்திருக்கிறது....
எப்ப வெளியில் வருவேன்? ம்ம் இன்னும் ரெண்டு வாரமோ மூணு வாரமோ...
வர வர ரொம்ப யோசிக்க ஆரம்பிச்சிட்டேன் போலிருக்கே...
இப்ப யோசிச்சு என்னத்தை கிழிக்க போறேன்?
டைமுக்கு சாப்பிட்டு தூங்கி எழுவதும் தானே என் வேலை...
ஆனால் புத்தி ஒரு நொடி கூட தூங்கவிடமாட்டேங்குதே....
ஒரே சத்தம் வெளியே... அழுகுரல் துப்பாக்கி வெடிக்கும் சத்தம்..
என்ன ஆச்சோ தெரியலை.....
நான் வெளியில் வந்து என்ன செய்யப்போகிறேன்?
ஒன்றும் புரியவில்லை...
என்னை எப்படி ஏற்கும் உலகம்?
ஏற்கனவே என் தாய் ஜெயிலில் தன் காலத்தை கழித்திருக்கிறாள்....
வெளியில் வந்து நல்லது செய்வேனா இல்லை அட்டூழியங்கள் புரிவேனா?
என்னைச் சுற்றி ஒரே இருட்டு.....
கதகதப்பான சூடு என்னை அழுத்துகிறது.....
ஹும் வெளியே போகத் துடிக்கிறேன்...
ஆனால் குறிப்பிட்ட தேதியில் தான் வெளியில் செல்ல முடியுமாம்...
இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் இந்த இருள் வாழ்க்கை? யோசனையோடு புரண்டேன்....
சரி பரவாயில்லை ரெண்டே வாரம் கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கிட்டு இருந்துடுவோம்.....
என் அம்மா சுரேகா என் வரவை எப்படி எதிர்கொள்வாளோ? என்னென்ன கனவுகளுடன் என் வரவை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறாளோ? உறக்கம் வராது யோசனையில் ஆழ்ந்தேன்.
என் தாய் என்னிடம் தனியாக ஆசையுடன் கூறிக்கொண்ட வார்த்தைகளை நினைத்துப் பார்க்கிறேன்...
ப்ரணவ் என் துயர் எல்லாம் துடைக்க நீ வரும் நாளை எதிர்பார்ப்போடு காத்திருக்கிறேன் மகனே...
நீ இல்லாத இந்த உலகம் எனக்கு சூனியமாக தெரிகிறது ப்ரணவ்....
உன்னை காணாது என் கண்கள் உறங்க மறுக்கிறது...
ப்ரணவ் அம்மாவின் அன்பை நினைப்பாயா?
அம்மா படும் கஷ்டங்கள் உன்னிடம் சொல்லமாட்டேன் ப்ரணவ்....
நீ வாழனும்... நிறைய சாதிக்கனும்.... இன்னும் என்னென்னவோ என் மனதில்.....
திடிரென்று இடி போன்ற ஒரு சத்தம் உலுக்கியது.... நிமிர்ந்து பார்க்குமுன் பெரிய நெருப்பு பிழம்பொன்று விழுந்தது போலிருந்தது...
ஐயோ என் கண் கூசுகிறதே... என் உடம்பெல்லாம் பாரமாகிறதே நான் கண் திறக்க முயன்று வலியில் கதற முயன்று தோற்றேன்...
என் கால் என் காலுக்கு என்ன ஆச்சு ஐயோ என்ன இது சத்தம் என் கால் தனியாக ஐயோ இது என்ன கொடூரம் என்னால் வாய் விட்டு அழமுடியாது விக்கித்து என் கால் பிய்ந்து ஊசலாடுவதை பார்த்தேன்...
இத்தனை நாள் பனிக்குடத்துள் நீச்சலிட்டுக்கொண்டு சந்தோஷமாய் இன்னும் ரெண்டே வாரத்தில் வெளிவந்து உலகை பார்ப்பேன் என்று குதூகலித்தேனே...
இறைவா என் பிறப்பு அவ்வளவு தானா? அழக்கூட திராணியற்று என் தாயின் வயிறு வெடித்து நான் வெளிவந்து என் உடல்பாகங்கள் சிதைந்து என்தாய் சுரேகாவின் நெஞ்சின் மேல் விழுந்திருந்தேன்...
அம்மா அம்மா உன் அமுது குடிக்கும் அதிர்ஷ்டம் கூட இல்லாது என்னையும் உன்னையும் கொன்று விட்டனரே பாவிகள்...
அம்மா அம்மா என்று என் கடைசி மூச்சு நிற்குமுன் கேட்டகேள்வி இறைவனை உலுக்கியது....
உருவான என்னை உலகம் காணுமுன்னே கொன்றாயே இறைவா... இத்தனை பசி உனக்கு ஏன்?
என்னைப் போல் இன்னும் எத்தனை பிஞ்சுகள் உலகை காணுமுன் மடிந்தனரோ இறைவா?
கொடுமையை அழிக்க அவதாரங்கள் எடுக்கத்தான் மறந்தாயோ இறைவா....
