"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, July 9, 2011

என்னுடையவளே..... என்னை ஆட்கொண்டவளே....

என்னுடையவளே..... என்னை ஆட்கொண்டவளே....

கருத்து பரிமாற்றம் புரிகிறேன் என்று
பிடிவாதமாய் என் மனதை பிடுங்கிக்கொண்டவள் நீ

வாழ்க்கை துணையாய் வருவாயா என்றதற்க்கு
மௌன கண்ணசைவில் சம்மதம் சொன்னவள் நீ

பிள்ளையில்லா மலடியென்று ஊரே உமிழ்ந்தப்போது
குழந்தையாய் கண்ணீரால் என் மடி நனைத்தவள் நீ

காலம் என்னை சமூகத்தில் உயர்த்திய போது
அன்பாய் அமைதியாய் ஆர்பரித்தவள் நீ

மூச்சுக்காற்று அடங்குமுன் என் வழி காத்திருந்து
விழிமூடா இமையோரம் மூச்சை நிறுத்தியவள் நீ

வயோதிகத்தில் தனிமையில் புரண்டழுதப்போது
உன் நினைவுகளால் தாலாட்டி மெல்ல உறங்கவைத்தவள் நீ

காலம் முடிந்து உன்னுடன் சேர எதிர்ப்பார்த்த வேளையில்
சில்லென பனியாய் அணைத்து கைவிரல் கோர்த்து கண்மூட வைத்தவள் நீ

உன்னுடனே சுவாசித்து உன்னுடனே வாழ்ந்து உன் காதலில் திளைத்து
என் இறுதி மூச்சும் உன்னுடனே கலக்க நம் சுவாசம் ஒன்றாய் நிறுத்தியவள் நீ.......

16 comments:

  1. உடலால் அன்றி உள்ளத்தால் வாழ்ந்தவர்களின்
    தூய அன்பை வாழ்வை தங்கள் படைப்பின் மூலம்
    அழகாக உணர்ந்து கொள்ள முடிகிறது.
    தேர்ந்தெடுத்துள்ள படம் மிக மிக அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    (மலடன் என இருக்கலாமோ)

    ReplyDelete
  2. அன்பு நன்றிகள் ரமணி சார். ஆழ்ந்து வாசிக்கிறீங்க.

    மலடி என்பது மனைவியை ஊரார் ஏசும்போது கணவனின் மடியில் கண்ணீர் விடுவதை மனம் தாங்காமல் வரிகளில் சொல்வதை தான் சார் எழுதினேன்....

    அன்பு நன்றிகள் மீண்டுமொருமுறை ரமணி சார்....

    ReplyDelete
  3. மீண்டும் படித்துப் பார்த்தேன்
    நீங்கள் கொடுத்துள்ள விளக்கம் ரொம்பச் சரி
    இன்னும் கவனமாக படைப்புகளைப்
    படிக்க வேண்டும் எனத் தங்கள் பதில்
    மூலம் தெரிந்துகொண்டேன்.நன்றி

    ReplyDelete
  4. பிள்ளையில்லா மலடியென்று ஊரே உமிழ்ந்தப்போது
    குழந்தையாய் கண்ணீரால் என் மடி நனைத்தவள் நீ


    இந்த வரிகள் நல்லாருக்கு

    உள்ளத்தால் ஒன்றானவர்களின் தூய அன்பை வெளிபடுத்தும் கவிதை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. ஐயோ ரமணி சார் தவறா நினைச்சுக்கலையே நீங்க? :(

    ReplyDelete
  6. அன்பு நன்றிகள் சரவணன் கருத்து பதிந்தமைக்கு...

    ReplyDelete
  7. ஹ்ம்ம் நல்ல கரு. ஒவ்வொரு இடத்திலும் நீ என்று வருவதை தவிர்த்து இருக்கலாமோ ??? அதை தவிர்த்து எழுதிப் பாருங்களேன் ??

    ReplyDelete
  8. very nice one. If you have time please see English movie " Notebook.

    ReplyDelete
  9. அன்பை அப்படியே வெளிப்படுத்தியிருக்கிறீங்க!!


    உங்க அருமயான கவிதைகளை தந்துகொண்டிருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்களுடன்,நன்றிகளும்....






    என்ன நம்ம பக்கம் காணக்கிடைக்கல?

    ReplyDelete
  10. கண்ணசைவில் சம்மதம் சொன்னவள் நீ

    கண்ணீரால் என் மடி நனைத்தவள் நீ

    இப்படி வரிக்கு வரி உணர்வுகளால் ஆட்கொண்ட கவிதை.

    ReplyDelete
  11. அன்பு நன்றிகள் எல் கே... இனி எழுதும் வரிகளில் கவனம் கொள்கிறேன் கண்டிப்பாக. அன்பு நன்றிகள் மீண்டும் ஒரு முறை வருகை தந்தமைக்கும் கருத்து பதிந்தமைக்கும்....

    ReplyDelete
  12. அன்பு நன்றிகள் அவர்கள் உண்மைகள் சகோதரரே...

    ReplyDelete
  13. அன்பு நன்றிகள் விடிவெள்ளி கருத்து பதிந்தமைக்கு. வருகை தருகிறேன்...

    ReplyDelete
  14. அன்பு நன்றிகள் ரிஷபன் கருத்து பதிந்தமைக்கு...

    ReplyDelete
  15. ''...உன்னுடனே சுவாசித்து உன்னுடனே வாழ்ந்து உன் காதலில் திளைத்து
    என் இறுதி மூச்சும் உன்னுடனே கலக்க நம் சுவாசம் ஒன்றாய் நிறுத்தியவள் நீ....... ''..
    கொடுத்து வைத்தவர்களாக இருக்கலாம்..நல்ல சிந்தனை வரிகள்...
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  16. அன்பு வரவேற்புகள் சகோதரி வேதா...

    அன்பு நன்றிகள் கருத்து பதிந்தமைக்கு...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...