என்ன இழந்தாய் தனித்திருந்து அழுவதற்கு?
தனிமை ஏனடா உனக்கு
அன்பு வேண்டுமா?
அரவணைப்பு வேண்டுமா?
தாய்மை வேண்டுமா?
தோழமை வேண்டுமா?
என்ன வேண்டுமடா உனக்கு?
ஏன் உனக்கு தனிமை?
மனைவி இல்லையா?
மக்கள் இல்லையா?
உற்றார் உறவினர் தானில்லையா?
ஏனடா தனிமை உனக்கு?
தனித்திருந்து என்ன சாதித்தாய்?
தனிமை மிக்க கொடுமையடா?
வேண்டாமடா தனிமை உனக்கு...
உன் தனிமையை போக்கும் மருந்து
நட்புக்கு உண்டுடா தோழா....
தனித்திருந்து அழாதே வா
என் தோளில் சாய்ந்து அழு
உன் தனிமை தீருமட்டும் அழு...
உன் இன்பம் தனிமையில் இல்லை
என்று உணர்ந்து அழு.....
உன் மன சங்கடம் தீருமட்டும் அழு...
தனிமை வேண்டாமடா தோழா உனக்கு....
Tweet |
அன்பின் மஞ்ச்பாஷினி - தனிமையில் வாடும் ஆண்மக்னை - அவன் வாட்டம் தனிக்க நினைக்கும் தோழமை அன்பாக அழைக்கிறது. தோளில் சாய்ந்து அழுது தனிமை மறக்க அழைக்கிறது. நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteதனிமை சில நேரங்களில் மருந்து.. பல நேரங்களில் அவஸ்தை..
ReplyDeleteமனம் பகிர மனிதர் இல்லாத தகிப்பு.. ஆளை சுட்டெரித்து விடும்..
நட்பில் தனிமை தொலைந்து போகும்.
//cheena (சீனா) said...
ReplyDeleteஅன்பின் மஞ்ச்பாஷினி - தனிமையில் வாடும் ஆண்மக்னை - அவன் வாட்டம் தனிக்க நினைக்கும் தோழமை அன்பாக அழைக்கிறது. தோளில் சாய்ந்து அழுது தனிமை மறக்க அழைக்கிறது. நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//
மனம் நிறைந்த அன்புநன்றிகள் சீனா அண்ணா கருத்து பகிர்வுக்கு.
/ரிஷபன் said...
ReplyDeleteதனிமை சில நேரங்களில் மருந்து.. பல நேரங்களில் அவஸ்தை..
மனம் பகிர மனிதர் இல்லாத தகிப்பு.. ஆளை சுட்டெரித்து விடும்..
நட்பில் தனிமை தொலைந்து போகும்.//
கருத்தே அழகிய கவிதையாய்....
மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா ரிஷபா கவிதை(கருத்து)பகிர்வுக்கு..
எப்போது வாசித்தாலும் அப்போதைய மனநிலையில் வேதனையில் இருப்போருக்கு அருமருந்தான கவிதை வரிகளாய் திகழ்வதே உங்கள் வரிகளின் சாகாவரத்துக்கு உதாரணம்...கீப் இட் அப். நீடூழி வாழிய..
ReplyDelete