"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Tuesday, October 16, 2012

தேஜஸ்வினி



” என்னது இது இப்படி தலைமுடி கொட்றதே “
கொத்தாய் கையில் உதிர்ந்த முடியை கவலையுடன் பார்த்தாள் தேஜஸ்வினி...

” என்னம்மா கொஞ்ச நாளா பாத்ரூம்ல ஒரே தலைமுடியா கிடக்குதே “ என்று அங்கலாய்த்தாள் வீட்டு வேலைக்காரி ரோஜா..

” என்ன தேஜா டாக்டர் கிட்ட ஒரு முறை போய் பார்த்துட்டு வந்தால் என்ன? “ என்று கேட்டுக்கொண்டே ஷூ லேஸை இறுக்கினான் நவநீத்..

” அம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா பாருங்க என் பேக் மேலேல்லாம் ஒரே முடி இங்க நின்னு தலை வாராதீங்கன்னு எத்தனை முறை சொல்றது “ என்று பிரபாஸ்,
சுஜா இரு செல்வங்களின் அலறல் சத்தம் கேட்டது....

இது எல்லாம் அமைதியாக கேட்டுக்கொண்டே காலை டிபன் தயார் செய்துக்கொண்டிருந்தாள் தேஜஸ்வினி..

அவள் மனதிலும் இதே கேள்வி தான்..

” ஏன் கொஞ்ச நாளா அதிகமா முடி கொட்றது எனக்கு? ”

எல்லோரும் காலை டிபன் முடித்து வேலைக்கும் பள்ளிக்கும் ஓடியப்பின் நிதானமாக பாத்திரங்கள் எல்லாம் வேலைக்காரி கழுவ எடுத்து போட்டுவிட்டு ஆயாசமாய் உணர்ந்து சேரில் உட்கார்ந்தாள் தேஜஸ்வினி.

கொஞ்ச நாளா முடி கொட்டுவது மட்டுமில்லாது தன் வயிறும் உப்புவதைக் கண்ணாடியில் பார்த்தாள்.

மாதவிலக்கும் தள்ளி போயிருக்கு போலிருக்கே என்றபடி வேகமாக காலண்டரை எடுத்து பார்த்தாள் தேஜஸ்வினி.

”15 நாட்கள் தள்ளி இருக்கு எப்படி கவனிக்காமல் விட்டோம் “ என்றபடி காலண்டரை மாட்டிவிட்டு இட்லி விண்டு வாயில் வைக்கும்போது பசி மரத்து போனது போலிருந்தது... தட்டை தூக்கி பாத்திரம் கழுவும் இடத்தில் போட்டுவிட்டு வந்து படுத்தாள்... தலை சுற்றுவது போலிருந்தது....

மாலை எல்லோரும் வரும் சப்தம் கேட்டது..

ஆனால் கண் திறக்க முடியாதபடி ஒரு அசதி வந்து உடலுடன் ஒட்டியது..... எழ முயன்று தோற்று அப்படியே கண்மூடி படுத்திருந்தாள்...

” என்னாச்சும்மா?” என்றபடி ஆதரவுடன் தலைமுடி கோதினான் நவநீத்.

பிள்ளைகளும் அடுத்து வந்து நின்று பார்த்தன.. அம்மாவுக்கு என்னாயிற்றோ என்று..

” நீ கிளம்புடா நாம ஹாஸ்பிடல் போகலாம் “ என்று சொன்னபடி டாக்டர் வசந்தாவுக்கு தன் மொபைலில் அழைப்பு விடுத்தான் நவநீத்..

துரிதகதியில் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி தேஜஸ்வினியை எழுப்பி காரை ஸ்டார்ட் செய்தான்.

இருபது நிமிடத்தில் டாக்டர் வசந்தாவின் முன்பு இருவரும்..

ஐம்பது வயது நெருக்கத்தில் டாக்டர் வசந்தா இனிமையான முகத்துடன் இருவரையும் உட்காரவைத்து எல்லா டெஸ்டும் செய்யவேண்டும் என்று சொல்லிவிட்டு..

“என்ன செய்கிறது தேஜா உனக்கு?” என்று டாக்டர் கேட்கவே

தேஜஸ்வினி தன் அவஸ்தைகளை சொல்ல சொல்ல குறிப்பெடுத்துக்கொண்ட டாக்டர், ” நாளை வெறும் வயிற்றில் காலை வந்து அட்மிட் ஆகவேண்டும் எல்லா டெஸ்டும் செய்யவேண்டும் “ என்று சொன்னதும் சரி என்று தலையாட்டிவிட்டு இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்..

ராத்திரிக்கு ஹோட்டலில் இருந்து உணவு வரவழைத்து எல்லோரும் உண்டனர்..

தேஜஸ்வினிக்கு பால் மட்டும் காய்ச்சி கொடுத்துவிட்டு உறங்க வைத்தான் நவநீத்....

அடுத்த நாள் காலை இருவரும் மருத்தவமனை அடைந்து அட்மிட் செய்து எல்லா டெஸ்டும் செய்ய வைத்து வீட்டுக்கு கூட்டி வந்தான் நவநீத்..
இரண்டு நாள் கழித்து நவநீத் மொபைல் சிணுங்கவே எடுத்து ” ஹலோ சொல்லுங்க டாக்டர் “என்றான்..

டாக்டர் சொன்ன செய்தி கேட்டு உறைந்தான்..

” தேஜஸ்வினிக்கு யூரின் போகும் இடத்தில் புற்றுநோய் இருக்கிறது நவநீத் “ சொன்ன டாக்டரின் குரலில் சோகம் இழைந்தோடியது...

” இது கடைசி ஸ்டேஜ் என்ன செய்வது ஒன்றும் புரியவில்லை நவநீத்... ”

” இருக்க போகும் நாட்கள் இன்னும் மாதக்கணக்கில் மட்டுமே “

” வலி குறைய மாத்திரைகள் மருந்துகள் தரலாம் ஆனால் ஆயுளை நீட்டிக்க முடியாது “ என்று வருத்தத்துடன் சொன்னதும் அதிர்ச்சியுடன் அப்படியே சேரில் சாய்ந்தான் நவநீத்..

