"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Monday, October 8, 2012

ஓருடல் ஈருயிர் - மூன்றாம் பாகம்விவான் கோபமே இல்லாத மனநிலை...

இபானுக்கு மூக்குநுனியில் எப்போதும் கோபம் நிற்கும்....

இபான் பலமுறை இழுத்த இழுப்பில் விவான் பக்கவாட்டில் விழுந்து நெற்றிப்பொட்டில் கால் முட்டியில் என்று அடிபடுவான்...  அதைப்பற்றிய கவலை ஏதும் இல்லாமல் இபான் விளையாட்டில் கவனம் செலுத்துவான்....

வைத்தியநாதன் இருவரையும் நல்லமுறையில் கல்வி, ஒழுக்கம், பண்பு எல்லாம் சொல்லிக்கொடுத்தாலும் இபானின் கவனம் எப்ப எழுந்து ஓடலாம் விளையாடலாம் எந்தெந்த பொருட்களை உடைக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருப்பான்...

பள்ளிக்கூடம் சென்று படிக்க சென்றால் எல்லோரின் பார்வை தன்னையே குறிவைப்பதாக சொல்லி ஆர்பாட்டம் செய்து பள்ளிக்கு போவதை தடுத்தான் இபான்... இபானின் இச்செயலால் அடிக்கடி வைத்தியநாதனின் மனம் வேதனைப்படும்... ஒரே மரத்தின் கனிகள் எல்லாமே இனிக்கவா செய்கிறது என்று தன்னைத்தானே சமாதானம் செய்துக்கொள்வார்....

இபான் தினமும் டைரி எழுதும் பழக்கம் வைத்திருப்பான்.. அந்தபக்கம் திரும்பி விவான் படுத்தபின் டைரி எடுத்து அவனை தொந்திரவு செய்யாமல் உடல் அசைக்காமல் கைவிரலால் பென்னை பிடித்துக்கொண்டு லாவகமாக எழுதுவான் வேகமாக...

இப்படியாக பிள்ளைகள் இருவரும் வாலிபராக வளர்ந்தனர்.. இருவருக்கும் தந்தையின் மேல் அபார பிரியம், பாசம்... அவர் சொல்லை மட்டும் மீறாத நல்லப்பிள்ளைகள்....

வியாபாரமும் நல்லமுறையில் பெருகியது.....

இபானின் வியாபார நுணுக்கத்தை பார்த்து அசந்தார் வைத்தி... விவானின் அணுகுமுறை பணியாளர்களிடம் நல்லப்பெயரை வாங்கிக்கொடுத்தது... இருவரும் நல்ல நிலையில் வியாபாரத்தை கவனித்தது அவருக்கு மனநிம்மதியை கொடுத்தது. இனி இந்த பிள்ளைகளுக்கு திருமணம் எப்படி செய்வது என்ற கவலை அவர் மனதை அரிக்கத் தொடங்கிவிட்டது....

பணியாளர்கள் இபான் விவான் இருவரிடமும் அன்பும், மதிப்பும் வைத்திருந்தனர்....

இருவரும் இரவு படுக்க போகுமுன் தன்னை வந்து பார்க்குமாறு சொன்னார் வைத்தி....

இபான் விவான் இருவரும் வந்து தந்தையின் இருபக்கமும் அமர்ந்தனர்...

என்னப்பா கூப்டீங்க? வியாபாரத்தை பெருக்க ஏதாவது யோசனைகள்னா அது இபான் தான் தரமுடியும். விவான் அமைதியுடன் சொன்னான்...

அட அதென்ன பெரிய சிரமமா விவான் நீ சும்மா இரு அப்பா ஏதோ முக்கியமான விஷயம் பேசப்போறாருன்னு நினைக்கிறேன் என்றான்...

ஆமாம்பா பிள்ளைகளா... எனக்கு இப்பெல்லாம் கவலை என்னன்னா... என்று சொல்லி முடிக்குமுன் இபான் குறிக்கிட்டான்.

எங்கள் திருமணம் பற்றிய கவலை தானே?? வேண்டாம்பா விடுங்க.... நாங்கள் இருவருமே கல்யாணம் செய்துக்கொள்ளும்படி உடலும் இல்லை... மனமும் இலயிக்கவில்லை.. அதனால்...

என்னப்பா இப்படி சொல்றே? நம் குடும்பம் தழைக்கவேண்டாமா?? நம் பரம்பரை உங்களோடு நின்றுவிட வேண்டுமா அதற்குமேல் பேச இயலாமல் சோர்ந்து படுத்துக்கொண்டார்...

அவர் படும் அவஸ்தையை பார்த்து என்ன சொல்வதென்று தெரியாமல் விவான் வைத்திக்கு போர்த்திவிட்டு இருவரும் தம் அறைக்குள் நுழைந்து படுத்துக்கொண்டனர்....

