"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Sunday, September 9, 2007

உயிராகி உருவாகி

உயிராகி உயிரணுக்களாகி
பெண்ணாகி உன் முன்
ஆளாகி உனக்கு இல்லாளாகி
உன் தாய் தந்தைக்கு (ம‌ரு) மகளாகி
உன் சகோதரனுக்கு அண்ணியாகி
உன் சுற்றத்துக்கு உறவாகி
உன் உயிரணுக்களை என்னுள் சுமந்து
உன் உயிருக்கு தாயாகி
என் பொறுப்புகளை முடித்து விட்டு
கண்ணாடி பார்க்கிறேன் ஐயோ
வருடங்கள் இத்தனை ஓடி விட்டதா?
நரை தட்டி விட்டதா? மூப்பு வந்து விட்டதா?
என்னிள‌மையை தொல‌த்த‌து உன்னிட‌த்தில் தானே
பின் ஏன் என்னை விட்டு வேறு பெண்
தேடி ஓடுகிறாய்?

2 comments:

  1. அன்பின் மஞ்ச்பாஷினி - ஆதங்கம் புரிகிறது - காதலித்துக் கைப்பிடித்து பிள்ளைகள் பெற்றதும் - வயதினைக் காரணம் காட்டிப் பிரியும் காதலனை என்ன செய்யலாம். அவள் இளமையைத் தொலைத்ததும் அவனிடத்தில் தானே - சிந்தனை நன்று - கவிதை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. சரியான கேள்வி..

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...