மாலை வீட்டுக்கு போனதும் தேஜஸ்வினி நவநீத்திடம் ” டாக்டர் கிட்ட ரிப்போர்ட் வந்துவிட்டதா கேட்டீங்களா? “ என்றாள்.

” ரிப்போர்ட் வந்திருச்சுடா “

” ஒன்னும் இல்லை நீ ரொம்ப அனிமிக்கா இருக்கேன்னு “ சொல்றாங்க என்றான் நவநீத்...

பாத்ரூமில் போய் ஷவர் திறந்து சத்தமாய் அழத்தொடங்கினான் நவநீத்
ஷவர் சத்தத்தில் அவன் கண்ணீரோடு சேர்ந்து அவன் அழுகை சத்தமும் கரைந்தது.....

”ஏங்க கோவிலுக்கு போகனும் போலிருக்கு கூட்டிப்போறீங்களா?” தேஜஸ்வினியின் குரலில் ஒரு பற்றற்றத் தன்மை இருப்பதை உணர்ந்தான் நவநீத்..

”அதுக்கென்னடா “ உடனே கிளம்பித் தயாரானான்..

கோவிலை நெருங்கியபோது உபன்யாசம் செய்யும் குரல் ஸ்பீக்கர் வழியே காதில் விழுந்தது..

தேஜஸ்வினியை அணைத்து கோவிலுக்குள் அழைத்துச்சென்றான் நவநீத்
உபன்யாசம் நடக்கும் இடத்தில் இருவரும் அமர்ந்தனர்..

கணீரென்ற குரலில் பாகவதம் உரைத்துக்கொண்டிருந்தார் உபன்யாசகர்..
”பரீக்‌ஷித் மஹாராஜா செய்த தவற்றுக்கு சாபம் பெறுகிறார் இன்னும் ஏழே நாட்களில் நீ இறப்பாய் என்று..”

”உடனே பரீக்‌ஷித் மஹாராஜா கேட்கிறார் ஏழு நாட்களுக்குள் நான் என் பாவங்களை தொலைக்க என்ன செய்யவேண்டுமென்று....”

 க்ருஷ்ணமஹாரஜ் தொடர்கிறார் தன் கணீர் குரலில்... பாகவதம் படி ஏழு நாட்களுக்குள் என்று.....

மயக்கமாக உணர்ந்தாள் தேஜஸ்வினி.... அப்படியே மயங்கி நவநீத் மடியில் சாய்ந்தாள்.....

உடனே எல்லோரும் பதறி நீர் கொண்டு வந்து மயக்கம் தெளியவைக்க உபன்யாசகர் வந்து துளசி தீர்த்தத்தை கொஞ்சம் கொஞ்சமாக வாயில் விட மெல்லக் கண் திறந்தாள்...

பகவான் கருஷ்ணரே தன் கண்முன் நிற்பது போல் உணர்ந்தாள் தேஜஸ்வினி... கைக்கூப்பினாள்.....

நவநீத் கலங்கிய கண்களை துடைக்க முயலாது கண்ணீர் மல்க கதறி உபன்யாசகர் காலில் விழுந்து அழுதான்....

உபன்யாசகர் நவநீத்தின் முதுகை ஆதரவாய் தடவிக்கொடுத்தார்......

இருவரும் வீட்டுக்கு கிளம்புமுன் மறக்காது நவநீத்திடம் தொலைபேசி எண்ணை வாங்கி வைத்துக்கொண்டார் உபன்யாசகர்....

இரவின் இருட்டில் மாத்திரையின் உதவியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் தேஜஸ்வினி....

அப்போது மொபைல் சிணுங்கவே நவநீத் சென்று எடுத்தான்....

”என்னப்பா தேஜஸ்வினிக்கு இப்ப எப்படி இருக்கு?” என்று உபன்யாசகர் கேட்டதும் நவநீத் கவலையான குரலில் ”உறங்குகிறாள் மாமா” என்று சொன்னான்....

”என்ன பண்றது அவளுக்கு உடம்புக்கு?” என்று கேட்டார்....

அவன் தொண்டை அடைக்க அவளுக்கு இருக்கும் நோயைப்பற்றி சொன்னான் நவநீத்..

”கவலைப்படாதே.... நாளை நீ வந்தவாசி கிளம்பு தேஜஸ்வினியை கூட்டிண்டு.... நான் ஒரு முகவரி தருகிறேன்... அங்கேச் சென்று அவரிடம் சொல்லு நான் அனுப்பியதாக.... பகவான் இருக்கார்... நாம் மனுஷா தானே.... பகவான் தான் சூப்பிரியர் எல்லாத்துக்கும்.... அவரிடம் மன்றாடுவது என் வேலை.....”

”நீ அவளை அங்க கூட்டிண்டு போ எல்லாம் சரியாகும்” என்று நம்பிக்கைக்குரலில் சொல்லிவிட்டு போனை வைத்தார்....

நவநீத்துக்கு நம்பிக்கை நட்சத்திரங்கள் கண்ணுக்குத் தெரிந்தன....

மறுநாள் காலை குழந்தைகளைக் கொண்டுச் சென்று தன் தமக்கை வீட்டில் விட்டுவிட்டு கிளம்ப யத்தனித்தபோது...

”என்னடா குழந்தைகளை கூட்டிண்டு வந்தே தேஜஸ்வினிய கூட்டிட்டு வரலையா? “ என்று அன்பு ததும்பும் குரலில் கேட்ட அம்புஜத்திடம்...

”இல்ல அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல அதனால ட்ரீட்மெண்ட்டுக்கு போயிட்டு இருக்கேன் “

”என்னாச்சுடா?” என்று பதறினாள்..

”ஒன்னுமில்ல வயிற்றுவலி அதிகமா இருக்காம்... அல்சரா இருக்குமோ இல்ல குடல் வாலா இருக்குமோ தெரியலை அதான் கூட்டிண்டு போறேன் அதுவரை குழந்தைகளை பார்த்துக்கோ அக்கா” என்றான்...

