"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Tuesday, October 16, 2012

பக்தமீரா தொடர்ச்சி - 7



19. 
போராட்டமே என் வாழ்க்கை என்றானபோதும்
போராது இன்னும் இன்னல்கள் தந்தபோதிலும்
கோணாது என் மனம் அறிவாயோ நீயும்
கோபாலனே மனம்கவர் கள்வனே கண்ணா

20.
உண்ணும் கவளம் என் உள்ளிறங்கவில்லை
உள்ளிருந்து நீயும் எனை உண்ணவைப்பதில்லை
உன்னுயிராய் நான் வாழவேண்டி தானே
உனக்காய் ஜென்மம் எடுத்தேனே கண்ணா

21.
பாதைகள் நமது வேறானது என்றாலும்
ராதைகள் கூட்டமாய் உனைசூழ்ந்த போதிலும்
கோதையாய் உன்னை என்ணி நானும்
பேதைமீரா உன்காதலுக்காய் காத்திருப்பேன் கண்ணா

8 comments:

  1. இப்போ உள்ள காலத்துல மீரா மாதிரி ஒரு பொண்ண பாக்குறது ரொம்ப கஷ்டம்...

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  2. படமும் வரிகளும் சிறப்பாக உள்ளது .மேலும் தொடர
    வாழ்த்துக்கள் சகோதரி .

    ReplyDelete
  3. உண்ணும் கவளம் என் உள்ளிறங்கவில்லை
    உள்ளிருந்து நீயும் எனை உண்ணவைப்பதில்லை
    உன்னுயிராய் நான் வாழவேண்டி தானே
    உனக்காய் ஜென்மம் எடுத்தேனே கண்ணா

    மீராவின் காதல் வெளிப்பாடு வரிகளில் மின்னுகிறது அக்கா.

    ReplyDelete
  4. உண்ணும் கவளம் என் உள்ளிறங்கவில்லை
    உள்ளிருந்து நீயும் எனை உண்ணவைப்பதில்லை
    உன்னுயிராய் நான் வாழவேண்டி தானே
    உனக்காய் ஜென்மம் எடுத்தேனே கண்ணா

    உள்ளம் உருகும் உன்னத வரிகள்... பாராட்டுக்கள்..

    ReplyDelete
  5. பேதை மீராவின் காதல் மனதில் நிற்கிறது. அருமைங்க.

    ReplyDelete
  6. //உண்ணும் கவளம் என் உள்ளிறங்கவில்லை
    உள்ளிருந்து நீயும் எனை உண்ணவைப்பதில்லை
    உன்னுயிராய் நான் வாழவேண்டி தானே
    உனக்காய் ஜென்மம் எடுத்தேனே கண்ணா//

    மீராவின் உணர்வுகள் மிகவும் மெச்சத்தக்கவை.
    அவள் கண்ணன் மேல் வைத்திருந்த தூய்மையான பக்தியும், காதலும் போற்றத்தகுந்தவை.

    தென்நாட்டில் ஆண்டாள் போலவே
    வடநாட்டில் இந்த மீரா.

    மீராவைப்பற்றிய ஜோரான பதிவுக்கு
    என் மனமார்ந்த நன்றிகள், மஞ்சு.

    பிரியமுள்ள
    கோபு அண்ணா

    ReplyDelete
  7. இதுவரை வெளிவந்த அனைத்து 21 மீரா பாடல்களும் புதியதாய் எழுதியவை போல் தெரிகின்றன. நல்ல மெருகுடன் குறை சொல்ல இயலாமல் அருமையாய் அமைந்துள்ளன.. எனது மனமார்ந்த பாராட்டுகள்..!

    ReplyDelete
  8. அன்பின் மஞ்சு - பக்த மீரா கண்ணனை நினைத்து உருகாத நாளை இல்லை - அத்தனையும் காதல் ரசம் - பக்தி ரசம் - இரண்டுக் கலந்து எழுதப்பட்ட பாடல்கள் - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...