"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, June 18, 2011

வலி சுமக்க முடியா நிலை....(கதை 2)

2. வலி சுமக்க முடியா நிலை....

என்ன சுருண்டு சுருண்டு படுக்கிறே - என்றபடி பசுபதி வந்து சேரில் அமர்ந்தான்.

உடம்பு முடியலங்க - என எழ முனைந்தாள் கீர்த்தி.

என்னவாம் மகராணிக்கு என்று நக்கலாக கேட்டான்.

ஆயாசமாய் உணர்ந்தாள் கீர்த்தி பீரியட் அதான்.

எல்லா பொம்பிளைகளுக்கும் வருவது தானே ? நீ மட்டும் என்ன ஸ்பெஷலா??

அதற்கு பின் ஒரு பதிலும் சொல்லாது திரும்ப சுருண்டு படுத்தாள்.

நான்கு நாட்களாக விடாது வலிக்கும் தலைவலியை நினைத்துப் பார்த்தாள் கீர்த்தி.

எத்தனையோ வருடங்களுக்கு முன் நடந்த தொடர் விபத்தினால் பின் மண்டையில் அடிப்பட்டு ஸ்கான் எல்லாம் எடுத்து ஒன்றும் இல்லை என்று டாக்டர்கள் சொன்னப்பின் இதோ இத்தனை வருடத்திற்கு பின் சுத்தியால் அடிப்பட்ட இடத்தில் பொத்தல் போடுவது போல வலியை உணர்ந்தாள். முன் நெற்றியில் வலி என்றால் தைலம் தேய்க்கலாம். பின் மண்டையில் வலி என்றால் என்ன செய்வது குழப்பரேகை மனதில்...

இதையெல்லாம் சொல்லி இன்னும் பசுபதியை பயமுறுத்த எண்ணாமல் அமைதியாய் விட்டம் நோக்கினாள்.

அவளையும் அறியாது கண்ணீர் வந்துக்கொண்டிருந்தது..

என்ன அழறியா??

இல்லை தலைவலிக்காக பூசிய தைலம் கண்ணில் பட்டுருச்சு என்று பொய் சொன்னாள் கீர்த்தி

பின் ஒன்றும் பேசாது டீவி பார்க்கத் தொடங்கினான் பசுபதி.

வேலையில் இருந்து வந்த மகன் அஷோக் என்னம்மா என்று வந்து நின்றான்.

முடியலடா கண்ணா நீயே சாதம் போட்டு சாப்பிடு அப்பா சாப்பிட்டாகிவிட்டது என்று சோர்வுடன் கண்ணை மூடினாள்.

சரிம்மா நீங்க ஓய்வெடுங்க நான் பார்த்துக்கிறேன் என்றபடி அறையை விட்டகன்றான்.

அழுகை முட்டிக்கொண்டு வந்தது... எல்லா பெண்களுக்கும் உண்டாவது தானாமே?? 

அப்போது டிவியில் தொட்டாற்சிணுங்கி படத்திலிருந்து காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தது..

துன்பத்தில் தவிக்கும் ரேவதிக்கு ஆதரவாய் இருக்கும் தோழனாய் கார்த்திக்....

இப்படி ஒரு தோழமை துன்பம் பகிர எனக்கு கிடைக்குமா என்ற ஆயாசத்தில் உறங்க முயற்சித்தாள். பின் மண்டையின் வலி அவளை உறங்கவிடாது செய்தது. அமைதியாய் சஷ்டிகவசம் முணுமுணுக்க தொடங்கியபோது அவளையும் அறியாது கண்ணயற்ந்தாள்.

வெள்ளை உடை உடுத்திய தேவதூதன் போலொருவன் கையில் மந்திரக்கோலால் கீர்த்தியை தட்டி எழுப்பினான்...

ஆச்சர்யத்துடன் கண்விழித்தாள்..

நீங்க யாரு?

உன் துன்பம் பகிர ஒரு தோழன் வேண்டுமென கேட்டாயே... அதான் வந்தேன்...

தலை ரொம்ப வலிக்குதே என்று அழுகையுடன் கேட்டாள்...

இதோ இந்த மந்திரக்கோலால் உன் வலியை போக்கிவிடுகிறேன் என்று தலையை சுற்றி வட்டம் போட்டான்.

பட்டென வலி விலகியதை கண்டு அதிசயித்தாள்...

இனி அமைதியாய் உறங்கு தோழியே... என்று புகை போல் கலைந்து மறைந்தான்....

ஆழ்ந்த உறக்கத்திற்கு போனாள் கீர்த்தி...

