"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Tuesday, October 16, 2012

ஓருடல் ஈருயிர் - நான்காம் பாகம்




இபான் விவான் இருவருக்கும் கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போலாயிற்று...

இருவரும் சரியாக சாப்பிடாமல் உறங்காமல் அப்பாவை நினைத்து வேதனையுடன் இருந்தனர்....

சில நாட்கள் இருவரும் வீட்டுக்குள்ளேயே இருந்தனர் முடங்கி....

கம்பனி மேனேஜர் சந்திரன் இருவரையும் வந்து பார்த்து ஆறுதல் சொன்னதோடு நிற்காமல், நீங்க இருவரும் கம்பனி பொறுப்புகளை ஏற்பது நலம்..அப்பாவின் விருப்பமும் அது தான் தயவு செய்து நாளை முதல் நீங்க இருவரும் கம்பனிக்கு வாங்க என்று சொல்லிவிட்டு வெளியேறினார்...

மறுநாள் இருவருமே கம்பனிக்கு சென்று அப்பாவின் அறைக்குள் நுழைந்தனர்... அங்கே அப்பாவின் பெரிய புகைப்படத்திற்கு சந்தனமாலையிட்டு இருந்தனர்... அறை சுத்தமாக இருந்தது...

பணியாளர்கள் பணிவு கலந்த அன்புடன் இருவரையும் வாங்க என்று அழைத்தனர்...

இருவருக்கும் கம்பனிக்கு போய் உட்கார்ந்து வேலைகளை கவனிக்க தொடங்கியபோது மனம் சிறிது ஆறுதலானது.

அன்று கடிதங்கள் சில வந்திருப்பதை கொண்டு வந்து கொடுத்தான் பணியாளன்.

இபான் நீ கடிதங்களை பாரு. நாம் ஏற்றுமதி செய்ய வேண்டிய ஆடைகள் பற்றிய ஃபைல் செக் செய்கிறேன் என்றபடி ஃபைலில் ஆழ்ந்தான் விவான்..

இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள இயலாத நிலையில் இபான் ஒவ்வொரு கடிதமாக பார்த்துக்கொண்டே வந்தபோது ஒரு கடிதம் அவனை ஈர்த்தது...

எடுத்து வாசிக்க ஆரம்பித்தான்...

அன்புள்ள கவிதா,
நீ சொன்னது போலவே நானும் சர்டிபிகேட்ஸ் காப்பி இதனுடன் இணைத்து  அனுப்பி இருக்கேன். கண்டிப்பா எனக்கு காலேஜ்ல சீட் வாங்கித்தர உன் அப்பாவை உதவச்சொல்லு.. இங்கே வீட்டில் என்னை எப்படியாவது எங்க மாமாவுக்கு திருமணம் செய்ய கட்டாயப்படுத்துறாங்க... எனக்கு மேற்கொண்டு படிப்பதில் தான் விருப்பம்...

இப்படிக்கு
ஷ்யாமளி

அதனுடன் இணைத்திருந்த சர்டிபிகேட்ஸ் காபிகளும் போட்டோவும் கண்டான். போட்டோவில் தேவதை போல் இருந்தாள் அந்தப்பெண்.. பார்த்ததுமே ஈர்த்துவிட்டது அவன் மனதை... சொல்லவொண்ணா சந்தோஷங்கள் மெல்ல அவன் மனதில் படர ஆரம்பித்தது... உடனே அனுப்பிய முகவரியை எடுத்து பார்த்தான்... முகம் மலர்ந்தது... மெல்ல அதற்கு பதில் எழுத ஆரம்பித்தான்...

அன்பே.....
தவம் செய்யாது
கிடைத்த வரமாய்
என் அனுமதியில்லாது
அமர்ந்தாய் என் மனதில்
மகாராணியாய்.....

இது எதுவுமே அறியாத விவான் ஃபைலில் மூழ்கி இருந்தான்...

கடிதத்தை பத்திரமாக ஷ்யாமளியின் முகவரி எழுதி பலமுறை சரிப்பார்த்துவிட்டு எழுதி போஸ்ட் செய்யவேண்டிய கடிதங்களுடன் சேர்த்து வைத்தான் இபான்.

பதில் கடிதம் பெற்ற ஷ்யாமளி குழம்பினாள்....

"இது என்னது? நாம் எழுதியது கவிதாவுக்கு தானே? இது எப்படி இது யார்? ஒன்றும் புரியவில்லையே.." என்று எண்ணியபடி கடிதத்தை பத்திரமாக தன் நோட்புக்ஸ்குள் ஒளித்துவைத்தாள் ஷ்யாமளி....

