"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Sunday, July 24, 2011

கதை 10. மரணத்தின் நிழல்....


கதை 10. மரணத்தின் நிழல்

என்னாச்சு ஆண்ட்டி சத்யாவுக்கு?? அதிர்ச்சி நீங்கா முகத்துடன் மஞ்சு...

தெரியலம்மா நல்லா தான் இருந்தா ராத்திரி தண்ணி வேணும்னு கேட்டா கொண்டு வந்து கொடுக்கிறதுக்குள்ள.... என்று நிறுத்தி வாய் பொத்தி அழுதார் சத்யாவின் அம்மா....

இதோடு இது எத்தனையாவது சாவு என்று யோசித்துக்கொண்டே நடந்து வந்ததில் வீடு வந்ததை அறியாது போய்க்கொண்டே இருக்க....

நீயும் உண்டு காத்திரு என்ற சப்தம் அவள் நடையை நிறுத்தியது...

பயத்துடன் திரும்பி பார்த்தாள் யாரு யாரு என்று கத்த நினைத்து தொண்டைக்குழிக்குள் என்னவோ அடைத்தது போல் உணர்ந்தாள்....

பயத்தில் வீடு நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தாள் மஞ்சு....

நான்கே நாட்களில் சகுந்தலாவின் மறைவு.....

என்ன தான் நடக்கிறது தலையை பிய்த்துக்கொண்டாள்....

பாட்டி வீடு போய் வந்தால் கொஞ்சம் மனசு சாந்தியாகுமா என்று எண்ணியபடி வீட்டில் வேலைகளை வேகமாக முடித்துவிட்டு பஸ் பிடித்து போய் பாட்டி வீட்டில் இறங்கினாள்...

வசந்தி அங்கே வாழை மரத்தடியில் உட்கார்ந்து அரிசி புடைத்துக்கொண்டிருப்பதை கண்டாள்...

வசந்தி சிநேகபாவத்துடன் சிரித்துக்கொண்டே எப்டி இருக்கீங்க மஞ்சு என்ன இந்த பக்கம் என்று கேட்டுக்கொண்டே இருந்தபோது தான் அந்த மாறுதலைக்கண்டாள்....

சகுந்தலாவை எப்படி கொண்டு போனோம் தெரியுமா என்ற குரல் சத்தியமாக வசந்தியுடையது இல்லை...

அதிர்ச்சியுடன் கால்கள் நகரமுடியாது நாக்கு ஒட்டிக்கொள்ள பயம் விலகா கண்களுடன் பார்த்தாள்....

கும்பலாக தான் போனோம்... கதை பேசிக்கொண்டே இருந்தோம்..... கிளம்பும் நேரம் வந்தது..... பாடத்தொடங்கினோம்..... எம்மில் ஒருவர் சகுந்தலாவைத்தூக்கிக்கொண்டு போனோம்.... அடுத்து நீ காத்திரு எங்களுக்காக..... சொல்லி முடித்து உடல் உலுக்க வசந்தி சகஜ நிலைக்கு மாறினாள்... என்ன இங்கயே நிக்கிறீங்க? குடிக்க நீர் கொடுக்கவா என்று தன் இயல்பான குரலில் கேட்டாள் வசந்தி....

மஞ்சு திரும்ப எத்தனிப்பதற்குள் பாட்டி அங்கே முருங்கைக்கீரையுடன் தட்டில் வைத்துக்கொண்டு அம்மிக்கல்லில் மிளகாய் வைத்து அரைக்க வந்துக்கொண்டிருந்தார்....

மஞ்சு இதை அரைத்துக்கொடு என்றபடி தட்டை மஞ்சுவின் பதிலுக்காக காத்திராமல் வீட்டுக்குள் போனார்...

செத்தவர் உயிர்க்கமுடியுமா? என்ன நடக்கிறது ஒன்றுமே புரியவில்லையே என்று பயத்துடன் முருங்கைக்கீரை மிளகாய் உப்பு எல்லாம் ஒன்றாய் அம்மிக்கல்லில் வைத்து அரைக்கும்போது கருப்பு உருவத்துடன் சிவந்த கண்களுடன் மண்டைஓட்டு தலைகள் கோர்த்த மாலையுடன் கோரப்பற்களுடன் காளி தோற்றத்தில் சிரித்தாள் ஒரு பெண் மஞ்சுவின் முன்....

பயத்தில் கண்கள் சுழற்ற மயக்கத்தில் போகுமுன் காளியின் அசரீரி குரல் காதில் கேட்டது.....

