தவறுகள் இல்லாத உலகமுமில்லை
தவறே செய்யாத மனிதனுமில்லைஅறிந்து தவறுகள்செய்ய நாம் சிறுபிள்ளைகளில்லை
அறியாது செய்த தவறுகளை மன்னிக்கவும் தயங்குவதில்லை
பிழையில் இருந்து வெற்றியைக்காண முயல்வோருமுண்டு
பிழை செய்து தன்னை திருத்திக்கொண்டோருமுண்டு
திருந்தியப்பின் வெற்றியும் நாடி வருவதுமுண்டு
வெற்றியும் நின்று என்றும் நிலைப்பதுமுண்டு
பொல்லாப்பும் பொறாமையும் இல்லாதமனம் வேண்டும்
பிழை செய்தாலும் பொருத்தருளும் குணமும் வேண்டும்
கோபத்தை சற்றே நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து
அன்புடன் எல்லோர் மனதில் நிலைத்து நிற்கவேண்டும்......
Tweet |
கவிதை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு,,,,,,,,,,
ReplyDeleteஅற்புதம்....
உங்கள் பகிர்விற்கு நன்றியுடன்,வாழ்த்துக்களும்
நண்பர்களே நம்ம பக்கம்!!! மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்!! நீங்களும் யோசித்து பாருங்களேன்
நல்ல கவிதை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
பதிவும் அதற்காக தேர்ந்தெடுத்துள்ள படமும் தலைப்பும்
ReplyDeleteமிகச் சரியாக ஒத்துப்போகின்றன
நல்ல படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
அன்பு நன்றிகள் விடிவெள்ளி. உங்கள் தளத்தை கண்டிப்பாக வந்து பார்த்து கருத்து இடுகிறேன்.
ReplyDeleteஅன்பு நன்றிகள் ரத்தினவேலு ஐயா...
ReplyDeleteஅன்பு நன்றிகள் ரமணி சார்.
ReplyDeleteபடத்திற்கு கவிதைக்கும் கருத்திட்டமைக்கு அன்பு நன்றிகள் சார்.
நல்ல கவிதை பகிர்விற்கு நன்றி
ReplyDeleteஅன்பு நன்றிகள் சரவணன்..
ReplyDelete