"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Tuesday, June 14, 2011

மலரும் நினைவுகள்....


உன் மயக்கும் பார்வை
என் மனதை ஊடுறுவி
உன் விழி மூடும்போதெல்லாம்
என்னை உன் விழிக‌ள் ப‌ட‌மெடுக்க‌

உன் ப‌ட்டு க‌ன்ன‌ம் தொட‌ த‌ய‌ங்கி
நின்ற‌போது உன் கைக‌ள்
என் கைக‌ள் கொண்டு த‌ட‌வி
அந்த‌ உத‌டுக‌ள் எத்த‌னையோ முறை
என் தாக‌ம் தீர்த்த‌துண்டு...

உன் அலை அலையான‌ கூந்த‌ல்
அதில் அல‌ட்சிய‌ செருக‌லாய் ரோஜா
நீள் வ‌ட்ட‌ முக‌ம் அதில் தெரியும்
என் எதிர்கால பிர‌காச‌ம்
ஒன்றும் ம‌றக்க‌வில்லைய‌டி...

உன் வ‌ய‌து தான் என‌க்கும்
கிழ‌டு த‌ட்டி விட்ட‌து இருவ‌ருக்கும்
குடும்ப‌ம் ஏற்ப‌ட்டுவிட்ட‌து ந‌ம‌க்கு
உன் ஸ்ப‌ரிசம் உறைந்து போன‌தே

நான் அன்று த‌ந்த‌ ஒரு முத்த‌த்தில்
இந்த‌ ஒரு சுக‌ம் போதுமே நினைத்து
என்னை விட்டு வில‌கினாயோ?

என் க‌ண்ணில் இன்னும் க‌ண்ணீர்
அழும் என் குர‌ல் கேட்கிற‌தா உன‌க்கு
எங்கோ நீ இருந்தாலும் என் 
இத‌ய துடிப்பு கேட்கிற‌தா உன‌க்கு?

உன் இத‌ய‌ துடிப்ப‌து என‌க்கு கேட்கிறதேடி
நீ இருக்கும் இட‌த்தில் உன் ம‌கிழ்ச்சி
எல்லோரையும் தொத்திக்கொள்ளுமே
ஏன் என்னை ம‌ட்டும்
புல‌ம்ப‌விட்டு ம‌றைந்து விட்டாய்

உன் க‌ண்ணீர் ம‌றைத்த‌ 
இறுதி ம‌ட‌ல் இன்றும் என்னிட‌த்தில்
வெற்றுத்தாளாய் ந‌ம் காத‌லின் சாட்சியாய்....

10 comments:

 1. காலம் கடந்தும் தொடரும்
  நேசம் சொல்லும் கவிதை
  அருமையிலும் அருமை
  உறைந்து தானே உள்ளது
  மறைந்து போகவில்லையே
  உணர்வுகளும் வார்த்தைகளும்
  மிகச் சரியாக பொருந்திப்போகிற
  அருமையான படைப்பு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. எழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்துவிட்டான்கள்.
  இது பற்றிய தகவலறியவும்... இந்தக்கொடுமையை உலகறியச்செய்யவும் எனது வலைப்பக்கம் வாருங்கள்.ப்ளீஸ்...

  ReplyDelete
 3. அன்பு நன்றிகள் ரமணிசார்..உண்மையே அன்பு மறைந்து போகாது நிலைத்து நிற்கும்....

  ReplyDelete
 4. //உன் ஸ்ப‌ரிசம் உறைந்து போன‌தே//

  இந்த ஒரு வரி சொல்லாமல் சொல்லும் அர்த்தங்கள் அநேகம்.

  நீ இருக்கும் இட‌த்தில் உன் ம‌கிழ்ச்சிஎல்லோரையும் தொத்திக்கொள்ளுமே

  உண்மை. சிலர் இருக்கும் இடத்தை சிரிப்பால் நிறைத்துப் போவார்கள்.
  அருமை.

  ReplyDelete
 5. ரமணி சார் வலைப்பக்கத்தில் உங்கள் பின்னூட்டத்தை படிக்க நேர்ந்தது. அழகாக உங்கள் கருத்துக்களை சொல்லியிருந்தீர்கள்.இவ்வளவு நல்ல கருத்துக்களை சொல்லும் உங்களுக்கு நல்ல எழுத்துவளம் இருக்குமென்று நினைத்து உங்கள் வலைப்பக்கதிற்கு வந்த என் எதிர்பார்ப்பு வீணாக போகவில்லை. அருமையாக எழுதுகிறிர்கள், வாழ்த்துக்கள்

  //நீ இருக்கும் இட‌த்தில் உன் ம‌கிழ்ச்சி
  எல்லோரையும் தொத்திக்கொள்ளுமே
  ஏன் என்னை ம‌ட்டும்
  புல‌ம்ப‌விட்டு ம‌றைந்து விட்டாய்///

  சூப்பர்...
  நேரம் கிடைக்கும் போது எல்லாம் உங்கள் பதிவிற்கு மீண்டும் வந்து கருத்து கூறுகிறேன்

  ReplyDelete
 6. அன்பு நன்றிகள் ரிஷபன் உங்க வருகைக்கும் உங்க கருத்தை பகிர்ந்தமைக்கும்... உங்கள் தளமும் வந்து பார்த்தேன் மிக அருமையான கவிதைக் கண்டேன் ரிஷபன்.

  அன்பு நன்றிகள் ரிஷபன்.

  ReplyDelete
 7. அன்பு நன்றிகள் உங்கள் வருகைக்கும் உங்கள் கருத்தை பகிர்ந்தமைக்கும் மதுரை தமிழ் கை.

  ReplyDelete
 8. நரைத்த காதலில்..
  சிலிர்த்து நிற்கிறது..நம் அன்பு.
  விரைத்துப்போய்..நான்
  இறந்து கிடந்தாலும்..
  மரிக்காது..நம்..காதல்..

  என்று என்னை எழுத வைத்த உங்கள் கவிதைக்கு என் வாழ்த்துக்கள்..அக்கா..

  ReplyDelete
 9. i like this poem. i dont know why. feel like its touching my heart. im at work and reading. after finishing this poem i feel like i lost something. you are writting good

  ReplyDelete
 10. உன் அலை அலையான‌ கூந்த‌ல்
  அதில் அல‌ட்சிய‌ செருக‌லாய் ரோஜா

  good

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...