"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Monday, October 8, 2012

பக்த மீரா - 616.

சேவைகள் உனக்கு செய்யவே அருள்புரிவாய்
வேதனைகள் என்றும் நீங்கிட அருள்வாய்
பேதைஎன் பிழை பொறுத்து காத்தருள்வாய்
தேரையாய் உனக்குள் நான் கண்ணா

17. 

மாயங்கள் எத்தனை செய்திட்ட போதிலும்
மாறாது என் அன்பு உனைவிட்டு என்றும்
மாதங்கள் வருடங்கள் எத்தனை ஆனாலும்
மாதவனே உனக்காய் காத்திருப்பேன் கண்ணா

18.

நல்லவன் நீ உலகம் அறிந்திடும் இதை
நல்வாழ்வு என்றும் உன்னுடன் வாழ்ந்திடவே
நற்பண்புகளுடன் பொறுமையாய் நானும் காத்திருந்து
நயமாய் உன்னுடன் சேர்ந்திடவே என்றும் கண்ணா.....


11 comments:

 1. மாயங்கள் எத்தனை செய்திட்ட போதிலும்
  மாறாது என் அன்பு உனைவிட்டு என்றும்
  மாதங்கள் வருடங்கள் எத்தனை ஆனாலும்
  மாதவனே உனக்காய் காத்திருப்பேன் கண்ணா
  உண்மைக் காதலிற்காக காத்திருப்பதில்தான்
  எத்தனை சுகம் !....அழகிய கவிதை வரிகள் .
  வாழ்த்துக்கள் சகோதரி அடுத்த கவிதை விரைந்து
  பிறக்க ...........

  ReplyDelete
 2. கண்ணனை துதிக்கும் மீரா
  அருமை தோழி

  ReplyDelete
 3. மாயங்கள் எத்தனை செய்திட்ட போதிலும்
  மாறாது என் அன்பு உனைவிட்டு என்றும்

  மாயக்கண்ணன் பற்றி மனம் மயக்கும் அற்புதக் கவிதைப் பகிர்வு.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 4. பக்தி ரசம் பொழியும் தேன் மழையாய் மீராவின் பக்தி அற்புதம்.

  ReplyDelete
 5. அருமையான வரிகள்...

  ReplyDelete
 6. ஆஹா ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. மீராவின் துதி படிப்பவரின் மனதினையும் கண்ணன் வசம் ஒப்படைக்கச் செய்து விடுகின்றதே!


  படைத்துப் பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா.!

  ReplyDelete
 8. மாயக்கண்ணன் பற்றி மனம் மயக்கும் அற்புதக் கவிதைப் பகிர்வு.. பாராட்டுக்கள்..

  அதே அதே ... X X X X !

  ReplyDelete
 9. சேவைகள் உனக்கு செய்யவே அருள்புரிவாய்
  வேதனைகள் என்றும் நீங்கிட அருள்வாய்
  பேதைஎன் பிழை பொறுத்து காத்தருள்வாய்
  தேரையாய் உனக்குள் நான் கண்ணா...

  என் மனதில் தேரையாய் பதிந்துவிட்ட வரிகள்.
  உங்கள் தயவால் பக்தமீராவின் பக்திரசத்தில் சொட்டச்சொட்ட நனைகிறேன்.

  பகிர்வுக்கு மிக்க நன்றியோடு வாழ்த்துக்களும் சகோதரி!

  ReplyDelete
 10. மாயங்கள் எத்தனை செய்திட்ட போதிலும்
  மாறாது என் அன்பு உனைவிட்டு என்றும்

  அன்பென்றாலே மாறாமல் எப்போதும் இருப்பது அதுவும் கண்ணனிடம் என்றால் விரட்டினாலும் போகாது. பக்தி ரசம் ததும்புகிறது

  ReplyDelete
 11. அன்பின் மஞ்சு - அருமையான காதல் ரசம் சொட்டும் பாடல்கள் - பக்திப் பாடல்கள் - பக்த மீராவாகா மாறி எழுதிய காதல் பாடல்கள் -அத்தனையும் அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...