"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Wednesday, August 10, 2011

வலியின்றி.....


வலியின்றி....

வலியின்றி உதித்த மகவு உண்டோ?
வலியின்றி சாதனைகள் தொடர்ந்ததுண்டோ?
வலியின்றி வெற்றிகள் குவிந்ததுண்டோ?
வலியின்றி வாழ்க்கை கண்டதுண்டோ?

வலிக்காத உடல்பாகமும் உண்டோ?
வலி கொடுக்காத காதலும் உண்டோ?
வலியின்றி மனங்கள் மறந்ததுண்டோ?
வலியில்லாத மனிதனும் உண்டோ?

வலிமையில்லா நட்பே வலிகொடுக்கும்
வலிமையுள்ள அன்பே விட்டுக்கொடுக்கும்
வன்மையில்லா நாக்கே சுட்டெரிக்கும்
வஞ்சனையில்லா காதலே உயிர்க்கொடுக்கும்

வன்மமில்லா மனிதருள் மனிதம் இருக்கும்
வம்புகளில்லா குடும்பம் நன்றாய் உயர்ந்திருக்கும்
வரையறையில்லா நேசம் மிக தொடர்ந்திருக்கும்
வலிகளே வெற்றிக்கு என்றும் வழிவகுக்கும்...


இந்த கவிதை வரிகளை சுப்புரத்தினம் ஐயா அழகாய் தன் குரலில் பாடி இருக்கிறார் கேளுங்கள்...

வலியின்றி உதித்த மகவு உண்டோ சுப்பு ஐயா குரலில்

17 comments:

 1. கதை கவிதை சமையல் குறிப்பு என அத்தனை
  விஷயங்களிலும் ஜமாய்க்கிறீர்களே
  வலி குறித்த உங்கள் கவிதை அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. ஆமா வலியில்லாமல் வாழ்க்கையில் எதுவும் நிகழ்ந்ததில்லை..
  கூடுதலாக வலிகளை அனுபவித்துத்தான் ஜெயித்ததும் உண்டு...
  அருமையான வலிதொடர்பான கவிதை...
  உங்கள் கவிதையை...வரி வரியாய் ரசித்து உணர்ந்தேன்....
  அன்புடன் வாழ்த்துக்கள் அக்காவிற்கு..

  ReplyDelete
 3. NO PAIN NO GAIN

  வலி இல்லாமல் பிரசவம் இல்லை... வலி இல்லாமல் வெற்றி இல்லை... வலி இல்லாமல் மனதில் உறுதி இல்லை.. இவை அனைத்தும் விதமாக அருமையாக தொகுத்துள்ளீர்கள்

  ReplyDelete
 4. வலியின்றேல் சுகமேயில்லை
  வரியின்றி கவிதை இல்லை
  நலிவின்றி அடைய ஏதும்
  நவிலவே இல்லை நீரும்
  ஒளியின்றி இருளே இல்லை
  உணர்வின்ற நடப்பா ரில்லை
  தெளிவின்றி வரிகள் இல்லை
  தெரிவித்தேன் நன்றி! நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 5. வலிகளே வெற்றிக்கு என்றும் வழிவகுக்கும்...

  வலிகளே வெற்றிக்கு என்றும் வழிவகுக்கும்...//

  அற்புதமான ஆழ்நத வரிக்ள்.

  ReplyDelete
 6. எனது வலி என்னும் கவிதைக்கு மாற்றாய் அன்றே பாசிட்டிவான கவிதை புனைந்து என் மனநிலையை மாற்றிய அற்புதமான தோழி நீ..!

  இந்த வரிகளில் வலிகளின் இன்றியமையாமையையும் அவற்றை எதிர்கொளவது எப்படி என்பதையும் மிகத் தெளிவாக கூறிவிட்டாய்..

  பாராட்டுகள் மஞ்சு..!

  ReplyDelete
 7. அன்பு நன்றிகள் ரமணி சார்... சமயம் போறலை... இல்லன்னா பாடின பஜன் எல்லாம் போடனும்னு....

  ReplyDelete
 8. அன்பு நன்றிகள் விடிவெள்ளி....

  என் படைப்புகள் உங்களை ரசிக்கவைத்தமைக்கு கூடுதல் அன்பு நன்றிகள்....

  ReplyDelete
 9. அன்பு நன்றிகள் ரத்னவேலு ஐயா...

  ReplyDelete
 10. கவிதையான பின்னூட்டத்திற்கு அன்பு நன்றிகள் ராமானுசம் ஐயா...

  ReplyDelete
 11. அன்பு நன்றிகள் மாய உலகம் ராஜேஸ் கருத்து பதிந்தமைக்கு...

  ReplyDelete
 12. அன்பு நன்றிகள் இராஜராஜேஸ்வரி கருத்து பதிந்தமைக்கு...

  ReplyDelete
 13. அட கலை நினைவில் இருக்கா உனக்கு? எத்தனையோ வருடங்கள் முன்பு எழுதிய கவிதை இது நினைவில் இருக்குமோ உனக்குன்னு நினைச்சேன்... கரெக்ட் நீ எழுதிய கவிதைக்கு பாசிட்டிவ் வரிகளால் எழுத முயற்சித்த வரிகள்...

  மிக்க மகிழ்ச்சி கலை கருத்து பதிந்தமைக்கு...

  ReplyDelete
 14. ’வலியின்றி’ என்ற தலைப்பில்
  வலிமை மிக்க கவிதை


  ‘வலிகளே வெற்றிக்கு என்றும் வழிவகுக்கும்’

  என்று எழுதியுள்ள என் தங்கை மஞ்சுவின் அழகான

  வரிகளே வெற்றிக்கு என்றும் வழிவகுக்கும்.

  அன்புடன்
  VGK

  ReplyDelete
 15. வன்மமில்லா மனிதருள் மனிதம் இருக்கும்
  வம்புகளில்லா குடும்பம் நன்றாய் உயர்ந்திருக்கும்
  வரையறையில்லா நேசம் மிக தொடர்ந்திருக்கும்
  வலிகளே வெற்றிக்கு என்றும் வழிவகுக்கும்...//

  நல்லதை சொல்லும் கவிதை அருமை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. இறுதி நான்கு வரிகள் -மிக அருமை,மற்ற வரிகளும் யோசிக்க வைத்தது.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...