வந்தவாசி நோக்கி வண்டி போனது....

பின்னிருக்கையில் நவநீத் மடியினில் தேஜஸ்வினியின் தலை சாய்ந்திருந்தது.....

ட்ரைவர் முருகன் வண்டியை ரோட்டைப்பார்த்து சீராக ஓட்டிக்கொண்டு இருந்தான்....

வழியும் கண்ணீரை துடைத்துக்கொண்டு தேஜஸ்வினியின் தலையை கோதினான் நவநீத்....

மனதில் திருமணம் ஆன முதல் நாள் தன்னிடம் வியர்க்க பதறி குழந்தையாய் தன்னிடம் ஆசீர்வாதம் வாங்கிய அந்த நாளை நினைத்துப்பார்த்தான்.

கல்யாணம் ஆன நாளில் இருந்து இன்றுவரை தன்னையும் குழந்தைகள் பிறந்தப்பின்பும் அன்பாய் அரவணைத்துச்செல்லும் தன் அன்புத்தங்கத்திற்கு இப்படி ஒரு சோதனை வரவேண்டுமா என்று துடித்து அழுதான் நவநீத்...

” ஏங்க எனக்கு என்னாச்சுன்னு இத்தனை பதட்டப்படறீங்க?”

”உனக்கு ஒன்னுமே இல்லடா....”

”நாம சந்தோஷமா ட்ரீட்மெண்ட் முடிஞ்சு வீட்டுக்கு திரும்ப போறோம்... அப்ப உனக்கு பிடிச்ச வெங்காய சருகு கலர்ல பட்டுப்புடவை எடுத்து தருவேன் நம்ம கல்யாண நாளுக்கு “ என்று அவள் பட்டுக்கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டான்....

சிணுங்கி வெட்கப்பட்டாள் தேஜஸ்வினி... தனக்கு ஏதோ தீர்க்க முடியாத நோய் இருக்கிறதோ என்று உள்ளூர பயம் இருந்தது அவளுக்கு...

நவநீத்தின் நம்பிக்கை வார்த்தைகளை கேட்டப்பின் நிம்மதியாக உறங்க ஆரம்பித்தாள் தேஜஸ்வினி...

வண்டி அந்த குடிலை நோக்கி நின்றது.....

மெல்ல தேஜஸ்வினியை இறக்கி உள்ளே அழைத்து சென்றான்....

உள்ளே 80 வயது உடைய பெரியவர் சிநேகபாவத்துடன் சிரித்தார்....

”வாங்கோ உட்காருங்கோ பெரியவா நேக்கு போன் பண்ணினா விவரமெல்லாம் சொன்னா...”

”ரிப்போர்ட் பேப்பரெல்லாம் கொண்டு வந்திருக்கேளா?....”

”வாம்மா தேஜஸ்வினி முகம் அலம்பிண்டு வந்து சாப்பிடுங்கோ முதல்ல...

நான் செத்த நாழில வரேன்” என்றபடி துண்டை எடுத்து போட்டபடி ரிப்போர்ட்ஸ் எடுத்துக்கொண்டு தன் ரூமிற்குள் நுழைந்தார்...

சுற்றுப்புறமும் அழகிய தோட்டங்களும் மூலிகை காற்றும் மனதுக்கு இதமாக இருந்தது....

மாதம் ஒன்றைக் கடந்தது....

முகத்தில் தெளிவும் மனதில் ஒரு நம்பிக்கையும் உடம்பில் ஒரு திடமும் தெம்பும் ஏற்படுவதும் முடி உதிர்வது குறைவதும் வயிறு உப்பசம் குறைவதையும் உணர்ந்தாள் தேஜஸ்வினி....

தினமும் போனில் பிள்ளைகளுடன் உரையாடினர் இருவரும்....

”பிள்ளைகள் சமர்த்தா இருக்காங்க.. தேஜா உடல்நலம் எப்படி இருக்கு?” என்றபடி போனில் அக்கறையாக விசாரித்தாள் அம்புஜம் நவநீத்தின் தமக்கை....

”இப்ப ரொம்ப நன்னா இருக்கா” என்று சொன்னபடி அருகில் இருக்கும் மனைவியை அன்புடன் அணைத்துக்கொண்டான்...

மூன்று மாதம் கடந்தது.....

உபன்யாசகர் போன் செய்து ”தேஜாவின் உடல்நலத்தில் ஏதாவது முன்னேற்றம் இருக்கிறதா?” என்று கேட்டார்...

”அதீத முன்னேற்றம் ” இன்னும் ஒரு மாதத்தில் இருவரும் வீட்டுக்கு கிளம்பும் விஷயத்தை சந்தோஷத்துடன் பகிர்ந்தார் பெரியவர்....

இருவரும் கிளம்பும் அந்த நன்னாளும் வந்தது.....

பெரியவர் நவநீத் கையில் மருந்துகள் அடங்கிய பையும் ரிப்போர்ட்ஸ் இருக்கும் பைலையும் கொடுத்து ”இப்ப டாக்டர் கிட்ட போய் செக்கப் செய்யுங்க.... என்ன ரிப்போர்ட் வருதுன்னு பார்த்து சொல்லுங்க ”என்று சொல்லி காலில் விழுந்த தேஜஸ்வினியை ஆதரவுடன் நிமிர்த்தி

 ”நீ தீர்க்காயுசா இருப்பே என்னிக்கும் ”என்று வாழ்த்தி குங்குமம் நவநீத் கையில் கொடுத்து தேஜஸ்வினியின் நெற்றி வகிட்டிலும் நெற்றியிலும் இடச்சொல்லி ஆசீர்வாதம் செய்தார் இருவரையும்....

”எனக்கு சாதாரண வயிற்று வலி தானே அதுக்கு இத்தனை மாசம் இங்க இருந்து பிள்ளைகளை பிரிந்து அவசியமா?” என்று கேட்டாள் தேஜஸ்வினி....

