"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Wednesday, May 5, 2010

அடுத்தப்பிறவி....

போகும் வழியெல்லாம்
தடுக்கி விழும்போது
நெருப்பின் நாக்குகள்
அணைக்க தாவுகிறது

தப்பிப் பிழைத்தபோதோ
கூரிய அம்பாய்
குறி தவறாது வார்த்தைகள்
மனதைத் துளைக்கிறது

பொத்தலான இதயத்துடன்
கண்ணீருடன்
அபயம் கூறி
கை நீட்டுகிறது

இறைவா என்று...
விடாது துரத்திய தீ நாக்கு
கொழுந்துவிட்டெரிந்து
நீட்டிய கைகளை அணைத்து

உடம்போடு மொத்தமாய்
எரித்துச் சொன்னது
பிழைக்காது நீ
செத்துப்போ
இப்பிறவியில்
பட்டது போதும்

இனி நீ துன்பப்பட
ஒன்றுமில்லை இப்புவியில்
ஆதலால் உனக்கு
ஜென்மமும் இல்லை
அடுத்த பிறவியில்.....

3 comments:

  1. கவிதை மிகவும் அருமை சகோதரி! இன்றுதான் eegarai.net வலைதிரட்டியின் மூலம் உங்களின் தளம் பற்றி அறிந்தேன். அனைத்துக் கவிதைகளும் மிகவும் ரசிக்கும்படியும், உயிரோட்டமுடனும் உள்ளது! பாரட்டுக்கள் தோழி!

    ReplyDelete
  2. உங்களின் கவிதை வரிகள் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் வரிகள் இன்றுதான் உங்களின் தளம் பற்றி அறிந்தேன் சிறப்பாக உள்ளது தங்ளின் நட்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
  3. மிக நல்ல வலைதளம். கவிதைகள் எல்லாமே அருமை. இன்றுதான் மண்றத்தில் உங்கள் தள முகவரி பார்த்து வந்தேன்... இனி அடிகடி சந்திப்போம்...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...