"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, August 6, 2011

தொலைதூரக்காதல்

தொலைதூரக்காதல்.....

அன்றைய நாளின் சங்கமம்
நினைவில் நின்று தித்திக்கின்றது
நெஞ்சம் முழுக்க இனிமை
காதலில் மூழ்கி துளிர்க்கின்றது

பிரிவொன்று வந்திடாத காலமது
இணைந்தே செயல்பட்ட நேசமது
சொந்தமாய் நினைத்தே அணைத்து
பாசங்கள் பகிர்ந்து வசந்தம் வீசியது

விலகிடாத சொந்தங்கள் தொலைதூரத்தில்
ஏங்கிடும் மனங்களோ கண்ணீரில்
வாங்கிட விற்றிடும் பொருளில்லையே
காதலெனும் அற்புத பொக்கிஷம் இது

தொலைத்திட விரும்பாத நேசமென்பதால்
தொலை தூரத்தில் நின்றே காக்கின்றது
தொலையாத காதலாய் நெஞ்சத்திலிருத்திட
தொலைதூரக்காதலாய் கவிதை வடிக்கின்றது....

3 comments:

 1. ஆஹா இங்கேயும் காதல் மழை பொழிகிறதே... சாதம் வடிப்பது போல நெஞ்சத்தில் தொலைதூரக்காதலாய் கவிதை வடிக்கின்றதே.... அழகான கவிதை.... அருமை

  ReplyDelete
 2. நல்ல கவிதை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. //வாங்கிட, விற்றிடும் பொருளில்லையே
  காதலெனும் அற்புத பொக்கிஷம் இது//

  ஆம். அந்த அற்புத சுகமளிக்கும் காதல் என்னும் பொக்கிஷத்தை, சந்தையில் எப்படி வாங்க முடியும்?

  //தொலையாத காதலாய் நெஞ்சத்திலிருத்திட
  தொலைதூரக்காதலாய் கவிதை வடிக்கின்றது....//

  காதல் உணர்வுகளே, கவிதையாய்ப் பிறக்கின்றன. ;)

  நல்லதொரு படைப்பு.
  பாராட்டுக்கள்.
  வாழ்த்துகள்.
  பகிர்வுக்கு நன்றிகள்.
  VGK

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...