"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Monday, September 10, 2007

மௌனப்போராட்டம்....

தொடங்கி விட்டேன் நான்
கானல் நீரல்ல என்று எனை நிரூபிக்க‌
தொடங்கி விட்டேன் என் வேள்வியை
என் நட்பு உன்னை பலப்படுத்தவே
தொடங்கி விட்டேன் என் அஹிம்ஸா போராட்டத்தை
இடமில்லா மனதில் என்
மௌன போராட்டத்தை தொடங்கிவிட்டேன்....
என் மௌனம் ஆயுதம்
என் கவிதை இனி ஆயுதம்
என் கண்ணீர் இனி ஆயுதம்
என்னடா செய்யும் உன் பாராமுகம் என்னை??

3 comments:

 1. அன்பின் மஞ்சுபாஷினி

  மௌனப் போராட்டம் அருமை - மௌனம், கவிதை மற்றும் கண்ணீர் ஆகியவற்றைக் கருவிகளாகக் கொண்டு துவங்கிய போராட்டம் வெல்லும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 2. கவிதை எனும் ஆயுதம் கூர் தீட்டிக் கொண்டபின் சரணாகதிதான் வேறென்ன

  ReplyDelete
 3. சபாஷ்.. இதுதான் வீரத்தமிழ்மகளின் இலக்கணம். வாழ்த்துகள்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...