"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Wednesday, May 5, 2010

மழையே உனக்கு நன்றி....

அனுமதி கேளாது உள்ளத்தில் நுழைந்துவிடு
முடிந்தவரை உண்டு முடியாததை முத்தமிடு
மென்று முடித்த கணங்களை
கம்பீரமாய் நினைத்துவிடு

ஆண்டு அனுபவித்த பொழுதுகளை
சுகமாய் அசைப்போட்டுவிடு
ஒட்டிக்கிடக்கும் தேகத்தை
முத்தத்தால் இன்னும் இறுக்கிவிடு

மழைத்துளிகள் உடல்களைப் போர்த்திக்கொள்ள
காதல் அரங்கேற்றம் நடத்திவிடு
மூச்சுக்காற்று போட்டியிட
முத்தத்துக்கு முதலிடம் கொடுத்துவிடு

உடைகளற்ற உடல்களை
மழைக்குக் கொஞ்சம் விட்டுக்கொடு
மழைக்கவிதை எழுதிவிட
முத்தங்களை சாரலாய் தெளித்துவிடு

காதல் பெருகி காமம் உருகி
தேகம் பதறி முத்தங்கள் சிதறவிடு
ஜில்லென்ற மழையின் சாரலில்
தேகச்சூட்டின் ஏக்கங்கள் கரைத்துவிடு

உடலை வான்மழையில் நனைத்துவிடு
உள்ளத்தை எனக்கு மட்டும் தந்துவிடு
மெல்லிய அதரங்களின் மினுமினுப்பை
முரட்டு இதழ்களில் சத்தமில்லா ஒப்பந்தமிடு

உள்ளத்தில் எழும் தீயை அணைத்துவிட
மழையை கொஞ்சம் தூதுவிடு
வெட்கமில்லாது பார்க்கும் மேகங்களை
காதலின் சாட்சிக்கு அழைப்புகொடு

விலகாத காதல் விலகிய உடைகள்
சிதறாத காமம் சிதறிய மழைத்துளிகள்
சங்கமம் வெகு நன்றாய் நடந்துவிட
நன்றிகள் அதிகம் மழைக்கு சொல்லிவிடு

4 comments:

 1. தேகம் தழுவும் மழைத்துளி பற்றிய கவிதை அருமை!

  ReplyDelete
 2. மழைக்கு நன்றி சொல்வதா மஞ்சுவுக்கு நன்றி சொல்வதா
  மழையால் விளைந்த கவிக்கு நன்றிகள்பா ..நெஞ்சை தொடும் கவிதை வாழ்த்துக்கள் தோழி

  ReplyDelete
 3. அன்பு நன்றிகள் சிவா....

  ReplyDelete
 4. அட காயத்ரி எப்டி இருக்கீங்க? அன்பு நன்றிகள்பா...

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...