"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Friday, June 3, 2011

உலகம் சொல்லுமே....

மக்கி போகும் உயிரினங்களும்
உரமாகும் பொழுது
மனிதனின் பயனற்ற உடலால்
பயனும் உண்டோ

மானிடனாய் பிறப்பெடுத்து
தேவனாய் வாழ்ந்து
பயனுள்ளதாய் தன்
வாழ்க்கையை அமைத்து

பொய்யை களைந்து
அன்பை விதைத்து
நேசம் தொடர்ந்து
கருனை மனதுடன்

இனிதாய் கனிந்து
எளியோரை காத்து
மூத்தோரை வணங்கி
உலகில் உன்பெயர்
சரித்திரமாக்கி

பின் மறைந்தாலும்
உலகம் சொல்லுமே
தெய்வமாய் நம்முடன்
இன்னும் வாழ்கிறான் என்று...

2 comments:

 1. அருமை அருமை
  மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் என்ற
  கவியரசர் அவர்களின் ஒருவரிக்கு
  விளக்கமாக அருமையான கவிதை படைத்துள்ளீர்கள்
  நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. எனக்கு மிகவும் பிடித்த பாட்டு ரமணி சார் இந்த பாட்டு.... தினமும் ஆபிசுபோகும்போது காரில் திரும்ப திரும்ப இந்த பாட்டையே போடச்சொல்லி கேட்பேன் சலிக்கவே சலிக்காது....

  இப்ப ஆபிசு கிட்டயே வீடு மாறி வந்துவிட்டோம்..

  அன்பு நன்றிகள் ரமணி சார்....

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...