நம்ம இப்படி இருப்பதால் கல்யாணம் பண்ணிக்கமுடியாது ஒத்துக்கிறேன்... நாம பிறந்தப்ப டெக்னாலஜி முன்னேறல அதனால் ஒட்டிப்பிறந்த நம்மை பிரிக்க இயலவில்லைன்னு விட்டாங்க... ஆனா இப்ப முயலலாமே விவான்.. என்ன நான் சொல்வது சரி தானே??

கேள்வி கேட்டுவிட்டு டைரி எழுதப்போகிறேன் என்று எழுத ஆரம்பித்தான் அன்றைய அப்பாவின் வார்த்தைகளை குறிக்கும்போது தான் விவானிடம் கேட்ட கேள்வியையும் டைரியில் எழுதிவைத்துவிட்டு உறங்க ஆரம்பித்தான்...

விவானுக்கு உறக்கம் வரவில்லை.. இபான் சொல்வது போல் செய்தால் என்ன என்று யோசித்துப்பார்த்தான்.. இபான் தன்னுடைய உடலின் ஒரு அங்கமாக இருந்துவிட்டதால் அவனை பிரிக்கும் எந்த ஒரு விஷயத்தையும் விவான் நினைத்துக்கூட பார்க்கவில்லை...

ஆனால் இபானின் மனதில் இப்படி ஒரு எண்ணம் இருக்கிறதோ?? எது எப்படி என்றாலும் அது நன்மையை தரும் செயல் என்றால் ஒப்புக்கொண்டு தான் ஆகவேண்டும். நாளை அப்பாவிடம் இதைப்பற்றி பேசவேண்டும் என்று நினைத்துக்கொண்டே உறங்கிவிட்டான் விவான்...

இபானின் கனவில் வெள்ளை உடை தேவதைகள் அவன் கேசம் கலைத்தனர்... அவன் கைகளை பிடித்துக்கொண்டு ஸ்லோ மோஷனில் ஆட ஆரம்பித்தனர்...

விவான் ஆழ்மனம் அமைதியாக இருந்ததால் அசையாமல் படுத்திருந்தான்....

மறுநாள் காலை வேலையாளன் வைத்தி அறையில் சென்று காபி வைக்க போனபோது வைத்தியிடம் அசைவில்லாததை அறிந்து பயந்து இபான், விவான் இருவரையும் ஓடிவந்து அழைத்தான்....

வைத்தி உறக்கத்திலேயே மரணம் எய்தினார்....


தொடரும்...

20 comments:

 1. அடாடா... உறக்கத்திலேயே தந்தை பிரிந்து விட்டார். இபானின் யோசனையை விவான் ஏற்றானா, பிறகு என்ன நடந்தது? ஏராளமாய் இடறும் கேள்விகளோடு உங்களின் தொடர்ச்சிக்குக் காத்திருக்கிறேன் மஞ்சு.

  ReplyDelete
 2. அடுத்தபதிவுக்கு ஆவலுடன் காத்திருக்க வைத்து விட்டாயே சீக்கிரமெ போட்டுடு

  ReplyDelete
 3. நேரடியாக மூன்றாம் பாகம் வாசித்தேன்..முதல் இரண்டு பாகங்களையும் வாசித்துவிட்டு வந்துவிடுகிறேனே..

  ReplyDelete
 4. ஐயையோ.. என்னாதிது?

  முன்னாடிப் போன முட்டுது? பின்னாடிப் போன தட்டுது?

  கடவுள் வைத்தி குடும்பத்துலேயே வீடு கட்டி விளையாடியிருக்கின்றார்..

  அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

  தொடருங்கள் அக்கா

  ReplyDelete
 5. அடடா, வைத்தி இந்த இரட்டையர்களை விட்டுப் பிரிந்து போய் விட்டாரா?

  இபான் விவான் இருவரும் வேறு பிரியப் போகிறார்களே!

  இனி மேலும் என்னென்ன நடக்குமோ.
  கதாசிரியர் மஞ்சுவுக்கே வெளிச்சம்.

  [எங்களுக்கு ஒரே இருட்டு - பவர் கட் வேறு]

  கோபு

  ReplyDelete
 6. முதல் வருகை, இனி தொடர்வேன் என நம்புகிறேன்...

  அடுத்த பதிவும் சீக்ரம் போட்டுடுங்க...

  ReplyDelete
 7. இராஜராஜேஸ்வரி said...
  கனக்கவைத்த பகுதி !

  மனம் நிறைந்த அன்புநன்றிகள் இராஜராஜேஸ்வரிம்மா முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்....

