"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, August 6, 2011

இறைவன் வாக்கு....

வார்த்தைகளும் வலி தருவது கண்டேன்
மனம் சுருங்கி தடுமாற நின்றேன்
வற்றாது அன்பை பொழிந்திட எண்ணி
போனது எல்லாம் மறக்க வேண்டினேன்

அன்பு மனதில் மலர்வதும் சாத்தியம்
உறவாய் கலந்து வளர்வதும் சத்தியம்
அன்பினை முதலாய் இட்டால் தானே
அன்பை திரும்ப பெறுவோம் தானே

பழையது நினைவுகள் நல்லவையாகட்டும்
செய்த தவறுகள் எல்லாம் மன்னித்து ஏற்கட்டும்
அறியாது எத்தனை வருத்தி இருந்தாலும்
அன்பாய் பிழைப்பொறுத்து ஏற்க வேண்டும்

கண்ணீர் பிரிவை சொல்லிச் சென்றது
உண்மை அன்போ சொல்லாமல் தவித்தது
இனியும் புரிதலின்மை இருவருக்குள் இல்லாது
அன்பே பிரதானம் என்றே கைக்கோர்த்தது

அன்பு பரிமாற்றம் ஓர் உறவு வளர்ந்தது
உறவு கொண்டு தன்னை உன்னவன் என்றது
இறுதி வரை துணை வருவேன் என்று சொன்னது
இறைவனின் வாக்கும் அதை சத்தியமென்றுரைத்தது....

1 comment:

  1. இறைவனின் வாக்கில்... அன்பு பரிமாற்றம் செய்யும் அசத்தலான கவிதை... வாழ்த்துக்கள்... அன்பே ஜெயிக்கட்டும்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...