மஞ்சு அடுத்து உன்னை தான் குறி வைத்திருக்கிறார்கள்... இதே போல் கும்பலாய் வருவார்கள்.... நீ அவர்கள் கண்ணுக்கு தென்படாது ஒளியப்பார்ப்பாய்... விடமாட்டார்கள்.... உன்னையும் கொண்டுப் போவார்கள்.... கதைப்பேசிக்கொண்டே இருப்பார்கள்.... கிளம்பும் நேரம் பாட்டுப்பாடும் வைபவம் தொடங்கும்.... உன்னை கொண்டுப்போவார்கள்.... கொண்டுப்போவார்கள்.... மயக்கத்தில் பூரணமாய் ஆழ்ந்தாள் மஞ்சு.....

என்னாச்சு என்னாச்சு என்று எல்லோரும் பதறி ஓடி வர சற்றுமுன் முருங்கை கீரை தட்டில் கொடுத்த பாட்டி அங்கே படத்தில் சிரித்துக்கொண்டிருக்க மாலை வாடிப்போய் காய்ந்து ஆடிக்கொண்டு இருந்தது....

மஞ்சு வந்து என்னிடம் பேசிக்கிட்டு இருந்தாங்க குடிக்க தண்ணி வேணுமான்னு கேட்டேன் ஒன்னும் பதில் சொல்லாம இங்க வந்து மயக்கம் போட்டு விழுந்துட்டாங்களே மம்மிக்கு போன் போட்டு சொல்லிருவோமா? டாக்டர் கிட்ட கூட்டிட்டு போகலாம் தூக்குங்க....

மருந்து வாசனையும் டெட்டால் வாசனையும் பிடிக்காத மூக்கு மெல்ல விரிந்து கண்கள் மலர்த்தினாள் மஞ்சு.....

ஆஸ்பிட்டலில் இருப்பதை உணர்ந்தாள்... சுற்றி குடித்தனக்காரர்கள் நிற்பதை பார்த்து என்னாச்சு எனக்கு என்றாள்...

ஒன்னுமில்லம்மா மயக்கம் போட்டு விழுந்துட்டீங்க... ஹாஸ்பிட்டல்ல சேர்த்தோம்... ஒன்னுமில்லை சின்ன மயக்கம் தானாம் சோர்வுன்னு டாக்டர் சொன்னார் நீங்க தூங்குங்க நாங்க மம்மிக்கு போன் பண்ணிட்டோம் இதோ வராங்களாம் இடைவிடாத குரலில் வசந்தி சொல்லிக்கொண்டே போக இதெல்லாம் கனவா இல்லை நான் இதற்கு முன் கண்டது கனவா என்ற பிரம்மை விலகாத நிலையில் மஞ்சு திரும்ப ஆழந்த உறக்கத்தில் போனாள்....

வீடே ஒரே கொண்டாட்டமாக இருந்தது... குடும்பத்தினர் உறவுகள் எல்லோரும் ஒரே இடத்தில் சேரும்போது சிரிப்புக்கும் சத்தத்துக்கும் குறைவே இருப்பதில்லை....

பெரியம்மா குடும்பத்தினர் , அத்தை குடும்பத்தினர் மாமா குடும்பத்தினர் இப்படி எல்லாரும் சேர்ந்து வீட்டில் குமிந்திருப்பதை கண்டு மஞ்சுவுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது....

எல்லோரும் சாப்பிட்டு ஒரு சிலர் கண்ணயர ஒரு சிலர் சிரித்து பேசிக்கொண்டிருக்க சத்தமே இல்லாது நாலைந்து பேர் ஒன்றாய் வீட்டில் நுழைவதை மஞ்சு பார்த்தாள்... உடல் முழுதும் சிலிர்த்து அடங்கியது.... யாரும் இவளை பார்க்கவில்லை.... ஆனால் மஞ்சுவின் பார்வை அவர்கள் மேல் படுவதை அவர்கள் அறிந்துவிட்டார்களோ என்ற பயத்தில் அவள் உடல் பதற தொடங்கியது....ஐயோ இவர்கள் கண்ணில் நான் படக்கூடாது படவே கூடாது என்று சொல்லிக்கொண்டே போய் ஒரு ரூமில் ஒளிந்துக்கொண்டாள் பீரோவின் பக்கம் இருந்த கொஞ்சம் இடத்தில்.....