  ReplyDelete
 8. 3வதும் வாசித்தேன் (இப்போ உடனே இருந்து வாசித்தேன்.)பார்ப்போம் என்ன நடக்கும் என்று.நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 9. இபான் விளையாட்டுப் பிள்ளையாக இருந்தாலும் வளர்ந்தபின் அவன் வியாபார நுணுக்கம் சிறப்பாய் இருந்திருக்கின்றது . சிறு வயதில் சுட்டியாய் இருப்பவர்கள் வளர்ந்தபின் கெட்டிக் காரர்கள் ஆவார்கள் என்று அறிந்திருக்கின்றேன். இதற்கு விதிவிலக்கானவர் அல்ல இபான். இருவர் பிரியப் போகின்றார்கள் . தந்தையை இழந்தார்கள் . இனிமேல் என்ன? .......விரைவில் தாருங்கள்

  ReplyDelete
 10. மிக அருமையான பதிவு
  வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
  உங்கள் வரவை விரும்புகிறது
  தினபதிவு திரட்டி

  ReplyDelete
 11. இது என் முதல் வருகை தோழி... உங்கள் வலைப்பதிவை கண்டத்தில் மிக்க மகிழ்ச்சி... தொடர்வோம்

  ReplyDelete
 12. //பால கணேஷ் said...
  அடாடா... உறக்கத்திலேயே தந்தை பிரிந்து விட்டார். இபானின் யோசனையை விவான் ஏற்றானா, பிறகு என்ன நடந்தது? ஏராளமாய் இடறும் கேள்விகளோடு உங்களின் தொடர்ச்சிக்குக் காத்திருக்கிறேன் மஞ்சு.//

  உங்களைப்போலவே நானும் காத்திருக்கிறேன் கணேஷா.. நிறைய கேள்விகள்... விடைகள் உண்டா???

  மனம் நிறைந்த அன்பு நன்றிகள் கணேஷா கருத்து பகிர்வுக்கு.

  ReplyDelete
 13. //Lakshmi said...
  அடுத்தபதிவுக்கு ஆவலுடன் காத்திருக்க வைத்து விட்டாயே சீக்கிரமெ போட்டுடு//

  நாளைக்கு போட்டுடறேன் லக்‌ஷ்மிம்மா...

  மனம் நிறைந்த அன்புநன்றிகள் லக்‌ஷ்மிம்மா கருத்து பகிர்வுக்கு.

  ReplyDelete
 14. //மதுமதி said...
  நேரடியாக மூன்றாம் பாகம் வாசித்தேன்..முதல் இரண்டு பாகங்களையும் வாசித்துவிட்டு வந்துவிடுகிறேனே..//

  நேரடியா மூன்றாம் பாகம் படிச்சுட்டீங்களா அடடா சரி சரி மீதி இரண்டு பாகங்கள் படிச்சிட்டு வாங்கோப்பா...

  மனம் நிறைந்த அன்புநன்றிகள் மதுமதி கருத்து பகிர்வுக்கு.

  ReplyDelete
 15. //சிவஹரி said...
  ஐயையோ.. என்னாதிது?

  முன்னாடிப் போன முட்டுது? பின்னாடிப் போன தட்டுது?

  கடவுள் வைத்தி குடும்பத்துலேயே வீடு கட்டி விளையாடியிருக்கின்றார்..

  அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

  தொடருங்கள் அக்கா//

  நீ சொன்னது போல பிள்ளைகள் தான் இப்ப வளர்ந்துட்டாங்களே போராடி உலகில் ஜெயிக்க முயல்கிறார்களா பார்ப்போம் தம்பி..

  மனம் நிறைந்த அன்புநன்றிகள் தம்பி கருத்து பகிர்வுக்கு.

  ReplyDelete
 16. //வை.கோபாலகிருஷ்ணன் said...
  அடடா, வைத்தி இந்த இரட்டையர்களை விட்டுப் பிரிந்து போய் விட்டாரா?

  இபான் விவான் இருவரும் வேறு பிரியப் போகிறார்களே!

  இனி மேலும் என்னென்ன நடக்குமோ.
  கதாசிரியர் மஞ்சுவுக்கே வெளிச்சம்.

  [எங்களுக்கு ஒரே இருட்டு - பவர் கட் வேறு]

  கோபு//

  இபான் விவான் பிரியப்போகிறார்களா... அதன்பின் என்னென்ன பிரச்சனைகள் சந்திக்கிறார்கள் எல்லாம் பார்ப்போம் அண்ணா... பவர் கட்டால் மக்களுக்கு நிறைய சிரமங்கள்...

  மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா கருத்து பகிர்வுக்கு.

  ReplyDelete
 17. //இரவின் புன்னகை said...
  முதல் வருகை, இனி தொடர்வேன் என நம்புகிறேன்...

  அடுத்த பதிவும் சீக்ரம் போட்டுடுங்க...//

  அன்பு வரவேற்புகள் சகோ முதல் வருகைக்கு....

  நாளை போட்டுடறேன்பா...

  மனம் நிறைந்த அன்புநன்றிகள் கருத்து பகிர்வுக்கு..

  ReplyDelete
 18. கதை சிறப்பாக நகர்கிறது
  கதைக் களம் புதிதாய் இருப்பதால்
  கதையின் போக்கை என்னால் எதையும்
  சிறிதும் யூகிக்க முடியவில்லை
  எழுத்தின் சிறப்பு கூட அதுதானே
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...