"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Tuesday, June 14, 2011

அன்பு மட்டுமே நம்முடன்....


நேசித்ததும் நேசிக்க வைத்ததும் நீ
அன்பை குழைத்து என்னில் கலந்தது நீ
என்னில் மூழ்கி என்னை புதிப்பித்த‌து நீ
நான் க‌ண்ட‌ க‌ன‌வுகளை நிஜ‌மாக்கிய‌து நீ

கோபம் கொண்டு உண்ண‌ ம‌றுக்கும்போது
நீர் குடித்து என்ன‌ருகே வ‌ந்து பார்
உன்னால் நானும் ப‌ட்டினி என்று
என் கோப‌த்தை கூட‌ விர‌ட்டிய‌து நீ

என‌க்கு வேண்டாத‌ என் உற‌வுக‌ள்
உன் ப‌க்க‌ம் சாய்த்து என்னை
அவரோடு உற‌வு கொண்டாட‌ வைத்த‌து நீ
கோபமே வ‌ராதா உன‌க்கு?

பொறாமை ப‌ட‌ தெரியாதா உன‌க்கு?
ச‌ந்தேக‌ம் கூட‌ இல்லையே என் மேல் உன‌க்கு
எத்த‌னை ந‌ம்பிக்கை உன‌க்கு
க‌ட்டிய‌வ‌ன் கை விட‌மாட்டான்
விட்டாலும் விதி விட்ட‌ வ‌ழி என்று
அழ‌ ம‌ட்டுமே தெரிந்த‌ குழ‌ந்தைய‌டி நீ

உன்னை இழ‌ந்து வ‌ரும் சுக‌ம்
வேண்டாம் என‌க்கு எதுவும்.....
அன்பு ம‌ட்டுமே ஒரே ஆயுத‌ம்
ம‌ன‌ங்க‌ளை ஒன்று சேர்க்க‌வும்
ஜாதி ம‌த‌ங்க‌ளை வேர‌றுக்க‌வும்

இருக்கும் வ‌ரை ஒன்றாய் இருந்து
ம‌ர‌ண‌மும் பிரிக்காம‌ல் ந‌ம்மை
ஒன்று சேர்த்து அன்பு அன்பு
அன்பு ம‌ட்டுமே ந‌ம்முட‌ன்.....

3 comments:

 1. நல்லாயிருக்குங்க...........
  அற்புதமான வரிகள்...


  !!நம்ம பக்கமும் காத்திருக்கு உங்க கருத்துக்காக!!

  ReplyDelete
 2. அன்பு நன்றிகள் செண்பகம் இங்கே வருகை தந்தமைக்கும் கருத்து பதிந்தமைக்கும்....

  உங்க பக்கமும் வந்து பார்த்துட்டேனே மிக அருமையான வரிகளையும் படித்தேனேப்பா....

  ReplyDelete
 3. "அன்பு மட்டுமே நம்முடன்-என்ற
  ஆயுத்தை தெம்புடன்
  இன்பு மட்டுமே வேண்டுவோர்-தடை
  எதுவரினினும் கொண்டுவோர்
  துன்பு தரா தன்மையை-வாழ்வில்
  தொடர வரும் நன்மையே
  இன்பு தரும் கவிதையே-நீர்
  எழுதியுள்ளீர் இனிமையே

  புலவர் சா இராமாநுசம்
  புலவர் குரல்

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...