"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Tuesday, October 23, 2012

அன்புப்பிணைப்பு...”இது தான் உங்க முடிவா???”  அழுது அழுது சிவந்த முகத்தைக்கூட துடைக்க இயலாமல் துவண்டவளாய் சுவரில் சாய்ந்தாள் மதுமிதா...

” முடிவு இல்லைடி இது தான் தொடக்கமே எனக்கு.... சந்தோஷமா வாழப்போற வாழ்க்கையின் தொடக்கம்....”

” இப்படி சொல்ல உங்களுக்கு எப்படி மனசு வருது? ”

” வேறே எப்படி சொல்லச்சொல்றே சொல்லு “... பெட்டியில் வேகமாக துணிகளை அடுக்கிக்கொண்டே தர்மா...

” என்னைவிட்டு நீங்க போகவிடமாட்டேன் நான் “ ஆவேசமாக எழ முனைந்தாள் மதுமிதா...

” இங்கப்பாரு இந்த வீராவேசமான பேச்சு என்னிடம் வேண்டாம் சொல்லிட்டேன் “ அழுத்தமான குரலில் தர்மா....

” குழந்தைகளுக்காக கூட யோசிக்கலை இல்ல நீங்க? ”மூக்குறிஞ்சினாள் மதுமிதா....

” ஆமாம் அதனால தான் குழந்தைகள் ஸ்கூல்ல இருந்து வரதுக்கு முன்னாடி கிளம்பறேன்..” தலை சீவிக்கொண்டே தர்மா...

” மனசாட்சி இருக்கா உங்களுக்கு தெய்வம் எல்லாம் பார்த்துண்டு தான் இருக்கு “ கறுவினாள் மதுமிதா....

” தெய்வம் பார்த்துட்டு தான் இருக்கட்டுமே இல்ல பார்க்காமல் தான் போகட்டுமே நான் கண்டிப்பா எடுத்த முடிவுல இருந்து மாறப்போறதில்ல.. ஷர்மிக்கிட்ட போகத்தான் போறேன். உன்னால முடிஞ்சதை பார் “ சத்தமாய் பாத்ரூம் கதவு அறைந்து சாத்தப்பட்டது....

முகத்தில் அறைந்தது போல உணர்ந்து கோபமாய் எழுந்தாள்....

பெட்டியில் அடுக்கப்பட்ட உடைகள் எல்லாம் எடுத்து கிளறி எல்லாம் கலைத்தாள் மதுமிதா....

” நான் உங்களை போக விடமாட்டேன்.. என் உயிரே போனாலும் சரி.. எனக்கு நீங்க வேணும் குழந்தைகளுக்கும் நீங்க வேணும்... நீங்க இல்லன்னா எங்களால கண்டிப்பா சந்தோஷமா வாழமுடியாது.” மனதில் அழுத்தமாய் உறுதியுடன் சொல்லிக்கொண்டே பாத்ரூம் கதவருகே நின்று காத்திருந்தாள் தர்மாவின் வரவுக்கு....

ஷவர் நின்று கதவு திறந்தது.... கம கமவென்ற சாண்டல்வுட் சோப் வாசனையுடன் தர்மா வெளியேற...

சட்டென்று தர்மாவின் காலில் விழுந்து அழத்தொடங்கினாள் மதுமிதா....

” என்னை விட்டுட்டு அவக்கிட்ட போகும் அளவுக்கு என்னிடம் என்ன தவறு இருக்கு சொல்லுங்க....” கதறினாள் மதுமிதா...

” உன் இந்த பொய் அழுகை எல்லாம் என்னிடம் பலிக்காது மது... எழுந்திரு மரியாதையா.. காலை விடு... நான் கிளம்பணும்.. நீ என்ன சொன்னாலும் சரி... நான் போறதுல இருந்து பின் வாங்கப்போறதில்ல....”

” நானும் என் உறுதில இருந்து மாறப்போறதில்லை. உங்களை போகவும் விடப்போறதில்லை...”

” ஆங்காரமாய் கத்தாதே மதுமிதா... என் அருமை தெரியாத உன்னிடம் வாழறதை விட என்னையே வேணும்னு ஆசையா கேட்கும் ஷர்மியோட என் வாழ்க்கையின் மீதி நாட்களை வசந்தமா தொடரப்போகிறேன்....காலை விடு...” உதறத்தொடங்கின தர்மாவை கோபமுடன் பார்த்தாள்..

” உங்களுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு பார்த்து பார்த்து நான் செய்றமாதிரி அவ செய்வான்னு நினைக்கிறீங்களா?? ”குரோதமுடன் கேட்டாள் மதுமிதா...

” அவசியமே இல்லை மது.... எனக்கு என்ன பிடிக்குது பிடிக்காதுன்னு அவளை சிரமப்படுத்தமாட்டேன்... அவளுக்கு என்ன பிடிச்சிருக்கோ அதையே சாப்பிட பழகிப்பேன். அவளுக்கு பீட்ஸா பர்கர் பிடிக்கும்னா அதையும் நான் சாப்பிட பழகிப்பேன்...”

” ஐயோ உங்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்கு....” பதறினாள் மதுமிதா....

” வாழ்க்கை வாழறதுக்கு தான் மது....”

