"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Wednesday, October 3, 2012

வலைச்சரம் - சிந்தனை - மூன்றாம் நாள்

வலைச்சரம் - சிந்தனை - மூன்றாம் நாள்


WEDNESDAY, OCTOBER 3, 2012


சிந்தனை - கதம்ப உணர்வுகள் (மூன்றாம் நாள்)

” சிந்தனை செய் மனமே “ எப்படி??? யாரை எப்படி எந்த நேரத்தில் கவுக்கலாம் என்றோ, பொய் சொல்லி ஏமாற்றி சொத்தை அபகரிக்கலாம் என்றோ எப்ப ஒழிவான்னு காத்திருந்து அவர் சீட்டை கபளீகரம் செய்வது போன்றோ இல்லவே இல்லை... நற்சிந்தனைகள் வளர்த்து யாருக்கும் எப்போதும் தீங்கு ஏற்படாவண்ணம் நல்லவைகள் செய்து... நாளும் முடிந்தவரை உதவிகள் புரிந்து.... எப்போதும் நலமுடன் வாழ சிந்திக்கவேண்டும்.... சரிப்பா மூன்றாம் நாளான இன்று என் மனம் கவர் பதிவர்களை அறிமுகப்படுத்தட்டுமா?



முதன்முதல் வலைப்பூவில் நான் ரமணிசாரின் கவிதை வரிகள் ஈர்க்கப்பட்டுவிமர்சனம் எழுத ஆரம்பித்தேன்இன்று வரை ரமணிசாரின் வலைப்பூவுக்கு சென்றால்புதிய கவிதைமலர் ஒன்று மணம் வீசிக்கொண்டிருக்கும் வாழ்வியலின் கருத்தைதாங்கிக்கொண்டு… ஏமாற்றமே கிடைத்ததில்லை எனக்குகருத்துகள் தாங்கிய எளியநடை கொண்ட ரமணிசாரின் கவிதைகளில் ரசித்து வாசித்ததில் சிறு துளிகளைஉங்களுடன் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.. 


ரிஷபன் 


நான் மிக வியக்கும் குட்டி டைனமைட்இத்துணூண்டு கதை தான் எழுதுவார்ஆனால்அந்த அத்துணூண்டு கதையில் நமக்கு வாழ்க்கைக்கு பயன்படக்கூடும் கருத்துகள்கண்டிப்பாக இருக்கும்… அட படிச்சுட்டு அதோடு மறந்துட்டு அடுத்த வேலை பார்த்துட்டுபோகலாம் என்பது போல இருக்காதுஅட நம்ம ரிஷபன் சொன்னதுபோல நாம யோசிச்சுசெயல்பட்டால் தான் என்ன என்று யோசிக்கவைக்கும். இத்துணூண்டு வயசுல இத்தனைஅறிவா சிந்திக்கிறதே பிள்ளை என்று எனக்கு வியக்கத்தோணும்.. சொன்னாநம்பமாட்டீங்கரிஷபனோட சில பதிவுகளைத்தரேன்.. படிச்சுப்பார்த்தீங்கன்னா அடஆமாம்னு நீங்களே நினைப்பீங்க.



    இந்த சாக்ரடீஸீன்(அப்பாதுரையே தான்வார்த்தைகள் எழுத்துகள்
    எல்லாமே மிகவும் பிடிக்கும்… சொல்ல வந்த கருத்தைகோபத்தை கூட
    அசால்டா சொல்லிட்டு போறதிலும் இவருக்கு நிகர் இவர் தான்எதிலும் 
    இவர் மனத்திண்மை நான் மிகவும் ரசிக்கும் விஷயம்தேவர் கதைகளை 
    கூட சுவாரஸ்யமா தன் ஸ்டைலுக்கு மாத்தி சொல்லி 
    ரசிக்கவைத்துவிடுவார் படிக்கும் வாசகர்களைசமீபத்தில் நான் படித்த
    கடவுள் இல்லையடி பாப்பா க்ளாசிக் கவிதைதேவர்கள் கதை எல்லாம்
    க்ரியேட்டிவிட்டியோடு இவர் ஸ்டைலில் தருவது மிக அழகு... இப்படி
    எல்லாம் சொன்னால் கண்டிப்பா ஹுஹும் புரியாதுஇவர் பதிவுகள்
    படிச்சா தான் நான் சொல்வது சரின்னு சொல்வீங்க.



    இந்த தூரிகையின் தூறலை படிக்கச்சென்றால் மனதை அங்கேயே நிறுத்திவைத்துவிடும்
    அளவுக்கு மிக அழகிய கவிதைகளும் கதைகளும் இருக்கின்றது....
    மதுமதி.....கவிதையில்கதையில் மட்டும் அசத்துகிறார் என்று பார்த்தால் உதவி
    செய்வதிலும் முதன்மையாக நிற்கிறார்.... பதிவர்கள் மாநாடு நடந்துநம் நண்பர்கள்
    எல்லாம் ஒருங்கிணைந்து சந்தித்து சந்தோஷித்த நாட்களை நினைக்கும்போதெல்லாம்
    மதுமதியும் தவறாமல் நினைவுக்கு வருவார்... அவர் பதிவுகளை கொஞ்சம்
    பார்ப்போமா??


