"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, June 4, 2011

ஆணாதிக்கம்.....

என் படைப்புகள் காண உனக்கு பிடிக்குமா?
கருத்தாழமிக்க தொடர்கள் எழுதுறேனே
ராத்திரி முழுவதும் கண் விழித்து அது?
என் கிறுக்கல்கள் ரசிக்க உனக்கு விருப்பமா?
 

சின்ன சின்ன ஹைக்கூ அப்பப்ப சொல்வேனே அது?
பெண்களை முன்னிருத்தி கட்டுரை எழுதுறேனே
ஏன் என் மேலே உனக்கு வருத்தம் கூட இல்லையா?
 

ஆண்களை அவமதித்து அவர்கள் கருத்துகளை
மிதித்து அரக்கத்தனமா எழுதுறேனே அப்பவுமா?
சிறு சிறு குறிப்பு அழகு குறிப்பு வரைகிறேனே
 

உன் அம்மா செய்யும் சமையல்களை
குறிப்பாக்கி புத்தகமாக போடுகிறேனே அப்பவுமா?
உனக்கு ஏன் இத்தனை பிடிக்கிறது எல்லாம்
 

எல்லாம் நீ கொண்டு வரும் சம்பளம் காரணம் 
நீ வேலை செய்வது எங்கே ஆனால் என்ன
நீ தாக்குவது யாரையானால் என்ன
 

உன்னை விரும்புகிறேன் என்று கனவு காணாமல்
இந்த மாத சம்பள கவரை மறக்காமல்
என்னிடம் கொண்டு வந்து கொடுத்து விடு மனைவியே
 

கனவுக்கோட்டைகள் மளமளவென சரிய
கண்ணீர் கன்னத்தில் உருண்டோட
சம்பள கவர் வாங்க இன்று ஓடுகிறாள்
 

ஓடும்போதே புது கரு மனைவியின் மனதில் 
உருவெடுத்தது இன்றைய கட்டுரைக்கு
ஆணாதிக்கம்..........

1 comment:

  1. ennavo ponga ... eppathaan nilamai maarumo ? enna solla ?

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...