"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, June 4, 2011

கண்ணா கருமை நிறக்கண்ணா....

எங்கு இல்லை என் கண்ணன்
அவனியில் இருக்கும் கண்ணன்
என்னில் இருக்க மாட்டானா?
 

என்னில் இருக்கும் கள்வன்
உன்னில் தோன்ற மாட்டானா
உன் கண்முன் தோன்றுவான்
அரூபமாக வருவான் சிலசமயம்
 

நீ காணும் கனவாக வருவான்
உன்னில் தோன்றும் கற்பனையாக
தோன்றி வார்த்தைகளை கோர்ப்பான்
உன்னுள் எழும் கவிதையாக வருவான்
 

தெருவில் நடக்கும் மனிதனாக வருவான்
கோயிலில் தோன்றிய பெரியவராக வருவான்
எங்கும் நிறைந்திருக்கும் பரப்ரம்மம் அவன்
 

அவன் இல்லாத இடமும் உண்டா
அவன் வசிக்காத இதயமும் உண்டா
தன் அழகு சிரிப்பால் உன்னை கட்டிப்போட்டு
உன்னை வெறுப்பது போல நடிப்பதும்
 

விரும்பாதது போல ஒதுங்குவதும்
எத்தனை விளையாட்டு பாரு கலகக்காரனுக்கு
உனக்குள் தூங்கும் கண்ணனை தட்டி
எழுப்பக்கூட கண்ணனே வரவேண்டுமா??

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...