வலைச்சரம் - நம்பிக்கை - ஐந்தாம் நாள்
FRIDAY, OCTOBER 5, 2012
நம்பிக்கை - கதம்ப உணர்வுகள் ( ஐந்தாம் நாள் )
➦➠ by: மஞ்சுபாஷினி
ஒருவர் மீது நமக்கு நம்பிக்கை ஏற்பட அவரை சந்தேகமாக தொடர அவசியமில்லை… அவரை கண்காணிக்க அவசியமில்லை.. மனதில் அவர்மேல் நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொண்டாலே போதுமானது. நம் மனசுக்கு தெரியும் எது சரி எது தவறு… மனதில் நல்ல எண்ணங்கள் கொண்டு பார்க்கும்போது நமக்கு நல்லவையாகவே தெரியும். நம்பிக்கையும் பெருகும்… மற்றவர் நம்மை நம்ப வேண்டும் என்பதற்காக போராட அவசியமில்லை. நம் நல்ல எண்ணங்கள் அவர் மனதுக்கு தெரியவில்லை என்ற கவலையும் வேண்டாம். நம்மை புரிந்தோருக்கு நம்மை புரியவைக்கவேண்டிய அவசியம் இல்லை. நம்மை புரியாதோருக்கு நம்மை புரியவைக்க வேண்டிய அவசியம் சுத்தமா இல்லவே இல்லை…. நல்லதை தொடர்ந்து நீங்கப்பாட்டுக்கு செய்துக்கிட்டே போங்க. காலம் அவர்களுக்கு உங்கள் நற்செயல்களை உணர்த்தி கண்டிப்பா நம்பிக்கை அவர்கள் மனதில் ஏற்பட்டு தன் நம்பிக்கையின்மைக்கு வருந்தும் நிலை ஏற்படும்… அதனால் எப்போதும் மனதில் நல்ல எண்ணங்கள் கொண்ட பார்வையை எல்லோரிடமும் செலுத்தி நம்புவோம்பா….நல்லதே நடக்கும்….
சரி இன்று என் மனம் கவர் பதிவர்கள் சிலரை அறிமுகப்படுத்துகிறேன்பா..
மனைவியின் இதமான மூச்சுக்காற்றில் தன் சுவாசத்தை நிறுத்தி வாழ்நாட்களை தன் இணையின் நினைவுகளோடு நகர்த்திக்கொண்டிருக்கும் இந்த அற்புதமான புலவரின் மனம் மிக மிக மென்மையானது. எத்தனை சிறிய வயதினரையும் அன்புடன் மரியாதையுடனே அழைப்பது இவரின் பண்பு. இவரின் சில பதிவுகளை பார்ப்போமா?
ஏன் சிரித்தார் பிள்ளையார்?
ஏன் சிரித்தார் பிள்ளையார்?
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது இவரின் அருமையான மனசு...எங்கும் நற்பதிவுகள் கண்டால் உடனே அதை அந்த நல்லவிஷயங்களை, பயன்களை உடனே எல்லோருக்கும் பகிரத்துடிக்கும் மிக அன்பான நல்ல மனம் கொண்ட இனியவர். இவரின் சில பதிவுகளை பார்ப்போமா?
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
குளு குளு குலுமணாலி
ஆடிப்பார்க்கலாம் ஆடு
இலையை எந்தப்பக்கம் மடிக்கலாம்?
இவரைப்பற்றி நான் அறிந்தது ஒரே ஒரு விஷயம்… பின்னூட்டப்புயல், புன்னகையுடன் எல்லோரிடமும் அன்புடன் பழகுபவர். உதவுவதில் முன்னே நிற்பவர்… எப்படி இத்தனையும் தெரியும்னு பார்க்கிறீங்களா? ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் போதும் தானே… இந்த நல்ல உள்ளம் சொல்லும் வாழ்க்கைக்கு பயனுள்ள நல்லவிஷயங்கள் என்னன்னு பார்ப்போமா?
இவர் ஒரு வக்கீல்.. அப்டின்னா இவர் அனுபவத்தில் நிறைய பேர்களின் வாழ்க்கையை சீராக்கி அந்த அனுபவங்களை நம்முடன் பகிர்ந்திருப்பார்னு நினைக்கிறீங்க தானே..கரெக்ட்… இவர் எழுதி இருக்கும் அனுபவங்களை படித்தாலே நிறைய பயனுள்ள கருத்துகள் கிடைக்கப்பெறலாம். பார்ப்போமா?
இவரைப்பற்றி தெரியாதவர்களுக்காக ஒரு தகவல்.... உதவி செய்வதில் முதன்மை. தன் பதிவுகளில் எப்போதும் எல்லோரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பார். சில பதிவுகள் பார்ப்போமா?
இவங்க ரொம்ப ருசியா சமைப்பாங்க. மனிதர்களின் மனதை படிப்பாங்க. அன்பை சந்தோஷமாய் பகிர்வாங்க. கொஞ்சம் இவர் பதிவுகளை ருசிப்போமா? சாரி ரசிப்போமா?
