"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Thursday, July 14, 2011

எனக்கு நீ வேண்டும் என்றென்றும் உனக்கு நான் வேண்டாமா ஒருபோதும்? :(


உனக்காவது உன் காதல் தோற்றதை
சொல்லி அழ உறவிருக்கிறது...
உன்னோடு நான் கொண்ட காதலை
சொல்லி அழ எனக்கிங்கே யாருமில்லையே

உன் நினைவுகளுடன் போராடி
உன் மேல் கொண்ட கனவுகளுடன்

நம்பிக்கை வளர்த்து
உன்னோடு இணைய காத்திருந்த வேளை


வேண்டாம் நீ என்று என்னை வீசிவிட்டாயே
உன் தவறுகளுக்கு மன்னிப்பை மட்டுமே தந்து
உன்னை அணைத்தேனே அன்புடன்
என் தவறுகள் நீ பொறுக்குமளவுக்கு
உன் மனதில் நானில்லையா அன்பே :(

எனக்கு நீ வேண்டும் அன்பே என்றென்றும்
உனக்கு நான் வேண்டாமா ஒருபோதும்?? :(

24 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. காதல் ஏமாற்றத்தின் ஏக்கத்தைச்சொல்லும் கவிதை...
    நல்லாயிருக்குங்க....
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. இக் கவிதை எழுதி முடிக்கையில்
    உலகம் இருண்டு போனதா?
    உண்டெனில்,
    இக் கவிதையிலிருந்து
    வெளியேறிய பெருமூச்சில்
    சூரியன் அணைந்து போயிருக்க கூடும்.

    ReplyDelete
  5. ஏக்க கவிதை நன்று வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வேண்டாம் நீ என்று என்னை வீசிவிட்டாயே
    உன் தவறுகளுக்கு மன்னிப்பை மட்டுமே தந்து
    உன்னை அணைத்தேனே அன்புடன்


    என் தவறுகள் நீ என்னை வெறுக்குமளவுக்கு
    உன் மனதில் நானில்லையா அன்பே :

    சகோதரி கவிதை அருமை

    நான் மேலே குறிப்பிட்டிருக்கும் மூன்று வரிகளில்

    என் தவறுகள் நீ பொறுக்கும் அளவுக்கு உன் மனதில் நானில்லையா அன்பே

    என்று வருமோ .மன்னிக்கவும் சகோதிரி குறை கூறவில்லை சந்தேகம் கேட்கிறேன்

    அந்த வரிகளில் தொடர்பு விட்டது போல் உள்ளது .நன்றி

    ReplyDelete
  7. படத்துக்காக எழுதிய கவிதையா அல்லது
    எழுதியபின் படம் சேர்த்துப் போடப்பட்டதா என
    கண்டுபிடிக்க கொஞ்சம் சிரமப்பட்டேன்
    ஆயினும் காதலர்கள் என்கிற நிலையில்
    அத்தனை சாஸ்டாங்கமாக பெண் மண்டியிடுவதும்
    ஆண் அத்தனை ஆண்தனமாக அமர்ந்திருப்பதுமெனக்கு
    அவ்வளவு உடன்பாடில்லை.நல்ல பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

  8. My sweet friend, I translated your blog, very nice and interesting you site.
    When you want to take refuge in good ballads of yesterday, today and forever in all languages and genres I invite you to visit my blog and listen me.
    From this Saturday July 16th I pay tribute to Arab culture , Middle East songs,in Arabic lenguage.
    I am a broadcaster of Argentina.
    Best regards from Rosario-Argentina
    Albert.

    ReplyDelete
  9. அன்பு நன்றிகள் ரத்தினவேலு ஐயா...

    ReplyDelete
  10. அன்பு நன்றிகள் விடிவெள்ளி...

    ReplyDelete
  11. அன்பு நன்றிகள் கமலேஷ் வருகை தந்தமைக்கும் கருத்து பதிந்தமைக்கும்...