” ஒவ்வொரு நாளும் அழுது வடியிற உன் முகத்தைப்பார்க்கிறதை விட எண்ணை வழிற உன் முகத்தை பார்க்கிறதை விட ஷர்மியின் முகத்தைப்பார்க்கலாம்.. இவ்ளோ பேசுறியே என்னைத்தேடி யாராவது ஃப்ரெண்ட்ஸ் வந்தா என்னைப்பேச விடாம விரட்டுறே... ”

” உங்க ஃப்ரெண்ட்ஸ் வந்தா நமக்கிடையில் பிரச்சனையை உண்டு செய்றாங்க வந்தாங்கன்னா சாப்பிட்டு சும்மா போகவேண்டியது தானே உங்க ஃப்ரெண்ட்ஸ்...” பொருமி தீர்த்தாள் மதுமிதா...

” இதோ இந்த உன் வாயாடித்தனம் தான் எனக்கும் பொறுக்கலை... நீ எப்ப கல்யாணம் ஆகி வந்தியோ அப்ப தொடங்கின வாய் இன்னும் அடங்குதா பாரு? ”தர்மாவின் நிஷ்டூரக்குரல்....

” எப்பவும் என்னையே குறைச்சொல்லுங்கோ.....கல்யாணம் ஆகிவந்து நான் என்ன சந்தோஷத்த கண்டேன்.... புலம்பல்கள் தொடர்ந்தன ”தர்மாவை..

” உங்களிடம் நான் சண்டை போடமாட்டேன்... ப்ளீஸ் என்னைவிட்டு போகாதேங்கோ ” தர்மாவின் கையை பிடித்துக்கொண்டு கெஞ்சத்தொடங்கினாள் மதுமிதா.

“ எப்பவும் நான் உன்னிடமே இருந்தா ஷர்மி வருத்தப்படமாட்டாளா மது? கண்ணத்தொடச்சுக்கோ குழந்தைகள் வர நேரமாகிட்டுது பாரு துளசி மாடத்துல விளக்கேத்து.... ஷர்மி இப்ப குழந்தை உண்டாகியிருக்கா... உன்னைப்போல அவளும் எனக்கு மருமக தானே? மசக்கையா இருக்கும் அவளுக்கும் வாய்க்கு ருசியா எதுனா செய்து போட எனக்கு மனசு இருக்காதா நீயே சொல்லு மது? கவலைப்படாம இரும்மா... நான் போயிட்டு போன் செய்றேன்... ரெண்டு மாசம் இருந்துட்டு ஓடி வந்துடறேன் சரியா? என்ன தான் என் பிள்ளை காதல் திருமணம் பண்ணிண்டாலும் ஷர்மியும் நம்ம வீட்டு பொண்ணு தான்.... சமர்த்தா இரு.. அழுது ஊரைக்கூட்டாதே.... சேகர் வந்தான்னா அவன்கிட்ட சொல்லு.. ரெண்டே மாசம் ஓடி வந்துருவேன்.... உன்னை நான் மருமகளா பார்க்கல... என் மகளா தான் பார்க்கிறேன்.. குழந்தைகள் வந்துட்டா பாட்டி பாட்டின்னு என்னை போகவிடாது.. புரிஞ்சுக்கோம்மா மது ”மதுமிதாவின் கண்களை துடைத்துவிட்டு துரிதமாக வாசற்படி தாண்டினாள் தர்மாம்பாள் கையில் பெட்டி எடுத்துக்கொண்டு தன் இரண்டாது மகன் வீட்டுக்கு பஸ் ஏற....58 comments:

 1. My Dear மஞ்சூஊஊஊஊஊஊஊஊஊஊ

  கையைக்கொடுங்கோ. கண்ணில் ஒத்துக்கணும்.
  சூப்பரான கதை. நடுவில் நல்ல டிவிஸ்டு.

  என்னவோ ஏதோன்னும் ஆரம்பத்தில் பயந்தே பூட்டேன், மஞ்சு.

  பாராட்டுக்கள்ம்மா.... வாழ்த்துக்கள்ப்ப்பா....

  பகிர்வுக்கும் தகவலுக்கும் சந்தோஷமடா .....

  பிரியமுள்ள
  கோபு அண்ணா

  [எல்லாக்கதைகளுமே இதுபோல பாஸிடிவ் ஆக சுபமாக முடிக்கோணும் மஞ்சு. NOTE THIS POINT]

  ReplyDelete
 2. தர்மா ஆணா, பெண்ணா என்று தெரியாமலே கதையை படித்து என்னமோன்னு கதை முடிவை பார்த்தா.....ஹா ஹா ஹா.. நல்லா இருக்கு மஞ்சு.

  ReplyDelete
 3. அக்கா நல்ல சுவார்யஸ்யம் இறுதி வரியை நோக்கி வேக வேகமாய் நகர வைத்தது.

  என்னமா யோசிக்குறாங்யா.

  ReplyDelete
 4. என்ன பிரச்னையோ பாவம் அது இதுன்னு மனசை குழப்பிட்டு படிச்சுகிட்டே போனா..
  ஹ்ம்ம்.. இது தர்(ம)மா...
  வைகோ சொன்ன மாதிரி பாசிட்டிவா முடிஞ்சது ரொம்ப ரொம்ப சந்தோஷம்..

  ReplyDelete
 5. இதோ இந்த உன் வாயாடித்தனம் தான் எனக்கும் பொறுக்கலை... நீ எப்ப கல்யாணம் ஆகி வந்தியோ அப்ப தொடங்கின வாய் இன்னும் அடங்குதா பாரு? ”தர்மாவின் நிஷ்டூரக்குரல்....