சிரித்துக்கொண்டே அணைத்து நெற்றியில் மெல்ல முத்தமிட்டுச்சொன்னான்.... நீ எனக்கு பொக்கிஷம்டி செல்லம்..... நீ என்னை விட்டு தொலைந்து தொலைதூரம் போய்டுவியோ என்ற பயம் வரவே தான் உன்னை தக்கவைத்துக்கொள்ள எமனுடன் போராடினேன்... இதோ இப்ப இந்த நிமிஷம் என் செல்லக்குட்டி தேஜா என்னுடனே என்றும் “ என்று மீண்டும் அணைத்துக்கொண்டான்....

திரும்ப டெஸ்ட் செய்ததில் டாக்டர் வசந்தா ஆச்சர்யம் கலந்த முகத்துடன் ” இது சாத்தியமே இல்லை எப்படி எப்படி?” என்று கேட்கவே...

நவ்நீத் முகத்தில் அமைதியான புன்னகை....

”கடவுளின் கருணை மனித ரூபத்திலும் சித்த வைத்தியமும் என் தேஜாவை என்னுடனே தக்கவைத்துவிட்டது டாக்டர் “ என்றுச் சொன்னான்....

சிலுசிலுவென காற்று தொடங்கி சிறு தூறல்கள் பன்னீர் துளிகளாய் இருவரையும் நனைக்க இருவரும் ஒட்டி அணைத்து காருக்குள் ஏறினர்...

யுகம் யுகமாய் சௌக்கியமாக வாழ இறைவன் ஆசீர்வாதமாய் மழைத்துளிகளை அனுப்பினான்....

இது கதையல்ல.... நிஜம்..... உயிர்ப்பிழைத்து அதன்பின்னும் அதிக வருடங்கள் உயிர் வாழ்ந்து நவநீத் உயிர்நீத்தப்பின்னர்..... தன் எண்பத்தி ஐந்தாம் வயதில் மே மாதம் 2012 ல தான் தேஜஸ்வினி உயிர் நீத்தார்.....

50 comments:

  1. ரெம்ப அருமையா எழுதி இருக்கீங்க. இறுதியில் கதை அல்ல நிஜம்னு சொன்னப்ப ஒரு நிமிசம் என்னமோ பண்ணிடுச்சு. கிரேட்

    ReplyDelete
  2. மனமும், உடலும் நலமாய் இருந்தாலே நமக்கு வரும் நோக்காடுகளில் பெருமளவு குறைந்து விடும் என்பது முன்னோர் வழி செய்தி. இருப்பினும் இங்கே மனம் மட்டுமே நலனுடன் திகழ்ந்திருக்கின்றதோ என்று கூட எண்ணிடத் தோன்றுகின்றது.

    கதையாசிரியரின் வரிகளில் கதையில் இருக்கும் உயிரோட்டத்தினை நன்கு உணர முடிகின்றது.

    அத்தோடு சித்தமருத்துவத்தின் மகத்துவத்தினையும் எடுத்துச் சொல்லும் நற்கதையாய் மிளிர்கின்றது.

    நன்றி அக்கா

    ReplyDelete
  3. சித்த வைத்தியத்தின் மகத்துவத்தை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். கதை படிக்க அருமை. அடுத்து என்ன..என்ற எதிர்பார்ப்போட கதையை எழுதினது மிக அருமை.

    ReplyDelete


  4. என்னே! எழுத்து!என்னே நடை!வாழ்க மஞ்சு!

    ReplyDelete
  5. அந்த சித்த மருத்துவ குடிலின் முகவரி இருந்தால் பகிருங்கள் தோழி அனைவருக்கும் உபயோகமாக இருக்கும். தேஜஸ்வனி அனைவருடன் காற்றாக இருந்து அவர் குடும்பத்தினை வழி நடத்துவார் ஒம் ஷாந்தி

    ReplyDelete
  6. தேஜஸ்வினியின் புற்றுநோய் தாக்குதளைப்பற்றிய மருத்துவரின் செய்தி கேட்ட நவநீத்தின் உணர்வுகளை இன்னும் கொஞ்சம் ஆழமாக பதிவு செய்திருக்கலாம்! ஏனென்றால் அது வாசகனிடம் அதிர்ச்சியான நிகழ்வை காட்டக்கூடிய இடமல்லவா!
    நன்றி!

    ReplyDelete
  7. தனக்கு புற்றுநோய் என்று தெரிந்ததுமே அலையில் விழுந்த துரும்பாய் ஆகிவிடுகிறான் மனிதன். எனது சித்தப்பா, தூரத்து அத்தை, தெரிந்தவர்கள் என்று இவ்வாறு கஷ்டப்பட்டதை நேரில் பார்த்து வருத்தம் அடைந்திருக்கிறேன். நல்லவேளை தேஜஸ்வினிக்கு என்ன நோய் என்று நவநீத் சொல்ல்வில்லை.

    கதையல்ல நிஜம் என்று சொல்லி விட்டீர்கள். நீங்கள் சொன்னது உண்மைக் கதை! மனதில் பதியும்படி எழுதியுள்ளீர்கள்.

    ReplyDelete
  8. எழுதிச் செல்லும் நேர்த்தியிலேயே
    இது கதைக்குள் அடங்கக் கூடியதில்லை
    என நினைத்தேன்.
    அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்
    மனம் தொட்ட பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. அன்பு மஞ்சு. எத்தனை ஆணித்தரமாகக் கதையைச் சொல்லி இருக்கிறீர்கள்.மிக மிக ஆறுதலாக இருக்கிறது.பாசிட்டிவ் அணுகள். அதுவும் பெயரைக் கேட்டாலே நடுங்கும் சமூகத்துக்கு இந்த மாதிரிப் பதிவுகள் மிகவும் முக்கியம்.மனம் நிறைந்த பாராட்டுகள் அம்மா.

    ReplyDelete
  10. அக்கா படிச்சிட்டு வரும் போது வந்தவாசினு பெயர் பார்த்ததும் அளவில்ல மகிழ்ச்சி எங்க ஊராச்சே இறுதியில் உண்மை என்றதும் ஆச்சரியம். நல்ல எழுத்து நடை அக்கா.