வந்த கும்பல் எல்லோரிடம் உட்கார்ந்து சிரித்து பேசிக்கொண்டிருந்தது..... எல்லோரும் இவர்களுக்கு உபசரிப்பதையும் நீர் குடிக்க கொடுப்பதையும் பயத்துடன் சத்தங்கள் மூலம் உணர்ந்தாள்...

அத்தைப்பெண் சுகன்யாவும் தங்கை ஷோபியும் கதவை திறந்துக்கொண்டு வர இவள் பீரோவின் அருகே ஒளிந்திருப்பதை கண்டு சிரித்தனர்.

ஏன் மஞ்சு ஒளிஞ்சிருக்கே?

பயமா இருக்கு...

ஏன்?

என்னை கொண்டு போக வந்திருக்காங்க...

யாரு இப்ப வந்தவங்களா? இவங்க உங்க டாடி ஃப்ரெண்ட் குடும்பமாம்... வந்து பேசிக்கிட்டு இருக்காங்க.... இன்னும் சிறிது நேரத்தில் கிளம்பிருவாங்க... ஏன் மஞ்சு இப்படி பயந்து வியர்த்திருக்க?

ப்ளீஸ் ப்ளீஸ் ஷோபி.... என்னை காப்பாத்து...

என்னாச்சுடி ?

என்னை இவர்கள் பார்க்க கூடாது... நான் இங்கிருப்பதை இவர்கள் அறியக்கூடாது ப்ளீஸ் ப்ளீஸ் என்று அழத்தொடங்கினாள் மஞ்சு....

மஞ்சு நீ ஏன் இப்படி சம்மந்தா சம்மந்தம் இல்லாம நடந்துக்கிறே? அவங்க கிட்ட வாங்க எப்படி இருக்கீங்க வணக்கம்னு சொல்லிட்டு வந்துருன்னு கையை பிடிக்கும்போது....

மஞ்சுவின் கண்களில் மரண பயம் தேங்கி இருப்பதை கண்டு ஷோபி கலக்கமுற்றாள்....

மஞ்சு என்னாச்சு ஏன் இப்படி பயப்படறே?

என்னை இந்த ஒரு முறை காப்பாற்றிடு ஷோபி ப்ளீஸ் என்று ஷோபி கைப்பிடித்து அழுதாள் மஞ்சு....

சரி சரி பீரோவின் அருகே ஒளியாதே..... மூச்சு முட்டும்... நானே கதவை சாத்திக்கிட்டு போறேன்... ஃபேன் போட்டு படு நீ என்று சொல்லிவிட்டு கதவை வெளிப்புறம் சாத்திவிட்டு போனாள் வந்தவர்களுக்கு டீ வைக்க....

மஞ்சு பயத்துடன் உடல் முழுவதும் நடுங்கிக்கொண்டே அவர்கள் குரலை கேட்டுக்கொண்டு இருந்தாள்.....

கொண்டு போவோம் கலக்கமில்லாமல் இயல்பாய் இரு..... இந்தப்பயணம் எளிது உனக்கு... சொன்னால் கேளு என்ற சப்தம் மண்டையில் இடியாய் இடித்தது.... மனம் பயத்தில் உதறிப்போட உடல் சக்தியே இல்லாது போவதை உணர்ந்தாள் மஞ்சு....

சடாரென்று கதவு திறக்கப்படும் சப்தம் கேட்டு பதறி எழுந்தாள்....

அத்தைப்பெண் அனு கதவை திறந்துக்கொண்டு நின்றிருந்தாள்... ஆஜானுபாவ தோற்றம் அனுவுக்கு....

மஞ்சு அதிர்ச்சியுடன் அனுவை பார்த்தாள்... கால்கள் நன்றாய் இருக்கிறதே அனுவுக்கு..... நம்பமாட்டாது பார்த்தாள்... அனுவின் கால்கள் ஊனம் அல்லவா? எத்தனையோ வருடங்களாக வீல்சேரில் தானே அனுவின் வாழ்க்கை இன்று எப்படி எப்படி என்று அவள் அதிர்ச்சியுடன் யோசிக்கும்போதே ஷோபி வேகமாக ஓடி வந்து கதவை மூடிவிட்டு அனுவை கடிந்த சப்தம் கேட்டது.....

ரூம் முழுக்க அமானுஷ்யமாய் என்னவோ உணர்ந்தாள் மஞ்சு.....

திரும்ப கதவு திறக்கும் சப்தம் கேட்டு பயத்துடன் பார்த்தாள் மஞ்சு...

