"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, June 4, 2011

பொறுமை கொள் மனமே.....

பொறுமைக்கொள் மனமே
அமைதி காக்க மாட்டாயா
அஹிம்சாவாதியாச்சே நீ
 

போராடு ஆனால் அமைதியாக
உண்ணும் உணவில் சாத்வீகம்
ஏன் நடைமுறையில்
கடைப்பிடிப்பதில்லை நீ
 

வார்த்தைகளில் கூட
தேன் தடவி திட்டு
கேட்பவருக்கு கூட இனிக்கட்டும்
 

அடித்தாலும் பூச்செண்டால் அடியேன்
உன் மன பாரமும் குறையும்
அடிப்பட்டவரின் மனமும் தணியும்
 

உன்னை துன்புறுத்தினாலும்
மனம் கொண்டு சபிப்பதை விட
அணைத்து தோளில் தட்டி கொடு
 

துவேஷம் கொள்ளாதே
தூற்றாதே யாரையும்
மனமார போற்று என்றும்
 

ரௌத்திரம் அழகு தான்
அது கடவுளுக்கு 
உனக்கல்ல...
 

சாந்தம் கொள் மனமே
மனதில் சாந்தம் கொள்
அமைதியை இருத்திக்கொள்
 

கோவம் தவிர்த்து பாரேன்
உலகமே அழகாக உன்
கண் முன் விரியும்
 

விரோதிகளே இல்லையெங்கும்
நல்லவர் எவரும் என்றெண்ணிவிட்டால்
அன்பு மனங்கள் உன்னிடம்
நட்புக் கொண்டாட வைக்குமே........

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...