    ReplyDelete
  11. அற்புதமான பகிர்வு. எனது குடும்பத்திலேயே இரண்டு பேரை புற்று நோய்க்கு பலிகொடுத்திருக்கிறேன்.... சித்த வைத்தியம் மூலம் தேஜஸ்வினி அவர்களுக்கு நல்ல பலன் கிடைத்தது தெரிந்து மகிழ்ச்சி....

    அருமையாகச் சொல்லிச் சென்று இருக்கீங்க மஞ்சு... வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. மஞ்சு !!!! மிக அருமைப்பா ..சொல்ல வார்த்தையில்லை ....ஒவ்வொரு வரியையும் பயத்துடன் கடந்து வந்தேன் ..தேஜஸ்வினி உயிர் பிழைத்தும் மற்றும் உண்மைக்கதை என்றதும் மனதுக்கு ஆறுதலாக இருந்தது ...

    ReplyDelete
  13. மனம்மகிழ்ச்சியாக இருந்தால் நோயை எதிர்க்கும் சக்தியும் உடலுக்கு தானே வந்துவிடுகின்றது என்பதை உணர்த்துகின்றது கதை.

    இதைத்தான் வாய்விட்டுசிரித்தால் நோய்விட்டுப்போகும் என முன்னோர்கள் சொல்லியிருக்கின்றார்கள் போலும்.

    ReplyDelete
  14. அருமையா சொல்லியிருந்தீங்க...
    கதை அழகா... மனசை கலங்க வைத்து செல்கிறதே என்று பார்த்தால் உண்மை என்று சொல்லிவிட்டீர்கள்.

    ReplyDelete
  15. உண்மைக்கதை என்றாலும் உணர்ச்சிக்குவியல்களிடையே நன்றாக எழுதியிருக்கிறீர்கள் மஞ்சு! அந்த ஓவியத்தை எங்கிருந்து பிடித்தீர்கள்? அழகாய் இருக்கிறது!

    ReplyDelete
  16. அருமை மஞ்சு.

    //.யுகம் யுகமாய் சௌக்கியமாக வாழ இறைவன் ஆசீர்வாதமாய் மழைத்துளிகளை அனுப்பினான்..//

    உண்மை. மனதை நெகிழச்செய்துவிட்டது..

    ReplyDelete
  17. //அப்பாவி தங்கமணி said...
    ரெம்ப அருமையா எழுதி இருக்கீங்க. இறுதியில் கதை அல்ல நிஜம்னு சொன்னப்ப ஒரு நிமிசம் என்னமோ பண்ணிடுச்சு. கிரேட்//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் தங்கமணி கருத்து பகிர்வுக்கு...

    ReplyDelete
  18. படிக்கும்போதே இது கதை என்று தோன்றவில்லை. உண்மை நிகழ்ச்சி போலவே இருந்தது. என்ன ஒரு அழகான நடை. வார்த்தைகள் சிக்கல் இல்லாமல் கதை ஓட்டம். முடிவு என்ன ஆகுமோ என்கிற திக் திக்.. நல்ல வேலை தேஜஸ்வினியுடன் நானும் சேர்ந்து பிழைத்துக் கொண்டேன்.

    ReplyDelete
  19. யுகம் யுகமாய் சௌக்கியமாக வாழ இறைவன் ஆசீர்வாதமாய் மழைத்துளிகளை அனுப்பினான்....

    மன நிறைவான பாஸிட்டிவ் ஆன கதை ! பாராட்டுக்கள்..

    ReplyDelete
  20. ஆச்சர்யம் ஆனால் உண்மை. இது தான் இறுதி நோய் என்று இருப்பார்க்கு இது ஒரு மகிழ்ச்சியைக் கொடுக்கும் கதை. இல்லை இல்லை உண்மை. சில விடயங்கள் புரிவது இல்லை . சிலர் இப்படி நம்பிக் கேட்டதும் உண்டு . மருந்து மாத்திரைகளுடன் பழக்கப்பட்ட உடல் சித்தவைத்தியத்தை ஏற்றுக் கொள்ளாது என்று கூறுவோரும் உண்டு . அனால் இது ஒரு அத்தாட்சி . நன்றி மஞ்சு

    ReplyDelete
  21. உண்மையில் சொன்னால் நான் பக்கத்தில் இருந்து அவர்களுக்கு நிகவதைப் பார்த்த உணர்வு என்னுள். அவ்வளவு நேர்த்தியாக உணர்வுகளைப் பரிமாறி எழுதியிருக்கிறீர்கள். மனதில் நம்பிக்கை இருந்தால் வைத்தியத்தின் மூலம் நோயை வெல்லலாம் என்பதற்கு தேஜ்ஸ்வினி உதாரணம். உண்மைச் சம்பவம்னதும் மனசை அசைச்சிட்டது.

    ReplyDelete
  22. //சிவஹரி said...
    மனமும், உடலும் நலமாய் இருந்தாலே நமக்கு வரும் நோக்காடுகளில் பெருமளவு குறைந்து விடும் என்பது முன்னோர் வழி செய்தி. இருப்பினும் இங்கே மனம் மட்டுமே நலனுடன் திகழ்ந்திருக்கின்றதோ என்று கூட எண்ணிடத் தோன்றுகின்றது.

    கதையாசிரியரின் வரிகளில் கதையில் இருக்கும் உயிரோட்டத்தினை நன்கு உணர முடிகின்றது.

    அத்தோடு சித்தமருத்துவத்தின் மகத்துவத்தினையும் எடுத்துச் சொல்லும் நற்கதையாய் மிளிர்கின்றது.

    நன்றி அக்கா//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் தம்பி கருத்து பகிர்வுக்கு....

    ReplyDelete
  23. //ராதா ராணி said...
    சித்த வைத்தியத்தின் மகத்துவத்தை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். கதை படிக்க அருமை. அடுத்து என்ன..என்ற எதிர்பார்ப்போட கதையை எழுதினது மிக அருமை.//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா ராதாராணி..