எப்போதும்போல் அலாரம் 4.00 மணிக்கு அதிகாலை அடித்தது. கண்விழித்தபோது தலைவலி இத்தனைநாள் இருந்தது சுத்தமாக வலியே இல்லாமல் இருப்பதை உணர்ந்தாள். அட என்று நினைத்தாள். 

பின் பரபரவென்று வேலைகளை ஆரம்பித்தாள்...

குளித்து பூஜை முடித்து டிபன் சாப்பாடு தயாரித்து வேகமாய் டப்பாக்களில் அடைத்து கிளம்பினாள் பசுபதியுடன்....

கார் ஸ்டார்ட் செய்து பழைய பாட்டு கேசட்டில் ஒலிக்க வண்டியை கிளப்பினான் பசுபதி.

அமைதியாய் உட்கார்ந்து கண்மூடினாள் கீர்த்தி.. என்றும் போல் அன்று வண்டியில் ஏறி உட்கார்ந்ததும் தூங்கமுடியவில்லை கீர்த்தியால்.

யோசனைகளுடன் கீர்த்தியும் வண்டி ஓட்டிக்கொண்டிருந்த பசுபதியும் ஒன்றும் பேசாமல் இருந்தனர்.

திடீரென்று கீர்த்தியின் கண்களுக்கு பின்னால் அரக்கத்தனமாக வரும் வெள்ளைக் கார் தங்கள் வண்டியை இடிக்க வருவதை நொடியில் கண்ட கீர்த்தி அலறினாள். என்னங்க வண்டி வேகமா ஒன்னாம் ட்ராக்குக்கு தள்ளுங்க பின்னால வண்டி வேகம் வேகம் என்று கத்தவும் சுதாரித்த பசுபதி வேகமாய் மூன்றாவது ட்ராக்கில் இருந்த காரை முதல் ட்ராக்கில் திருப்பினான். அவர்களை நோக்கி வேகமாக வந்த வண்டி கட்டுக்கடங்காமல் ஓரமாய் போய் எகிறி நாலு முறை பல்டி அடித்து அதே வேகத்துடன் திரும்ப இவர்களை நோக்கி வர ஆரம்பித்தது. பசுபதிக்கும் கீர்த்திக்கும் மரண பயம் முகத்தில் அப்பியது. அதே நேரம் வண்டியை ஓரம் கட்டி நிறுத்த முயன்று தோற்றான் பசுபதி.. 

இரண்டு அடியில் அந்த வெள்ளை வண்டி ஓட்டம் நிறுத்தி உறுமியது... உடனே கதவை திறந்து இருவரும் இறங்கி அந்த காரினில் இருப்பவரை காப்பாற்ற ஓடினர். அந்த காரை ஓட்டி வந்தது ஒரு பெண் முகமெல்லாம் அடி பயத்தில் அதிர்ச்சியில் மயக்கத்திற்கு போனாள்.

உடனே பசுபதி ஆம்புலன்சுக்கும் போலிசுக்கும் தன் மொபைலில் இருந்து கால் செய்தான். ஐந்தே நிமிடத்தில் வண்டிகள் எல்லாம் நின்று போலிசும் ஆம்புலன்சும் வந்ததும்.

இருவருக்கும் நன்றி கூறிய போலிஸ் உடனே அப்பெண்ணை எடுத்துக்கொண்டு விரைந்தது.

இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து இருவரும் மீளமுடியாது காரில் வந்து அமர்ந்தனர்.

பசுபதியின் எண்ண ஓட்டம் அறிய முடியவில்லை....

கீர்த்தியின் தலையில் பின் மண்டையில் காலை முதல் விலகி இருந்த வலி திரும்ப விண் விண் என்று தொடங்கியது...நெஞ்சில் சுருக் சுருக் என்ற வலி ஆரம்பித்தது. 

ஒருவேளை கீர்த்தி உறங்கி இருந்திருந்தால் என்றும்போல்.... என்று பசுபதியின் மனம் யோசிக்கத் தொடங்கியது...

மயிரிழையில் உயிர் தப்பினதை இன்னமும் அவனால் நம்பமுடியவில்லை...

ராத்திரி அவளை தன் கேள்விகளால் அழவைத்ததை யோசித்தான்...

தன் செயலுக்கு வருந்தினான்......

இன்று கீர்த்தி சமயோஜிதமாக செயல்பட்டதை நினைத்து வியந்தான்....

இது எதுவும் அறியாத கீர்த்தி வேகமாய் சஷ்டிகவசம் முணுமுணுத்து எல்லா இறைவனுக்கும் நன்றி சொல்ல ஆரம்பித்தாள் உயிர் தப்பியதை எண்ணி.....

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...