பாவம் செய்தவருக்கு துர்மரணம் என்ற இறைவா...
பிறக்கவே இல்லையே நான் இன்னும்... என்னை இப்படி சிதைத்துக் கொன்றாயே நான் என்ன பாவம் செய்தேன் என்று எனக்கு இந்த கொடூர தண்டனை கொடுத்தாய்?
ஈழம் முழுவதும் பலி கொண்டபின் தான் அவதாரம் எடுப்பாயோ இறைவா... மூச்சு கொஞ்சம் கொஞ்சமாக நின்று என் திறக்காத கண்கள் நிரந்தரமாக மூடியது.....

Tweet |
நல்ல பதிவு.
ReplyDeleteபடித்ததும் அதிர்ச்சியாக இருக்கிறது.
அருமை அருமை
ReplyDeleteஎதையும் வித்தியாசமானமுறையில்
யோசிப்பதும் அதைத் தெளிவான பதிவாகத் தருவதும்
தங்கள் தனிச் சிறப்பு இந்தப் பதிவும் அதற்கு விதிவிலக்கல்ல
தங்களைப் போலவே நானும் இறந்து கொண்டிருப்பதை
இறந்து கொண்டிருப்பவன் சொல்லுகிற கற்பனையில்
"முடிவின் விளிம்பில்" என ஓரு பதிவு எழுதியிருக்கிறேன்
தாங்களும் ஒத்த சிந்தனை உடைய பதிவாகக் கொடுத்திருப்பதால்
அது குறித்து தங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்
நல்ல பதிவு.
ReplyDeleteஎனக்கும் அதிர்ச்சியே ஐயா...
ReplyDeleteசாப்பிட டிபன் பாக்ஸ் திறக்கும் சமயம் ஈழச்செய்திகள் பார்க்க க்ளிக்கினபோது ஒரு கர்ப்பிணிப்பெண்ணின் வயிற்றில் செல் விழுந்து பிறக்காத முழு வளர்ச்சியுடைய குழந்தை அங்கம் :( சிதற தாயின் உடல்மேல் படர்ந்ததை பார்த்து அன்று முழுவதும் சாப்பிட முடியாமல் உறங்க முடியாமல் அவஸ்தைப்பட்டேன். ஈழத்தில் நடந்த கொடுமைகளை இப்போது நினைத்தாலும் நெஞ்சம் பதறுகிறது ஐயா...
அன்பு நன்றிகள் ஐயா கருத்து பதிந்தமைக்கு.
அன்பு நன்றிகள் ரமணி சார்.... கண்டிப்பாக உங்கள் பதிவை பார்த்து கருத்து இடுகிறேன்.
ReplyDeleteஅன்பு நன்றிகள் கவி அழகன் வருகை தந்தமைக்கும் கருத்து பதிந்தமைக்கும்..
ReplyDeleteஈழம் முழுவதும் பலி கொண்டபின் தான் அவதாரம் எடுப்பாயோ இறைவா... மூச்சு கொஞ்சம் கொஞ்சமாக நின்று என் திறக்காத கண்கள் நிரந்தரமாக மூடியது.....
ReplyDeleteஉங்கள் கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...
பதிவிற்கு வாழ்த்துக்கள்...
அன்பு நன்றிகள் விடிவெள்ளி....
ReplyDeleteஉருவான என்னை உலகம் காணுமுன்னே கொன்றாயே இறைவா... இத்தனை பசி உனக்கு ஏன்?
ReplyDeleteகொடுமையை அழிக்க அவதாரங்கள் எடுக்கத்தான் மறந்தாயோ இறைவா....
பாவம் செய்தவருக்கு துர்மரணம் என்ற இறைவா...
பிறக்கவே இல்லையே நான் இன்னும்... என்னை இப்படி சிதைத்துக் கொன்றாயே நான் என்ன பாவம் செய்தேன் என்று எனக்கு இந்த கொடூர தண்டனை கொடுத்தாய்?
மனதை உலுக்கும் வரிகள் .
பிறப்பு என்று ஒன்று இருந்தால் இறப்பு என்று ஒன்று இருக்கும் என்பார்கள்
நான் தான் பிறக்கவே இல்லையே பிறகேன் இறப்பு மட்டும் என்று அந்த குழந்தை கேட்பது இறைவனுக்கு ஏன் கேட்கவில்லை என்பது தெரியவில்லை
அன்பு நன்றிகள் எம் ஆர் வருகை தந்தமைக்கும் கருத்து பதிந்தமைக்கும்...
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி கலை. உனக்கு நினைவிருக்கிறதா ஒரு பயங்கரமான படம் கர்ப்பிணி பெண்ணின் வயிறு வெடித்து செல்லினால் அந்த படம் மன்றத்தில் பார்த்துவிட்டு நாம் எத்தனை வேதனைப்பட்டோம். அதையே தான் கதையாக எழுதினேன் கலை.
ReplyDeleteசொல்ல வார்த்தைகள் இல்லை
ReplyDeleteஅன்பு நன்றிகள் ரிஷபன்..
ReplyDelete