நம்பிக்கையே நீ என்றானப்பிறகு.....
கண்ணாய் நீ இருக்கும்போது
பார்வை எனக்கெதற்க்கு
கனிவாய் மொழிஉரைக்கும்போது
மௌன மொழி எதற்கு
நாட்டியமாய் நீ அருகிலெனும்போது
துணைக்கம்பு எனக்கெதற்கு
உயிர்ப்பாய் அணைப்பில் இருக்கும்போது
கனவாய் மலர்வது எதற்கு?
அன்பாய் உணவூட்ட நீ இருக்கும்போது
பசியாய் கிடப்பததெற்கு?
தாயாய் நீ தலை கோதும்பொழுது
அனாதை என்ற சொல் எதற்கு?
வாழ்க்கை உன்னுடன் என்றானப்போது
நீயும் நானும் தனி என்ற சொல் எதற்கு?
உயிராய் நீ என்னுடன் கலந்தப்பின்னே
ஒற்றையாய் நான் சுவாசிப்பததெற்கு??
உடலாய் உணர்வாய் எல்லாமாய் நீ என்றானப்போது
இன்னும் நமக்குள் பிரிவென்னும் சொல் எதற்கு
நம்பிக்கையே நீ என்றானப்பிறகுவாழ்வு குறித்த பயமெனக் கெதற்கு... ......
Tweet |
படமும் பதிவும் அருமை
ReplyDelete"நம்பிக்கையே நீ என ஆன பின்பு
வாழ்வு குறித்த பயமெனக் கெதற்கு...
என இருப்பின் கவிதை இன்னும்
வீரியம் பெறுமோ என்ற எண்ணம்
வந்து போனது
சூப்பர் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
அன்பு நன்றிகள் ரமணி சார் கருத்து பதிந்தமைக்கு...
ReplyDelete