  இப்படி எவ்வளோ பில்டப்.. ஏமாத்துறதுக்கு ஒரு அளவே இல்லை.. ச்சே நம்பி ஏமாந்துட்ட்டேனே..

  ReplyDelete
 6. கதை சொல்லும் பாணியில் நாளூக்கு நாள் மெருகேறிட்டு வருது..

  ஆத்மார்த்தமான பாராட்டுக்கள்

  ReplyDelete
 7. உன்னை நான் மருமகளா பார்க்கல... என் மகளா தான் பார்க்கிறேன்.. குழந்தைகள் வந்துட்டா பாட்டி பாட்டின்னு என்னை போகவிடாது.. புரிஞ்சுக்கோம்மா மது


  அன்புப்பிணைப்பு...அருமையாய் ரசிக்கவைத்தது...

  ReplyDelete
 8. ”அன்புப்பிணைப்பு...” த்லைப்”பூ”ஊஊஊ அருமை.

  மேல் படத்தை விட கீழ்ப்படம் பளீச் கலர் +
  கதைக்கு நல்ல பொருத்தம்.

  vgk

  ReplyDelete
 9. நாளுக்கு நாள் உங்கள் கதைகளில் மெருகேறுகிறது. கதையுலகில் விண்ணைத்தொட என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்..!

  ReplyDelete
 10. இறுதிப்பத்தியை இப்படி முடித்துப்பாருங்கள் மஞ்சு அவர்களே.. இன்னும் அசத்தலாக இருக்கும்..

  //“ எப்பவும் நான் உன்னிடமே இருந்தா ஷர்மி வருத்தப்படமாட்டாளா மது? கண்ணத்தொடச்சுக்கோ குழந்தைகள் வர நேரமாகிட்டுது பாரு துளசி மாடத்துல விளக்கேத்து.... ஷர்மி இப்ப குழந்தை வேற உண்டாகியிருக்கா... உன்னைப்போல தானே அவளும் எனக்கு..? மசக்கையா இருக்கும் நேரத்துல அவளுக்கும் வாய்க்கு ருசியா எதுனா செய்ய எனக்கு மனசு இருக்காதா நீயே சொல்லு மது? கவலைப்படாம இரு... நான் போயிட்டு போன் செய்றேன்... ரெண்டு மாசம் இருந்துட்டு ஓடி வந்துடறேன் சரியா? என்ன தான் காதலிச்சு திருமணம் பண்ணிண்டாலும் ஷர்மியும் நம்ம குடும்பம் தான்.... சமர்த்தா இரு.. அழுது ஊரைக்கூட்டாதே.... சேகர் வந்தான்னா அவன்கிட்ட சொல்லு.. ரெண்டே மாசம் ஓடி வந்துருவேன்..குழந்தைகள் வந்துட்டா என்னை போகவிடாது.. புரிஞ்சுக்கோ மது ” மதுமிதாவின் கண்களைத் துடைத்துவிட்டு கையில் பெட்டி எடுத்துக்கொண்டு இரண்டாது மகன் வீட்டுக்கு பஸ் ஏற துரிதமாகச் சென்றாள் அவளது மாமியார் தர்மாம்பாள்...///

  உங்களை விட அதிகம் தெரிந்தவன் இல்லை நான். இது ஜஸ்ட் சஜஷன் தான்.

  மீண்டும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்..!

  ReplyDelete
 11. படிக்க நல்ல சுவாரசியமாக இருந்தது... நல்ல திருப்பம்... எதிர்பார்கவில்லை... நான் ஏதோ கணவன் மனைவி சண்டை என நினைத்தேன்..

  சூப்பர்....

  ReplyDelete
 12. வித்தியாசமான நடைமுடிவாய் கரு அமைந்திருக்கின்றது.

  படைத்துப் பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா!

  ReplyDelete
 13. அசரவைக்கும் சிறுகதை. திருப்பம் என்பது கதையில் இப்படித்தான் இருக்கவேண்டும். மிக விருப்பாக கதையை கொண்டு சென்றதற்கு பாராட்டுக்களும் கைத்தட்டல்களும்!

  //ஒவ்வொரு நாளும் அழுது வடியிற உன் முகத்தைப்பார்க்கிறதை விட எண்ணை வழிற உன் முகத்தை பார்க்கிறதை விட ஷர்மியின் முகத்தைப்பார்க்கலாம்....//

  இந்த வார்த்தைகள் பெரும்பாலும் கணவனிடமிருந்து மட்டுமே வரும்! ஒரு தாய் மகளிடம் இப்படி கூறுவது பெரும்பாலும் சாத்தியப்படாத ஓன்று. தன் பிள்ளையை தாய் இவ்வாறான வார்த்தைகளை சொல்லி வெறுக்கமாட்டாள்.

  இது போன்ற இரட்டை அர்த்தங்களை கொண்ட கதைகளை படைக்கும்போது, மேலே சொன்ன ஒற்றை அர்த்தமுள்ள வரிகளில் கொஞ்சம் கவனம் செலுத்துவது கதையை இன்னும் மெருகூட்டும்!
  மற்றபடி கதையை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது! அருமை தொடருங்கள்!

  ReplyDelete
 14. அடடா, என்னாச்சோ, ஏதாச்சோ, ஷர்மிங்கிறது யாரு, அங்கே ஏன் போகணும்னு என்னன்னமோ யோசிச்சுட்டு இருந்தா! கதை இப்படி மாமியார்-மருமகள் சம்பாஷணையா முடிந்தது!

