அன்பு பரிமாற்றம் - கதம்ப உணர்வுகள் முதல் நாள்
MONDAY, OCTOBER 1, 2012
அன்பு பரிமாற்றம் - கதம்ப உணர்வுகள் முதல் நாள்
➦➠ by: மஞ்சுபாஷினி
வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பேற்க என்னை பரிந்துரைத்த வை.கோபாலகிருஷ்ணன் அண்ணாவுக்கும் , அவர் பரிந்துரைத்ததை நம்பிக்கையுடன் எடுத்து எனக்கு வாய்ப்பளித்த சீனா ஐயா அவர்களுக்கும் என் மனம் நிறைந்த அன்பு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
அண்ணா, சீனா ஐயா இருவருமே என்னிடம் பேசும்போது தன் குழந்தையிடம் ஒரு தந்தை எத்தனை பரிவாக ஆறுதலாக அன்பாக பேசுவார்களோ அதுபோல எனக்கு தைரியம் கொடுத்து பேசினார்கள் இருவர் குரலிலும் தெரிந்த அன்பு என்னை எழுதவைக்கும் என்ற நம்பிக்கையை ஊட்டியது.
ஜாம்பவான்கள் ஆசிரியர் பொறுப்பேற்றிய வலைச்சரத்தில் இதோ நானும்… ஒரு தவழும் குழந்தையாக….
என்னைப்பற்றிய முன்னுரை….
என் பெயர் மஞ்சுபாஷிணி (என் தாத்தா ஆசையாக வைத்த பெயர்) நான் குவைத்தில் என் கணவர் (சம்பத்குமார்) இரண்டு பிள்ளைகளுடன் (விக்னேஷ்ராம், இபானேஷ்ராஜ்) அம்மாவுடன் (கிரிஜாநந்தகோபால்) வசிக்கிறேன்.
வலைப்பூவை பற்றி எதுவுமே தெரியாமல் இருந்த எனக்கு 2007 இல் என் தோழி கிருஷ்ணபக்தை பத்மஜா எனக்கு ஒரு வலைப்பூ தொடங்கி அதற்கு தலைப்பு கதம்ப உணர்வுகள் என்று வைத்து என் படைப்புகளை இதில் போடச்சொல்லி தந்தார்…. இப்படியாக வலைப்பூவில் என் படைப்புகள் இட்டுக்கொண்டே வந்தேன்…
சென்ற வருடம் கூகுளில் என்னவோ தேடப்போக அது நேராக ரமணி சார் வலைப்பூவில் கொண்டு வந்து விட்டது… அட ஒரு அழகிய கவிதை… எளிமையான வரிகள்… உடனே அதற்கு விமர்சனம் எழுத முனைந்தேன்.. எழுதினேன். அப்போது தொடங்கியது இந்த பயணம் இனிமையாக…. ரமணிசார் ஃபாலோயர் லிஸ்ட்ல இருந்தவர்களின் (வை.கோபாலகிருஷ்ணன் அண்ணா, ரிஷபன், இராஜராஜேஸ்வரிம்மா….வலைப்பூவுக் கெல்லாம் சென்று அருமையான அற்புதமான படைப்புகளை பார்த்தேன்… அங்கங்கே படைப்புகளை படித்து விமரிசனம் எழுதுவதை தொடர்ந்தேன்…
இன்று நான் வலைப்பூவில் பலரின் படைப்புகளை காணவும் விமர்சனம் எழுதவும் காரணமாக இருந்த ரமணிசாருக்கு என் மனம் நிறைந்த அன்புநன்றிகள்…
அதில் இருந்து ஒவ்வொரு வலைப்பூவுக்கும் சென்று விமர்சனம் எழுதிக்கொண்டிருந்தேன்.. அதன்பின் ரமணிசார், மதுமதி, ஸாதிகா, RAMVI இன்னும் சிலர் என் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்துவதை கண்டேன்… அவர்கள் எல்லோருக்குமே என் மனம் நிறைந்த அன்பு நன்றிகள்.
அன்பை எல்லோரிடமும் அன்பாய் பகிரும்போது அங்கே அன்பு சூழ்ந்த நட்பு மலரும் என்பது என் நம்பிக்கை… காண்போர் எல்லோருமே நல்லவர் என்ற என் நம்பிக்கை பொய்க்கவில்லை.. வலைப்பூவில் இருக்கும் எத்தனையோ பேரிடம் நான் பேசி இருக்கிறேன்.. என்னிடம் பேசுவோர் அன்புடன், பண்புடன் கண்ணியம் மீறாத குணத்துடன் பேசுவதை கண்டபோது இன்னும் எனக்கு எல்லோர் மீதும் மதிப்பும் அன்பும் நம்பிக்கையும் பெருகியது… சமீபத்தில் நடந்த பதிவர் மாநாடு பற்றிய விவரம் நண்பர் மின்னல் வரிகள் பாலகணேஷ் என்னிடம் சொன்னபோது அடடா இதுபோன்ற அரியவாய்ப்பு இனி எப்போது கிடைக்குமோ என்று நினைக்கவைத்த அந்த அருமையான பதிவர் மாநாடு குடும்பத்தில் இருக்கும் உறவுகள் எங்கெங்கோ உலகின் பல மூலையில் இருந்து ஒன்று சேர்ந்தது போல தான் எனக்கு பட்டது….அதற்கு காரணம் அன்பு மட்டுமே பிரதானம்…. அந்த அன்பு இனியும் எப்போது எல்லோரிடமும் தொடர இறையிடம் என் அன்பு பிரார்த்தனைகள்…
என்னுடைய வலைப்பூவின் என் மனம் கவர்ந்த கவிதைகள் சில…
1. வலியின்றி
2. நட்பூ
6. வார்த்தைகள்
என்னுடைய வலைப்பூவின் என் மனம் கவர்ந்த கதைகள் சில...
2. சிகரம் தொட
இன்றைய நாள் எல்லோருக்கும் நல்ல பொழுதாய் மலர அன்பு பிரார்த்தனைகள்....நாளை முதல் என் மனம் கவர் பதிவர்களின் ரசனைகளுடன் பகிர்வுகளுடன் சந்திப்போம்...
Tweet |
No comments:
Post a Comment