ஷ்யாமளி வாடி தோசை வார்த்திருக்கேன் சாப்பிட வா...

இதோ வரேன்மா....

கால்கள் தரையில் பாவாமல் பறப்பது போல் உணர்ந்தாள்..... முதன் முதல் தனக்கு ஒரு காதல் கடிதம்.... எழுதியவன் எப்படி இருப்பான்? யார் என்ற விவரம் தெரியாத நிலையில்.... பதில் எழுதி அனுப்புவோமா என்று யோசிக்க ஆரம்பித்தாள்...

நொங்கென்று தலையில் குட்டுவிழ அதிர்ச்சியுடன் நிமிர்ந்தாள் ஷ்யாமளி...\

"என்னத்த யோசிச்சுட்டு இருக்கே? சாப்பிடச்சொன்னால்?"

"என்னையும் உன்னையும் அனாதையா விட்டுட்டு ஓடிப்போயிட்டார் உங்கப்பா.. உன்னை ஒருத்தன் கைல சேர்க்கறதுக்குள்ள நான் படும் பாடு இருக்கே...."

பர்வதத்தின் புலம்பல்கள் தொடர்ந்தது...

ஷ்யாமளி சத்தமில்லாமல் நகர்ந்தாள்.. வந்த கடிதத்திற்கு பதில் எழுத.....

அன்புடைய....

பெருமதிப்பிற்குரிய....

யார் நீங்கள் ஏன் இப்படி எல்லாம்?

பலமுறை எழுதி கிழித்து கசக்கி எறிந்தாள்....

எப்படி எழுத ஆரம்பிப்பது? புரியாமல் குழம்பினாள் ஷ்யாமளி....

கடிதம் எங்கிருந்து வந்திருக்கிறது என்று முகவரியை மீண்டும் பார்த்தாள்....

அட..... இங்கிருந்து அரைமணி நேரம் தான் பஸ்ஸில் போனால்....

நேரில் சென்று போய் கோபமாக கேட்போமா? கடிதம் எழுதுவனை திட்டுவது போல அவனைப்பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமே....

ஹுஹும் வேண்டாம். பெண் இத்தனை தைரியமாக தனியாக வந்திருக்கிறாளே என்று இளப்பமாக பார்த்துவிட்டால்?

என்னென்னவோ யோசனைகள் மனதில் எழுந்து அடங்கியது ஷ்யாமளிக்கு....

சிந்தனை முடிச்சுகளுடன் அப்படியே உறங்கிவிட்டாள்....

முகம் தெரியாத ராஜகுமாரன் குதிரையில் வெள்ளை உடையில் ஸ்லோமோஷனில் வந்து இவளை தட்டி எழுப்பி அலாக்காக தூக்கி குதிரையில் அமர்த்திக்கொண்டு திரும்பியபோது வெள்ளைக்குதிரைக்கு இறக்கைகள் முளைத்து விரிந்தன.... அப்படியே குதிரை வானில் பறக்க ஆரம்பித்தது இருவரை சுமந்துக்கொண்டு....

கனவில் ராஜகுமாரன்.... ஷ்யாமளி கனவின் மயக்கத்தில்.....

(தொடரும்..)

13 comments:

  1. வித்தியாசமான காதல் கதையா இருக்கே... நடத்துங்க நடத்துங்க... நல்லா இருக்குங்க மஞ்சு

    ReplyDelete
  2. மாற்றான் திரைப்படம் நினைவில் வருவதைத் தவிர்க்கமுடியவில்லை...

    ReplyDelete
  3. தொடர் படிக்கிற மாதிரி ஒரு இன்ப அவஸ்தை வேறெதுவும் இல்லை. என்ன ஆகுமோ என்று நகம் கடித்து கவனம் கலைந்து அலைகிற காய்ச்சலிலிருந்து எப்படி தப்பிப்பது.. அதுவும் கதை ஜோராய் போகும் போது. ஷ்யாமளி (எனக்குப் பிடித்த பெயர்) என்ன பண்ணப் போறாளோ..

    ReplyDelete
  4. இரண்டு கதாநாயகர்களுக்கு ஒரு கதாநாயகியை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். அதுவும் காதல் அவஸ்தையில் ஷ்யாமளியைச் சிக்க வைத்து உணர்வுகளை அழகாய் எழுதியிருக்கிறீர்கள். தொடரும் பகுதிக்காக ஆவலுடன் என் காத்திருப்பும்.