    ReplyDelete
  24. //புலவர் சா இராமாநுசம் said...


    என்னே! எழுத்து!என்னே நடை!வாழ்க மஞ்சு!//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் இராமானுசம் ஐயா கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  25. சிலசமயம் எனக்கும் இதுபோல்
    ஆகியிருக்கிறது.பின் சரியாகியிருக்கிறது
    எனக்கு தொழில் நுட்பம் அவ்வளவாகத் தெரியாது
    இந்தக் கமெண்ட் பதிவாகியுள்ளதுதானே

    ReplyDelete
  26. நெகிழ்ச்சியாக இருந்தது. இது மட்டும் சாத்தியம் என்றால் எத்தனை உயிர்களைக் காப்பாற்றலாம்? கடைசிக் கட்டத்திலிருந்து தப்பிப் பிழைத்தது கடவுள் செயல்.

    ReplyDelete
  27. // Ramani said...
    சிலசமயம் எனக்கும் இதுபோல்
    ஆகியிருக்கிறது.பின் சரியாகியிருக்கிறது
    எனக்கு தொழில் நுட்பம் அவ்வளவாகத் தெரியாது
    இந்தக் கமெண்ட் பதிவாகியுள்ளதுதானே
    //

    இப்ப இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்ல வைத்தால் கமெண்ட் பாக்ஸ் தெரிகிறது ரமணி சார்...

    இனி புலவர்ஐயாவின் வலைக்கு சென்று பார்க்கிறேன் அங்கே என்னால் கமெண்ட் முடிகிறதா என்று... அன்புநன்றிகள் ரமணிசார்...

    ReplyDelete
  28. அன்புள்ள மஞ்சு,

    கதையைப்படிக்கப்படிக்க என் நெஞ்சு திக்திக்கென்று அடித்துக்கொண்டது.

    வீட்டின் குடும்பத்தலைவி என்பவள் எவ்வளவு ஒரு முக்கியமான நபர்.

    கணவனையும் குழந்தைகளையும் உற்சாகமூட்டி ஆறுதல் அளித்து, அரவணைத்துச்செல்ல அவளை விட்டால் வேறு யாரால் முடியும்?

    குடும்பம் என்ற சக்கரத்தின் அச்சாணிக்கே ஆபத்து என்றால் எப்படி அதை உண்மையான நேர்மையான கணவனால் தாங்கிக்கொள்ள முடியும்?

    தொடரும்.....

    ReplyDelete
  29. VGK to மஞ்சு [2]

    ” ஏங்க எனக்கு என்னாச்சுன்னு இத்தனை பதட்டப்படறீங்க?”

    ”உனக்கு ஒன்னுமே இல்லடா....”

    ”நாம சந்தோஷமா ட்ரீட்மெண்ட் முடிஞ்சு வீட்டுக்கு திரும்ப போறோம்... அப்ப உனக்கு பிடிச்ச வெங்காய சருகு கலர்ல பட்டுப்புடவை எடுத்து தருவேன் நம்ம கல்யாண நாளுக்கு “ என்று அவள் பட்டுக்கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டான்....

    சிணுங்கி வெட்கப்பட்டாள் தேஜஸ்வினி... தனக்கு ஏதோ தீர்க்க முடியாத நோய் இருக்கிறதோ என்று உள்ளூர பயம் இருந்தது அவளுக்கு...

    நவநீத்தின் நம்பிக்கை வார்த்தைகளை கேட்டப்பின் நிம்மதியாக உறங்க ஆரம்பித்தாள் தேஜஸ்வினி...//

    அற்புதமான இயல்பான அந்நோன்யமான சம்பவத்தை வெகு அழகாக உங்களுக்கே உரித்தான மென்மையுடனும், மேன்மையுடனும் எழுதிட்டீங்கப்பா .... படித்து வியந்து போனேன், மஞ்சு. சூப்பர்! ;))))))

    தொடரும்.....


    ReplyDelete
  30. VGK to மஞ்சு [3]

    //சிரித்துக்கொண்டே அணைத்து நெற்றியில் மெல்ல முத்தமிட்டுச்சொன்னான்.... நீ எனக்கு பொக்கிஷம்டி செல்லம்..... நீ என்னை விட்டு தொலைந்து தொலைதூரம் போய்டுவியோ என்ற பயம் வரவே தான் உன்னை தக்கவைத்துக்கொள்ள எமனுடன் போராடினேன்... இதோ இப்ப இந்த நிமிஷம் என் செல்லக்குட்டி தேஜா என்னுடனே என்றும் “ என்று மீண்டும் அணைத்துக்கொண்டான்....//

    அந்த அன்புக்கணவனுக்கு மட்டும் தானே அந்தப்பொக்கிஷத்தின் அருமை தெரியும்! ;)))))

    //திரும்ப டெஸ்ட் செய்ததில் டாக்டர் வசந்தா ஆச்சர்யம் கலந்த முகத்துடன் ” இது சாத்தியமே இல்லை எப்படி எப்படி?” என்று கேட்கவே...

    நவ்நீத் முகத்தில் அமைதியான புன்னகை....//

    இதுபோல ஒருசில MIRACLES ஆங்காங்கே சிலருக்கு, சிலரின் அருளினால் நடந்து கொண்டுதான் உள்ளது.
    எனக்குத் தெரிந்து அருள் தந்தவர்களும், பெற்றவர்களும் நிறையவே உண்டு.

    //”கடவுளின் கருணை மனித ரூபத்திலும் சித்த வைத்தியமும் என் தேஜாவை என்னுடனே தக்கவைத்துவிட்டது டாக்டர் “ என்றுச் சொன்னான்....//

    ’தெய்வம் மனுஷ்ய ரூபேனா’ என்று இதைத்தான் சொல்லுகிறார்கள்.

    //சிலுசிலுவென காற்று தொடங்கி சிறு தூறல்கள் பன்னீர் துளிகளாய் இருவரையும் நனைக்க இருவரும் ஒட்டி அணைத்து காருக்குள் ஏறினர்...//

    ஆஹா, அற்புதமானதோர் காட்சி, மகிழ்விக்கிறது.