ரசிக்க ரசிக்க தன் அனுபவங்களை பகிர்வதில் இவருக்கு நிகர் இவரே... இவரின் பதிவுகளை படிக்க ஆரம்பித்தால் நிறுத்தவே தோணாது.... அத்தனை தகவல்களையும் தொடர்புடைய படங்களையும் சுவாரஸ்யமாக பகிர்வது மிக அருமை.... பார்ப்போமா இவருடைய சில பதிவுகள்?
நம் சின்னப்பிள்ளை காலத்துக்கே கொண்டு சென்றுவிடும் இவர் பதிவுகள்... படிக்கும் வாசகர்கள் இவர் பதிவுகளை படிக்கும்போதே அட நம் சிறுவயதில் நாம எப்படி இருந்தோம். எப்படி விளையாடினோம்? படித்தோம்? அப்டின்னு நம் மலரும் நினைவுகளை சுவாரஸ்யமாக அழைத்துச்செல்லக்கூடிய இந்த பிள்ளையின் பதிவுகள் சில பார்ப்போமா?
இந்த குட்டிப்பிள்ளையின் வலைப்பூவுக்கு சென்றால் சுறுசுறுப்பான வண்டின் ரீங்காரம் கேட்டுக்கொண்டே இருக்கிறது... கதைகளாக, கவிதைகளாக, படங்களாக, ருசிகரமான சமையலாக.... அம்மா அப்பாவுக்கு 59 ஆம் வருட திருமண நாளுக்கு இந்தக்குழந்தை அன்பு வாழ்த்துகளை கவிதையாக வடித்திருப்பதை படிக்கும்போது அத்தனை சந்தோஷமாக இருந்தது. பார்ப்போமா இந்த குட்டிப்பிள்ளையின் சில பதிவுகளை?
காகிதப்பூக்கள்னு சொல்லிக்கும் இந்த சின்னக்குட்டி மீன் தன்னை ஹோம்மேக்கர்னு சொல்லுவாங்க. ஆனா இந்தப்பிள்ளையின் க்ரியேட்டிவிட்டி யப்பா அத்தனையும் அற்புதமா இருக்கும்... விதம் விதமா வீணாக போட்டுவிடும் பொருட்களில் இருந்து அழகிய படங்களும் விஸ்வரூபமெடுக்கும்... நான் வலைப்பூவில் எழுதாது இருந்த காலத்தில் நான் யாரென்று தெரியாதபோதே இந்தப்பிள்ளை அன்புடன் ஓடி வந்து அக்கா நீங்கள் மீண்டும் எழுதவேண்டும் என்று அன்பு வேண்டுகோள் வைத்த இந்தக்குழந்தையை எனக்கு அப்பவே ரொம்ப பிடித்துவிட்டது. பார்ப்போமா இந்தப்பிள்ளையின் அசத்தல் பதிவுகளை?
Teddy Bear /Easel Card /Tutorial
Advent /Christmas Count Down
மனதில் அன்பை மட்டுமே நிறைத்து வைத்திருக்கும் கீதம் எனக்கு தமிழ் மன்றத்தில் அறிமுகம் ஆனவர். ஆனால் இவருக்கு ப்ளாக்ஸ்பாட் இருக்கிறது என்பதே தெரியாமல் இவரின் ஒரு கவிதையை படித்து ரொம்ப மனம் நெகிழ்ந்து போய் பின்னூட்டம் இட்டேன். பின் தான் தெரியவந்தது இவருக்கு என்னை மிக நாட்களுக்கு முன்பே தெரியும் என்பது. அற்புதமான பெண் இவர். வார்த்தைகளில், பதிவுகளில், நலன் விசாரிப்பில் அன்பு அன்பு அன்பு மட்டுமே... இந்த அன்பு உள்ளத்தின் பதிவுகளை பார்ப்போமா?
இந்த காட்டான் எனும் அற்புதமான பிள்ளையைப்பற்றி சொல்லவேண்டும் என்றால்..... எளிமையும், நல்ல மனமும் பண்பும் நிறைந்த ஒரு நல்ல சகோதரன். வலிய வந்து சகோதரி சுகமாக இருக்கிறீர்களா என்று எத்தனை அவசர வேலையிலும் வந்து விசாரிக்கும் இந்த நல்ல மனிதரின் பதிவுகளிலும் அந்த வாத்ஸல்யம் தெரியும், இவரின் பதிவுகளைப்பார்ப்போமா?
மனத்திண்மை இவர் பதிவுகளில் நான் காண்பதுண்டு. மனிதநேயம் இந்த நல்ல மனிதரின் நலன் விசாரிப்பதில் கண்டதுண்டு. நகைச்சுவை யார் மனமும் புண்படாமல் பதிவுகளில் எழுதுவதில் நான் காண்பதுண்டு. அருமையான இந்தப்பிள்ளையின் பதிவுகள் சில பார்ப்போமா?
இன்றைய நாள் எல்லோருக்கும் வெற்றிகளை குவிக்கும் சக்தியை கொடுக்க என் அன்புவாழ்த்துகள்.
Tweet |
No comments:
Post a Comment