"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, June 4, 2011

இறைவனுக்கு நன்றி.....

தாயை என்னில் கண்டேன் என்றாய்
தகப்பனின் பேச்சு என் கண்டிப்பில் என்றாய்
சகோதரத்துவம் என் கனிவு கண்களில் என்றாய்
தோழமைக்கு இலக்கணம் நீயே என்றாய்
 

சேய் நான் உனக்கு என்றும் என்றாய்
அடுத்த பிறவியில் உனக்கே மகனாக பிறப்பேன் என்றாய்
நம்பிக்கை கொள் என்னிடம் என்றாய்
இறுதி வரை உன் துணை நிற்பேன் என்றாய்
 

இத்தனை சொல்லிவிட்டு என்னை விட்டு
முதலில் உயிர் துறக்க முயன்றது ஏனோ
உன் இறுதிமூச்சு நானில்லாமல் அடங்கியது ஏனோ
இறக்கும் தருவாயில் என்னை நினைத்தாயோ
 

அழகு புன்னகையை முகத்தில் தவழ விட்டாயோ
உன் குழந்தை முகம் கொடியவர் காணவில்லையோ
உன் மேல் இரக்கம் காட்டவில்லையோ
நேர்மையாயிருந்தது அண்ணனே உன் தவறானதோ
 

எல்லோரும் நல்லவர் என்ற உன் கணிப்பு பொய்யானதோ
உன்னை கொல்லுமுன் உன் கண்களை
சிறிதேனும் உற்று பார்த்தனரோ
கொடியவர் பார்த்திருந்தால் கனிவுமுகம் கண்டு
உன்னை கொன்றிருக்க மாட்டாரே
 

நன்மை மட்டும் தானே செய்தாய்
ஏன் உனக்கு கொடுமை மரணம்
மூச்சுக்காற்றுக்காக தவித்தப்போது
தாங்குவாளா என் தங்கை என் மரணத்தை
என்றுணர்ந்து எனக்கே மகனாக பிறந்தாயோ
 

அண்ணா உன் முகத்தை இறுதியில் காணவில்லையே
என் குழந்தை முகத்தில் உன் குழந்தை புன்னைகை
கண்டபோதே உரத்து சொன்னேன் இறைவா நன்றி
அண்ணா உன்னை திருப்பி மகனாக தந்ததற்க்கு நன்றி....

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...