"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, June 4, 2011

சாதித்துப் பெறப்போவது என்ன??

இந்த வயதில் சாதித்து 
பெறப்போவது என்ன
பயனுள்ளது ஒன்றும்
தந்துவிடவில்லை நான்
 

மறக்க முடியாத கல்லூரி கதைகள்
என்றுமே மெய்க்காத கற்பனைகள்
நம்பிக்கை பொய்த்த நிகழ்வுகள்
இயலாமையால் பொசுங்கிய கனவுகள்
 

எண்ணத்தின் உணர்வுகள்
சந்தோஷித்த தருணங்கள்
சோகங்கள் தாபங்கள்
ஊடல்கள் விரிசல்கள்
 

விட்டு பிரிந்த வலிகள்
வேதனைகள் கோபங்கள்
ஏமாற்றிய நிதர்சனங்கள்
சங்கடங்கள் சமாதானங்கள்
 

மனதினில் பூட்ட வழியில்லாமல்
எண்ணங்களுக்கு உருவம் கொடுத்து
எழுத்துக்கு வடிவம் கொடுத்து
உணர்வுகளை உடன் வைத்து
 

கவிதை கை கொடுக்க
கண்ணீர் துணை நிற்க
கிறுக்கி தெறிக்கிறேன் இது 
எனக்கு வடிகால் அவ்வளவே........

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...