  நல்ல கதை. சிறப்பாக இருந்தது. பாராட்டுகள்.

  ReplyDelete
 15. ஒரு சிறு கதைக்குரிய ”சஸ்பென்ஸ்” உங்கள் கதையில் அருமை. ஆரம்பத்தில் நான் கணவன் – மனைவி குடும்பப் பிரச்சினை என்றுதான் படித்தேன்.

  ReplyDelete
 16. ஆரம்பத்துல வெரமாதிரி நினச்சேபடிச்சுட்டு வரப்போ சடன் திருப்பம் நல்லா ட்விஸ்ட் நல்லா இருக்கு

  ReplyDelete
 17. அருமையான கதை... அழகாக முடித்துள்ளீர்கள்.

  ReplyDelete
 18. என்னவோ போல போய் எப்படியோ முடிந்து விட்டது. மருமக்களுடன் மாமி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு இக்கதை. மறு மகளை மாமிமார் இவ்வாறு கவனித்தால் எங்கே மாமி மருமகள் சண்டை வரப்போகின்றது . அப்படியே என்னுடைய இந்த லிங்கையும் பாருங்கள்

  ReplyDelete
 19. யாரும் எதிர்பார்க்க முடியாத திருப்பம்
  அன்பின் ஆழம் சொல்லிப் போனவிதம்
  மிக மிக அருமை
  தொடர வழ்த்துக்கள்

  ReplyDelete

 20. சற்று பயத்தோடுதான் படித்தேன்! ஏமாந்தேன்! என்பது உண்மைதான்!என்றாலும், மனம் ஆறுதல் அடைந்தது

  ReplyDelete
 21. ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா என் கமெண்ட் பாக்ஸ் என்னால பார்க்க முடிகிறதே... பகவானே கோடானுகோடி நன்றிகள்பா ஸ்வாமி....

  இனி எல்லோருக்கும் நன்றிகள் போடுகிறேன்பா...

  ReplyDelete
 22. //வை.கோபாலகிருஷ்ணன் said...
  My Dear மஞ்சூஊஊஊஊஊஊஊஊஊஊ

  கையைக்கொடுங்கோ. கண்ணில் ஒத்துக்கணும்.
  சூப்பரான கதை. நடுவில் நல்ல டிவிஸ்டு.

  என்னவோ ஏதோன்னும் ஆரம்பத்தில் பயந்தே பூட்டேன், மஞ்சு.

  பாராட்டுக்கள்ம்மா.... வாழ்த்துக்கள்ப்ப்பா....

  பகிர்வுக்கும் தகவலுக்கும் சந்தோஷமடா .....

  பிரியமுள்ள
  கோபு அண்ணா

  [எல்லாக்கதைகளுமே இதுபோல பாஸிடிவ் ஆக சுபமாக முடிக்கோணும் மஞ்சு. NOTE THIS POINT]//

  அருமையா கதை எழுதுறவர் அண்ணா நீங்க..

  மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா கருத்து பகிர்வுக்கு...

  ReplyDelete
 23. //ராதா ராணி said...
  தர்மா ஆணா, பெண்ணா என்று தெரியாமலே கதையை படித்து என்னமோன்னு கதை முடிவை பார்த்தா.....ஹா ஹா ஹா.. நல்லா இருக்கு மஞ்சு.//

  அன்பு வணக்கங்கள் ராதாராணி...

  என் தாத்தாவின் நண்பரின் மகன் பெயர் தர்மா.. நாங்கள் அவரை தர்மாப்பா என்று அழைப்போம். அந்த நினைவில் அப்படி பெயர் எழுதினேன்பா..

  மனம் நிறைந்த அன்புநன்றிகள் ராதாராணி கருத்து பகிர்வுக்கு.

  ReplyDelete
 24. //Sasi Kala said...
  அக்கா நல்ல சுவார்யஸ்யம் இறுதி வரியை நோக்கி வேக வேகமாய் நகர வைத்தது.

  என்னமா யோசிக்குறாங்யா//

  ஆஹா சசி நீயாப்பா? :-) அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே சசி...

  மனம் நிறைந்த அன்புநன்றிகள் சசி கருத்து பகிர்வுக்கு.

  ReplyDelete
 25. //ரிஷபன் said...
  என்ன பிரச்னையோ பாவம் அது இதுன்னு மனசை குழப்பிட்டு படிச்சுகிட்டே போனா..
  ஹ்ம்ம்.. இது தர்(ம)மா...
  வைகோ சொன்ன மாதிரி பாசிட்டிவா முடிஞ்சது ரொம்ப ரொம்ப சந்தோஷம்..//

  ஹை தர்மா தர்மமா அழகிய சொல்லாடல் ரசித்தேன் ரிஷபா...

  ஆமாம் அண்ணாவின் கதைகள் எல்லாமே சுபமாக முடிப்பதை நான் படிச்சிருக்கேன்பா...

  மனம் நிறைந்த அன்புநன்றிகள் ரிஷபா கருத்து பகிர்வுக்கு...

  ReplyDelete
 26. //ரிஷபன் said...
  இதோ இந்த உன் வாயாடித்தனம் தான் எனக்கும் பொறுக்கலை... நீ எப்ப கல்யாணம் ஆகி வந்தியோ அப்ப தொடங்கின வாய் இன்னும் அடங்குதா பாரு? ”தர்மாவின் நிஷ்டூரக்குரல்....