    //யுகம் யுகமாய் சௌக்கியமாக வாழ இறைவன் ஆசீர்வாதமாய் மழைத்துளிகளை அனுப்பினான்....//

    மழையெனப்பொழிந்துள்ள பன்னீர்த்துளிகள் போன்ற மஞ்சுவின் எழுத்து பரவஸமாக்குகிறது ... ;)))))

    தொடரும்......

    ReplyDelete
  31. VGK to மஞ்சு [4]

    //இது கதையல்ல.... நிஜம்..... உயிர்ப்பிழைத்து அதன்பின்னும் அதிக வருடங்கள் உயிர் வாழ்ந்து நவநீத் உயிர்நீத்தப்பின்னர்..... தன் எண்பத்தி ஐந்தாம் வயதில் மே மாதம் 2012 ல தான் தேஜஸ்வினி உயிர் நீத்தார்.....//

    மன நிறைவான பாஸிட்டிவ் ஆன கதை ! பாராட்டுக்கள்..

    ”தேஜஸ்வினி” ... அன்புத்தங்கை “மஞ்சுபாஷிணி” போலவே அருமையான பெயர்.

    அன்புடன்
    கோபு அண்ணா

    ReplyDelete
  32. எல்லாமே அவன் செயல்
    எல்லாமே அவன் நடத்துவதே.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  33. நம்ப முடியாத அதிசயம் ஒன்று. எழுதிச் சென்ற விதமும் நன்று.

    ReplyDelete
  34. மனைவையை அத்தனை நேசிக்கும் கணவன், அவளுக்கு என்ன ஆனது என்பதை மறைப்பது நேர்மையா? என்ன நினைக்கிறீர்கள்?

    ReplyDelete
  35. கதை போல தொடங்கி நிஜத்தில் முடித்தது ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஆசிரியரின் எழுத்து நடை கதை களத்திற்கு இயல்பாக அழைத்து செல்கிறது! ரசித்தேன்.

    ReplyDelete
  36. //Vadivelan R. said...
    அந்த சித்த மருத்துவ குடிலின் முகவரி இருந்தால் பகிருங்கள் தோழி அனைவருக்கும் உபயோகமாக இருக்கும். தேஜஸ்வனி அனைவருடன் காற்றாக இருந்து அவர் குடும்பத்தினை வழி நடத்துவார் ஒம் ஷாந்தி//

    அன்பின் வடிவேலன்.. அன்புவரவேற்புகள்பா.... நான் 10 ஆம் வகுப்பு படிக்கும்போது நடந்தது இது... மாமி இறந்ததோ 2012 மே மாதம்பா...

    எனக்கு தெரிந்த ஒரு பிள்ளையின் அம்மாக்கு இதுபோன்று கேன்சர் வந்தபோது நான் வந்தவாசிப்பற்ரி சொன்னேன். ஆனால் இப்ப அங்க வைத்தியம் பார்த்த அந்த முதியவரே உயிரோடு இல்லையாம்பா.. தேஜஸ்வினிக்கு வைத்தியம் பார்த்தப்பவே அவர் வயது 80. இப்ப யார் எங்கே இந்த வைத்தியம் செய்றாங்கன்னு தெரியலையேப்பா :(

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் கருத்துபகிர்வுக்கு.

    ReplyDelete
  37. //வே.சுப்ரமணியன். said...
    தேஜஸ்வினியின் புற்றுநோய் தாக்குதளைப்பற்றிய மருத்துவரின் செய்தி கேட்ட நவநீத்தின் உணர்வுகளை இன்னும் கொஞ்சம் ஆழமாக பதிவு செய்திருக்கலாம்! ஏனென்றால் அது வாசகனிடம் அதிர்ச்சியான நிகழ்வை காட்டக்கூடிய இடமல்லவா!
    நன்றி!//

    அன்பு வரவேற்புகள்பா....

    நான் கதை எழுதுவது புதிதுப்பா... எனக்கு அத்தனை நேர்த்தியாக வராதுப்பா... இனி கவனத்தில் கொள்கிறேன்பா...

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் சுப்ரமணியன் கருத்துப்பகிர்வுக்கு...

    ReplyDelete
  38. //தி.தமிழ் இளங்கோ said...
    தனக்கு புற்றுநோய் என்று தெரிந்ததுமே அலையில் விழுந்த துரும்பாய் ஆகிவிடுகிறான் மனிதன். எனது சித்தப்பா, தூரத்து அத்தை, தெரிந்தவர்கள் என்று இவ்வாறு கஷ்டப்பட்டதை நேரில் பார்த்து வருத்தம் அடைந்திருக்கிறேன். நல்லவேளை தேஜஸ்வினிக்கு என்ன நோய் என்று நவநீத் சொல்ல்வில்லை.

    கதையல்ல நிஜம் என்று சொல்லி விட்டீர்கள். நீங்கள் சொன்னது உண்மைக் கதை! மனதில் பதியும்படி எழுதியுள்ளீர்கள்.//

    அன்பு வணக்கங்கள் இளங்கோ ஐயா....

    உண்மையே ஐயா.. என் வீட்டிலும் இதுபோல் சம்பவித்திருக்கிறது.. நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது... இறைவன் அருளால் அந்த கட்டத்தை தாண்டி வந்திருக்கோம்...

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் ஐயா கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  39. //Ramani said...
    எழுதிச் செல்லும் நேர்த்தியிலேயே
    இது கதைக்குள் அடங்கக் கூடியதில்லை
    என நினைத்தேன்.
    அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்
    மனம் தொட்ட பதிவு
    தொடர வாழ்த்துக்கள்//

    உண்மையே ரமணிசார்...

    நேற்று வெகுநேரம் தங்களுடன் தொலைபேசியில் வலைப்பூவைப்பற்றி பேசியது மனநிறைவை தந்தது ரமணிசார்....

