"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, June 4, 2011

சிரிச்சா தான் அழகு....

சிரிச்சா தான் அழகு
எப்படியும் சிரிக்கலாம்
சத்தம் போட்டும் சிரிக்கலாம்
 

விழுந்து எழுந்து சிரிக்கலாம்
கண்ணை குறுக்கி சிரிக்கலாம்
மூக்கை சுருக்கி சிரிக்கலாம்
 

கன்னம் மினுக்க சிரிக்கலாம்
கையை தட்டி சிரிக்கலாம்
தோளணைத்து சிரிக்கலாம்
 

எளியவரை கண்டு சிரிக்காதே
ஏழ்மையை என்றும் நகைக்காதே
தவிப்பரை கண்டு ரசிக்காதே
 

அழுபவரை கண்டு ஒதுக்காதே
சிரிப்பு அருமருந்து தெரியுமா
சிறுவர் முதல் பெரியவர் வரை
 

சிரிப்பே உணவாக கொண்டாலும்
ஆரோக்கியம் கெடுவதே இல்லை
மாறாக ஆயுள் கூடி அழகை கூட்டும்...

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...