"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Thursday, October 4, 2012

வலைச்சரம் - பொறுமை - நான்காம் நாள்

வலைச்சரம் - பொறுமை - நான்காம் நாள்


THURSDAY, OCTOBER 4, 2012


பொறுமை - கதம்ப உணர்வுகள் ( நான்காம் நாள் )


நம்மில் இருந்து வெளிபடும் வார்த்தைகள் எப்போதும் நல்லவையாக இருக்கவேண்டும். அப்படி நல்லவையாக இருக்கவேண்டுமென்றால் பொறுமையாக அமைதியான மனதுடன் இருக்கவேண்டும். அமைதியாக இருக்க கோபத்தை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படவேண்டும். கோபத்தில் சிதறப்படும் வார்த்தைகள் அன்னம் அல்லவே சிதறியதை சுத்தம் செய்யவும் எடுக்கவும்… வார்த்தைகள் நம்மிடம் இருக்கும் வரை நாம் அதற்கு எஜமான். நம்மை விட்டு கோபத்துடன் வெளியேறிய வார்த்தைகள் நமக்கு எஜமானாகிவிடும். இனி என் மனம்கவர் பதிவர்களை சந்திப்போமா?

இன்று நான் மிகவும் நேசிக்கும் சிலரின் பதிவுகளை பகிர இருக்கிறேன். இன்று பதியப்படும் எல்லோருமே நம் நாட்டின் கண்களாகப்போற்றும் அன்புப்பெண்கள் தான்.நான் மிக ரசிக்கும் பெண்மணி இவர். இவர் பதிவுகளில் எத்தனை அனுபவங்கள் இருக்கிறதோ அவ்வளவும் நம் வாழ்க்கைக்கு அவசியப்படும் பாடங்களாகவும் இருக்கும். தொலைபேசியில் பேசியபோது இவர் மீதுள்ள மதிப்பு அதிகமானது. மறக்காமல் வாழ்த்துகள் சொல்வதிலும்அவரை விட எத்தனை வயது குறைந்தவரானாலும் மரியாதையோடு அழைக்கும் பாங்கும் அவர் என் மனதில் நீங்காது நிலைத்த அன்புக்கரசி... அன்பில் கரையவைக்கும் அற்புதமானவர் இவர். இவர் முத்துமாலையில் இருந்து சில முத்துகளை இங்கே தருகிறேன் உங்கள் பார்வைக்காக....
மனதில்வாழ்க்கையில்உலகில்சுற்றும் புறமும் எத்தனையோ நடந்தாலும் எத்தனையோ சம்பவித்தாலும் மனம் நிறைந்து இவர் சொல்வது குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா.... இப்படிச்சொல்லனும்னா எந்த அளவுக்கு மனசு பக்குவப்படனும்இவர் கண்களை சிறிது நொடிகள் பார்த்துக்கொண்டிருந்தாலே இவர் மனதின் கருணை நம் மனதிலும் சட்டென்று ஒட்டிக்கொள்ளும். பார்வையே இத்தனை கருணை என்றால் அப்ப இவர் பதிவுகள்?அத்தனையும் மென்மையான மல்லிப்பூ தீண்டலாக மெல்லிய அன்பை பதிவுகளுடன் தொடர்வதாக அத்தனை அருமையாக இருக்கும். படிச்சு பார்த்து நீங்களே உணர்வீர்கள்... அம்மாவின் மென்மையான பதிவுகளில் சில உங்கள் பார்வைக்காக...

சைக்கோ 
இந்த மதுரகவியின் வரிகள் எல்லாமே ரசிக்கும்படியாக சிலாகிக்கும்படியாக எளிமையாக என்னவோ நம்ம பக்கத்துவீட்டு குழந்தை நம்மிடம் பேசுவது போல படைப்புகள் அத்தனை இயல்பாக இருக்கும்படித்து தான் பாருங்களேன்.

