"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, June 4, 2011

புத்தகச்சுமைகள்.....

எழுத்தாளர்களுக்கும் 
மாத பத்திரிகை வாசித்து வீசுவருக்கும் 
புத்தகங்கள்
என்றும் சுமையாவதில்லை
 

குட்டி பட்டுப்பூக்கள் கண் நிறைய மையும்
எண்ணை முகத்தில் வழிய
உடலில் வேர்வை சொரிய
புத்தக மூட்டையை சுமக்கும்
குட்டி தொழிலார்கள் போல
 

தன்னை சுமந்த தாயை 
நொந்து கொள்வதா?
புத்தகத்தை சுமக்க வைத்த
பள்ளி ஆசிரியரை நோவதா
 

பறக்கும் ஆட்டோவில் கால்
வெளியே கை உள்ளே 
குழந்தை உள்ளே பாதி
புத்தக மூட்டை வெளியே தொங்க
 

வேகாத வெயிலிலும் அடாத மழையிலும்
பஸ் பிடிக்க ஓடும் சின்னஞ்சிறு குருத்துகள்
தன்னையும் சுமந்து புத்தக மூட்டையும் சுமந்து
பஸ்ஸை நிறுத்த கண்டக்டருக்கு கையை காட்டி
 

ஐயோ பாவம் குழந்தைகள் மண்ணிலும் அரிசியிலும்
எழுத வைத்த நம் மூதாதையர் படிக்கவில்லையா?
படித்து முன்னேறத்தான் இல்லையா???
 

பயனுள்ள புத்தகங்கள் ஒன்றிரண்டு போதுமே
பிள்ளைகளின் முதுகு ஒடிய வேண்டாமே......
பெற்ற தாயின் நெஞ்சமும் தான் பதறுதே
 

பிள்ளையை நாம் சுமந்தபோது 
இத்தனை வேதனை இல்லையே
என் பிள்ளை என்னை விட 
அதிகம் சுமக்கிறதே.....
 

சின்னஞ்சிறு குருத்துக்களின்
கழுத்து முறித்து ஏற்றி விடும் சுமைகள்
பின்னாளில் இடர்ப்படும் சுமைகளுக்கு 
ஒத்திகையா இவைகள்??
 

எத்தனை கண்டுபிடிப்புகள் முன்னேற
புத்தங்கள் இல்லா படிப்பையும் 
சற்றே கண்டு பிடியுங்களேன்
ஐயா அப்துல் கலாம் அவர்களே
பிள்ளைகளை நேரு போல் நேசிப்பவரே....

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...