"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, June 4, 2011

ஓம் நமச்சிவாய....

ஓம் நம சிவாய....

சித்தம் கலங்கி பித்தம் தெளிந்து
மனம் ஓங்கார கூச்சலிட
ஓம் நம சிவாய


பித்தன் இவன் நாடகமும்
சுற்றமெல்லாம் சூழ்ந்திருக்க
நெற்றிக்கண்ணால் எரித்த
அவனின் பாதி பராசக்தி


மற்றொரு அவதாரத்தில்
ஒன்றாய் புவியினை 
இருவரும் ஆண்டு
மக்கள் இருவரை
அழகாய் பெற்று


தலை கொய்த சிவன்
யானை முகத்தை 
விநாயகனாம் முதல் பிள்ளை
அவனுக்கு பொருத்தி
போற்றி போற்றி


உலகமே வினைகள் அகற்ற
விநாயகனே போற்றி
ஆறு முகங்களும் மனதை
கொள்ளை கொண்ட அழகும்
சிரித்தே மனதை அள்ளிய
கார்த்திகை நட்சத்திரத்தில்
பிறந்த முருகப் பெருமானே
போற்றி போற்றி


உக்கிரனிவன் காட்டினிலே
பழியாய் கிடந்து சாம்பலை பூசி 
ஊழிக்கூத்தாடி புலித்தோலணிந்தவன்


இன்னும் எத்தனை எத்தனை
நாடகங்கள் நடத்த போகின்றான்
என்னென்ன பாத்திரங்கள்
படைக்க போகின்றான்


விளையாடி பார்க்க
மனிதனா கிடைத்தான்??
ஓம் நம சிவாய
எனும் குரலுக்கு செவிசாய்த்து


முன்பே வந்து யோசிக்காமல்
வரங்களை அள்ளித்தந்து
தன் தலை தப்பிக்க


ஊழித்தாண்டவம் ஆடி
அரக்கர்களை அழிக்க
இதோ புறப்பட்டு விட்டான்
ஓம் நம சிவாய.....


தணிந்து இருப்பாய் சிவனே
குளிர்ந்து நடப்பாய் கங்காதரனே
நெற்றி கண்னை திறக்காது
நல்லதை மட்டுமே புரிந்துவிடு


அழிப்பதில் என்ன உனக்கு 
அத்தனை அவசரம்
காப்பதில் கருணை 
கொள்வாயே நந்திக்கு ஈஸ்வரனே.....
ஓம் நம சிவாய...

1 comment:

 1. சிவன் நல்லவர்க்கு நல்ல சிவன் .
  அல்லாதோருக்கு நெற்றிக்கண் திறக்கும்
  முக்கண்ணனாக இருப்பதே சரி.
  அப்போ தான் நல்லவர்கள் பிழைக்க முடியும்.
  நல்ல பதிவு. ஓம் நமசிவாய !

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...