    ReplyDelete
  12. அன்பு நன்றிகள் சரவணன்..

    ReplyDelete
  13. வார்த்தைகளில் தன்மை வேண்டுமென்பதை பொறுக்கும் என்று தாங்கள் இட்டதை நானும் மாற்றி இருக்கிறேன்.

    அன்பு நன்றிகள் எம் ஆர் அவர்களே தாங்கள் வருகை தந்தமைக்கும் கருத்து பதிந்தமைக்கும்...

    ReplyDelete
  14. ரமணி சார்.... ஒரு மனைவி தன் கணவனிடம் ஊடல் கொண்டப்பின் தன் தவற்றை மன்னிக்கச்சொல்லி எழுதிய வரிகள், கணவன் என்றும் தன் மனைவியை காலடுத்து இல்லாது தன் நெஞ்சிலே நிலைத்து வைக்கும் அருமையான குணம் உள்ள கணவர்.... அதனாலேயே தன் தவறுகளுக்கான மன்னிப்பை கடவுளாய் நினைக்கும் மனைவி மன்னிப்பு கேட்பதாய் எழுதிய வரிகள்.... அதற்கேற்றாற் போல் படம் தேடி பதித்தது....

    அன்பு நன்றிகள் ரமணி சார்....

    ReplyDelete
  15. மனதை கனக்கச் செய்யும் வரிகள். உண்மையான காதல் தன்மானம் பார்க்காது. கண்ணீரும் பெருமூச்சும் காதலோடு உடன் பிறந்தவைகளோ ?

    ReplyDelete
  16. முத்தான மூன்று முடிச்சு என்ற தொடர் பதிவுக்கு
    உங்களை அழைத்துள்ளேன்.
    தொடர வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
  17. மிக்க மகிழ்ச்சி கலை உன் வருகைக்கும் கருத்து பதிந்தமைக்கும்... உண்மையே.. ஆத்மார்த்தமான மனங்களின் இடையே சின்ன சின்ன விஷயங்கள் பெரிதாக்கப்படுவதில்லை...

    ReplyDelete
  18. அன்பு நன்றிகள் சிவகுமாரன்.. ஆம் உண்மையே.. உண்மை அன்பு தன்மானமும் பார்ப்பதில்லை தன் இணையை அடையும் முயற்சியை கைவிடுவதுமில்லை...

    ReplyDelete
  19. ரமணி சார் இந்த பதிவு படிக்குமுன்னரே நேத்து உங்க ப்ளாக் வந்தேனா... அப்பவே போட்டுட்டேன் ரமணி சார்.. நான் இப்ப பதில்கள் எழுதி வெச்சிருக்கேன்.. இப்பவே சிறிது நேரத்தில் பதிவு இடுகிறேன் ரமணி சார். அன்பு நன்றிகள்...

    ReplyDelete
  20. எனக்கு நீ வேண்டும் அன்பே என்றென்றும்
    உனக்கு நான் வேண்டாமா ஒருபோதும்?? :(
    இந்த வரியைப் படித்ததும் ஆன்மாவின் அலறல் கேட்பது போல ஒரு உணர்வு.

    ReplyDelete
  21. உண்மையே ரிஷபன்....

    அன்பு நன்றிகள் கருத்து பதிந்தமைக்கு...

    ReplyDelete
  22. //வேண்டாம் நீ என்று என்னை வீசிவிட்டாயே
    உன் தவறுகளுக்கு மன்னிப்பை மட்டுமே தந்து
    உன்னை அணைத்தேனே அன்புடன்
    என் தவறுகள் நீ பொறுக்குமளவுக்கு
    உன் மனதில் நானில்லையா அன்பே :( //

    உள்ளத்தை உருக்கிடும் அன்பான வரிகள்.

    சிந்திக்க வைக்கும் நல்லதொரு கவிதை.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...