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் ரமணிசார் கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  40. //வல்லிசிம்ஹன் said...
    அன்பு மஞ்சு. எத்தனை ஆணித்தரமாகக் கதையைச் சொல்லி இருக்கிறீர்கள்.மிக மிக ஆறுதலாக இருக்கிறது.பாசிட்டிவ் அணுகள். அதுவும் பெயரைக் கேட்டாலே நடுங்கும் சமூகத்துக்கு இந்த மாதிரிப் பதிவுகள் மிகவும் முக்கியம்.மனம் நிறைந்த பாராட்டுகள் அம்மா.//

    ஹை வல்லிம்மா :) எப்படி இருக்கீங்க? அன்புவரவேற்புகள்....

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் வல்லிம்மா கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  41. //Sasi Kala said...
    அக்கா படிச்சிட்டு வரும் போது வந்தவாசினு பெயர் பார்த்ததும் அளவில்ல மகிழ்ச்சி எங்க ஊராச்சே இறுதியில் உண்மை என்றதும் ஆச்சரியம். நல்ல எழுத்து நடை அக்கா.//

    சசி அங்கே வந்தவாசில சித்த மருத்துவம் செய்றவங்க இருந்தா அந்த முகவரி இங்கே போடு சசி. வடிவேலன் என்னும் சகோதரன் விவரங்கள் கேட்டிருக்கார் பாருப்பா..

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் சசி கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  42. //வெங்கட் நாகராஜ் said...
    அற்புதமான பகிர்வு. எனது குடும்பத்திலேயே இரண்டு பேரை புற்று நோய்க்கு பலிகொடுத்திருக்கிறேன்.... சித்த வைத்தியம் மூலம் தேஜஸ்வினி அவர்களுக்கு நல்ல பலன் கிடைத்தது தெரிந்து மகிழ்ச்சி....

    அருமையாகச் சொல்லிச் சென்று இருக்கீங்க மஞ்சு... வாழ்த்துகள்.//

    ஆமாம் வெங்கட்.. என்னால் புரிந்துக்கொள்ள முடிகிறதுப்பா...

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் வெங்கட் கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  43. //angelin said...
    மஞ்சு !!!! மிக அருமைப்பா ..சொல்ல வார்த்தையில்லை ....ஒவ்வொரு வரியையும் பயத்துடன் கடந்து வந்தேன் ..தேஜஸ்வினி உயிர் பிழைத்தும் மற்றும் உண்மைக்கதை என்றதும் மனதுக்கு ஆறுதலாக இருந்தது ...//

    அன்பின் அஞ்சுக்குட்டி... பாதி இங்கே மீதி என் மெயிலுக்கு வந்திருச்சே..

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் நிர்மலா கருத்து பகிர்வுக்கு.

    ReplyDelete
  44. மஞ்சுபாஷிணி said...
    //angelin said...
    மஞ்சு !!!! மிக அருமைப்பா ..சொல்ல வார்த்தையில்லை ....ஒவ்வொரு வரியையும் பயத்துடன் கடந்து வந்தேன் ..தேஜஸ்வினி உயிர் பிழைத்தும் மற்றும் உண்மைக்கதை என்றதும் மனதுக்கு ஆறுதலாக இருந்தது ...//

    அன்பின் அஞ்சுக்குட்டி... பாதி இங்கே மீதி என் மெயிலுக்கு வந்திருச்சே..//

    ”அன்பின் அன்சுக்குட்டி”

    ஆஹா என் ஒரு தங்கை ”மஞ்சுக்குட்டி” என் மற்றொரு தங்கையான [ஏஞ்சலின் நிர்மலாவை ] ”அஞ்சுக்குட்டி” என்று அழைத்துள்ளது, மிகவும் மகிழ்வளிக்கிறது. கிளிகொஞ்சும் வார்த்தைகள்ப்பா! ;)))))

    மஞ்சுக்குட்டி + அஞ்சுக்குட்டி இருவரும் பிள்ளை குட்டிகளோடு நீடூழி வாழ்க! ...

    அதே அதே.... சபாபதே ! ததாஸ்து ;))))))

    பிரியமுள்ள
    கோபு அண்ணா

    ReplyDelete
  45. அருமை! ஓரே மூச்சில் கதையை வாசித்தேன். சிலவேளை புல்லரித்தது. மிக நளினமாக எழுதப்பட்டுள்ளது மஞ்சு!. சுப்பர்! சுப்பர்!. சிறுகதை மன்னி (மன்னன்) என்று கூறலாமோ என்று இருக்கு.
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  46. மனதை தொடும் உணர்வு மிக்க கதை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  47. அற்புத‌ங்க‌ள் ந‌ட‌ந்து கொண்டுதானிருக்கிற‌து என்ப‌தை அற்புத‌மாய்ச் சொல்லி இருக்கிறீர்க‌ள்.
    த‌ங்க‌ளின் பின்னோட்ட‌ங்க‌ளை ப‌ல‌ரின் ப‌திவுக‌ளில் பார்த்திருக்கிறேன். ந‌ன்றி ரிஷ‌ப‌ன்ஜிக்கு.

    ReplyDelete
  48. அன்புள்ள மஞ்சு, தங்களின் இந்தப்படைப்பு 25.12.2012 வலைச்சரத்தில் திருமதி உஷா அன்பரசு என்பவரால் புகழ்ந்து பேசப்பட்டுள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    உங்கள் சார்பில் நானே நன்றி தெரிவித்து பின்னூட்டம் கொடுத்து விட்டேன். இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.

    நேரம் கிடைக்கும் போது 24/12/2012 + 25/12/2012 இரு நாட்களும் நான் வலைச்சரத்தில் எழுதியுள்ள பின்னூட்டங்களைப் படித்துப்பாருங்கோ.

    http://blogintamil.blogspot.in/search/label/வகுப்பு-இரண்டாம்%20நாள்

    http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_6824.html

    பிரியமுள்ள கோபு அண்ணா

    ReplyDelete
  49. அருமையான உண்மைக் கதை. எந்த நோயும் நம்பிக்கையால் காப்பாற்றப்படும்....

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...