  இப்படி எவ்வளோ பில்டப்.. ஏமாத்துறதுக்கு ஒரு அளவே இல்லை.. ச்சே நம்பி ஏமாந்துட்ட்டேனே..//

  ஹாஹாஹா... இப்படி எல்லாம் பில்டப் பண்ணி தான் திசை திருப்பி விட்டது.... அப்ப தானே கதையை நீங்க நினைக்கிற ரூட்ல படிப்பீங்கப்பா....

  ReplyDelete
 27. //ரிஷபன் said...
  கதை சொல்லும் பாணியில் நாளூக்கு நாள் மெருகேறிட்டு வருது..

  ஆத்மார்த்தமான பாராட்டுக்கள்//

  பிரம்மரிஷி பட்டம் அதுவும் வசிஷ்டர் கிட்ட இருந்து..... மனம் நிறைந்த அன்புநன்றிகள் ரிஷபா...

  ReplyDelete
 28. //இராஜராஜேஸ்வரி said...
  உன்னை நான் மருமகளா பார்க்கல... என் மகளா தான் பார்க்கிறேன்.. குழந்தைகள் வந்துட்டா பாட்டி பாட்டின்னு என்னை போகவிடாது.. புரிஞ்சுக்கோம்மா மது


  அன்புப்பிணைப்பு...அருமையாய் ரசிக்கவைத்தது...//

  மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா இராஜராஜேஸ்வரி....

  ReplyDelete
 29. //வை.கோபாலகிருஷ்ணன் said...
  ”அன்புப்பிணைப்பு...” த்லைப்”பூ”ஊஊஊ அருமை.

  மேல் படத்தை விட கீழ்ப்படம் பளீச் கலர் +
  கதைக்கு நல்ல பொருத்தம்.

  vgk//

  முதலில் இந்த படம் மேலே தான் அண்ணா இட்டது. ஆனால் படம் பார்த்ததுமே கதையை நம் வாசகர்கள் ஊகித்துவிடுவார்களே என்பதால் தான் கலைக்கண் கதைக்கு போட்டது போல பொருத்தமான படத்தை கடைசியில் பதித்தேன் அண்ணா..

  மனம் நிறைந்த அன்புநன்றிகள் அண்ணா...

  ReplyDelete
 30. //Anonymous said...
  நாளுக்கு நாள் உங்கள் கதைகளில் மெருகேறுகிறது. கதையுலகில் விண்ணைத்தொட என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்..!//

  மனம் நிறைந்த அன்புநன்றிகள் தங்களின் கருத்து பகிர்வுக்கு.

  ReplyDelete
 31. //Anonymous said...
  இறுதிப்பத்தியை இப்படி முடித்துப்பாருங்கள் மஞ்சு அவர்களே.. இன்னும் அசத்தலாக இருக்கும்..

  //“ எப்பவும் நான் உன்னிடமே இருந்தா ஷர்மி வருத்தப்படமாட்டாளா மது? கண்ணத்தொடச்சுக்கோ குழந்தைகள் வர நேரமாகிட்டுது பாரு துளசி மாடத்துல விளக்கேத்து.... ஷர்மி இப்ப குழந்தை வேற உண்டாகியிருக்கா... உன்னைப்போல தானே அவளும் எனக்கு..? மசக்கையா இருக்கும் நேரத்துல அவளுக்கும் வாய்க்கு ருசியா எதுனா செய்ய எனக்கு மனசு இருக்காதா நீயே சொல்லு மது? கவலைப்படாம இரு... நான் போயிட்டு போன் செய்றேன்... ரெண்டு மாசம் இருந்துட்டு ஓடி வந்துடறேன் சரியா? என்ன தான் காதலிச்சு திருமணம் பண்ணிண்டாலும் ஷர்மியும் நம்ம குடும்பம் தான்.... சமர்த்தா இரு.. அழுது ஊரைக்கூட்டாதே.... சேகர் வந்தான்னா அவன்கிட்ட சொல்லு.. ரெண்டே மாசம் ஓடி வந்துருவேன்..குழந்தைகள் வந்துட்டா என்னை போகவிடாது.. புரிஞ்சுக்கோ மது ” மதுமிதாவின் கண்களைத் துடைத்துவிட்டு கையில் பெட்டி எடுத்துக்கொண்டு இரண்டாது மகன் வீட்டுக்கு பஸ் ஏற துரிதமாகச் சென்றாள் அவளது மாமியார் தர்மாம்பாள்...///

  உங்களை விட அதிகம் தெரிந்தவன் இல்லை நான். இது ஜஸ்ட் சஜஷன் தான்.

  மீண்டும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்..!//

  நீங்கள் எழுதியது தான் அருமையாக கரெக்டாகவும் இருக்கிறது. படிக்கும்போதே என் தவறு எங்கே என்பதை அறியவும் முடிந்தது.... அதற்கு என் மனமார்த்த நன்றிகள் தங்களுக்கு....

  அதிகம் தெரிந்தவர் என்று யாரும் இல்லை, ஒன்றும் தெரியாதவர் என்றும் யாரும் இல்லை என்று சமீபத்தில் தான் ரமணி சார் கவிதையில் படித்தேன்....

  இனியாவது நான் நானாக இருக்க இறைவன் கருணை காட்டுகிறான்.. இருந்துவிட்டு போகிறேனே....