ஷோபி உள் நுழைந்து கவலைப்படாதே அவங்க எல்லாரும் கிளம்பறாங்க... நீ பயமில்லாம இரு என்று சொல்லி சிரித்துவிட்டு போனாள் கதவை வெளிப்புறம் சாத்திக்கொண்டு...

இடைப்பட்ட அந்த சின்ன கதவின் இடுக்கில் ரெண்டு நெருப்பாய் எரியும் கண்களும் பஞ்சுபொதியான தலைமுடியை பார்த்து அலறினாள் மஞ்சு....

அந்த கிழவியின் கண்கள் நெருப்பாய் ஜொலித்தது... பாடத்தொடங்கினாள் கதவருகே நின்றுக்கொண்டு.....

பெற்றவரும் உற்றவரும் அருகே இருந்து சூழ.....
கொண்டு போக வந்திருக்கும் விதியை நோக.....
போடா அவளை கொண்டு வா என்று கர்ஜிக்கும் குரலில் பாட

சட்டென சுவரில் ஒரு பக்கம் திறக்க அதிர்ச்சியுடன் மஞ்சு பார்த்துக்கொண்டிருக்க....

ஆஜானுபாவ தோற்றம் கொண்ட அவன் மஞ்சுவை அலாக்காய் தூக்க....

மஞ்சு அருகே இருக்கும் பீரோவின் பிடியை பிடித்துக்கொண்டு அலறினாள்...

காப்பாத்துங்க காப்பாத்துங்க....யாரேனும் காப்பாத்துங்க என்று அலறிக்கொண்டே திரும்பினாள்...

இதுவரை அந்த ரூமில் அவள் மட்டும் இருந்தது போக இப்போது சுற்றம் முழுக்க உறவினர்கள் முழுக்க சிரித்து பேசிக்கொண்டிருப்பதை கண்டாள்.... அவள் அலறலை யாருமே லட்சியம் செய்யவில்லை... இன்னும் சிரித்துக்கொண்டே பேசிக்கொண்டிருக்க....

மஞ்சுவை தூக்கியவனின் கைகளில் உடல் பாரம் முழுதும் இருக்க கைகளை மட்டும் பீரோவின் பிடியில் இருந்து எடுக்காமல் அலறிக்கொண்டிருக்க அலாரம் சத்தம் அடிக்க சட்டென கண் விழித்தாள் மஞ்சு......

விண் விண் என்று தலை வலிக்க ஆரம்பித்தது....

திரும்ப கண் மூடினாள் எங்கே அந்த கனவு தொடருமோ என்று பயந்தாள்.... இத்தனை பயங்கரமான கனவு ஏன் எனக்கு இப்படி என்று யோசிக்கும்போது காதருகே ஒரு குரல் கேட்டது....

உன்னை கொண்டு போகாமல் விடமாட்டாங்க..... நீ தப்பிக்கவே முடியாது.....


16 comments:

  1. இது கனவா இல்லை நிஜமா என மஞ்சுவின் கேரக்டருக்கு மட்டுமல்ல படிப்பவருக்கும் வருகிறது.... பாராட்டுக்கள்

    ReplyDelete
  2. பெற்றவரும் உற்றவரும் அருகே இருந்து சூழ.....
    கொண்டு போக வந்திருக்கும் விதியை நோக.....
    போடா அவளை கொண்டு வா என்று கர்ஜிக்கும் குரலில் பாட

    சட்டென சுவரில் ஒரு பக்கம் திறக்க அதிர்ச்சியுடன் மஞ்சு பார்த்துக்கொண்டிருக்க....


    !!!அழகிய எழுத்துநடையுடன் வாசிக்க வாசிக்க தூண்டுகிறது மஞ்சுவின் கதை...
    அற்புதம்..
    பாராட்டுக்கள்:

