"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, June 4, 2011

துணிந்து நில் மனமே துயரம் கொள்ளாதே.......

கண்ணில் ஏன் வருத்தம்
கவலைக்கொள்ளாதே
கடவுள் இப்படி
சோதிப்பது புதிதல்லவே


கலங்கலாமா இதற்கெல்லாம்
துவண்டால் எழுவது எப்போது
மனம் தளர்ந்து போகாதே


மனிதனாய் அவதரித்தது
சோதனைகளை சந்திக்க தானே
பயந்து புறமுதுகிட்டு ஓடலாமா


துன்பங்கள் உன்னை துரத்தும்போது
துணிந்து நிற்க மாட்டாயா
நின்று கவனிக்க மாட்டாயா


கஷ்டங்கள் உனை 
அலைக்கழிக்கும்போது
நிமிர்ந்து நேராக நின்று


போதும் இறைவா என
உன்னை படைத்தவனை
துணிந்து கேட்கமாட்டாயா?

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...