  நிறை குறைகளோடு என்னை அன்பு உள்ளங்கள் ஏற்றுக்கொள்கிறார்களே.. அதுவே எனக்கு மிகப்பெரிய சந்தோஷம்....

  மனம் நிறைந்த அன்புநன்றிகள் மீண்டுமொருமுறை Anonymous அவர்களே...

  ReplyDelete
 32. //Ayesha Farook said...
  படிக்க நல்ல சுவாரசியமாக இருந்தது... நல்ல திருப்பம்... எதிர்பார்கவில்லை... நான் ஏதோ கணவன் மனைவி சண்டை என நினைத்தேன்..

  சூப்பர்....//

  ஹை ஆயிஷா ஃபரூக்.. எப்படிப்பா இருக்கீங்க? சந்தோஷம்பா எனக்கு உங்களை பார்ப்பதில்....
  இப்படி எல்லோரும் நினைக்கவேண்டும் என்று தான்பா அப்படி எழுதினது....

  மனம் நிறைந்த அன்புநன்றிகள் சகோ கருத்து பகிர்வுக்கு.

  ReplyDelete
 33. //சிவஹரி said...
  வித்தியாசமான நடைமுடிவாய் கரு அமைந்திருக்கின்றது.

  படைத்துப் பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா!//

  மனம் நிறைந்த மகிழ்ச்சிடா தம்பி...

  ReplyDelete
 34. //வே.சுப்ரமணியன். said...
  அசரவைக்கும் சிறுகதை. திருப்பம் என்பது கதையில் இப்படித்தான் இருக்கவேண்டும். மிக விருப்பாக கதையை கொண்டு சென்றதற்கு பாராட்டுக்களும் கைத்தட்டல்களும்!

  //ஒவ்வொரு நாளும் அழுது வடியிற உன் முகத்தைப்பார்க்கிறதை விட எண்ணை வழிற உன் முகத்தை பார்க்கிறதை விட ஷர்மியின் முகத்தைப்பார்க்கலாம்....//

  இந்த வார்த்தைகள் பெரும்பாலும் கணவனிடமிருந்து மட்டுமே வரும்! ஒரு தாய் மகளிடம் இப்படி கூறுவது பெரும்பாலும் சாத்தியப்படாத ஓன்று. தன் பிள்ளையை தாய் இவ்வாறான வார்த்தைகளை சொல்லி வெறுக்கமாட்டாள்.

  இது போன்ற இரட்டை அர்த்தங்களை கொண்ட கதைகளை படைக்கும்போது, மேலே சொன்ன ஒற்றை அர்த்தமுள்ள வரிகளில் கொஞ்சம் கவனம் செலுத்துவது கதையை இன்னும் மெருகூட்டும்!
  மற்றபடி கதையை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது! அருமை தொடருங்கள்!//

  மனம் நிறைந்த அன்பு நன்றிகள் தம்பி கருத்து பகிர்வுக்கு...

  இந்த கதையில் தாய் தன் மகளை பார்த்து சொல்லலைப்பா... மாமியார் மருமகளை சொல்கிறார்.

  என் மாமியார் பலமுறை நான் அழுதுக்கொண்டு இருக்கும்போது சொன்ன வார்த்தையை நான் சமயோஜிதமாக இந்த கதையில் உபயோகித்துக்கொண்டேன்பா....

  மீண்டும் ஒருமுறை மனம் நிறைந்த அன்புநன்றிகள் தம்பி....

  ReplyDelete
 35. //வெங்கட் நாகராஜ் said...
  அடடா, என்னாச்சோ, ஏதாச்சோ, ஷர்மிங்கிறது யாரு, அங்கே ஏன் போகணும்னு என்னன்னமோ யோசிச்சுட்டு இருந்தா! கதை இப்படி மாமியார்-மருமகள் சம்பாஷணையா முடிந்தது!

  நல்ல கதை. சிறப்பாக இருந்தது. பாராட்டுகள்.//

  மனம் நிறைந்த அன்புநன்றிகள் வெங்கட் கருத்து பகிர்வுக்கு.

  ReplyDelete
 36. //தி.தமிழ் இளங்கோ said...
  ஒரு சிறு கதைக்குரிய ”சஸ்பென்ஸ்” உங்கள் கதையில் அருமை. ஆரம்பத்தில் நான் கணவன் – மனைவி குடும்பப் பிரச்சினை என்றுதான் படித்தேன்.//

  வாசிக்கும் எல்லோருமே இப்படி தான் நினைக்கனும்னு நான் நினைத்தேன் ஐயா...

  மனம் நிறைந்த அன்புநன்றிகள் ஐயா கருத்து பகிர்வுக்கு.

  ReplyDelete
 37. //Lakshmi said...
  ஆரம்பத்துல வெரமாதிரி நினச்சேபடிச்சுட்டு வரப்போ சடன் திருப்பம் நல்லா ட்விஸ்ட் நல்லா இருக்கு//

  ஹை லக்‌ஷ்மிம்மா வாங்கோ.. கொலை வெச்சேளா ஆத்துல?

  மனம் நிறைந்த அன்புநன்றிகள் லக்‌ஷ்மிம்மா கருத்து பகிர்வுக்கு.

  ReplyDelete
 38. //சே. குமார் said...
  அருமையான கதை... அழகாக முடித்துள்ளீர்கள்//

  மனம் நிறைந்த அன்புநன்றிகள் குமார் கருத்து பகிர்வுக்கு.