    உயிரைத்தின்று பசியாறு என்ற இவர் படைப்பு ராணிமுத்து இதழில் 2011
    வெளிவந்துள்ளது )


    கவிதையே காதலாய்... கனவே வாழ்க்கையாய்... வானவில் மேல்
    கூடுகட்டிகூவித்திரியும் குயிலின் ஓசையை கொஞ்சம் கேட்போமா??
    மனிதர்களின் காதலைக்கண்டு அலுத்துப்போய் பறவைகளின் காதலில்
    மனம் லயித்து அட்டகாசமான கவிதை ஒன்று சமீபத்தில் எழுதி
    எல்லோரையும் வசப்படுத்தியவர்இவரின் பதிவுகள் சில பார்ப்போமா?





    இந்த பிள்ளையைப்பற்றி சொல்லனும்னா மனிதம் என்னும் எங்கோ
    மிச்சமாகி இருக்கிறது என்பதற்கு இந்தப்பிள்ளையின் வரிகளை
    படிக்கும்போது உணரலாம்.. அட நிஜமாதாம்பா...மனிதர்களையும்
    தாண்டி பறவைபூச்சிமீன்மிருகம் என்று எல்லா உயிர்களிலும் அதன்
    வலியை அதன் சந்தோஷத்தை அதன் உணர்வுகளை தானாய் இருந்து
    எழுதிய வரிகளை படித்தால் புரியும்....இவரின் சில
    பதிவுகளைப்பார்ப்போமா?






    இவர் ஒரு சுறுசுறுதுறுதுறுமொறுமொறு... என்ன புரியலையா?
    எப்பவும் சுறுசுறுப்பாவே இருப்பார்எப்ப எந்த நேரம் என்ன கேள்வி
    கேட்டாலும் உடனே அதுக்கான பதிலை தேடி எடுத்து
    கொடுத்துருவார்...அப்புறம் துறுதுறுன்னு ஆக்டிவா இருக்கும் இவர்
    பதிவுகள்....மொறுமொறுன்னு ரசிக்கும்படி இவர் அனுபவத்தையே
    படிக்க தருவார்.... சில பகிர்வுகள் படிச்சாலே புரியும் உங்களுக்கு.



    எனக்கு தகப்பன்ஸ்வாமி என் பிள்ளை என்று சொன்னால் அது
    மிகையில்லை. என் நலத்தில், ஆரோக்கியத்தில் அதிக கவனம்
    என் தம்பிக்கு. எப்போதும் தினம் தவறாமல் அழைத்து நான
    நேரத்துக்கு சாப்பிடவேண்டும் என்று மிரட்டியே என்னை
    சாப்பிடவைத்துவிடுவான். என் கருத்துகள் அதிகரிக்கும்போதெல்லாம்
    இவனுக்கு கவலைகள் அதிகரிக்கும். அக்கா உங்க கைவலியை
    பொருட்படுத்தாம இப்படி செய்யாதீங்கன்னு அன்பாக திட்டுவான்.
    தம்பியின் வலைப்பூவில் எப்போது நற்சிந்தனைகளின் தொகுப்புகளும்
    பொன்மொழிகளும் அழகிய கவிதைகளும் அன்பு பதிவுகளும்
    காணலாம் கண்டிப்பாக. பார்ப்போமா சில அவற்றில்?




    மெல்லிய இசை அமைத்து பாடலாக பாடும்படி கவிதைகள்
    படிக்கனும்னா யோசிக்காம நேரா நம்ம வசந்தமண்டபத்துக்கு வந்து
    இளைப்பாறினால் போறும்பா.... நாட்டுப்புற பாடல் வரிகள் தந்தானே
    தந்தானே தந்தாந்த்தனே அப்டின்னு தானாவே நமக்கு
    பாடத்தோன்றிவிடும் மகியின் எழுத்துகளை படிக்கும்போதே.
    கருத்தும் இருக்கும், பாடலும் இருக்கும், மெல்லிய சோகமும்
    இருக்கும், சந்தோஷக்கூச்சலும் இருக்கும். மணம் நிறைந்த 
    மலர்களின் தோட்டமும் இருக்கும். காற்றாட தென்னம்பிள்ளையின்
    வளர்த்தியும் இருக்கும்... சொல்லிக்கிட்டே போகாம உடனே
    பகிர்வுகள் கொஞ்சம் பார்ப்போமா?


    குணக்குன்றான குணசீலனின் வலைப்பூக்கம் சென்றால் இலக்கண
    தமிழ் மணக்கும்.. இனிமையான கருத்துகள் கிடைக்கும்.
    சுவாரஸ்யமான தகவல் சேமிப்பும் அறியலாம். இலக்கியத்திலும்
    சிந்தனையிலும் சீரான எழுத்து நடையிலும் குணசீலனின்
    தனித்தன்மையான எழுத்துகள் வாசிக்க கிடைக்கும்.. அவருடைய
    பதிவுகளில் சில காண்போமா?


    இதை எல்லாம் படிச்சு முடிக்க இன்று ஒரு நாள் போதும் தானேப்பா
    உங்க எல்லாருக்கும்ஏன்னா நாளை நாட்டின் கண்மணிகள் நம்ம
    வலைப்பூவில் அசத்தும் என் மனம் கவர் பெண்மணிகளின் பகிர்வை
    பகிரப்போகிறேன்தயாராயிருங்க படிக்க... சரியா

    இன்றைய பொழுது எல்லோருக்கும் நல்லதை மட்டுமே தர
    இறைவனிடம் என் அன்புப்பிரார்த்தனைகள்.

    No comments:

    Post a Comment

    Related Posts Plugin for WordPress, Blogger...