    ReplyDelete
  3. அருமை அருமை
    திரும்பத் திரும்பப் படித்தேன்
    மிக அழகாக மரண பயத்தையும் பிறழ் மனத்தையும் விளக்கிப்போகிறீர்கள்
    இத்தனை பசியா உனக்கு என்கிற கதையும் இதைப்போல
    ஒரு பிரமாதமாக் வந்திருக்கவேண்டிய கதை
    ஒரே கதையில் இரண்டு விஷயங்களை சொல்ல முயன்றதால்
    இந்தக் கதைபோல் அது அமையவில்லை என நினைக்கிறேன்
    தன்வயப்பட்ட சிந்தனையில் ஆழ்ந்து எழுதினால்
    உங்களால் மிகச் சிறந்த கதைகளைப்
    படைக்க முடியும் என்பதால் தான்
    முடிவின் விழிம்பில் பதிவைப் படிக்கச் சொன்னேன்
    தரமான பதிவு தொடர வாழ்த்துக்கள்
    முத்தான மூன்று முடிச்சுபதிவுக்கு
    விரிவான பின்னூட்டம் கண்டு மகிழ்ந்து போனேன்
    தாங்களும் தங்களுக்கு பிடித்த முத்தான
    மூன்றினை பதிவாகத் தரவேணுமாய்
    அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
  4. அன்பு நன்றிகள் ராஜேஷ் (மாய உலகம்) வருகை தந்தமைக்கும் கருத்து பதிந்தமைக்கும்..

    ReplyDelete
  5. அன்பு நன்றிகள் விடிவெள்ளி கருத்து பதிந்தமைக்கு.

    ReplyDelete
  6. அன்பு நன்றிகள் ரமணி சார்... உண்மையே ரமணி சார்.... இத்தனை பசி உனக்கு ஏன் எப்பவோ எழுதி வைத்தது சார்..... அதான் இப்படி.. இனி உங்கள் கருத்தினை கவனத்தில் கொள்வேன் ரமணி சார்.

    ஆமாம் பார்த்தேன்... எனக்கு வாய்ப்பு தந்தமைக்கும் பதிவிட அழைத்தமைக்கும் அன்பு நன்றிகள் ரமணி சார் கண்டிப்பாக பதிவிடுகிறேன் இங்கேயே கொடுத்தால் போதுமா ரமணி சார்?

    ReplyDelete
  7. தங்கள் பிளாக்கிலேயே பதிவிடவும்
    பதிவிட்ட விவரத்தை மட்டும் என் பிளாக்கிற்கு
    தெரிவித்தால் என்னைத் தொடர்பவர்கள்
    தங்கள் பிளாக்கை தொடர ஏதுவாக இருக்கும்
    அதைப்போல தாங்கள தொடர விரும்பும் மூன்று
    பதிவர்களையும் தவறாமல் குறிப்பிடவும்
    பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து....

    ReplyDelete
  8. ரமணி சார்... இந்த ப்ராஜக்ட் கொஞ்சம் டஃபாகவும் அதே சமயம் என்னையே நான் அறியவும் முடிந்தது.... போட்டுட்டேன் ரமணி சார் பாருங்கோ....

    ReplyDelete
  9. நல்லாவே பயமுறுத்திட்டீங்க..

    ReplyDelete
  10. சொன்னா நம்பமாட்டீங்க ரிஷபன்.... நானே பயந்துவிட்டேன். இப்போது படித்தாலும் மனதுக்குள் பயம் வருவதை தவிர்க்கமுடியவில்லை....

    அன்பு நன்றிகள் ரிஷபன் கருத்து பதிந்தமைக்கு...

    ReplyDelete
  11. தொடர்ச்சியாய் வாசிக்கவைத்தது.புதியக் களம்.கொலுவுக்கு அழைக்கக் கூட சிலர் பயப் படலாம்..பாடகிகள் அந்த கும்பலில் இருக்கலாமென்று.''அசால்ட்''டாய் படிக்க ஆரம்பித்தேன்.அசாத்தியமான அமானுஷ்ய சூழல் விவரணைகள் அசத்தியது நிஜம்.
    வித்தை கைவரப் பெற்றுவிட்டீர்கள்.வாழ்த்துக்கள்.ஐயோ..எப்படி தனியாய் படுப்பேன்..?சுகன்யாவும் சேலத்தில்..!!

    ReplyDelete
  12. நிஜமாகவே இதுபோல கனவு வந்ததா, மஞ்சு?

    படிக்கும் போதே பயமா இருக்கு.

    அழகாகவே த்ரில்லிங்கா எழுதி கடைசியிலே கனவுன்னு முடிச்சுட்டீங்க. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  13. நல்லாயிருக்கு அக்கா.. நல்லாயிருக்கு.

    ReplyDelete
  14. அன்பின் மஞ்சு

    கதை எழுதப்பட்ட விதம் நன்று - ஒரு கருவினை வைத்துக் கொண்டு அழகாக தடம் மாறாமல் கதை எழுதும் விதம் நன்று. மரண பயம் உணர இயலாதது. கற்பனை நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...