"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, June 4, 2011

கனவுகளின் ராஜ்ஜியம்......

சின்ன சின்ன பிள்ளைகளுக்கு சாக்லேட் கனவு
இன்றைய இளைஞர்களுக்கு லட்சியக்கனவு
சினிமா ஆசையில் வீட்டை விட்டு ஓடி வரும்
உலகம் புரியா பிள்ளைகளுக்கு நடிகை கனவு
 

முதிர்கன்னிக்கு கல்யாணக்கனவு
குழந்தையில்லா பெண்ணுக்கு தாய்மை கனவு
வேலையில்லாது அலையும் எத்தனையோ பேருக்கு
வேலைக்கிடைத்து திருமணம் ஆனது போல கனவு
 

முதியோர் இல்லத்தில் இறுதி நாட்களை எண்ணும்
முதியவருக்கு பிள்ளைகளின் வருகை கனவு
சாலையோர ஜீவன்களுக்கு ஒரு வேளை சாப்பாடே கனவு
ஏழை தொழிலார்களுக்கு வாழ்க்கை வாழ்வதே கனவு
 

இந்த கனவு மட்டும் இல்லையென்றால்
எத்தனை பேர் உயிரை மாய்த்துக்கொண்டிருப்பர்
எத்தனை பேர் நடைபிணமாக திரிந்துக் கொண்டிருப்பர்
எத்தனை பேர் வெளியே சிரித்து மனதுள் அழுதுக் கொண்டிருப்பர்
 

கனவுகளின் ராஜ்ஜியத்தில் இவர்களின் பொழுது
யாருக்காகவும் காத்திராமல் போய்க்கொண்டு தானிருக்கிறது
மனிதனை படைத்த இறைவா கூடவே இலவசமாக
இன்னல்களையும் சோதனைகளையும் சேர்த்து
ப்ரசாதமாக கொடுத்து மீளத்தெரியாதவர்க்கு
கலர் கலர் கனவுகளை கொடுத்த விந்தை தான் என்ன????

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...