    ReplyDelete
  5. இனி வண்டி ஓடுற பாதையில் எனக்கு அந்தளவிற்கு அக்கறை இல்லாததால் இரண்டு மூன்று பதிவுகள் வந்த பின்பு ஒரு சேர படிப்பதே எனக்கு உசிதம் என்று எண்ணுகிறேன்.

    பார்க்கலாம்..!

    நன்றி அக்கா.

    ReplyDelete
  6. //அப்பாவி தங்கமணி said...
    வித்தியாசமான காதல் கதையா இருக்கே... நடத்துங்க நடத்துங்க... நல்லா இருக்குங்க மஞ்சு//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் தங்கமணி முதல் வரவுக்கும் இனிய கருத்துக்கும்....

    ReplyDelete
  7. //இராஜராஜேஸ்வரி said...
    மாற்றான் திரைப்படம் நினைவில் வருவதைத் தவிர்க்கமுடியவில்லை...//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் இராஜராஜேஸ்வரி கருத்து பகிர்வுக்கு...

    ReplyDelete
  8. //ரிஷபன் said...
    தொடர் படிக்கிற மாதிரி ஒரு இன்ப அவஸ்தை வேறெதுவும் இல்லை. என்ன ஆகுமோ என்று நகம் கடித்து கவனம் கலைந்து அலைகிற காய்ச்சலிலிருந்து எப்படி தப்பிப்பது.. அதுவும் கதை ஜோராய் போகும் போது. ஷ்யாமளி (எனக்குப் பிடித்த பெயர்) என்ன பண்ணப் போறாளோ..//

    தொடர் படிக்கனும்னா முந்தி எல்லாம் ஆனந்தவிகடன்ல காத்திருப்பேன் அடுத்து என்னாகும் என்னாகும் அப்டின்னு... ஒரு கதை முன்பு வந்தது.. ரொம்ப அருமை. ஆனா முடிவு ஊகிக்க முடியாதமாதிரி இருந்ததுப்பா...

    அட ஆமாம்பா உங்க ரீசண்ட் ஒரு கதைல படிச்சேன் ஷ்யாமளி பெயர்....

    மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ரிஷபா கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  9. //பால கணேஷ் said...
    இரண்டு கதாநாயகர்களுக்கு ஒரு கதாநாயகியை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். அதுவும் காதல் அவஸ்தையில் ஷ்யாமளியைச் சிக்க வைத்து உணர்வுகளை அழகாய் எழுதியிருக்கிறீர்கள். தொடரும் பகுதிக்காக ஆவலுடன் என் காத்திருப்பும்.//

    இல்லவே இல்லப்பா ஒரு ஜோடிக்கான கதைநாயகி தான் இந்த ஷ்யாமளி :)

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் கணேஷா கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  10. //சிவஹரி said...
    இனி வண்டி ஓடுற பாதையில் எனக்கு அந்தளவிற்கு அக்கறை இல்லாததால் இரண்டு மூன்று பதிவுகள் வந்த பின்பு ஒரு சேர படிப்பதே எனக்கு உசிதம் என்று எண்ணுகிறேன்.

    பார்க்கலாம்..!

    நன்றி அக்கா.//

    ஒன்னுமே புரியல தம்பி...

    ReplyDelete
  11. நாங்க சொல்றது என்னன்னு எங்களுக்கே முதல்ல புரியாது. அப்புறம் எப்படி உங்களுக்கு புரியறது?? :)

    கண்மூடித்தனமான காதல் > பிடிக்காத விசயம். அதைத்தான் சொல்லுறோமுங்க தாயீ.

    ReplyDelete
  12. கதையின் போக்கில் திடீர் திடீரென மாற்றங்கள்.

    வேகமாகச் செல்கிறது இந்தக்கதை.

    காதலும் சேர்ந்துள்ளது இந்தப்பகுதியில்,
    இனி ஒரே கற்பனைக்கல்கண்டு தான்.

    //அப்படியே குதிரை வானில் பறக்க ஆரம்பித்தது இருவரை சுமந்துக்கொண்டு....

    கனவில் ராஜகுமாரன்.... ஷ்யாமளி கனவின் மயக்கத்தில்...//

    கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு விட்டீர்கள்.

    நாங்களும் ஷ்யாமளியுடன் பறந்துகொண்டே வர இருக்கிறோம்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். தொடருங்கள்....

    பிரியமுள்ள
    கோபு அண்ணா

    ReplyDelete
  13. கதை தடம் மாறுதா? சுவாரசியமாத்தான் இருக்கு.

    படம் எங்கே பிடிச்சீங்க? யார் வரைந்தது? விவரம் சொல்லுங்களேன்?

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...