ரங்கமணியும் தங்கமணியும் 
இவர்களை தெரியாத பதிவர்களே இருக்கமுடியாது என்பது என் நம்பிக்கை. நானெல்லாம் ஒரு நாள் ஒரு பதிவு போட்டாலே எனக்கு கைகள்தோள்பட்டை முதுகு வலிக்க ஆரம்பித்துவிடுகிறது. ஆனால் இவர்கள் தினமும் சிரத்தையுடன் அழகிய பொருத்தமான படங்கள் சேகரித்து சுவாரஸ்யமாக நம்மை செலவில்லாமல் ஒவ்வொரு இடத்துக்கும் அழைத்துச்சென்று அங்கே அந்த கோயில்களின் வரலாற்றைஅது தொடர்பான செய்திகளை,அதற்கான ஸ்லோகங்களை ஒன்று கூட விடாமல் மிக சிரத்தையுடன் கொடுப்பதில் இவருக்கு நிகர் இவரே... ஆன்மீக பதிவுகள் என்றால் எனக்கு சட்டென இவர் நினைவு தான் வரும்.... பார்ப்போமா இவர் பதிவுகளில் சில?
வேதாம்மா மனதிற்கு எப்போதும் வயது 10. அத்தனை சுறுசுறுப்பும் குழந்தைச்சிரிப்புமாக தான் இருப்பார்..  நான் எப்போது தொலைபேசியில் கதைத்தாலும் ஒரு குழந்தையிடம் பேசுவது போலவே ஒரு உணர்வு இருக்கும் எனக்கு. அத்தனை சந்தோஷமும் குரலிலிலும் இவர் எழுதும் கவிதை வரியிலும் தெறிக்கும் என்றால் பாருங்களேன். வேதாம்மாவின் சில பதிவுகளை பார்ப்போமா?

 இரட்டைக்கட்டிலில் 


இவரின் இனிமையான குரல்பாடிக்கேட்டிருக்கிறேன்திண்மையான பதிவுகள் வாசித்து அறிந்திருக்கிறேன்மென்மையான மனது பேசி அறிந்திருக்கிறேன்இவரின் நட்பு எனக்கு கிடைத்தது எனக்கு மிக சந்தோஷம் என்றே சொல்வேன்இவர் பதிவுகளில் உயிர்ப்பு இருப்பதை நானே உணர்ந்திருக்கிறேன் பலமுறை.... உங்களுக்கும் படிக்கத்தோணுகிறது தானே இவர் பதிவுகளை?? பார்ப்போமா?

பதிவுகளை மட்டுமே பார்த்து என்னிடம் அன்புக்கொண்ட மிக அற்புதமான பெண் ஸாதிகா.பதிவுகளில் சிரிக்கவும் வைக்கமுடியும் என்று சீனிமுட்டாய் ஸ்ரீனிவாசனின் கதையில் சொல்லிஇருக்காங்க பாருங்களேன்.

இனிப்புப்பிரியர் ஸ்ரீனிவாசன் பதிவர் மாநாடு நிகழ்ச்சி மூலம் அறிந்த மிக அன்பான தங்கை சசி..மின்னல்வரிகள் பாலகணேஷ் மூலமாக தான் அறியப்பெற்றேன்.. இந்த தென்றலின் கனவு கூட பதிவர் மாநாடு அன்று நிறைவேறியது. அன்பு வாழ்த்துகள் தங்கையே..தன் இனிய கவிதைகளால் தென்றலின் கவிதை வரிகளை பார்ப்போமா?
என் அன்பு அண்ணி… மெத்த படித்தவர். ஆனால் அமைதியே அன்பே உருவானவர். நான் வலைச்சரம் ஒரு வாரம் எழுதனும் எப்படி செய்வதுன்னு தெரியலன்னு விழித்தபோது அருமையான யோசனைகள் தந்தவர். இவர் வலைப்பூவில் இருக்கும் அருமையான பதிவுகள் சில பார்ப்போமா?
அம்பாளுக்கு அடியாள் என்று சொல்லிக்கொள்ளும் இந்த தங்கையின் வீரமான எழுத்துகள் எனக்கு மிக மிக இஷ்டம். அன்பும் பரிவும் எத்தனைக்கு இருக்கிறதோ மனதில் அத்தனைக்கும் தவறு கண்டால் சீறும் பாரதியாய் தெறித்திருக்கிறது நெருப்பு வரிகள் கவிதையில்.... நட்பிலும் அன்பிலும் குழந்தையாய் என் மனதில் என்றும் நிலைத்திருக்கும் இந்த தங்கையின் வரிகளையும் தான் சிலவற்றை பார்ப்போமே...இன்றைய நாள் முழுதும் வெற்றிகளையும் நல்லவைகளும் மட்டுமே எல்லோருக்கும் கிடைக்க என் அன்பு பிரார்த்தனைகள்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...