"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, June 4, 2011

என்னை தனியே விட்டுப்போனாய்....

உன்னிடம் தானே என் காதலை கொண்டு வந்தேன்
உன்னிடம் தானே என் வருத்தங்களை பகிர்ந்தேன்
உன்னிடம் தானே என் ஏழ்மை நிலையை சொன்னேன்
உன்னிடம் தானே என்னையே தொலைத்தேன்
 

ஊன்று கவனித்து என் நிலையை உணர்ந்தாய்
ஊக்கமது கொடுத்து உன்னோடு என்னை சேர்த்தாய்
ஊமை கனவுகளை மெய்ப்பிக்க போராடி வென்றாய்
ஊடல் கொண்டாலும் என் மௌனத்தை உடைத்தாய்
 

எங்கே என் அந்த பழைய காதலி
என் காதலை தந்தாயோ பலி
எண்ணிக்காத்திருந்தேனே என் காதலி
எட்டி உதைத்த நெஞ்சிலோ இன்னும் வலி
 

ஏக்கங்களை தீர்த்தவளே எங்கேயடி போனாய்
ஏங்கி தவிக்கும் என்னை புரியாமல் மறைந்தே போனாய்
ஏசிக்கொண்டிருக்கும் உலகத்தில் தவிக்கவிட்டு போனாய்
ஏன் இந்த வையத்தில் என்னை தனியே விட்டு போனாய்..

2 comments:

  1. சோகங்கள் பகிரும் அழகு கவிதை.
    ஏன்..ஒரு கவிதைகள் கூட ஈகரையில் பதிய வில்லை..?

    ReplyDelete
  2. அட பாஸ்கரா நீ எப்ப இங்க வந்தே? ஈகரையில் என்னென்ன கவிதைகள் பதிந்தேன்னு எனக்கு எப்படி பார்த்து அறிவதுன்னு தெரியலை பாஸ்கரா. அதான்... பதிந்ததையே திரும்ப பதிந்துவிடுவேனோ என்ற பயமும் இருக்கிறது....அதான் பாஸ்கரா... இனி சரிப்பார்த்து ஈகரையில் பதிகிறேன்பா...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...