  ReplyDelete
 39. //சந்திரகௌரி said...
  என்னவோ போல போய் எப்படியோ முடிந்து விட்டது. மருமக்களுடன் மாமி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு இக்கதை. மறு மகளை மாமிமார் இவ்வாறு கவனித்தால் எங்கே மாமி மருமகள் சண்டை வரப்போகின்றது . அப்படியே என்னுடைய இந்த லிங்கையும் பாருங்கள்//

  உண்மையே சந்திரகௌரி... அன்பு பெருகினால் மாமியார் மருமகள் உறவு தாய்மகள் உறவாகிவிடுமேப்பா...

  பார்த்துட்டேன் கண்ணா பார்த்துட்டேன்... இத்தனை நாள் என் ப்ளாக்ஸ்பாட்ல கொஞ்சம் பிரச்சனை இருந்ததுப்பா...

  என்னவோ தெய்வானுக்ரஹம்.. தானாவே சரியாயிடுத்து. இனி ரெகுலரா எல்லாருடைய ப்ளாக்குலயும் வந்து கருத்து போடுவேன்பா...

  ஆமாம் எங்கே உங்களை காணலையே சாட்ல?

  மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா சந்திரகௌரி கருத்து பகிர்வுக்கு..

  ReplyDelete
 40. //Ramani said...
  யாரும் எதிர்பார்க்க முடியாத திருப்பம்
  அன்பின் ஆழம் சொல்லிப் போனவிதம்
  மிக மிக அருமை
  தொடர வழ்த்துக்கள்//

  உண்மையே ரமணி சார்.. அன்பிருக்கும் இடத்தில் பிணக்குகள் இல்லை.. சந்தேகம் இல்லை, குறைகள் இல்லை... என்றும் மனமும் விசாலமாய் அன்போ அக்‌ஷயப்பாத்திரத்தில் பெருகும் விதமாய்...

  மனம் நிறைந்த அன்புநன்றிகள் ரமணிசார் கருத்து பகிர்வுக்கும் வாக்குக்கும்..

  ReplyDelete
 41. //புலவர் சா இராமாநுசம் said...

  சற்று பயத்தோடுதான் படித்தேன்! ஏமாந்தேன்! என்பது உண்மைதான்!என்றாலும், மனம் ஆறுதல் அடைந்தது//


  ச்ச்ச்சோ ச்சுவீத்து அப்பா நீங்க.... போன்ல பேசினாலும் இப்படி தான்... வாசிப்போர் ஒரு கோணத்தில் கதையை படிக்க... இறுதியில் இப்படி முடிப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது அப்பா...

  மனம் நிறைந்த அன்புநன்றிகள் அப்பா தங்களின் கருத்து பகிர்வுக்கு.

  அப்பா தங்களின் உடல்நலம் எவ்வாறு உள்ளது?

  ReplyDelete
 42. //இந்த கதையில் தாய் தன் மகளை பார்த்து சொல்லலைப்பா... மாமியார் மருமகளை சொல்கிறார்.//

  )-இக்கதையில், தன் மாமியாரிடம் தாயிடம் கேட்பது போல் உரிமையாக கேட்கும் மருமகளின் செய்கையும்,
  )- "உன்னை நான் மருமகளா பார்க்கல... என் மகளா தான் பார்க்கிறேன்" என்கிற பாசம் நிறைந்த மாமியாரின் வார்த்தைகளும்,

  நான் கருத்துரையில் "தாயன்பு கொண்ட மாமியார்" என்று இடுவதை விட, "தாய்" என்ற சொல் பாசத்துக்கு இன்னும் அழுத்தம் கொடுக்கும் என்று "தாய்" என்று இடவைத்தது.

  "தாயன்பு கொண்ட மாமியார்" என்று நான் கருத்துரையில் இட்டிருக்கலாம். ஆனால் அது இக்கதையில் எனது உணர்த்தலை குறைத்துவிடக்கூடும் என்பதால் "தாய்" என்கிற சொல்லை பயன்படுத்தினேன்!

  நன்றி அக்கா!
  //என் மாமியார் பலமுறை நான் அழுதுக்கொண்டு இருக்கும்போது சொன்ன வார்த்தையை நான் சமயோஜிதமாக இந்த கதையில் உபயோகித்துக்கொண்டேன்பா....//

  பாசம் நிறைந்த மாமியார். நான் அவங்களை கேட்டதா சொல்லுங்கக்கா! நன்றி!

  ReplyDelete
 43. //வே.சுப்ரமணியன். said...
  //இந்த கதையில் தாய் தன் மகளை பார்த்து சொல்லலைப்பா... மாமியார் மருமகளை சொல்கிறார்.//

  )-இக்கதையில், தன் மாமியாரிடம் தாயிடம் கேட்பது போல் உரிமையாக கேட்கும் மருமகளின் செய்கையும்,
  )- "உன்னை நான் மருமகளா பார்க்கல... என் மகளா தான் பார்க்கிறேன்" என்கிற பாசம் நிறைந்த மாமியாரின் வார்த்தைகளும்,

  நான் கருத்துரையில் "தாயன்பு கொண்ட மாமியார்" என்று இடுவதை விட, "தாய்" என்ற சொல் பாசத்துக்கு இன்னும் அழுத்தம் கொடுக்கும் என்று "தாய்" என்று இடவைத்தது.

  "தாயன்பு கொண்ட மாமியார்" என்று நான் கருத்துரையில் இட்டிருக்கலாம். ஆனால் அது இக்கதையில் எனது உணர்த்தலை குறைத்துவிடக்கூடும் என்பதால் "தாய்" என்கிற சொல்லை பயன்படுத்தினேன்!

  நன்றி அக்கா!
  //என் மாமியார் பலமுறை நான் அழுதுக்கொண்டு இருக்கும்போது சொன்ன வார்த்தையை நான் சமயோஜிதமாக இந்த கதையில் உபயோகித்துக்கொண்டேன்பா....//

  பாசம் நிறைந்த மாமியார். நான் அவங்களை கேட்டதா சொல்லுங்கக்கா! நன்றி!//

  அன்பின் சுப்பிரமணி,

  முதலில் அக்கா திட்டப்போறேன் உங்களை.... இவ்ளோ நேரமாச்சு... நடுநிசி.. தூங்காம என்னப்பா பண்ணிட்டு இருக்கீங்க? உடல்நலம் ரொம்ப முக்கியம்பா....

  நான் உங்களுக்கு கருத்து எழுதும்போதே நினைத்தேன். தம்பிக்கிட்ட இருந்து மாமியார் என்றச்சொல் எப்படி தாய் ஆனது என்று பதில் வரும்னு... நான் நினைத்தது போலவே வந்தது.. ஆனால் மிக வேகமாக :) நாளை தான் வரும்னு நினைச்சேன்பா...

  உண்மையே தம்பி... உங்க வலைதளத்தில் வந்து நான் படித்த முதல் கவிதையிலேயே மனம் அசைத்தது உண்மைப்பா....

  கண்டிப்பாக உங்க அன்பு வணக்கத்தை என் மாமியாரிடம் சொல்கிறேன்பா...

  முதல்ல தூங்குங்கப்பா..மனம் நிறைந்த அன்புநன்றிகள் தம்பி.. தங்களின் ஒவ்வொரு வார்த்தையும் மிக அழுத்தமாக சொல்வது தாயன்பை பிரதானப்படுத்தியே, மனம் நிறைகிறது தம்பி...

  ReplyDelete
 44. இப்படிப்பட்ட மாமியார் மருமகளைக் கற்பனையில் தான் வடித்து கதை எழுத முடியும்....

  கதை அருமை. வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete
 45. பாதி படிக்கும் போதே பொறி தட்டிச்சு . மறுபடியும் படித்தேன். தர்மா -- ஆணா பெண்ணா என்ற பால் குறிப்பு வராத வண்ணம் மிக நேர்த்தியாக கதையை நகர்த்திய லாவகம் -- கை தேர்ந்த எழுத்தாளர்களுக்கே உரித்தான நடை - அசத்துறீங்கப்பா மஞ்சு .

  ReplyDelete
  Replies
  1. நக்கீரன் போல நீங்க கவனிப்பீங்கன்னு தெரியுமே.. :-) அதானே அப்டி எழுதிட்டேன்.... மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா சிவகுமாரன்..

   Delete
 46. ஆஹா! மஞ்சு! சூப்பரா சஸ்பென்ஸ் வைத்து...முடிவில் சுபமாக முடித்தது நன்றாக இருந்தது.

  பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. அன்பு வரவேற்புகள் ரஞ்சனி மேடம்...

   மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா கருத்து பகிர்வுக்கு.

   Delete
 47. அருமை.. மாமி மருமகள் இப்படித்தான் இருக்க வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. அன்பு வரவேற்புகள்பா..

   அப்படி இருந்துட்டால் வீடே சுபிக்‌ஷமாகிவிடும்....

   அன்புநன்றிகள் சந்ரு தங்களின் கருத்து பகிர்வுக்கு.

   Delete
 48. ஹலோ மேடம் நீங்க கதையெல்லாம் கூட எழுதுவீங்களா?! எந்த மீடியாவிலயும் சொல்லவேயில்லைப்பா...,

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா..... நான் சொல்லவே இல்லையேப்பா கண்ணாட்டி....

   நல்லவேளை எந்த மீடியாவிலயும் சொல்லவே இல்லை :-)

   Delete
 49. நான் என்னமோ கணவன் மனவி சம்பந்தப்பட்ட கதை..., படிச்சுட்டு திருந்தி.., ஆத்துக்காரரை நல்லப்படியா வெச்சுக்கலாம்ன்னு நினைச்சேன். ஆனா, இது மாமியார், மருமக கதை..., பாவம் என் ஆத்துக்காரர்..., இந்த ஜென்மத்துல அவருக்கு நல்ல வாழ்க்கை கிடைக்காது போல...,

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா... அடப்பாவமே....

   இது வேறயா ராஜி? என்ன கொடுமைப்பா.... :-) தம்பி பாவம் தான்...

   Delete
 50. அன்புள்ள..

  வணக்கம். கதைசொல்லும் பாணி பழையது என்றாலும் கதையின் பொருண்மை வெகு சுவையானது. அழகானது. நடை கைதேர்ந்திருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது வாசிக்க பாந்தமாகவும் கதை நகர்கிறது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா ஹரணி சார் எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளா உங்களை காணலையே....

   மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஹரணி சார்...

   Delete
 51. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
  உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
  "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
  இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
  எல்லாம் கைகூடி வந்து
  என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
  தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

  ReplyDelete
  Replies
  1. ஆஹா மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா சகோ... சௌக்கியமாப்பா?

   Delete

Related Posts Plugin for WordPress, Blogger...